Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 25 மார்ச், 2015

மங்கள வார்த்தை திருநாள் (மார்ச் 25)

"இதோ ஆண்டவருடைய அடிமையானவள், உம்முடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது "


அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்திலே கபிரியேல் தூதர் மாமரிக்கு மங்கள வார்த்தை சொன்னதை விரிவாக நமக்கு சொல்லுகிறார். அர்ச். லூக்காஸ் அதிகாரம் 1 வசனம் 26 – 38.  கபிரியேல் என்னும் தேவதூதன் கலிலேயா நாட்டிலுள்ள நசரேத்தூருக்கு சர்வேசுரனால் அனுப்பப்பட்டு தாவீதின் கோத்திரத்தாராகிய சூசையப்பர்; எனப்பட்ட ஓர் மனிதனுக்க விவாகப் பந்தனமான ஓர் கன்னிகையிடத்தில் வந்தார்.  அந்த கன்னிகையின் பெயர் மரியம்மாள்.  தேவதூதன் அவள் இருந்த இடத்தில் பிரவேசித்து பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே. ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே என்றார்.  இதை அவள் கேட்ட மாத்திரத்தில் இந்த வார்த்தையினால் கலங்கி இந்த மங்களம் எத்தன்மையானதோ என்று யோசனையாயிருக்கையில், தேவதூதன் அவளை நோக்கி: மரியே! நீர் அஞ்ச வேண்டாம், எனெனில் சர்வேசுரனுடைய கிருயை பெற்றிருக்கிறீர்.  இதோ, உமது உதரத்தில் கெற்பந் தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்.  அவருக்கு யேசு என்னும் நாமம் சூட்டுவீர்.  அவர் பெரியவராயிருப்பார்.  உன்னதமானவருடைய சுதன் எனப்படுவார்.  ஆண்டவராகிய சர்வேசுரன் அவர் தந்தையாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்கு கொடுப்பார்.  அதலால் அவர் யாக்கோபின் கோத்திரத்தில் என்றென்றைக்கும் அரசாளுவார்.  அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது.  என்றார்.
அப்போது மரியம்மாள் தேவதூதனை நோக்கி “இது எப்படியாகும்?  நான் புருஷனை அறியனே” என்று சொல்ல, தேவதூதன் அவளுக்கு மாறுத்தாரமாக: இஸ்பிரித்து சாந்து உமது மேல் எழுந்தருளுவார்.  உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்: ஆகையால் உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் எனப்படுவார்.  இதோ உமது பந்துவாகிய எலிசெபத்தும் தம் முதிர் வயதிலே ஓர் புத்திரனைக் கெர்ப்பந்தரிக்கிறாள்.  மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.  ஏனெனில் சர்வேசுரனால் கூடாத வாக்கு ஒன்றுமில்லை என்றார். அதற்கு மரியம்மாள் “இதோ ஆண்டவருடைய அடிமையாளவள், உம்முடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது”..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக