Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

Feb. 18 - Saint Bernadette of Lourdes

பிப்ரவரி 18ம்‌ தேதி 

அர்ச்‌.பெர்னதெத்தம்மாள்‌ திருநாள்‌ 

இவளுடைய ஞானஸ்நானப்‌ பெயர்‌, மேரி பெர்னார்டு சுபீரூஸ்‌. அர்ச்‌. பெர்னதெத்‌ சுபீரூஸ்‌, 1844ம்‌ வருடம்‌, ஜனவரி 7ம்‌ தேதி, பிரான்சிலுள்ள தெற்குப்‌ பகுதியின்‌ பிரனீஸ்‌ மலைக்‌ தொடரிலிருக்கும்‌ லூர்து நகரில்‌ பிறந்தாள்‌. பிரான்சிஸ்‌ சுபீரோ என்பவர்‌, இவளுடைய தந்தை, லூயிஸ்‌ காஸ்டிராட்‌ , இவளுடைய தாய்‌. இருவரும்‌ பக்தியுள்ள நல்ல கத்தோலிக்கர்கள்‌; வேத கடமைகளை பிரமாணிக்கத்துடன்‌ நிறைவேற்றி வந்தனர்‌; அதே சமயம்‌ வறுமையில்‌ உழன்ற ஏழைக்குடி யானவர்கள்‌. பெர்னதெத்‌, இவர்களுடைய மூத்த மகள்‌; இவர்களுக்கு 11 பிள்ளைகள்‌ பிறந்தனர்‌. பிரான்சிஸ்‌, ஒரு அரவை ஆலையை நிர்வகித்து வந்திருந்தார்‌;  நஷ்டமடைந்ததால், அந்த அரலை ஆலையை மூடும்படியாயிற்று: அதன் காரணமாக, பிரான்சிஸ் சுபீரோவின் குடும்பம் வறிய நிலையை அடைந்தது;  1858ம்‌ வருடம்‌, பெர்னதெத்திற்குக்‌ காலரா நோய்‌ வந்தது. மிகவும்‌ பலவீனமடைந்தாள்‌. பின்‌ அதைத்‌ தொடர்ந்து, ஆஸ்த்துமா வந்தது; இவளுடைய ஜீவியகாலம்‌ முழுவதும்‌ இந்நோய்‌ இவளை உபாதித்துக்கொண்டிருந்தது.அடுத்து அடுத்துத்‌ தொடர்ச்சியாக அநேக வியாதிகளால்‌, இறுதியாக, காலில்‌ ஏற்பட்ட ஒரு புண்ணினால்‌ இறக்கும்வரை, மிகுந்த துன்ப உபத்திரவத்திற்கு ஆளானாள்‌. 

1858ம்‌ வருடம்‌, பிப்ரவரி 11ம்‌ தேதியன்று, இவளுக்கு 14 வய  தானபோது, அருகிலிருந்த மசபியேல்‌ என்ற பாறையின்‌ அடிப்பகுதியில்‌ அமையப்பெற்றிருந்த ஒரு குகையில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ காட்சிகள்‌ பெறும்‌ பாக்கியம்‌ பெற்றாள்‌. 1858ம்‌ வருடம்‌, பிப்ரவரி 11ம்‌ தேதியன்று,‌ முதல்‌ காட்சியைப்‌ பெற்றாள்‌; அன்றிலிருந்து, அவ்வருடம்‌ ஜுலை 16ம்‌ தேதி வரை, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ காட்சிகளை, தொடர்ச்சியாக 18 முறை இவள்‌ பெற்றாள்‌.

 மகா பரிசுத்த தேவமாதா தாமே, தமது பிரசன்னத்தினால்‌, புது  மையான ஒரு நீரூற்றை மசபியேல்‌ குகையினருகில்‌ ஏற்படுத்தும்படி யாக மண்ணைத்‌ தோண்டி, அதிலிருக்கும்‌ நீரைப்‌ பருகும்படி பெர்ன தெத்தம்மாளுக்குக்‌ கட்டளையிட்டார்கள்‌; முதலில்‌ சேறு நிறைந்ததாக இருந்தபோதே, அதை பெர்னதெத் , தேவமாதாவிற்குக்‌ கீழ்ப்‌படிந்து பருகினாள்‌; பின்னர்‌, அதுவே பொங்கி வழிந்தோடும்‌ மாபெரும்‌ நீரூற்றாகவும்‌, புதுமையாக வியாதிகளைக்‌ குணப்படுத்தும்‌ நீரூற்‌ றாகவும்‌ மாறியது. வெடிவிபத்தில்‌ தன்‌ கண்ணை இழந்த ஒருவன்‌, இத்தண்ணீரில்‌ கழுவினான்‌; புதுமையாகக்‌ கண்பார்வை அடைந்தான்‌: இறக்கவிருந்த ஒரு குழந்தை இப்புதுமைத்‌ தண்ணீரினுள்‌ அமிழ்த்தி எடுக்கப்பட்டவுடன்‌ புதுமையாக உயிர்பெற்று, நடக்கத்‌ துவக்கியது. இது போன்ற எண்ணற்ற புதுமைகள்‌ நிகழலாயின.

 1858ம்‌ வருடம்‌ மார்ச்‌ 25ம்‌ தேதியன்று,மங்களவார்க்தைத்‌ திரு நாளன்று, மகா பரிசுத்த தேவமாதா அளித்த காட்சியின்போது, பெர்னதைத்தம்மாளிடம்‌, “நாமே அமலோற்பவம்‌!” என்று கூறித்‌ தம்மை வெளிப்படுத்தினார்கள்‌. மேலும்‌, லூர்து நகரில்‌ தமக்குத்‌ தோத்திரமாக ஒரு தேவாலயத்தைக்‌ கட்டும்படி கூறினார்கள்‌; பெர்னதெத்தம்மாள்‌, தான்‌ கண்ட இப்பரலோகக்‌ காட்சிகள்‌ எல்லாம்‌ உண்மையானவை என்று திடமாக எல்லோரிடமும்‌ கூறினாள்‌; பெற்றோர்களிடமும்‌, நகர அதிகாரிகளிடமும்‌, பங்கு சுவாமியாரிடமும்‌, திருச்சபை அதிகாரிகளிடமும்‌, இக்காட்சிகள்‌ பற்றிய விசாரணையின்போது, மிக ஸ்திரமாகத்‌ தான்‌ கூறுபவை அனைத்தும்‌ உண்மையானவை! என்று உறுதியாக நின்றாள்‌; மகா பரிசுத்த தேவமாதா தன்னிடம்‌ கூறிய செய்திகளை பிரமாணிக்கத்துடன்‌ பங்கு சுவாமியாரிடமும்‌, மற்றவர்களிடமும்‌ அறிவித்தாள்‌.  

1858ம்‌ வருடம்‌, ஜூலை 28ம்‌ தேதியன்று, திருச்சபை மசபியேல்‌ குகையை அதிகாரபூர்வமாக தன்‌ கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டு வந்தது; நகர அதிகாரிகளின்‌ அச்சுறுத்தல்கள்‌ விலகின! பக்தி முயற்சிகள்‌ சுதந்திரமாக விசுவாசிகளால்‌ அனுசரிக்கப்பட்டன. 1860ம்‌ வருடம்‌, நெவர்ஸ்‌ நகரிலுள்ள பிறர்சிநேகக்‌ கன்னியர்‌ மடத்தில்‌, பெர்னதெத்‌ , தனது 16வது வயதில்‌ தங்கி, பள்ளிக்கூடத்தில்‌ கல்வி கற்பதற்கான ஏற்பாடு நடந்தது. பின்னர்‌, அதே மடத்தில்‌ 22 வயது வரை, பெர்ன தெத்தம்மாள்‌ தங்கியிருந்தாள்‌.

 1866ம்‌ வருடம்‌, தனது 22வது வயதில்‌, நெவர்ஸிலுள்ள பிறர்‌ சிநேகக்‌ கன்னியர்‌ மடத்தில்‌ நவசந்நியாசியாக பெர்னதெத்‌ சேர்க்கப்‌ பட்டாள்‌.அங்கேயே, அவள்‌ சிறு சிறு வேலைகள்‌ செய்துகொண்டு, மறைந்த ஜீவியம்‌ ஜீவித்தாள்‌; எஞ்சிய காலமெல்லாம்‌,ஆஸ்த்துமா நோயினாலும்‌, காலில்‌ ஏற்பட்டஒரு புண்ணினாலும்‌, விவரிக்க முடி யாத வேதனையை அனுபவித்து வந்தாள்‌.  “லூர்து நகரில்‌ அநேக வியாதியஸ்தர்கள்‌ புதுமை நீரூற்றில்‌ குணமடைவதுபோல்‌, ஏன்‌ நீங்களும்‌ அங்கு சென்று, குணமடையக்கூடாது?” என்று கேட்டதற்கு, அர்ச்‌.பெர்னதெத்தம்மாள்‌, “மகா பரிசுத்த தேவ மாதா ‌, இவ்வுலகத்தில்‌ எனக்கு, சந்தோஷத்தை வாக்களிக்க வில்லை! மறுவுலகத்தில்‌ தான்‌ எனக்கு சந்தோஷம்‌ கிடைக்கும்!‌ என்று‌ வாக்களித்திருக்கிறார்கள்‌” என்று கூறுவாள்‌. மகா பரிசுத்த தேவமாதா, தன்னிடம்‌ கேட்டுக்கொண்டது போல, உபாதிக்கும்‌ இத்துன்பவேதனைகளை, தபசாகவும்‌, பரிகாரமாகவும்‌ ஒப்புக்கொடுத்து வந்தாள்‌. “சர்வேசுரன்‌, என்னை ஒரு முக்கிய வேலைக்காகப்‌ பயன்படுத்தினார்‌; இப்போது, இந்தத்‌ துடைப்பத்திற்கான அலுவல்‌ முடிந்து விட்டதால்‌, இந்தக்‌ துடைப்பமாகிய என்னை ஒரு மூலையில்‌ வைத்திருக்கிறார்” என்று அர்ச்‌.பெர்னதெத்‌ கூறுவாள்‌. 

1879ம்‌ வருடம்‌, ஏப்ரல்‌ 16ம்‌ தேதியன்று பாக்கியமாய்‌ மரித்தாள்‌. 11ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, 1933ம்‌ வருடம்‌, டிசம்பர்‌ 8ம்‌ தேதியன்று இவளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டத்தை அளித்தார்‌. 

நெவர்ஸ்‌ பிறா்சிநேகக்கன்னியர்‌ மடத்தின்‌ தேவாலயத்தில்‌, இவளின்‌ பரிசுத்த அழியாத சரீரம்‌ பீடத்தினடியில்‌ ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.  அர்ச்‌. பெர்னதெத்தம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


Saint Bernadette of Lourdes

🌿 Marie-Bernarde Soubirous 🌿
📅 Born: January 7, 1844 – Lourdes, France
✝️ Died: April 16, 1879 – Nevers, France
🙏 Canonized: December 8, 1933
🎉 Feast Day: February 18


A Life of Faith and Devotion

Saint Bernadette Soubirous, a humble and frail young girl, was born into a poor yet deeply pious family in Lourdes, nestled in the Pyrenees mountains. Despite her fragile health, at the tender age of 14, she was blessed with eighteen apparitions of the Blessed Virgin Mary at the Grotto of Massabielle between February 11 and July 16, 1858.

During these miraculous encounters, the Most Holy Virgin entrusted her with a divine message, revealing herself with the words:

“I am the Immaculate Conception.”

Mary instructed Bernadette to share the message of prayer, penance, and healing, and to reveal the sacred waters of the now-famous Lourdes spring, a place where countless miracles and healings have since taken place. Among them, a worker who had lost an eye regained his sight, and a dying child was miraculously restored to health after being immersed in the waters.

The authorities tried to prevent the crowds from gathering at the Grotto, but faith could not be silenced. The devotion spread, and Lourdes became one of the world’s greatest pilgrimage sites.


A Life of Humility & Suffering

💠 Frail in health, Bernadette suffered from cholera, asthma, and other ailments throughout her life. Seeking refuge from public scrutiny, she entered the Sisters of Charity of Nevers in 1866, dedicating her life to prayer and service.

💠 Despite great pain and suffering, she bore everything with profound faith and love, offering her suffering as penance. She humbly referred to herself as “a broom that Our Lady has used and then put aside.”

💠 On April 16, 1879, at just 35 years old, Bernadette entered eternal rest, fulfilling the Blessed Virgin’s request for a life of penance, humility, and unwavering devotion.


Her Enduring Legacy

🌟 Canonized on December 8, 1933, by Pope Pius XI, St. Bernadette’s incorrupt body rests in the chapel of the St. Gildard Convent in Nevers, drawing pilgrims from around the world.
🌟 Lourdes remains a beacon of faith and healing, where millions seek spiritual and physical restoration through the intercession of Our Lady of Lourdes and St. Bernadette.

On this blessed Feast of St. Bernadette, may we be inspired by her unwavering faith, humility, and love for Our Blessed Mother. 🙏💙


🕊 St. Bernadette, pray for us! 🕊
🌿 Ave Maria! 🌿

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக