Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 24 டிசம்பர், 2019

அர்ச், அந்தோனியார் வணக்கமாதம் பதிமூன்றாம் நாள்



அர்ச். அந்தோனியார் பூர்ஜ் பட்டணத்திலிருந்த காலத்தில் அவ்விடத்தில் பேர்போன அவிசுவாசியொருவனிருந்தாள். அவனுடைய பெயர் கய்யார். (Guyard) அவன் கத்தோலிக்கருடைய விசுவாச சத்தியங்களெல்லாம் மறுத்து அநேகருக்குத் தூர்மாதிரிகை காட்டிவந்தான். ஒருநாள் அந்தோனியாருடன் வேத சத்தியங்களைக் குறித்து வெகுநேரம் தர்க்கமாடன்பிறகு தன் தப்பறைகளைக் கொஞ்சம் கண்டுபிடித்தான். ஆனாலும் தேவநற்கருணையில் சேசுநாதர் சுவாமி மெய்யாகவே எழுந்தருளியிருப்பதைப் பற்றி அவன் சந்தேகமுள்ளவனாய், ஒருதாள் அர்ச்சியசிஷ்டவரை நோக்கி அவன் சொன்னதாவது: நீர் ஏதாவது ஒரு பிரசித்தமான அடையாளத்தைக் கொண்டு நீர் போதிப்பதெல்லாம் உண்மைதானென்று ருசுப்படுத்தினால் நானும் என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உம்முடைய வேதத்தை அனுசரிக்க ஏற்றுக்கொள்ளுகிறோம். என்னிடம் ஒரு கோவேறு கழுதையிருக்கின்றது. மூன்றுநாள் வரைக்கும் நான் அதற்குத் தீனி ஒன்றும் வைக்காமல் சகல சனங்களுக்கும் முன்பாக விஸ்தாரமான ஸ்தலத்துக்கு அதையோட்டிவந்து, கொள்ளை அதற்கு முன்பாக வைக்கிறேன். அதே சமயத்கில் சேசுநாதருடைய சரீரமென்று நீர் 'சொல்லுகிற தேவ நற்கருணையைக் கொண்டுவந்து அதற்குக் காண்பியும். அந்த மிருகம் கொள்ளைச் சட்டைசெய்யாமல் தன் கால்களை மடித்துத் தேவநற்கருணைக்கு முன்பாகச் வணக்கம் செய்தால் நான் உடனே கத்தோலிக்கு வேதத்திற்கு சேருகிறேன் என்றான். |

Redmi Note 4 Cover
பக்தி விசுவாசம் நிறைந்த அர்ச்சியசிஷ்டவர் அதற்குச் சம்மதித்துப் போய் அந்த மூன்று நாளும் செபத்திலும், தவத்திலும் செலவழித்தார். குறிக்கப்பட்ட நேரத்தில் ஏற்கனவே திரளான பிரிவினைக்காரரும் மற்றவர்களும் கூடியிருந்த ஸ்தலத்துக்குத் தேவ நற்கருணை வைத்திருந்த கதிர்ப்பாத்திரத்தை எடுத்து வந்தார். அதே தருணத்தில் பட்டினியால் மெலிந்து இளைத்துப்போயிருந்த கோவேறு கழுதைக்கு முன்பாகக் கொள் இருந்த தொட்டியைக் சுய்யாரென்பவன் வைத்தான். அந்தோனியார் கழுதையைப் பார்த்து: நான் அபாத்திரனானாலும் என் கையிலிருக்கிற உன் சிருஷ்டிகருடைய நாமத்தால், புத்தியில்லாத மிருகமே. நான் உனக்குக் கட்டளையிடுகிற தென்னவென்றால், எங்கள் பீடங்களின் மேற் பலியிடப்படும் திவ்விய செம்மறியாட்டுக் குட்டிக்குச் சிருஷ்டிப்புக்கள் யாவும் கீழ்ப்பட்டிருக்கின்றன
வென்று அவிசுவாசிகள் கண்டுபிடிக்கத்தக்கதாக, நீ அவருக்கு முன்பாக உடனே வந்து வணக்கம் பண்ணக்கடவாய் என்றார். அந்த க்ஷணத்திலே தானே கோவேறு கழுதை கொள்ளைத் தொடாமல் தேவதற்கருணைக்கு முன்பாக வந்து தன் கால்களை மடித்து வணக்கம் செய்கிற பாவனையாக இருந்தது. கய்யாரும் அவனைச் சேர்ந்தவர்களும் தங்கள் அபத்த மார்க்கத்தை மிட்டு வேறு அநேகரோடு மனந் திரும்பினார்கள். இந்தப் புதுமை நடந்த போதுதான் "பிரிவினைக்காரருடைய சம்மட்டி' என்கிற மகிமையான பெயர் அந்தோனியாருக்கு ஏற்பட்டதென்று அநேக சொல்லு கிறார்கள். இந்தப் புதுமை நடந்த விடத்திலே சேம் பியேர் லெ கய்யார் (St.Pierre Is Guyard) என்ற கோயில் கட்டப் பட்டிருக்கிறது. திரளான பாவிகளை, பிரிவினைக்காரரை மனந்திருப்ப அர்ச், அந்தோனியார் முன் சொன்ன பிரகாரம் அநேகாநேகம் புதுமைகளைச் செய்து வந்தார்.
அர்ச். அந்தோனியார் பிரகங்கம் செய்வதற்குமுன், தன்னைத்தானே தாழ்த்துவார். வேண்டிக்கொள்ளுவார், தன் சரீரத்தை ஒறுத்துக் கடினமாய்த் தண்டிப்பார். பிறகு ஆண்டவருடைய பேரால் பிரசங்கம் செய்வார். மோசேஸ் என்பவர் சர்வேசுரனுடைய பலத்தால் தமது கோலைக் கொண்டு கற்பாறையில் அடிக்கவே, நீருற்றுண்டானதுபோல, அர்ச். அந்தோனியாரும் ஆண்டவருடைய வல்லமையைக் கொண்டு பிரிவிளைக்காரரை மளந்திருப்ப அநேகமான ஆச்சரியங்களைச் செய்து வந்தார். பூர்ஜ் நகரத்தில் நடந்த புதுமையைக்கொண்டு தேவநற்கருணையின் மட்டில் அந்தோனியாருக்குண்டான பக்தி விசுவாச நம்பிக்கை எவ்வளவென்று நாம் அறிந்து கொள்ளலாம். நம் இருதயத்திலும் அவர் அந்தப் பக்தி எழும்பும்படி அவரை நோக்கி மன்றாடக்கடவோம்.

செபம்
மகா வணக்கத்துக்குரிய அர்ச், அந்தோனியாரே, பிரிவினைக்காருடைய அவிசுவாசத்தைப் போக்க, தேவ நற்கருணையில் சேசுநாதசுவாமி மெய்யாகவே எழுந்தருளி யிருக்கிறதை ஒரு மிருகத்தைக் கொண்டு அதை வணங்கச் செய்து ருசுப்படுத்தின நீர், உயிருள்ள விசுவாசத்தோடு அந்தத் திவ்விய நற்கருணையை நாங்கள் ஆராதிக்கக் கிருபை அடைந்தருளும். - ஆமென் .

நற்கிரியை: திவ்விய நற்கருணையைச் சந்திக்கிறது.
மனவல்லயச் செபம்: தேவ சிநேகத்தால் பற்றி எரிந்த அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.