Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

தேவ தோத்திர பாடல்கள் - தேவ ஸ்பிரித்து சாந்துவே

இஸ்பிரீத்து சாந்துவின் ஏழுவரம் கேட்டல் 

 தேவ ஸ்பிரித்து சாந்துவே
 (சத். வேத சங்கீர்த்தனை) 

1. தேவ ஸ்பிரீத்து சாந்துவே 
தேவரீர் வாரும் எம்மில் 
மாவரப் ரசாதம் நும் 
மைந்தர் எங்கட்கீயவே 
       வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப அநாதியே 

2. தேவுலகில் நின்று நும் 
திவ்விய ப்ரகாசத்தின் 
பேரொளி கொள் காந்தியை 
தேவரீர் வரவிடும் 
     வாரும் ஸ்பிரீத்து சாந்துவே..... 

3. ஞானம் புத்தி விமரிசை 
அறிவு திடம் பக்தியும் 
தெய்வ பயமாகிய 
வரங்கள் எங்கட்கீயவே 
     வாரும் ஸ்பிரீத்து சாந்துவே.....


தேவ தோத்திர பாடல்கள் - தேவதாயின் மாதம்

தேவதாயின் மாதம் 

தேவதாயின் மாதம் இது அல்லவோ - இதைச் 
சிறப்பாய்க் கொண்டாடிடவே
புறப்பட்டு வாரீர் தோழா -தேவ 

1. பூவில் உள்ள மானிடர்க்கு தேவ சுதன் தந்த அன்னை
புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே  - 2
ஆவலுடன் நாம் எல்லோரும் தேவ மரி பதங்கூடி (2) 
ஆனந்தம் மிகுந்த பல கீதங்களைப் பாடிடுவோம் - தேவ

2. தோட்டங்களிலுள்ள பல வாட்டமிலா புஷ்பங்களை 
சோடி சோடாய்ச் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம் -2 
கூட்டமாக எல்லோர் சேர்ந்து வீட்டிலுள்ள பேரைச் சேர்த்து -(2) 
கோவிலுக்கு சாயரட்சை ஆவலுடன் போவோம் வாரீர் -தேவ



தேவ தோத்திர பாடல் - தயாபர ராணி

 தயாபர ராணி 

1. தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி
 தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும் 
தலைபணி ஜெயராணி 
தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி 

2. தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி
 வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை
 விமரிசை புரி ராணி 
தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி 

3. தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி வங்கமார் கலிங்கம் கொங்கணம் மலையாளம் 
குதூகலி மகராணி 
தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி 

4. தயாபர ராணி தட்சணம் ஆள் ராண தாரணி பாரத பாண்டிய சேரமும் 
சோழர் புகழ் ராணி 
தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

Tamil Catholic Quotes 20 - St. Philip Neri

"சிஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்"  அர்ச். பிலிப்புநேரி