பெப்ரவரி மாதம் 24-ந் தேதி.
அப்போஸ்தலரான அர்ச். மத்தியாஸ் திருநாள்.
ST. MATHIAS.
சேசுநாதருடைய பன்னிரண்டு சீஷர்களுக்குள்ளே யூதாஸென்கிற ஒருவன் சேசுநாதரால் அப்போஸ்தலனாகத் தெரிந்துகொள்ளப்பட்டிருந்தாலும், அவன் ஆண்டவரோடு இருக்கிறபோது கர்த்தர் அவனுக்குக் கொடுத்த வல்லமை யினால் அவன் சில புதுமைகளைப் பண்ணியிருந்தாலும் நன்றிகெட்டவனாய் முப்பது வெள்ளிக் காசுக்காகச் சேசுநாதருக்குத் துரோகம் பண்ணி மாசில்லாதவரை அவருடைய சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுத்தான். அத்தகைய பெரிய பாவத்தால் அவன் ஆத்துமமுங் கெட்டு மதியுங் கெட்டுத் தான் செய்த துரோகத்தின் கனத்தைப்பற்றி அவநம்பிக்கைப்பட்டுத் தன்னைச் சகிக்கமாட்டாமல் நான்று கொண்டு நிர்ப்பாக்கியனாய்ச் செத்து நரகத்திலே விழுந்தான் .
சேசுநாதர் கல்லறையை விட்டு உயிர்த்து மோட்சத்திற்கு எழுந்தருளிப் போன பிறகு அவருடைய சீஷர்களுக்குத் தலைவராகிய அர்ச். இராயப்பர் நேர்த்தியான பிரசங்கம் பண்ணிக் கெட்டுப்போன யூதா ஸென்கிறவனுடைய ஸ்தானத்திலே வேறொருவரை வைக்கவேண்டுமென்று மற்றச் சீஷர்களுடன் சொன்னார். ஆதலால் கர்த்தருடைய எழுபத்திரண்டு சீஷர்களுக்குள்ளே ஆண்டவர் அறிவித்தபடியே அர்ச். மத்தியாஸென்கிறவரைத் தெரிந்து கொண்டார்கள். கர்த்தர் பூலோகத்தில் இருக்கிறபோது அவர் பண்ணின புதுமைகளையும் புண்ணியங்களையும் மத்தியாஸென்கிறவர் கண்டு யேசுநாதருடைய ஞானப் பிரசங்கங்களையும் நல்ல மனதோடு கேட்டதினாலே புண்ணியத்திலே வளர்ந்து மகாத்துமாவாயிருந்தார். இது முகாந்தரமாய் அப்போஸ்தலர் பட்டத்திற்குக் குறிக்கப்பட்டார்.
இத்தகைய மகிமையுள்ள பட்டம் ஆண்டவர் தமக்குக் கொடுத்தார் என்று அர்ச். மத்தியாஸ் கண்டு கர்த்தருக்கு வெகு தோத்திரம் பண்ணினது மல்லாமல் அந்தப் பட்டத்திற்கு உண்டான கடன்களைத் தாம் நிறைவேற்ற சுவிசேஷத்தைச் சுறுசுறுப்போடு சனங்களுக்குப் பிரசங்கித்துச் சத்திய வேதத்தைத் தம்மால் இயன்ற மட்டும் பரப்பப் பிரயாசைப் பட்டார். அர்ச். மத்தியாஸ் முதலில் யூதேயா தேசத்திலே பிரசங்கித்தார். அதற்குப் பிறகு கலிலேயா தேசத்திலே போய் ஆங்கங்கே தான் சொன்ன புத்தி பிரசங்கங் களினாலேயும் பண்ணின ஆச்சரியமான புதுமைகளினாலேயும் அநேகரைச் சேசுநாதருடைய வேதத்தில் உட்படுத்தினார் .
பின்னும் அத்தேசத்தை விட்டு எத்தியோப்பியா என்னும் பெரிய இராச்சியத் திற்குப் போனார். அவர் அதிலே சத்திய வேதத்தைப் போதிக்கிறபோது பட்ட பிரயாசையினால் அநேகம் பேர் வேதத்தில் உட்பட்டதைக் கண்டு வெகு சந்தோஷப்பட்டார். பசாசு தன் பாரிசமாயிருந்த அநேகம் பேர் தன் ஊழியத்தை விட்டு அர்ச். மத்தியாஸ் சொல்லிய புத்தியைக் கேட் டுச் சர்வேசுரனுக்கு ஊழியம் பண்ணுகிறதை கண்டு காய்மகாரத்சினாலே அந்த அப்போஸ்தலரைக் கொன்றுபோடத் துணிந்தது. அதற்குப் பசாசு சொன்ன துர்ப்புத்தியினால் சில பொல்லாதவர்கள் அர்ச். மத்தியாஸ் குடிக்கிற தண்ணீரிலே விஷத்தைக் கலந்து கொடுத்தார்கள். அவர் அதைக் குடித்திருந் தாலும் புதுமையாகச் சாகாதிருந்தார். பின்பு அக்கியானிகள் கூட்டங்கூடி அவரைக் கல்லால் எறிந்து கொல்ல அநேகம் பெரிய கற்களை அவர்மேலே எறிந்தார்கள். அதினாலே அவர் சாகாதிருக்கிறதைக் கண்டு அவரைச் சிலுவை யில் அறைந்தார்கள். அந்த வேதனை வழியாகவுஞ் சீக்கிரத்திலே அவருக்குச் சாவு வரவில்லையென்று பார்த்து அவர்கள் கடைசியாய் அவர் தலையை வெட்டினார்கள்.
ஆகையால் சேசுநாதர் அனுபவித்த சிலுவை வேதனையும் அர்ச், முடியப்பர் அனுபவித்த கல்லெறி உபத்திரவமும் அப்போஸ்தலராகிய அர்ச். சின்னப்பர் தலை வெட்டப்பட்டு அனுபவித்த பாடும் வேதத்திற்காக அர்ச். மத்தியாஸ் அனுபவித்துக் கர்த்தர் பிறந்த அறுபத்து மூன்றாம் வருஷத்திலே வேதசாட்சியாக மரணமடைந்தார்.
கிறீஸ்துவர்களே! அர்ச். மத்தியாஸென்கிறவர் சேசுநாதரோடு இருந்து கர்த்தருக்கு ஏற்ப அநேக நாள் நடந்த பிறகு ஆண்டவர் அவருக்கு அப்போஸ்தல பட்டம் கட்டளையிட்டார். சேசுநாதர் உங்களுக்கு இற்றை வரைக்குங் கொடுத்தருளின வரப்பிரசாதங் களைவிட இன்னம் அதிக வரப்பிரசாதங் கட்டளை யிடுவதற்கு நீங்கள் அவருடைய புத்தியைக் கேட்டு வழி செய்ய வேண்டும். ஒரு சேவகன் துரை கிட்டக் காத்திருந்து குறையின்றி அநேக நாள் ஊழியம் பண்ணுகிறபோது, தனக்குத் துரை இனிமேல் சம்பாவனை கொடுக்க வழி பண்ணுகிறானல்லவோ? பின்னையும் அர்ச். மத்தியாஸென்கிறவருக்கு வந்த மகிமையான பட்டத்தை யூதாசென்கிறவன் இழந்துபோனா னென்று நீங்கள் நினைத்து, ஆத்துமப் பிரயோசனம் அடைய வேண்டும். கர்த்தர் பண்ணின எண்ணப்படாத புதுமைகளையும், புண்ணியங்களையும் யூதாசென்கிறவன் கண்டிருந்தாலும், அவருடைய அமிர்தமான பிரசங்கங்களையும் அவன் கேட்டிருந்தாலும், அவர் கொடுத்த வல்லமையால் அவன் அநேகம் புதுமைகளைச் செய்திருந்தாலும், அவன் சாவான பாவத்தினாலே கெட்டு நிர்ப்பாக்கியனாய் நரகத்திற்குப் போனானல்லவோ?
அதை நீங்கள் அடிக்கடி நினைத்து, உங்களிடத்திலே எத்தனை புண்ணியம் இருந்தாலும், நீங்கள் புதுமைகளைத் தானே பண்ணினாலும் இனிமேல் உங்கள் ஆத்துமத்திற்குப் பாவத்தினாலே மோசம் வருமோவென்று பயந்து, நீங்களே உங்களை நம்பாமல் ஆண்டவர் பேரிலே நம்பிக்கை வைத்தப் பயத்தோடும் எச்சரிக்கையோடும் நடக்கவேண்டும். பலவீனமுள்ளவனும் பலமுள்ளவனும் நடக்கிற போது, பலமுள்ளவன் சேற்றிலே விழுந்ததைப் பல வீனமுள்ளவன் கண்டு, தன்னை நம்பாமல் எச்சரிக்கை யோடு நடப்பா னல்லவோ ? நான் சர்வேசுரனுக்கு இன்னின்ன ஊழியம் பண்ணினேன்; நான் தள்ளப் பட்டால் என்னுடைய ஸ்தானத்திலிருக்கிறதற்கு வேறே ஆள் கிடையா தென்கிற ஆங்காரமுள்ள விசாரத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம்.
ஏனென்றால், யூதாஸ் தன் பாவத்தினாலே அப்போஸ்தலப் பட்டத்தினின்று தள்ளப்பட்டபிறகு அவனுடைய ஸ்தானத்திலே கெட்டிக்காரரான அர்ச். மத்தியாசை ஆண்டவர் வைத்ததுபோல் உன் பாவத்தினாலே நீ தள்ளப்பட் டால் உன்னைவிடக் கெட்டிக்காரன் உன்னுடைய ஸ்தானத்திலே ஆண்டவராலே வைக்கப்படுவான். கெட்டிக்காரனான ஓர் சேவகன் தன்னுடைய இராசா முன் பாகவும், அநேகந் துரை மக்கள் முன்பாகவுந் தன் வீர சூர செய்கைகளை விபரித்துச் சண்டையிலே இராசாவைப்பற்றி இந்தக் காயங்களைப் பட்டேன் என்று சொல்லுமிடத்தில் வெகு சந்தோஷப் படுவானேயல்லாமல், அவன் பட்ட பிரயாசைக்குத் தக்க வெகுமானத்தையும் பெறுவானல்லவோ? அவ்வாறே அர்ச், மத்தியாஸென்கிறவர் பரமண்டலங்களிலே ஆண்டவருடைய சந்நிதியில் மோட்ச வாசிகள் முன்பாகத் தாம் பட்ட பாடுகளைச் சொல்லி என் சரீரத்தின் மேலே எதிரிகள் எறிந்த கல்லுகளாலே என் உடம்பிலே எத்தனை நோவுகளை யுங் காயங்களையுஞ் சேசுநாதரைக் குறித்துப் பட்டேன்.
எதிரிகள் என்னைச் சிலுவையில் அறைந்தபோதுகர்த்தரைப்பற்றி இத்துணை வேதனையும் உபத்திரவங்களையும் அனுபவித்தேன். தலை வெட்டப் போகிற போது சேசுநாதரைத் துதித்து, இவ்வளவு உபாதை சகித்தேனென்று சொல்லுகிற போது அவர் வெகு சந்தோஷப்பட்டது மல்லாமல், தாம் அனுபவித்த கஸ்திகளுக்குத் தக்க மோட்ச ஆனந்தத்தை அனுபவிக்கிறார்.
தம்பி தங்கை மாரே! பரமண்டலங்களிலே உங்களுக்கு அத்தகைய சந்தோஷமும் ஆனந்தமும் நிரம்ப வருமாறு நீங்கள் இப்போது கர்த்தரைக் குறித்து புண்ணியஞ் செய்ய பிரயாசைப்படவும், இவ்வுலகத்தில் வருகிற துன்ப துரிதங்களை அவரைப்பற்றிப் பொறுமையோடே அனுபவிக்கவும் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக