Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 20 பிப்ரவரி, 2025

February 16 - ST. ONESIMUS

 பிப்ரவரி 16ம் தேதி
வேத சாட்சியான அர்ச்சி ஒனேசிமுஸ்

இவர் பிறப்பினால் ஃபிர்ஜியனாகவும், பிலமோன் என்பவரின் அடிமையாகவும் இருந்தார். அர்ச். பிலமோன் என்பவர் ஏற்கனவே அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரால் கிறிஸ்துவராக மனந்திருப்பப்பட்டிருந்தார்.

ஒனேசிமுஸ், தன் எஜமானாகிய பிலோமனிடமிருந்து திருடிவிட்டு ஓடிப்போனார்; பின் எதிர்பாராத விதமாக உரோமையில் சிறைப்பட்டிருந்த அர்ச். சின்னப்பரை இவர் சந்திக்க நேர்ந்தது. அர்ச். சின்னப்பர் இவரை மனந்திருப்பி, ஞானஸ்நானம் கொடுத்தார். பின், இவரை, இவருடைய எஜமானரான அர்ச். பிலமோனிடம் அனுப்பி வைத்தார். அச்சமயம், அர்ச். சின்னப்பர் ஒரு அழகிய கடிதத்தை பிலமோனுக்கு எழுதி இவரிடம் கொடுத்து அனுப்பினார்.

அது, சுவிசேஷத்தில் நமக்கு பிலமோனுக்கு எழுதிய நிரூபமாகக் கிடைத்திருக்கிறது! அந்த கடிதத்தில், பிலமோனிடம், அவருடைய அடிமையான ஒனேசிமுஸை மன்னிக்கும்படியும், மன்னித்து, அவருடைய உதவியாளராக சேர்த்துக்கொள்ளும்படியும், அர்ச். சின்னப்பர் கேட்டுக் கொள்வதை வாசிக்கிறோம்.

அர்ச். சின்னப்பரின் அறிவுரையின்பேரில், பிலமோன் ஒனேசிமுஸை மன்னித்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து முழு சுதந்திரத்தை அளித்தார். அதன் பின், தன் ஞானதந்தையான அர்ச். சின்னப்பர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதன்பேரில், ஒனேசிமுஸ் திரும்பி அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரிடமே வந்து சேர்ந்தார். அவருக்கு பிரமாணிக்கத்துடன் ஊழியம் செய்து வந்தார்.

அர்ச். சின்னப்பர் கொலோசியருக்கு எழுதிய நிரூபத்தை, தீகிக்கு என்பவரிடம் கொடுத்தனுப்பியபோது, அவருடன் ஒனேசிமுஸையும் சேர்த்து அனுப்பி வைத்தார் (கொலொ 4:7-9). பின்னர், ஒனேசிமுஸ் உரோமாபுரி ஆளுநனால் மிகக் கொடிய உபத்திரவங்களால் சித்ரவதை செய்யப்பட்டார். திருமணம் செய்யாமல் பரிசுத்த ஜீவியம் ஜீவிக்கும் கத்தோலிக்கக் குருத்துவத்தைப் பற்றி இவர் பிரசங்கித்தபோது, அதைக் கேட்டுக் கோபமடைந்த உரோமை ஆளுநன், இவரை சிறையிலடைத்து, 18 நாட்கள் தொடர்ந்து உபாதித்தான். இவருடைய கால்களையும், கைகளையும் குண்டாந்தடியால் அடித்து முறித்தனர்; பின் கல்லால் எறியப்பட்டு கி.பி. 95ம் வருடம் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

சர்வேசுரனை சிநேகிக்கிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக உதவுகிறதென்று அறிந்திருக்கிறோம்; அவர்கள், தேவ தீர்மானத்தின்படி, அர்ச்சிஷ்டவர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்களாமே! (அர்ச். சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய நிரூபம் 8:28).

அர்ச் ஒனேசிமுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அர்ச் அமலோற்பவ மாமரியே! வாழ்க!


February 16

Martyrdom
ST. ONESIMUS

Onesimus was a Phrygian by birth and a slave to Philemon, a person of influence who had been converted to the faith by St. Paul.

Onesimus robbed his master Philemon and then fled away, accidentally coming into contact with St. Paul, who was then a prisoner for the faith in Rome.

The Apostle Paul converted Onesimus and baptized him. St. Paul then sent him back to his master Philemon with the beautiful letter, which we know as the Epistle to Philemon.

In this letter, St. Paul requested Philemon to pardon his slave Onesimus so that he might become one of his own assistants.

Philemon pardoned him and set him at liberty. Onesimus then returned to his spiritual father, as St. Paul had requested, and thereafter faithfully served the Apostle.

St. Paul later made Onesimus, along with Tychicus, the bearer of his Epistle to the Colossians (Col. 4:7-9).

St. Onesimus was later cruelly tortured in Rome for eighteen days by the governor of that city, who was angered by his preaching on the merit of celibacy. His legs and thighs were broken with bludgeons, and he was then stoned to death in the year 95 AD.

"We know that to them that love God, all things work together unto good, to such as, according to his purpose, are called to be saints."
— St. Paul (Romans 8:28)



  • #Christianity
  • #Faith
  • #Bible
  • #Saints
  • #Catholic
  • #ChristianHistory
  • #Martyrdom
  • #EarlyChurch
  • #EpistleToPhilemon
  • #ApostolicFathers
  • #NewTestament
  • #BiblicalFigures
  • #PaulineEpistles
  • #BookOfColossians
  • #Romans828
  • #Forgiveness
  • #Redemption
  • #ChristianVirtues
  • #FaithJourney
  • #SpiritualGrowth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக