திருச்சபை சொல்லி தருகிற இரண்டு பாடம் என்னவென்றால்
1. கடவுள் மட்டும் தான்,தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.
அவர் மட்டுமே ஆராதனைக்கு உரியவர். அவரால் படைக்கப் பட்ட ஒன்றை ஆராதிப்பவன் ஒன்றாம் கற்பனைக்கு எதிராக பாவம் செய்கிறான். கத்தோலிக்கர்கள் தேவமாதாவை ஆராதிக்கவில்லை. அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
அவர் கடவுளின் தாய். பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சேசுவினுடைய தாய். எப்படி நாம் இந்த உலகில் நம் பெற்றோரை மதிக்கிறோம். அப்பிடி இருக்க கடவுள் தம் தாயாரை எப்படி உயர்த்துவார். தம்மை பெற்று 30 வருடங்கள் வளர்த்த அந்த தாயை எவ்வளவு உயர்த்துவார். சேசுநாதர் 30 வருடம் இந்த உலகில் தேவமாதாவிற்கு கிழ்படிந்து இருந்தார். காணா ஊர் திருமணத்திலே அவர்களுக்கு ரசம் தீர்ந்து போக தேவதாய் சேசுநாதரை அவர்களுக்கு உதவுமாறு சொல்லுகிறார். அவரும் தன் தாயின் கட்டளைக்கு கீழ்படிகிறார்.(அரு. 2. 3-8) சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்திற்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணிரை திராட்சை ரசமாக மாற்றின புதுமையை செய்த படியால், அவர் அந்த தாயின் மீது எவ்வளவு மரியாதை வைத்து இருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது.
கபிரியேல் தேவதூதன் மூலமாக ஆண்டவர் மாதாவை இவ்வாறாக வாழ்த்துகிறார். (லூக் . 1. 28) "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க. கர்த்தர் உம்முடனே. ஸ்திரிகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே." இவ்வாறாக தேவதூதன் மாதாவை வாழ்த்துகிறார். இந்த உலகில் உள்ள எல்லா பெண்களையும் விட தேவதாயை ஆண்டவர் உயர்த்தினார்.
மற்றொரு இடத்தில் அர்ச். லூக்காஸ் தனது சுவிசேஷத்தில் (லூக். 1. 41-45) எலிசெபத்தமாளும் இஸ்பிரித்து சாந்துவினால் நிரப்பபட்டு உரத்த சத்தமாய் கூப்பிட்டு சொன்னதாவது, : ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய ஆண்டவருடைய தாயார் என்னிடம் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி? இதோ, நீர் வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றில் உள்ள பிள்ளை அக்களிப்பால் துள்ளிற்று. அன்றியும் விசுவசிதவளாகிய நீரே பாக்கியவதி: ஏனெனில் ஆண்டவரால் உமக்கு வசனிக்கப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்ப்ட்டதாமே. என்
இவ்வாறாக தேவதாயை குறித்து பல உதாரணங்களை சொல்லலாம். நாம் தேவமாதாவை ஆராதிக்கவில்லை . மாறாக அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். ஏனெனில் அவர் நமது இரட்சகருடைய தாயார் என்பதனால்.
2. சேசுநாதர் ஒருவரே இரட்சகர். அவர் மட்டுமே தமது பாடுகளின் மூலம் மனுக்குலத்தை இரட்சிக்கிறார். தேவதாய் மனுக்குலத்தை இரட்சிக்கிறவர் அல்ல. மாறாக மனுகுல இரட்சணியத்தில் சேசுநாதருக்கு ஒரு துணை இரட்சகராக(Co -Redeemer) இருக்கிறார்.
ஆண்டவர் மாதாவுக்கு மனுகுல இரட்சணியத்தில் பல சலுகைகளை
வழங்கியுள்ளார். மாதா பல நாடுகளில் காட்சி அளித்து மக்களை மோட்ச பாதைகளில் சேர்கிறார். தம்மிடத்தில் அன்பு கொண்டுள்ள பிள்ளைகளை மோட்சத்தில் அவர்களை வரவேற்கிறார்கள். ஏனென்றால் தேவதாய் ஆண்டவருடைய தாய். அவர் சொல்லுவதை சேசுநாதர் ஒருபோதும் மறுக்கமாட்டார்.
பாரீஸ் பட்டணத்திலே அர்ச். ஞானபிரகசியார் என்னும் அரசரால் ஒரு அழகான கோவில் உண்டு. அந்த கோவில் முன்பு சலவை கல்லால் ஆன ஒரு அழகிய மாதா சுருபம் உண்டு. ஒரு நாள் ஒரு சிறுவன் தன் வீட்டுத் தோட்டத்தில் பூக்களால் ஒரு மாலை செய்து மாதாவின் கழுத்திலே அணிய வேண்டும் என்று சென்றான். அந்த சுருபத்தின் அருகில் சென்ற போதுதான் தன்னால் அந்த மாலையை சுருபத்தின் கழுத்தில் இடமுடியாது என கண்டான். ஆனாலும் பல முயற்சி செய்து பார்த்தான். அவனால் முடியவில்லை. எனவே மிகவும் மனம் சோர்ந்தான். உடனே அந்த தாய் அந்த சிறுவன் மனம் சோர்ந்ததை கண்டு, அந்த சிறுவனை சமாதனம் செய்ய ஆவல் கொண்டார். அந்த கற்சுருபமானது அற்புதமாக தன் உடலை வளைத்து அந்த சிறுவனின் இரு கரங்களுக்கு எட்டும்படி தன் திரு சிரசை சாய்த்ததாம். அந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் அது நிமிராமலே இருப்பதை நாம் காணலாம்.
தேவமாதா தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவரையும் கைவிடுவதில்லை. மாதா இந்த உலகில் இருக்கும் போதே பிறருக்கு உதவும் குணம் இருந்தது. அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் ( 1. 40-56) கப்ரியல் தூதன் எலிசபெத் அம்மாள் கர்பந்த்தரித்து இருக்கிறாள் என்று சொன்னதும் அவளுக்கு உதவி செய்ய செல்கிறாள்.
அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (11. 27) "ஜனக் கூட்டத்தில் இருந்து ஒரு ஸ்திரியானவள் தன் சத்தத்தை உயர்த்தி : உம்மை சுமந்த உதரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையே என்றாள்." இப்படி அந்த பெண் புகழ காரணம் தேவமாதா சேசுநாதரை எவ்வளவு உத்தமமான முறையில் அவரை வளர்த்து வந்தாள் என்பதை நமக்கு காட்டுகிறது.
தேவமாதா சேசுநாதரை கல்வாரி மலையில் சிலுவையில் அறையும் மட்டும் அவரை பின் சென்றார். சேசுநாதர் இந்த உலகில் அவள் பெற்ற நாள் முதல் அவர் சிலுவையில் மரிக்கும் வரை அவரை பின் சென்றார். சுவிசேஷத்தில் ஆண்டவர் ஒரு இடத்தில் சொல்லுகிறார் "தன் சிலுவைகளை (துன்பங்களை ) சுமந்து கொண்டு என்னை பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது." தேவதாய் தன்னுடைய துன்பங்களை எல்லாம் சுமது கொண்டு சேசுநாதரை பின் சென்றார்.
நல்ல கள்ளன்
நல்ல கள்ளன் தன்னுடைய கடைசி நேரத்திலே தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, மனம் திரும்பினான். அவனுக்கு ஆண்டவர் மோட்ச பாக்கியத்தை கொடுக்கிறார். அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (23. 40-43) "மற்றவனோ மறுமொழியாக அவனைக் கண்டித்து, நீயும் இந்த ஆக்கினித் தீர்ப்புக்குள்ளாயிருந்தும் சர்வேசுனுக்கு பயப்படுகிறதில்லையா? நமக்கு இது நியாயம் தான். நம்முடைய செய்கைகளுக்கு தக்க சம்பாவணையை பெறுகிறோம். ஒரு பொல்லாப்பும் செய்தவரல்ல என்று சொல்லி, சேசுநாதரை நோக்கி: சுவாமி தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான். சேசுநாதர் அவனை நோக்கி: இன்றே நீ என்னோடு கூட பரகதியில் இருப்பாயென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்."
தன் சாவில் நுணியில் மனம் திரும்பிய நல்ல கள்ளனுக்கே மோட்சம் என்றால், தன்னை பெற்று , வளர்த்து, தன்னுடைய சிலுவை மரணம் மட்டும் தன்னை பின் சென்ற அன்னைக்கு என்ன வரங்கள் எல்லாம் கொடுப்பார் என்று யோசித்து பாருங்கள்.
இந்த உலக மக்கள் மீது உள்ள பாசத்தால் தன் அன்னையை நமக்கும் தாயாக அவர் கொடுத்தார். அர்ச் . அருளப்பர் சுவிசேஷத்தில் சேசுநாதர் தம் தாயாரை இந்த உலகத்தின் தாயாராக தம்மால் நேசிக்கப்பட்ட சிஷனிடம் ஒப்படைத்தார்.
அவர்கள் பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.
https://www.youtube.com/watch?v=eVDAPJuhLtQ
https://www.youtube.com/watch?v=lmZoqSsgI1s
இவர்கள் தங்களை எப்போதும் உயர்த்தி பேசுகிறார்கள். இவர்கள் ப
ர்சேயர்கள்.
நாம் சுவிஷேசத்தில் வாசிக்கிற பரிசேயன், ஆயக்காரன் கதை தான் இவர்களது.இவர்கள் தங்களை தான் ஆண்டவர் முன் உயர்த்தி பேசுகிறார்கள். நாங்கள் இதை செய்தோம், அதை செய்தோம், நாங்கள் நோன்பு இருக்கிறோம், நாங்கள் ஆண்டவரை கண்டோம், அவர் எங்கள் மேல் இருக்கிறார், பரிசுத்த ஆவி எங்கள் மேல் இருக்கிறது. என்றெல்லாம் கதைகளை சொல்லுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஆண்டவர் முன் பரிசேயர்கள். தன்னைத் தான் உயர்த்துகிறவர்கள் எல்லாம் தாழ்த்தப்படுவார்கள்.
நாம் நம் அன்னையிடம் மன்றாடுவோம். தாயே எங்களை நல்ல வழியில் நடத்தியருளும் என்று மன்றாடுவோம்.
ஜென்ம பாவமின்றி உற்பவித்த மரியாயே, உம்மிடம் தஞ்சம் அடையும் எங்களுக்காகவும் மற்ற அனைவருக்காகவும், விசேஷமாய் சாத்தானின் இரகசிய சபையினருக்காகவும், உம் பாதுகாவலில் ஒப்படைக்கப்படுபவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளும்.
Download.....
Download about Catholic Tamil Sermons about Our Lady
1. கடவுள் மட்டும் தான்,தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.
அவர் மட்டுமே ஆராதனைக்கு உரியவர். அவரால் படைக்கப் பட்ட ஒன்றை ஆராதிப்பவன் ஒன்றாம் கற்பனைக்கு எதிராக பாவம் செய்கிறான். கத்தோலிக்கர்கள் தேவமாதாவை ஆராதிக்கவில்லை. அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
அவர் கடவுளின் தாய். பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சேசுவினுடைய தாய். எப்படி நாம் இந்த உலகில் நம் பெற்றோரை மதிக்கிறோம். அப்பிடி இருக்க கடவுள் தம் தாயாரை எப்படி உயர்த்துவார். தம்மை பெற்று 30 வருடங்கள் வளர்த்த அந்த தாயை எவ்வளவு உயர்த்துவார். சேசுநாதர் 30 வருடம் இந்த உலகில் தேவமாதாவிற்கு கிழ்படிந்து இருந்தார். காணா ஊர் திருமணத்திலே அவர்களுக்கு ரசம் தீர்ந்து போக தேவதாய் சேசுநாதரை அவர்களுக்கு உதவுமாறு சொல்லுகிறார். அவரும் தன் தாயின் கட்டளைக்கு கீழ்படிகிறார்.(அரு. 2. 3-8) சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்திற்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணிரை திராட்சை ரசமாக மாற்றின புதுமையை செய்த படியால், அவர் அந்த தாயின் மீது எவ்வளவு மரியாதை வைத்து இருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது.
Annunciation |
Visitation |
வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்ப்ட்டதாமே. என்
இவ்வாறாக தேவதாயை குறித்து பல உதாரணங்களை சொல்லலாம். நாம் தேவமாதாவை ஆராதிக்கவில்லை . மாறாக அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். ஏனெனில் அவர் நமது இரட்சகருடைய தாயார் என்பதனால்.
2. சேசுநாதர் ஒருவரே இரட்சகர். அவர் மட்டுமே தமது பாடுகளின் மூலம் மனுக்குலத்தை இரட்சிக்கிறார். தேவதாய் மனுக்குலத்தை இரட்சிக்கிறவர் அல்ல. மாறாக மனுகுல இரட்சணியத்தில் சேசுநாதருக்கு ஒரு துணை இரட்சகராக(Co -Redeemer) இருக்கிறார்.
ஆண்டவர் மாதாவுக்கு மனுகுல இரட்சணியத்தில் பல சலுகைகளை
வழங்கியுள்ளார். மாதா பல நாடுகளில் காட்சி அளித்து மக்களை மோட்ச பாதைகளில் சேர்கிறார். தம்மிடத்தில் அன்பு கொண்டுள்ள பிள்ளைகளை மோட்சத்தில் அவர்களை வரவேற்கிறார்கள். ஏனென்றால் தேவதாய் ஆண்டவருடைய தாய். அவர் சொல்லுவதை சேசுநாதர் ஒருபோதும் மறுக்கமாட்டார்.
தேவமாதா தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவரையும் கைவிடுவதில்லை. மாதா இந்த உலகில் இருக்கும் போதே பிறருக்கு உதவும் குணம் இருந்தது. அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் ( 1. 40-56) கப்ரியல் தூதன் எலிசபெத் அம்மாள் கர்பந்த்தரித்து இருக்கிறாள் என்று சொன்னதும் அவளுக்கு உதவி செய்ய செல்கிறாள்.
அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (11. 27) "ஜனக் கூட்டத்தில் இருந்து ஒரு ஸ்திரியானவள் தன் சத்தத்தை உயர்த்தி : உம்மை சுமந்த உதரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையே என்றாள்." இப்படி அந்த பெண் புகழ காரணம் தேவமாதா சேசுநாதரை எவ்வளவு உத்தமமான முறையில் அவரை வளர்த்து வந்தாள் என்பதை நமக்கு காட்டுகிறது.
தேவமாதா சேசுநாதரை கல்வாரி மலையில் சிலுவையில் அறையும் மட்டும் அவரை பின் சென்றார். சேசுநாதர் இந்த உலகில் அவள் பெற்ற நாள் முதல் அவர் சிலுவையில் மரிக்கும் வரை அவரை பின் சென்றார். சுவிசேஷத்தில் ஆண்டவர் ஒரு இடத்தில் சொல்லுகிறார் "தன் சிலுவைகளை (துன்பங்களை ) சுமந்து கொண்டு என்னை பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது." தேவதாய் தன்னுடைய துன்பங்களை எல்லாம் சுமது கொண்டு சேசுநாதரை பின் சென்றார்.
நல்ல கள்ளன்
நல்ல கள்ளன் தன்னுடைய கடைசி நேரத்திலே தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, மனம் திரும்பினான். அவனுக்கு ஆண்டவர் மோட்ச பாக்கியத்தை கொடுக்கிறார். அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (23. 40-43) "மற்றவனோ மறுமொழியாக அவனைக் கண்டித்து, நீயும் இந்த ஆக்கினித் தீர்ப்புக்குள்ளாயிருந்தும் சர்வேசுனுக்கு பயப்படுகிறதில்லையா? நமக்கு இது நியாயம் தான். நம்முடைய செய்கைகளுக்கு தக்க சம்பாவணையை பெறுகிறோம். ஒரு பொல்லாப்பும் செய்தவரல்ல என்று சொல்லி, சேசுநாதரை நோக்கி: சுவாமி தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான். சேசுநாதர் அவனை நோக்கி: இன்றே நீ என்னோடு கூட பரகதியில் இருப்பாயென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்."
தன் சாவில் நுணியில் மனம் திரும்பிய நல்ல கள்ளனுக்கே மோட்சம் என்றால், தன்னை பெற்று , வளர்த்து, தன்னுடைய சிலுவை மரணம் மட்டும் தன்னை பின் சென்ற அன்னைக்கு என்ன வரங்கள் எல்லாம் கொடுப்பார் என்று யோசித்து பாருங்கள்.
இந்த உலக மக்கள் மீது உள்ள பாசத்தால் தன் அன்னையை நமக்கும் தாயாக அவர் கொடுத்தார். அர்ச் . அருளப்பர் சுவிசேஷத்தில் சேசுநாதர் தம் தாயாரை இந்த உலகத்தின் தாயாராக தம்மால் நேசிக்கப்பட்ட சிஷனிடம் ஒப்படைத்தார்.
பிரிவினைகாரர்களின் ஏமாற்றுதல்
பிரிவினைகாரர்கள் தங்கள் எண்ணம் போல் பைபிளில் உள்ள கருத்துக்களை மாற்றுகிறார்கள். அவர்கள் நாம் ஏன் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். மரியாள் ஒரு சாதாரண பெண் அவளை ஏன் நாம் ஆராதிக்க வேண்டும் என்று எல்லாம் நம் அன்னையை அவர்கள் மிகவும் கேவலமாக பேசுகிறார்கள்.
பைபளில் உள்ள வசனங்களுக்கு தங்களுக்கு வேண்டியது போல அவர்களே ஒரு கதை கட்டுகிறார்கள். உதாரணமாக அரு. 2. 4. ஸ்திரியே எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய காலம் இன்னும் வரவில்லையே என்று அவளுக்கு(தேவதாய்) திருவுளம் பற்றினார்.
எனக்கும் உமக்கும் என்ன?" என்னும் இந்த வாக்கியத்தை "என்னோடு உனக்கு காரியமென்ன" என்பதாக சிலர் அர்த்தம் பண்ணி இவ்விதமாய் சேசுநாதர் தம்முடைய தாயாரை இகழ்ந்த்தாக சொல்லிக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த வாக்கியத்தை மூல பாஷையாகிய எபிரேய பாஷையில் பார்க்குமிடத்தில் கலியானக்காரர் விஷயத்தில் கலந்து கொள்வது "நம்மிருவருக்கும் காரியமில்லையே" என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டதாக நிச்சயமாகிறது.
அன்றியும் தாயை நோக்கி: ஸ்திரியே என்பது கிரேக்கர்களுக்கும் கீழ்திசைகளிலும் மரியாதையான வார்த்தையேயொழிய தாழ்மையான வார்த்தை அல்ல. மேலும் சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்துக்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணீரை ரசமாக மாற்றின புதுமையை செய்தபடியால் அவர் அந்த ஆண்டவளை சங்கித்து கனம்பண்ணினார்ரென்று சொல்ல வேணுமேயொழிய அவளுக்கு கனகுறை செய்தாரென்று எவரும் நினைப்பதற்கு இடமில்லை.
கள்ள தீர்க்கதரிசிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தமிழ் நாட்டிலே அனேக கள்ள போதகர்கள் தோன்றியுள்ளனர்.. அவர்களின் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் ஒன்று கூட நடப்பது கிடையாது. அவர்கள் ஒரு குத்து மதிப்பாக சொல்கிறார்கள்.அவர்கள் பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.
https://www.youtube.com/watch?v=eVDAPJuhLtQ
https://www.youtube.com/watch?v=lmZoqSsgI1s
False prophets |
ர்சேயர்கள்.
நாம் சுவிஷேசத்தில் வாசிக்கிற பரிசேயன், ஆயக்காரன் கதை தான் இவர்களது.இவர்கள் தங்களை தான் ஆண்டவர் முன் உயர்த்தி பேசுகிறார்கள். நாங்கள் இதை செய்தோம், அதை செய்தோம், நாங்கள் நோன்பு இருக்கிறோம், நாங்கள் ஆண்டவரை கண்டோம், அவர் எங்கள் மேல் இருக்கிறார், பரிசுத்த ஆவி எங்கள் மேல் இருக்கிறது. என்றெல்லாம் கதைகளை சொல்லுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஆண்டவர் முன் பரிசேயர்கள். தன்னைத் தான் உயர்த்துகிறவர்கள் எல்லாம் தாழ்த்தப்படுவார்கள்.
நாம் நம் அன்னையிடம் மன்றாடுவோம். தாயே எங்களை நல்ல வழியில் நடத்தியருளும் என்று மன்றாடுவோம்.
ஜென்ம பாவமின்றி உற்பவித்த மரியாயே, உம்மிடம் தஞ்சம் அடையும் எங்களுக்காகவும் மற்ற அனைவருக்காகவும், விசேஷமாய் சாத்தானின் இரகசிய சபையினருக்காகவும், உம் பாதுகாவலில் ஒப்படைக்கப்படுபவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளும்.
Download.....
Download about Catholic Tamil Sermons about Our Lady
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக