டிசம்பர் 14ம் தேதி
மேற்றிராணியாரும் ஸ்துதியருமான
அர்ச். வெனான்சியுஸ் ஃபோர்துனாதுஸ்
இவர், கி.பி.535ம் வருடம், இத்தாலியில் வெனிஸ் நகருக்கருகிலுள்ள டிரெவிஸ் என்ற இடத்தில் பிறந்தார். அஞ்ஞானக் குடும்பத்தில் பிறந்த இவர் மிக இளவயதிலேயே கத்தோலிக்க வேதத்தில் சேர்ந்தார். இத்தாலியிலுள்ள அக்வீலையா என்ற நகரில், இவர் வளர்ந்தார். இலக்கணம், சொல்லணிக்கலையை கற்றார்; ராவென்னா நகரிலிருந்த சட்டக்கல்லூரியில் கல்வி கற்றார். இவர் மாணவனாகக் கல்வி பயின்றபோது, ஏறக்குறைய இவரின் கண்கள் இரண்டும் குருடாயின. அச்சமயத்தில், தூர்ஸ் நகர் அர்ச். மார்டினுடைய தேவாலயப் பீடத்தில் இடைவிடாமல் எரிந்துகொண்டிருந்த விளக்கிலிருந்த எண்ணெயை இவருடைய கண்கள் மேல் தடவியதும், கண் பார்வையை புதுமையாக மறுபடியும் அடைந்துகொண்டார். அர்ச். மார்டினுக்கு நன்றியறிதலாக, பிரான்சிலுள்ள தூர்ஸ் நகரின் அர்ச். மார்டின் தேவாலயத்திற்குத் திருயாத்திரையாக, ஜெர்மனி வழியாக சுற்றிச் சென்றார்; கி.பி. 565-567 வருடங்களில், இவர் திருயாத்திரையை மேற்கொண்டார்.
தூர்ஸ் நகரின் மேற்றிராணியாருடன் இவர் நெருங்கிய நண்பரானார்; சிறிது காலம், லொவார் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தார். இவர் தன் 30 வது வயதில், பிரான்சின் புவாரியே நகருக்கருகில் தங்கிவிட்டார். இவர் தனது பயணங்களின்போது, கவிதைகள் இயற்றியதன் மூலமாகவும், பாடல்கள் பாடுவதன் மூலமாகவும், அந்தந்த இடங்களில் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி சிறு செய்யுள்கள் இயற்றியதன் மூலமாகவும், இரவு உணவிற்கான பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்தார்.
சிறிது காலத்திற்குப் பிறகு, வெனான்சியுஸ், பிரான்ஸ் நாட்டின் அரசரான குளோத்தேரின் மனைவியும், அரசியுமான அர்ச். ரதேகுந்தேவினுடைய ஊழியத்தில் சேர்ந்தார்; அரசிக்கு ஆலோசகராகவும், செயலராகவும் பொறுப்பேற்றார். அச்சமயம், இந்த அரசி, ஒரு கன்னியாஸ்திரியாகவும், 200 கன்னியரை வழிநடத்தக் கூடியவராகவும் ஜீவித்து வந்தார்.
ஒரு சமயம், கான்ஸ்டான்டின் நோபிளிலிருந்த 2ம் ஜஸ்டின் பேரரசரிடமிருந்து, அர்ச். ரகேகுந்தே அரசி, ஆண்டவருடைய உண்மையான சிலுவையிலிருந்து மகா பரிசுத்த அருளிக்கமாக ஒரு சிறு துண்டைப் பெற்றுக்கொண்டபோது, அந்த மகா உன்னதமான தருணத்தில், வெனான்சியுஸ், வெக்சில்லா ரேஜிஸ், பாஞ்சே லிங்குவா என்ற பாடல்களை திருச்சிலுவைக்குத் தோத்திரமாக இயற்றிப் பாடினார். இப்பாடல்கள், இன்று வரை திருச்சபையின் திரு வழிபாட்டுச் சடங்குகளில் பாடப்பட்டு வருகின்றன. இம்மகிமை மிக்கப் பாடல்களை, திருச்சபை, பெரிய வெள்ளிக்கிழமைக்கான திருவழிபாட்டின் சடங்குகளில் பாடப்படும்படியாக சேர்த்திருக்கிறது. மேலும், இவர், மகா பரிசுத்த தேவமாதாவிற்குத் தோத்திரமாக அநேக உன்னதமான பாடல்களை மிகுந்த கவிதை நயத்துடனும் அழகாகவும் இயற்றியிருக்கிறார்.
கி.பி.600ம் வருடம், புவாரியே நகர மேற்றிராணியாராக வெனான்சியுஸ் அபிஷேகம் செய்யப்பட்டார். அடக்கவொடுக்கம், மட்டசனம், நீடித்த நிலைமை வரத்தில், சகலரும் கண்டுபாவிக்கக் கூடிய நன்மாதிரிகையுடன் விளங்கினார். பல்வேறு துறைகளைப் பற்றி, இவர் எழுதிய கவிதைகளும் செய்யுள்களும், 11 காண்டங்களைக் கொண்ட நூல்களாக திகழ்கின்றன. சரித்திர ஆசிரியர்களுக்கு, அந்த காலக்கட்டத்தில் மனிதரிடையே நிலவிய அரசியல், நாகரீகம், கல்வி, தொழில் போன்ற அநேகக்காரியங்கள் பற்றிய விலைமதிப்பற்ற துல்லியமான அறிவைக் கொடுக்கக்கூடிய ஆதாரங்களாக, இந்நூல்கள் திகழ்கின்றன. கால்லிக்-இலத்தீன் கவிஞர்களில் இவர் கடைசியாகக் கருதப்படுகின்றார். மகா பரிசுத்த தேவமாதாவைப் பற்றி கவிதை எழுதிய முதல் கத்தோலிக்கக் கவிஞர்களில் இவரும் ஒருவராக விளங்குகிறார். இவர் பாக்கியமாய், கி.பி.605ம் வருடம்,70வது வயதில் மரித்தார்.
மேற்றிராணியாரான அர்ச்.வெனான்சியுஸ் ஃபோர்துனாதுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
December 14
ST. VENANTIUS FORTUNATUS
Venantius Clementianus Fortunatus, was born in Trevise, near Venice, Italy in the year 535, in a pagan family & was converted to the Catholic faith when still quite young. He grew up in Aquileia, Italy, and studied grammar, rhetoric, and law at Ravenna, Italy.
While a student he became nearly blind, but recovered his sight by anointing his eyes with oil from a lamp that burned before the altar of St. Martin of Tours. In gratitude to St. Martin, he made a pilgrimage to Tours via the area of modern Germany, making the journey from about 565 to 567.
In Tours he became a close friend of the bishop & lived in the Loire Valley for while & then at the age of 30 he settled near Poitiers, France, & during his travels he often paid for his supper by reciting poetry, singing, or making up rhymes on the spot.
Venantius entered into the service as advisor and secretary of Queen St. Radegunde, wife of King Clotaire I, who was now herself living as a nun & governing some 200 nuns.
It was for the solemn occasion when St. Radegunde received from Emperor Justin II at Constantinople a small piece of the True Cross, that Venantius composed the hymns "Vexilla Regis" and the "Pange Lingua" in honour of the Holy Cross.
These hymns are even sung today during great processions and the Catholic Church has incorporated these glorious hymns in Good Friday ceremonies.
St. Venantius was consecrated Bishop of Poitiers in 600 A.D. and became a model of temperance and stability
His poetry and songs concerning daily life, work, people and politics, fill 11 volumes and have become a valuable resource for historians of the era. He is considered the last of the Gallic Latin poets, and one of the first Catholic poets to write hymns devoted to the Blessed Virgin Mary.
St. Venantius Fortunatus died in the year 605 A.D.