தபசுகாலத்தின் நான்காவது ஞாயிறுக்கான தியானம்
பாவிகள் மேல் நமது நேச ஆண்டவர் கொண்டிருக்கும் கனிவுமிக்க கருணையின் பேரில் தியானம்: அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்
சேசுகிறிஸ்துநாதர் சுவாமியின் திவ்யபாடுகளுக்கான காலம் சமீபத்தில் இருந்தபோது, ஒருநாள் சமாரியாவிற்கு சென்றார். அங்கு சமாரியா;கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்களாக “அவருடைய சீஷர்களாகிய இயாகப்பரும் அருளப்பரும், “ஆண்டவரே, உமக்கு சித்தமானால் வானத்தினின்று அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்படி சொல்கிறோம் என்றார்கள்” (லூக் 9:54) ஆனால், அதற்கு, தம்மை நிந்திப்பவர்களிடமும் மதுர தயாளம் நிறைந்தவராக விளங்கும், திவ்ய சேசுநாதர்சுவாமி, “உங்களுக்கு யாருடைய புத்தியுண்டென்று உங்களுக்குத் தெரியவில்லை. மனுமகன் ஆத்துமங்களைச் சேதமாக்குவதற்கல்ல, அவைகளை இரட்சிக்கவே வந்தார்” என்றார் (லூக்.
9:55,56).
மேலும் ஆண்டவர், தமது சீடர்களிடம், “நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவனாயிருக்கிறேனென்று என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்” (மத் 11:29) என்று கூறியதன்மூலம், திமை செய்பவர்களை பழிவாங்கி தண்டிப்பது, சர்வேசுரனை ஏற்றுக் கொள்ளாதவர்களை அழிப்பது என்ற மனப்பான்மை நம் நேச ஆண்டவருக்கு ஏற்புடையதல்ல என்றும், பொறுமையும் தயாளமும், சாந்தமும் உடைய நமது ஆண்டவர் மனிதரை அழிப்பதற்கல்ல, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களை இரட்சிப்பதற்கே வந்தார் என்றும், இங்கு நமக்கு உணர்த்துகின்றார். மேலும் பின்வரும் உவமையில் நமது திவ்ய இரட்சகர், எத்தகைய கனிவுமிக்க சிநேக இருதயத்துடன் பாவிகளை நேசிக்கிறார் என்று எவ்வளவு அழகாக விவரிக்கிறார்! “உங்களில் நுரறு ஆடுகளை உடைய எவனாயினும் அவைகளில் ஒன்று காணாமற் போனால், மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்தில் விட்டுவிட்டு, காணாமற்போன ஆட்டைக் காணுந்தனையும் தேடித்திரிவானோ? அதைக் கண்டுபிடித்தபின்பு, சந்தோஷமாய் அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு, வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்தேன், ஆகையால் என்னோடு கூடக் களிகூறுங்களென்று சொல்லுவானல்லோ?” (லூக்.15:4-6).
ஆனால் ஓ எங்கள் நேச ஆண்டவரே! இங்கு திவ்ய மேய்ப்பராகிய நிரல்ல, அகமகிழவேண்டியது! தனது திவ்ய மேய்ப்பரும் சர்வேசுரனுமாகிய உம்மைக் கண்டடைந்த காணாமல்போன ஆடுதான் அதிக சந்தோஷமடைய வேண்டியது! ஆம். உண்மையில், தனது மேய்ப்பரைக் கண்டடைந்த ஆடு அகமகிழ்வடைந்தது என்று ஆண்டவரும் இதையே, “காணாமல் போன ஆட்டைக் கண்டடைந்ததினிமித்தம் மாபெரும் சந்தோஷமுண்டாயிற்று”
என்று குறிப்பிடுகின்றார். இவ்வழகிய உவமையை“அவ்விதமே தவஞ்செய்ய அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நிதிமான்களைப் பற்றி உண்டாகிற சந்தோஷத்தைவிட, தவஞ்செய்கிற ஒரு பாவியினிமித்தம் மோட்சத்திலே அதிக சந்தோஷமுண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்.15:7) என்று நம் ஆண்டவர் முடிக்கின்றார். பாவி; தன் பாவங்களுக்காக மனஸ்தாபப்
படுவானேயாகில், அவனை தமது கனிந்த சிநேகத்தினால் அரவணைத்து, தமது திவ்ய தோள்கள்மேல் சுமந்து செல்வதற்கு சித்தமாயிருக்கும் நமது நேச ஆண்டவரின் அளவில்லாத சிநேகத்தையும் இரக்கத்தையும் கண்டுபிடிக்கும் போது, எந்த பாவிதான் உடனே ஓடோடிபோய் தனது திவ்ய இரட்சகரின் திவ்ய திருப்பாதங்களில் விழுந்து கிடப்பதற்கு விரும்பாத கன்னெஞ்சனாயிருப்பான்?

நம் நேச ஆண்டவர் மனஸ்தாபப்படும் பாவிகள் மேல் மிகுந்த கனிவுமிக்க தயையுடன் இருக்கிறார் என்பதை ஊதாரிப்பிள்ளையின் உவமையில் அறிவிக்கிறார் (லூக்.15:12). இவ்வுவமையில் நல்ல தகப்பனார் தன் ஊதாரிப் பிள்ளையின் நிர்ப்பந்தத்தின் பேரில், அவனுக்குச் சேர வேண்டிய சொத்தின் பாகத்தை, மிகுந்த துயரத்துடன் அவனுடைய அழிவைக்குறித்து அழுது கொண்டே, அவனிடம் கொடுக்கிறார். அவன் தன்னுடைய சொத்தையெல்லாம் திய வழியில் விரயம் செய்கிறான். பன்றிகளுக்குப் போடும் கோதுகள்கூட
அவனுக்குக் கிடைக்காத நிலைக்கு வறியவனான அவன், சர்வேசுரனைவிட்டுப் பிரிந்தவனும், தேவவரப்ரசாதத்தையும் பேறுபலன்களையும் இழந்து விட்டவனும், நிர்ப்பாக்கியமான அந்தஸ்தில் பசாசின் அடிமையாக உபாதனை நிறைந்தவனுமான, ஒரு பாவியின் உருவகமாகவே ஊதாரிப்பிள்ளை நமக்குக்
காண்பிக்கப்படுகிறான். திவ்ய சேசுநாதர்சுவாமியின் உருவகமாக விளங்கும் அந்த தகப்பனார், மனந்திரும்பிய ஊதாரிப்பிள்ளையைக் கண்டதும், அவனுடைய அக்கிரமத்திற்காக அவனைத் தண்டித்துத் துரத்தாமல், இரக்கத்தால் மனம் உருகி, அவனை அரவணைத்து முத்தமிடுகிறார்.

அர்ச்.ஜெரோம் மற்றும் அர்ச்.அகுஸ்தினார், அவனுக்கு உடுத்தப்படுகிற முதல்தர ஆடை என்பது, மனந்திரும்பும் பாவிக்கு பாவமன்னிப்பின் மூலம், கிடைக்கப்பெறும் தேவவரப்ரசாதங்களையும் பரலோகக் கொடைகளையும்
குறிக்கிறது என்று குறிப்பிடுகின்றனர்.அவனுக்குஅணிவிக்கப்படும் மோதிரமானது, தேவஇஷ்டப்பிரசாத அந்தஸ்திற்குள் நுழைந்த ஆத்துமம் கிறிஸ்துநாதரின் பத்தினியாக மறுபடியும் மாறுகிறது என்பதற்கான
அடையாளமாக இருக்கிறது. “கொழுத்த கன்றை அடித்துக் கொண்டாடுவோம்” என்ற வாக்கியம், பரலோகவாசிகளின் ஜீவிய அப்பமாகிய, மகா பரிசுத்த தேவ நற்கருணையைக் குறிக்கிறது. அதாவது, மனந்திரும்பிய பாவியின் ஆத்துமத்திற்கு தேவையான திவ்யபோஜனத்திற்காக திவ்யபலிபூசை நேரத்தில், நமது நேச ஆண்டவர், நமது தேவாலயப் பீடங்களில் தம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பதையேக் குறிக்கிறது.

எனவே நாம் அந்த தேவவிருந்தை உண்டு அகமகிழ்வோமாக! ஆனாலும், ஓ ஆண்டவரே! எங்கள் தேவபிதாவே! ஒரு நன்றிகெட்ட மகன் திரும்ப வந்ததற்காக ஏன் இவ்வளவாக நாம் மகிழ வேண்டும்? “ஏனென்றால், இறந்து போன, இந்த மகன், மறுபடியும் உயிருடன் வந்திருக்கிறான். இவன் காணாமல் போனான். இப்போது, நான் அவனைக் கண்டடைந்தேன்” என்று நமது பரலோக தந்தை, நமக்கு பதிலளிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக