Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

அர்ச். எவுஸ்தாசியார் -. ST. Eustase(March 19)

மார்ச் மாதம் 29-ந் தேதி ம.
அர்ச். எவுஸ்தாசியார் திருநாள்.
ST. EUSTASE.

பிரான்ஸ் நாட்டிலே செல்வாக்குள்ள தாய் தகப்பனிடத்திலே அர்ச், எவுஸ்தாசியார் பிறந்தார். அவர் வளர்ந்த பிறகு தாய் தகப்பன் சொன்னபடி உலக சாஸ்திரங்களைப் படித்ததுமன்றி புண்ணிய வொழுக்கத்தையும் நன்றாய்க் கற்றுக் கொண்டார். மனிதர் பட்சிகளைப் பிடிக்க அங்கங்கே கண்ணி வைக்கிறது போல் உலகம் பசாசு சரீரமென்கிற இந்த மூன்று சத்துருக்களும் ஆத்துமங்களைப் பிடிக்க உலகத்தில் பலவகையில் கண்ணி வைத்திருக்கிறதென்று அவர் கண்டுபிடித்து உலகத்தை வெறுத்துச் சந்நியாசியானார். அதற்குப் பிறகு மிகச் சுறுசுறுப்போடே செபத் தியானம் பண்ணித் தபம் செய்துகொண்டிருந்தார். அதனால் அவருடைய ஆத்துமத்தில் மிகுந்த பத்தி தேவ சிநேகாக்கினி பற்றி வேகமாய் எரியும். அவரிடத்திலே விளங்கின புண்ணியங்களினிமித்தம் அவர் இருந்த மடத்திலே மற்றச் சந்நியாசிகளுக்குச் சிரேஷ்டராக ஏற்படுத்தப்பட்டார்.

அவர் பற்பல புண்ணியங்களுக்குத் தருமப் படிப்பினையாய் இருந்ததினாலேயும், மற்றவர்களைத் தயை விமரிசையோடே நடத்தினதினாலேயும் அந்த மடத்திலே சந்நியாச வொழுக்கம் வளர்ந்து அநேகம் பேர் அதிலே சேர்ந்து, சந்நியாசிகள் தொகை அறுநூறு ஆயிற்று, அவர் சொன்ன உருக்கமுள்ள புத்தியினாலே மற்ற அநேகர் பாவத்தை விட்டுத் தரும வழியிலே நடந்தார்கள். அவர் அக்கியானிகளுக்கும் பிரசங்கித்து அநேகரைச் சத்திய வேதத்திலே திருப்பினார்.

மார்ச் மாதம் 29-ந் தேதி. பசாசானது இதைக் கண்டு அவரைப் பகைத்து அவருக்குத் தீங்கு வருவிக்க ஓர் உபாயம் பண்ணிற்று. அதாவது: அந்த மடத்திலே இருந்த ஒரு சந்நியாசிக்குப் பசாசு துர்ப்புத்தி சொல்லிற்று; அதை கேட்டு அந்தச் சந்நியாசி சில பிரிவினைக்காரரைச் சேர்த்து அர்ச். எவுஸ்தாசியார் பேரிலே வர்மம் வைத்து அநேக மேற்றிராணிமார்களிடம் போய் அர்ச். எவுஸ்தாசியார் பேரிலும், அவருடைய மடத்து ஒழுங்குகள் பேரிலும் இல்லாத குற்றங்களைச் சாட்டினான். மேற்றிராணிமார்கள் அந்தக் காரியங்களை விசாரிக்கிறபோது அர்ச். எவுஸ்தாசியார் பேரிலும், அவருடைய மடத்து ஒழுங்குகளின் பேரிலுங் குற்றமில்லையென்று தீர்ப்புக் கூறினார்கள். அர்ச். எவுஸ்தாசியார் தமது பேரில் கோள் சொன்ன சந்நியாசியைத் தயையுடன் நல்ல வழியில் திருப்பப் பிரயாசைப்பட்டார்.  ஆயினும் அவன் மூர்க் கத்துடனே அவருக்கு விரோதஞ் செய்து அர்ச்சியசிஷ்டருடைய சீஷர்களில் சிலரை மயக்கித் தன் விரோதத்திற்கு உட்படுத்தினான். ஆனால் இவர்களும் இவனும் சில காலத்திற்குப்பின் நிர்ப்பாக்கியமாய்ச் செத்தார்கள். பின்பு அங்கு அமரிக்கை ஏற்பட்டது. அவர் கட்டளையிட்டபடியே அந்த மடத்திலிருந்த அறுநூறு சந்நியாசிகள் பகலும் இரவும் இடைவிடாமல் சர்வேசுரனைத் தோத்திரம் பண்ணிவருவார் கள்.

அவர்களுக்குள்ளே அநேகர் பெரிய அர்ச்சியசிஷ்டர்களும் மேற்றிராணிமார்களும் ஆனார்கள். சாவு தமக்குக் கிட்டி வருகிறதென்று அவர் ஆண்டவராலே அறிவிக்கப்பட்டு அதற்கு ஆயத்தமாக அதிக சுறுசுறுப்போடே தரும வழியிலே நடந்தார். கடைசியிலே அவருக்கு வந்த கடினமான வியாதியினாலே அவஸ்தையானார். அந்தச் சமயத்திலே சர்வேசுரன் அவருக்கு ஓர் தரிசனை காட்டி அவரைக் கேட்டதாவது: நீ முப்பது நாளைக்குள்ளே சாகவேண்டுமோ அல்லது நாற்பது நாள் பொறுத் துச் சாகவேண்டுமோ? முப்பது நாளைக்குள்ளே சாக வேண்டுமானால் இந்த முப்பது நாளும் கடின வலி அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. நாற்பது நாளைக்குப் பிற்பாடு சாகவேண்டுமானால் முன் சொல்லப்பட்ட வலி தணிக்கப்படும். இவ்விரண்டு காரியத்திற்குள்ளே ஒன்றைத் தெரிந்துகொள் என்று ஆண்ட வர் கேட்டார். அவர் இதை யறிந்து சீக்கிரமாய்ச் சர்வேசுரனைக் காண ஆசையாயிருந்ததினாலே முப்பது நாளைக்குள்ளே சாகச் சம்மதித்தார். இப்படி அந்த முப்பது நாள் அவர் கடின வலியைப் பொறுமையோடே அனுபவித்த பிறகு கர்த்தர் பிறந்த 525-ம் வருஷத்தில் பேரின்பப் பாக்கியத்தை அடைந்தார்.

அதற்குப் பிறகு அவருடைய சரீரத்தினிடம் அநேகம் புதுமைகள் நிகழ்ந்தன. அவர் தமது சீவிய காலத்திலுஞ்சில புதுமைகளைச் செய்திருந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். எவுஸ்தாசியார் சீக்கிரமாய்ச் சர்வேசுரனைத் தரிசிக்க ஆசையாயிருந்ததினால் சீக்கிரமாய்ச் சாகிறதற்கும் அதிக வலி அனுபவிக்கிறதற்குஞ் சம்மதித்தாரென்று கேட்டீர்களே. சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசிக்கிறதிலே எவ்வளவு ஞான ஆனந்தம் இருக்குமென்று சற்றாவது நீங்கள் அறிந்திருந்தால் இந்த அர்ச்சியசிஷ்டரைப்போல் அதை ஆவலுடன் விரும்புவீர்கள். உலகிலுள்ள எந்த நன்மை சந்தோஷத்தையும் இலட்சம் வருஷம் அனுபவிக்கிறது பெரும் காரியம்; ஆகையால் அத்தகைய சந்தோஷத்தின் பேரில் அநேகருக்கு ஆசை உண்டு. சகல இலட்சம் வருஷம் உலக சந்தோஷமெல்லாம் அனுபவிக்கிறதைவிட ஒரு கணமாவது சர்வேசுரனை முக முகமாய்த் தரிசிக்கிறது மேல் என்பதற்குச் சந்தேகமில்லை. அப்படியிருக்க என்றென்றும் அவரைத் தரிசிக்கிறது எப்படிப்பட்ட பேரின்ப சந்தோஷமாயிருக்கும்.

ஒரு பெரிய சாஸ்திரியோடு பேசுவது எல்லாருக்கும் ஆசையாயிருக்கிறது. மிக அலங்காரமுள்ள ஒரு வஸ்துவைப் பார்ப்பதற்கும் எவனும் ஆசைப்படுவானல்லவோ? இன்பமான ஓசை கேட்பதற்கும், ருசியுள்ள பொருளைச் சாப்பிடுவதற்கும், ஆஸ்தி பெற்றுக் கொள்ளுவதற்கும் இவை முதலிய காரியங்களின் பேரிலும் அநேகம் பேர்கள் வெகு ஆசை வைப்பார்கள். ஆனால் காணப்பட்ட பொருட்களிடத்திலே இருக் கிற அத்தகைய நன்மைகள் எங்கேயிருந்து வந்தன? சர்வேசுரனிடத்திலே இருந்து வந்ததல்லவோ? ஆண்டவர் சகல பொருட்களையும் படைத்தபோது, புத்தி ஆஸ்தி அலங்கார முதலிய நன்மைகளை அந்தந்த பொருட்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் படைப்புண்ட பொருட்களிடத்தில் இருக்கிற நன்மைகளுக்குஞ் சர்வேசுரனிடத்தில் இருக்கிற நன்மைகளுக்கும் உள்ள வேற்றுமையை நம்மாலே சுண்டுபிடிக்கக் கூடாதிருந்தாலும் அதைச் சற்றாகிலுங் கண்டுபிடிக்க இப்போது சொல்லப்போகிற உவமையைக் கேளுங்கள். சமுத்திரத்திற்கும் ஒரு துளித் தண்ணீருக்குமிடையே உள்ள வேற்றுமை எவ்வளவு பெரிதாயிருந்தாலும் அதைவிட முன் சொன்ன காரியத்திலே அதிக வேற்றுமையிருக்கும். படைப்புண்ட வஸ்துக்களிடத்திலே இருக்கிற நன்மைக ளெல்லாஞ் சர்வேசுரனிடத்திலே இருக்கிற நன்மைகளுக்கு முன்பாக ஒரு துளி தண்ணீர்போல இருக்கிறதுமன்றி அவைகள்  உப்புத் தண்ணீர்போலே சர்வேசுரனிடத்திலே இருக்கிற நன்மைகள் நல்ல அமிர்தமான தண்ணீர்போலேயும் இருக்கிறது. இப்போது சொல்லப்பட்ட உப்புத் தண்ணீராகிய ஒரு துளிமேல் மனிதர் இத்தனை ஆசை வைத்திருக்கையில் பேரின்ப அமிர்தமாகிய நன்மை கடலென்னுஞ் சர்வேசுரன் மேல் ஆசை வையாதிருக்கலாமோ? ஆனால் அத்தகைய ஆசை உங்களுக்கு வருமாறு சர்வேசுரனிடத்திலிருக்கிற நன்மைகளை அடிக்கடி நினைக்க வேண்டும். தேவ விசுவாசத்தின் ஞானக் கண்ணைக் கொண்டு அடிக்கடி சர்வேசுரனைப் பார்க்க வேண்டும். ஒருவனிடம் அதிசயமான புத்தி, வாசாலகம், ஆஸ்தி, நற்குணம், அழகு முதலிய சிறந்த விசேஷங்களிருந்தாலும் இவைகளை நீ அறியாமலிருந்தால், அல்லது நினையாமலிருந்தால் அவன் பேரில் உனக்குப் பட்சம் உண்டாகமாட்டாது. சர்வேசுரனிடத்தில் இருக்கிற அளவில்லாத நன்மைகளை நீங்கள் நினையாமலிருந்தால், அவரைத் தரிசிக்க உங்களுக்கு ஆசை வருவதற்கு வழி காணோம். ஆதலால் அர்ச். எவுஸ்தாசியாரைப் போல் கர்த்தரிடத்திலிருக்கிற நன்மைகளையுத் திவ்விய இலட்சணங்களையும் அடிக்கடி நினைக்க வேண்டும். அப்படி செய்தால் சர்வேசுரனை முகமுகமாய்ச் தரிசிக்க அவர் ஆசைப்பட்டதுபோல் நீங்களும் ஆசைப்படுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக