Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 21 ஆகஸ்ட், 2024

August 21 - St. Jane Frances de Chantal - அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்

 

ஆகஸ்டு 2️1️ம்‌ தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மினவுதல்‌ சபையின்‌ ஸ்தாபகரும்‌ விதவையுமான
அர்ச்‌.ஜேன்பிரான்செஸ்தே ஷாந்தால்


 

            ஜேன்‌ பிரான்செஸ்‌ ஃப்ரெமாய்ட்‌ 1572ம்‌ வருடம்‌,பிரான்சிலுள்ள பா்‌ கண்டியில்‌ பிறந்தாள்‌. இவளுடைய தாயார்‌, கிளார்வாக்ஸின்‌ அர்ச்‌. பெர்னார்டுவின்‌ பாரம்பரிய வம்சாவளியைச்‌ சேர்ந்தவர்கள்‌; இவளுக்கு ஒன்றரை வயதானபோது, இவளுடைய தாயார்‌, அடுத்த குழந்தையைப்‌ பிரசவித்தபோது, இறந்து போனார்கள்‌.  ஒரு புராட்டஸ்டன்டு பதிதன்‌, இவளை திருமணம்‌ செய்ய முன்‌  வந்தபோது, சர்வேசுரனுக்கும்‌ அவருடைய திருச்சபைக்கும்‌ எதிரியாயிருக்கிற பதிதனை நான்‌ திருமணம்‌ செய்யமாட்டேன்‌, என்று தீர்மானமாகக்‌ கூறி மறுத்துவிட்டார்கள்‌. 1592ம்‌ வருடம்‌, பிரான்ஸ்‌ அரசருடைய மெய்காப்பு வீரரும்‌, அரசவை உறுப்பினருமான கிறிஸ்டோஃபா்‌ ராபுடின்‌ -ஷாந்தால்‌ என்கிற ஒரு பிரபுவை, இவள்‌, திருமணம்‌ செய்து கொண்டாள்‌. 1601ம்‌ வருடம்‌, இவளுடைய கணவர்‌ துப்பாக்‌கிச்சூட்டின்போது ஏற்பட்ட ஒரு விபத்தில்‌, கொல்லப்பட்டார்‌.ஜேன்‌ 28 வயதில்‌ விதவையானாள்‌.

            4 குழந்தைகள்‌ பிறந்திருந்தன. மறு திருமணம்‌ செய்துகொள்ள உறவினர்களும்‌, பணிவிடைக்காரர்களும்‌ வற்‌புறுத்தி, கணவரை இழந்த துயரத்திலிருந்த இவளுடைய வேதனையை இன்னும்‌ கூடுதலாக அதிகரிக்கச்‌ செய்தனர்‌. 1604ம்‌ வருடம்‌, ஜேன்‌, ஜெனிவா மேற்றிராணியாரான, அர்ச்‌. பிரான்சிஸ்‌ சலேசியாரைச்‌ சந்தித்தாள்‌. டிஜானில்‌ உள்ள செயிண்ட் சாப்பல் ‌ தேவாலயத்தில்‌ பிரசங்கம்‌ நிகழ்த்தியபோது, அவரைச்‌ சந்தித்தாள்‌; அவரையே தனது ஆன்ம குருவாகத்‌ தெரிந்துகொண்டாள்‌.பின்னாளில்‌, இவருடைய ஆதரவின்‌ துணையுடனும்‌, தன்‌ தந்தையின்‌ ௨தவியுடனும்‌, போர்ஜஸ்‌ நகர அதிமேற்றிராணியாராயிருந்த தன்‌ சகோதரரின்‌ உதவியுடனும்‌, தனது நான்கு பிள்ளைகளையும்‌ உருவாக்கி, வளர்த்து ஆளாக்கியபிறகு, ஆன்னஸி என்ற இடத்திற்கு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மினவுதல்‌ கன்னியர்‌ சபையை ஸ்தாபிப்பதற்காகச்‌ சென்றாள்‌.

            இந்த இடத்தில்‌, 1610ம்‌ வருடம்‌, ஐூன்‌ 6ம்‌ தேதி, மகா பரிசுத்த தமதிரித்துவத்தின்‌ திருநாளன்று, மகா பரிசுத்த தேவ மாதாவின்‌ மினவுதல்‌ கன்னியர்‌ சபை, திருச்சபையின்‌ அங்கீகாரத்துடன்‌ ஸ்தாபிக்கப்பட்டு துவக்கப்பட்டது! வியாதியினாலும்‌ வயதின்‌ காரணத்தினாலும்‌, மற்ற கன்னியர்‌ துறவற சபைகளில்‌ ஏற்றுக்கொள்‌ளப்படாத பெண்கள்‌, இச்சபையில்‌ எற்றுக் கொள்ளப்பட்டனர்‌.  ஜேன்‌ , பிரான்ஸ்‌ மற்றும்‌ இத்தாலி நாடுகளில்‌ அயராத பயணத்தை மேற்கொண்டு, அநேக மினவுதல்‌ சபைக்‌ கன்னியர்‌ மடங்களை ஸ்தாபித்தாள்‌. இவள்‌ மரித்தபோது, ஸ்தாபிக்கப்பட்டிருந்த 86 மினவுத‌ல் கன்னியர்‌ சபை மடங்களே, இவளுடைய உன்னதமான அயரா முயற்சிகளின்‌ வெற்‌றிக்கு, அத்தாட்சியாயிருக்கின்றன!

            ஜேன்‌, தனது எல்லா மினவுதல்‌ சபைக்‌ கன்னியர்‌ மடங்களிலும்‌  அறிவிக்கப்பட வேண்டிய ஒரு சுற்றறிக்கையை, தன்‌ உதவியாளரிடம்‌ எழுதும்படிச்‌ செய்தபிறகு, உறுதியான விசுவாச முயற்சி செய்தாள்‌; இறுதி தேவதிரவிய அனுமானமாகிய மகா பரிசுத்த தேவநற்கருணையை மிகுந்த பக்திபற்றுதலுடன்‌ உட்கொண்டாள்‌; அவஸ்தைப்பூசுதலை பக்தியுடன்‌ பெற்றுக்‌ கொண்டாள்‌; திவ்ய சேசுநாதரின்‌ மகா பரிசுத்தத்‌ திருநாமத்தை மிகுந்த பக்திபற்றுதலுடன்‌ மெதுவாக , நிதானமாக மூன்று முறை உச்சரித்தபடி, 1641ம்‌ வருடம்‌ டிசம்பர்‌ 13ம்‌ தேதியன்று, பாக்கியமாய்‌ மரித்தாள்‌. இவளுடைய பரிசுத்த ஆத்துமம்‌, ஒரு நெருப்பின்‌ கோளமாக மேலே உயர்ந்து மோட்சத்தை நோக்கிப்‌ பறந்து சென்றதை, அர்ச்‌.பிரான்சிஸ்‌ சலேசியாருக்குப்‌ பிறகு, இவளுடைய ஆன்மகுருவாயிருந்த அர்ச்‌.வின்சென்ட்‌ தே பவுல்‌ கண்டார்‌. அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தாலுக்கு, 14ம்‌ ஆசிர்வாதப்பா்‌ பாப்பரசரால்‌, 1751ம்‌ வருடம்‌, நவம்பர்‌ 21ம்‌ தேதி முத்திப்‌ பேறுபட்டமளிக்கப்பட்டது; 13ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசர்‌, 1767ம்‌ வருடம்‌ ஜூலை 16ம்‌ தேதியன்று அர்ச்சிஷ்டப்பட்டம்‌ அளிக்கப்பட்டது.

“நரகமானது, திறமைமிக்கவர்களாக ஜீவித்த மனிதர்களால்‌ நிறைந்தி ருக்கிறது! ஆனால்‌, மோட்சமானது, ஆற்றல்மிக்கவர்களாக ஜீவித்த மனிதர்களைக்‌ கொண்டிருக்கிறது -🏻 அர்ச்‌. ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்‌

“ஆனால்”‌, “ஒருவேளை என்று எவ்வித நிபந்தனைகளுமில்லாமல்‌, சர்‌ வேசுரனுடைய திருச்சித்தம்‌, இன்றும்‌, நாளைக்கும்‌, எல்லா காலத்திற்கு மாக நிறைவேற்றப்படும்! -🏻 அர்ச்‌. ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்‌                                                                             

அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தாலே! எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக