மார்ச் மாதம் 31-ந் தேதி க.
அர்ச். பல்பீனம்மாள் திருநாள்.
ST. BALBINE.
உயர்ந்த கோத்திரத்தாரும் அக்கியானிகளுமாகிய தாய் தகப்பனிடத்திலே அர்ச். பல்பீனம்மாள் பிறந்தாள். அவள் தன்னிடத்தில் இருந்த மிகுந்த சவுந்தரிய அலங்கார முகாந்தரமாக வெகு சந்தோஷப்பட்டிருந்தாள். ஆனால் கொஞ்சத்திற்குள்ளே அவளுடைய கழுத்திலே வந்த கண்டமாலையினாலே அழகுஞ் சந்தோஷமும் நீங்கித் துக்கத்தை அடைந்தாள். அவளுடைய தகப்பனாரும் அவள் தாயாரும் அந்த வியாதி தீர வைத்தியருக்கு வெகு பணங் கொடுத்து வெகு செலவு செய்திருந்தாலும் தீராமல் போச்சுது. அக்காலத்திலே இருந்த அலெக்சாண்டர் என்னும் பாப்பாண்டவர் அநேகம் புதுமைகள் பண்ணுகிற சேதி அந்தம்மாளுடைய தகப்பனாராகிய குயிரீனென்கிற துரை அறிந்து அவர் வழியாகத் தன் மகளுக்குக் குணமாகு மென்று நம்பிக்கையாய் இருந்தான்.
ஆனால் இந்தத் துரை பாப்புவின் பேரில் முந்திப் பகையாயிருந்து அவரை அநியாயமாகக் காவலில் வைத்திருந்தான். ஆயினும் தன் மகள் ஆரோக்கியம் அடைய வேண்டுமென்கிற முகாந்தரமாக அவளைத் தானே காவற் கூடத்திலே கூட்டிப்போய் அவளுக்கு ஆரோக்கியங் கட்டளையிட அவரை மன்றாடினான். அதற்கு பாப்பாண்டவர் சொன்னதாவது : என் கழுத்தில் ஆக்கினையாக வைத்த இருப்பு வளையத்தை எடுத்து உன் மகள் கழுத்திலே போடென்றார். அந்தப்படியே அந்தத் துரை செய்கிறபோது அந்த இருப்பு வளையத்தை அவள் கழுத்திலே போட்டவுட னே புதுமையாக அவள் முழுதும் ஆரோக்கியத்தை அடைந்தாள். அதைக் குயிரீனென்கிற துரை பார்த்து ஆச்சரியப்பட்டுத் தாமுந் தம்முடைய மனைவி மக்களும் ஞானஸ்நானம் பெற்றதும் அல்லாமல் வேதத்திற்காகப் பிராணணையுங் கொடுத்தார்கள், பல்பீனம்மாளோவெனில் தனக்கு ஆரோக்கியங் கொடுத்த ஆண்டவருக்குத் தான் நன்றியறிந்ததனம் காண்பிக்கத்தக்கதாகத் தான் எப்போதுங் கன்னிகையாய் இருக்க வார்த்தைப்பாடு கொடுத்தாள். அவள் அதை உத்தம பிரகாசத்திற்குச் செலுத்தி அநேக தருமங்களையும் உத்தம புண்ணியங்களையும் செய்துவந்த பிற்பாடு நல்ல ஆயத்தத்தோடே பாக்கியமான மரணத்தை அடைந்தாள்.
கிறீஸ்துவர்களே! புண்ணிய வழியிலே நீங்கள் இந்த மட்டுந் தப்பி நடந்திருந்தால் அர்ச். பல்பீனம்மாளுடைய தரும நடக்கையைப் பார்த்து நடந்தால் மோட்சத்திலே சேரலாம். அந்தம்மாள் ஆண்டவராலே புதுமையாக ஆரோக்கியம் அடைந்த பிற்பாடு, அந்த ஆரோக்கியத்தை அவருடைய ஊழியத்திலே செலவழித்தாள். ஐயையோ, சிலர் ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த ஆரோக்கியம், ஆஸ்தி, புத்தி, மகிமை முதலியவற்றைக் கொண்டு ஆண்டவருக்குச் செய்ய வேண்டிய ஊழிபம் பண்ணாமல் தங்கள் பாவங்களினாலே அவருக்குத் துரோகம் பண்ணுகிறார்கள். இரா சாஉனக்கு வெகுமானமாகக் கொடுத்த கத்தியைக் கொண்டு இராசாவைத்தானே வெட்டினால் அது மிகுந்த ஆக்கிரமம் ஆகும். சர்வேசுரன் உனக்கு அமைத்திருக்கிற கண், வாய், காது, கை முதலான உறுப்புக்களைக் கொண்டு அவருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்கிறது மிகவும் அக்கிரமமல்லவோ?
மேலும் அர்ச். பல்பீனம்மாள் கழுத்திலே வைத்திருந்த பொற்காறை வெள்ளிக்காறையைக் கொண்டு ஆரோக்கியம் அடையவில்லை. சர்வேசுரனுடைய வேதத்தைப்பற்றி உபத்திரிய வேதனையாக பாப்புவின் கழுத்திலே போட்டிருந்த இருப்பு வளையத்தைக் கொண்டு ஆரோக்கியம் அடைந்தாள். ஆகையால் இவ் வுலகத்தின் நகை உடைமைகளைப் பார்க்க, ஆண்டவரைக் குறித்து அனுபவிக்கிற கஸ்திகளை அதிசமாய் மதிக்க வேண்டும். அல்லாமலும் அர்ச். பல்பீனம்மாளிடத்திலே இருந்த அலங்கார சந்தோஷம் ஒரு வியாதி வந்தவுடனே நீங்கிப் போச்சுது. மனுஷருடைய சரீரம் எத்தனையோ நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டதாய் இருக்கின்றது. துரைகளும், ஆஸ்திக்காரர்களும், வாலர்களும் சவுந்தரியமுள்ளவர்களுமாகிய இவர்களின் சரீரங்கள், வியாதி முதலான நிர்ப்பந்தங்கள் இல்லாதிருக்குமோ, இல்லையே. இப்படியிருக்கையில் ஒரு வியாதியைக்கொண்டு மனுஷர் இழந்துபோகிற சரீர அலங்காரத்தைக் கனமாய் எண்ணலாமோ? குயவனாலே உண்டாக்கப்பட்ட பானை பார்வைக்கு நேர்த்தியாயிருந்தாலும் அதிலே ஒரு கல், ஒரு மரம் மோதினால், அல்லது அந்தப் பானை தானே உயரத்திலிருந்து கீழே விழுந்தால் உடனே தகர்ந்துபோம். மனுஷருடைய சரீரம் மெத்த சொற்பமான மண்ணாயிருக்கிறகினாலே அதை நம்பக்கூடாது. ஆதலால் அழிவுள்ள சரீர நன்மைகளைச் சட்டைபண்ணாமல், அழியாத ஆத்தும நன்மைகளை கனமாய் எண்ணி, ஆசையோடே தேடிக்கொள்ள வேண்டுமென்று அறியக்கடவீர்களாக.
saints life history in tamil
to Buy Tamil Christian Books (Catholic) Click here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக