Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 1 டிசம்பர், 2017

St.Bibiana, V.M December 2


2-ம் தேதி

      

அர்ச்.பிபியானம்மாள்> கன்னிகை> வேதசாட்சி

                             (கி.பி.363)

       பிபியானம்மாளின் தேவ பக்தரான தாய் தந்தையர் சத்திய வேதத்திற்காக வேத துரோகியான ஜுலியான் இராயனுடைய கட்டளைப்படி பிடிபட்டு> தங்கள் இரத்தத்தை சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள்.  இவர்களுடைய சொத்துக்களையெல்லாம் அதிபதி பறிமுதல் செய்து> அவர்களுடைய குமாரத்திகளான பிபியானம்மாளையும்  தெமேத்திரியம்மாளையும் சிறைப்படுத்தி> அவர்களை சத்திய வேதத்தை மறுதலிக்கச் செய்யும்படி தன்னால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்தான்.  ஆனால் இவ்;விரு புண்ணியவதிகளும் அவன் கருத்;திற்கு இணங்காதிருந்தார்கள்.  நடுவன் அவ்விருவரையும் தன் முன்பாக வரவழைத்து> அவர்களை விசாரணை செய்கையில் தெமேத்திரியம்மாள் சத்திய வேதத்தை விடுவதில்லையென்று தைரியமாகக் கூறி அங்கேயே விழுந்து இறந்தாள்.  பிபியானாளும் அதே கருத்தாயிருந்ததை அதிபதி கண்டு> ஒரு துஷ்ட ஸ்திரீயின் கையில் அவளை ஒப்படைத்து> பலவாறாய் சோதித்துப் பார்த்தும் அவள் வேதத்தில் தைரியமாயிருந்ததை அறிந்து> அவளை நிஷ்டூரமாய் அடிக்கக் கட்டளையிட்டான்.  சேவகர் கொடுங்கோலனுடைய கட்டளைப்படி> இளம் பெண்ணான பிபியானம்மாளை ஒரு தூணில் கட்டி நிஷ்டூரமாய் அடித்தபோது> அவள் உடலிலிருந்து இரத்தம் ஏராளமாய்ப் புறப்பட்டு தரை மேல் ஓடியது.   சதையும் பிய்ந்து தரையில் விழுந்தது.  வேதசாட்சியோவெனில் சற்றேனும் விசுவாசத்தில் தளராமல்> சர்வ வேதனையையும் பொறுமையுடன் அனுபவித்து சர்வேசுவரனை நோக்கிக் பிரார்த்தித்து> அங்கேயே உயிர் துறந்து மோட்சானந்த முடியைப் பெற பாக்கியம் பெற்றாள்.  அவளுடைய சரீரம் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடப்பட்டபோதிலும் அது அதிசயமாகக் காப்பாற்றப்பட கிறீஸ்துவர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.



யோசனை

       நமது துன்பதுரிதங்களிலும் இப் புண்ணியவதியைப் போல பொறுமையை அனுசரிப்போமாகில் புண்ணியத்தில் நிலைக்கொள்வோம் என்பது உண்மை.

St.Eligius, B. December 1


அர்ச்.எலிஜியுஸ்>  மேற்றிராணியார்

                             (கி.பி.659)

       எலிஜியுஸ் சிறுவயதில் தன் பெற்றோரால் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டு> புண்ணியவாளனும் சிறந்த வேலைக்காரனுமான ஒரு நகைத் தொழிலாளியிடம் வேலை கற்கும்படி விடப்பட்டார்.  இவர் இந்த வேலை செய்யும்போது தன் ஆத்தும வேலையை மறவாமல் ஜெபத்தியானங்கள் செய்து> திவ்விய பூசை கண்டு ஞானப் பிரசங்கங்களைக்  கவனமாய் கேட்டு> புண்ணிய வழியில் நடந்தார்.  இவர் நகைத் தொழிலை எவ்வளவு சாதுரிய சாமர்த்தியத்துடன் செய்தாரெனில்> இவருடைய கீர்த்தி வெகு தூரம் பரவி> பிரான்ஸ் தேசத்தின் இராஜா இவரைத் தம்மிடம் வரவழைத்து> ஒரு சிம்மாசனம் செய்யச் சொல்லி> அதற்கு வேண்டிய பொன்> இரத்தினம் முதலிய விலையேறப்பெற்ற கற்களை அவருக்குக் கொடுத்தார்.  எலிஜியுஸ் இரண்டு சிம்மாசனங்களையும் மிகவும்  விசித்திர விநோத வேலைப்பாடாய் அமைத்ததைக் கண்ட அரசன் அவருடைய வேலைப்பாட்டையும்> விசேஷமாக அவருடைய தர்ம நடத்தையையும் மெச்சிப் புகழ்ந்து> தன் அரண்மனையில் அவரை பெரிய உத்தியோகத்தில் வைத்துக்கொண்டார்.  இவர் அரண்மனையில் வேலை செய்யும்போது> முன்னிலும் அதிக புண்ணியங்களைப் புரிந்து> ஏழைகளுக்குத் தர்மங் கொடுத்து திரளான அடிமைகளை மீட்டு> துறவற மடங்களைக் கட்டுவித்து> அர்ச்சியசிஷ்டவராய் நடந்து வந்ததினால் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார்.  இந்த உந்நதப் பட்டத்தில் உயர்த்தப்பட்ட பின் மகா கவனத்துடன் கிறீஸ்துவர்களைக் கவனித்து> அஞ்ஞானிகளை மனந்திருப்;பி> கெட்ட வழக்கங்களை ஒழித்து> விசேஷமாக நல்லொழுக்கத்திற்கு விரோதமான ஆடல்> பாடல்> நாடகம் முதலியவைகளை ஒழிக்கச் செய்து அநேக அற்புதங்களாலும் சிறந்த புண்ணியங்களாலும் பிரகாசித்து மோட்சத்தைச் சுதந்தரித்துக்கொண்டார். 



யோசனை
       நமது பிழைப்புக்கான தொழில்> வியாபாரம் முதலியவைகளில் சு10து வாது> வஞ்சகம் முதலியவைகளை நீக்கி> எதார்த்தமுள்ளவர்களாய் நடப்போமாக

St. Andrews, Apostle. Nov.  30-ம் தேதி


 30-ம் தேதி

                                            

 அர்ச்.அந்திரேயாஸ், அப்போஸ்தலர்

                பெலவேந்திரர் என்று அழைக்கப்படும் அந்திரேயாஸ் கலிலேயா நாட்டில் செம்படவரான தாய் தந்தையரிடத்தினின்று பிறந்து, அந்தத் தொழிலை நடத்தி வந்தார்.  இவர் அர்ச்.ஸ்நாபக அருளப்பருக்குச் சீஷனாகி, சேசுநாதர் உலக இரட்சகரென்று தமது குருவால் அறிந்து, தன் சகோதரரான இராயப்பருடன் சேசுநாதரைக் கண்டு பேசிய பின் சகலத்தையும் விட்டுவிட்டு அவருக்குச் சீஷனானார்.  இவர் கர்த்தருடைய அதிசய அற்புதங்களைக் கண்டு, அவருடைய மதுரமான பிரசங்கங்களைக் கேட்டு அவர் மட்டில் அதிக நேசப்பற்றுதல் கொண்டார்.  பலமுறை கர்த்தரைப் பார்க்க ஆசித்து வந்த அன்னியரை அந்திரேயாஸ் அவரிடம் கூட்டிக்கொண்டுபோய் விடுவார்.  மற்ற அப்போஸ்தலர்களுடன் இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றுக்கொண்ட பின், அந்திரேயாஸ் பல தேசங்களில் சுற்றித்திரிந்து, சுவிசேஷத்தைப் போதித்து, அற்புதங்களைச் செய்து, அநேகரை சத்திய வேதத்தில் சேர்த்துக்கொண்டார்.  இவர் பத்திராஸ் என்னும் நகரில் பிரசங்கித்து அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததை அந்நகரின் அதிபதி கேள்விப்பட்டு, அவரைப் பிடித்து உபாதித்த பின், அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லக் கட்டளையிட்டான்.  அந்திரேயாஸ் தாம் அறையுண்டு சாக இருக்கும் சிலுவையைக் கண்டு சந்தோஷித்து களிகூர்ந்து அதை ஆவலுடன் அணுகி: பரிசுத்த சிலுவையே! என் குருவான சேசுகிறீஸ்துநாதருடைய இரத்தத்தால் பரிசுத்தப்படுத்தப்பட்ட திருச்சிலுவையே! வாழ்க! வாழ்க!  உன்னில் அறைபடும் என்னை, என் ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதருக்கு ஒப்புக்கொடுப்பாயாக என்று கூறி, அவர் அதில் அறைபட்டு, ஒரு நாள் முழுவதும் அதில் தொங்கி தம்மைச் சு10ழ்ந்து நின்ற பெரும் ஜனக்கூட்டத்திற்குப் பிரசங்கித்து, உயிர் துறந்து, தமது குருவிடம் போய்ச் சேர்ந்தார். 



யோசனை

                நமது ஜீவிய காலத்தில் திருச்சிலுவையின் மீது பக்தி வைத்து, அதைப் பற்றி தியானிப்போமாகில், மரண நேரத்தில் அதனால் ஞான ஆறுதல் அடைவோம்.