பிப்ரவரி 22ம் தேதி
அர்ச் இராயப்பர் தமது பத்திராசனத்தை அந்தியோகியாவில் ஸ்தாபித்த திருநாள்
அர்ச். இராயப்பர், உரோமாபுரிக்கு செல்வதற்கு முன்பாக, அந்தியோகியாவில் திருச்சபையின் தலைமையகத்தை ஸ்தாபித்தார். அந்தியோகியாவின் பிதாப்பிதாவான அர்ச். இஞ்ஞாசியார், பாப்பரசரான அர்ச். கிளமென்ட் போன்ற ஆதித்திருச்சபையின் அநேக அர்ச்சிஷ்டவர்கள் இக்கருத்தை நிச்சயப்படுத்தியுள்ளனர்.
கீழை நாடுகளின் தலைநகரமாகத் திகழ்ந்த அந்தியோகியாவை அர்ச். இராயப்பர் தன் விசேஷ பாதுகாவலிலும் கண்காணிப்பிலும் ஆண்டு நடத்தி வந்தார்; ஏனெனில், இந்நகரில் மிக எளிதாக சத்திய வேதம் வேரூன்றி வளர்ந்தது. இங்கு தான் "கிறிஸ்துவர்கள்" என்கிற வார்த்தை முதலில் உச்சரிக்கப்பட்டது! இந்நகரில் தான், சத்திய வேதத்தை அனுசரிக்கிறவர்களை "கிறிஸ்துவர்கள்!" என்று அழைப்பது வழக்கில் தோன்றியது.
இந்நகரில் இறந்த ஒருவனை அர்ச். இராயப்பர் உயிர்ப்பித்தார்; இப்புதுமையைக் கண்ட இந்நகரவாசிகள் இவருக்கு ஒரு தேவாலயத்தைக் கட்டித் தந்தார்கள். உடனே, இந்நகரை திருச்சபையின் தலைமைப் பீடமாக கொண்டு, அர்ச். இராயப்பர் சத்திய வேதத்தைப் போதித்து வந்தார். அந்தியோகியாவில் பிரசங்கித்த அர்ச். இராயப்பரின் குரலொலி, அக்காலத்தின் மூன்று முக்கிய மிகப்பெரிய நாடுகளால் கேட்கப்பட்டன! அதாவது, எபிரேயர்களாலும், கிரேக்கர்களாலும், இலத்தீன் மொழி பேசுகிற உரோமையர்களாலும் கேட்கப்பட்டது.
அர்ச். இராயப்பர், அந்தியோகியாவில் அதிகக் காலம் இருந்ததாக அர்ச். கிறிசோஸ்தம் அருளப்பர் கூறுகிறார். அர்ச். இராயப்பர், அந்தியோகியாவின் மேற்றிராணியாராக ஏழு வருடகாலம் இருந்தார் என்று அர்ச். பெரிய கிரிகோரியார் கூறுகிறார். அவர் எப்போதும் இந்நகரிலேயே தங்கியிருக்கவில்லை. ஆனால், அப்போஸ்தலிக்க அலுவலை ஞானத்துடன் ஆண்டு நடத்தி வந்தார்.
பாரம்பரியம் நிச்சயிப்பதன்படி, இவர் உரோமாவில் 25 வருட காலம் தங்கியிருந்தார்; நமதாண்டவரின் மேட்சாரோகணத்திற்குப் பின் மூன்று வருடகாலம் கழித்து, இவர் திருச்சபையை அந்தியோகியாவில் ஸ்தாபித்தார்; கிளாடியுஸ் சக்கரவர்த்தி ஆண்ட காலத்தின் 2ம் வருடத்தில், இவர் உரோமைக்குச் சென்றார்.
அர்ச். இராயப்பர், அர்ச். முடியப்பர் வேதசாட்சியாக யெருசலேமில் கொல்லப்பட்ட (அப். நட 8:1) பிறகு, யெருசலேமை விட்டு வெளியேறி, அந்தியோகியாவில் தங்கியிருந்தார். பின்னர், யெருசலேமில் கி.பி. 43ம் வருடம் தங்கியிருந்த சமயத்தில், அகிரிப்பா அரசனால் சிறைப் படுத்தப்பட்டபோது, அங்கிருந்து புதுமையாக தப்பித்தார்; அந்தியோகியா சென்றபோது, தன்னை யூதர்கள் துரத்திவருவார்கள் என்பதை அறிந்தவராக, அர்ச். இராயப்பர் உரோமாபுரிக்குச் சென்றார்.
ஆதித்திருச்சபையின் காலத்தில், ஞானஸ்நானம் பெற்ற வருடாந்திர தினத்தை அனுசரிப்பதை, கீழை நாடுகளிலுள்ள கிறிஸ்துவர்கள் வழக்கத்தில் கொண்டிருந்தனர். வருடாந்திர தினத்தில், ஒவ்வொரு கிறிஸ்துவனும் ஞானஸ்நான வார்த்தைப்பாடுகளை புதுப்பிப்பார்கள். மேலும், தங்களை சுவீகரப் புத்திரர்களாகத் தேர்ந்தெடுத்ததற்காக சர்வேசுரனுக்கு நன்றி செலுத்துவார்கள். அந்த ஞானஸ்நான நாளை அவர்கள் ஞானஜீவியத்தின் பிறந்த நாளாகக் கருதி கொண்டாடி வந்தனர்.
அதேபோல், மேற்றிராணிமார்களும், அவர்களுடைய அபிஷேக நாளின் வருடாந்திர தினத்தை அனுசரித்து வந்தனர் என்பதை, அர்ச். பெரிய சிங்கராயர் பாப்பரசருடைய நான்கு பிரசங்கங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்; அவர் தமது பிரசங்கங்களில், பாப்பரசராகப் பதவியேற்ற வருடாந்திர தினத்தின் அனுசரிப்பைப் பற்றி அறிவித்திருந்தார். மேற்றிராணிமார்கள், பாப்பரசர்களின் இத்தகைய வருடாந்திர நாட்களை, அப்பரிசுத்த மேற்றிராணிமார்கள், பாப்பரசர்கள் மீது கொண்ட பக்திபற்றுதலின் நிமித்தமாக விசுவாசிகள், தொடர்ந்து நன்றியறிதலாக, அவர்களுடைய ஜீவிய காலத்திற்குப் பிறகும் கூட கொண்டாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ச். இராயப்பர், அந்தியோகியாவில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்த திருநாள், ஆதித்திருச்சபையின் துவக்கக் காலங்களிலேயே கொண்டாடும்படியாக ஏற்படுத்தப்பட்டது. அர்ச். இராயப்பருடைய வேதசாட்சிய திருநாளைக் கொண்டாடுகிறதைப்போலவே, அதே ஆனந்த சந்தோஷத்துடன், அவருடைய பத்திராசனம் ஸ்தாபிக்கப்பட்ட திருநாளும் கொண்டாடப்பட வேண்டும்; ஏனெனில் வேதசாட்சிய முடியைப் பெற்றபோது, மேட்சத்தில் அவர் மகிமையின் பத்திராசனத்தைப் பெற்றுக்கொண்டார்; அவர் பூமியில் பத்திராசனத்தை ஸ்தாபித்தார் என்பதால், பூமியிலுள்ள திருச்சபையின் தலைவராக ஸ்தாபிக்கப்படுகிறார் என்று அர்ச். சிங்கராயர் கூறுகிறார்.
அர்ச். இராயப்பர், உரோமாபுரியில் பத்திராசனத்தை ஸ்தாபித்த திருநாள், ஜனவரி 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது, உரோமாபுரியில் திருச்சபையின் தலைமைப் பீடம் ஸ்தாபிக்கப்பட்டதன் நினைவாகக் கொண்டாடப்படவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
அப்போஸ்தலர்களின் தலைவரான அர்ச். இராயப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
February 22
Feast of Saint Peter's Chair at Antioch
Saint Peter, before he went to Rome, founded the see of Antioch. This historical fact is attested by many Saints of the earliest times, including Saint Ignatius of Antioch and Pope St. Clement.
The Prince of the Apostles took under his particular care and surveillance the city of Antioch, which was then the capital of the East. It was in Antioch that the Catholic faith took such deep roots that the word "Christians" was first used.
From Antioch, St. Peter's voice was heard by representatives of the three largest nations of antiquity—the Hebrews, the Greeks, and the Latins. Saint John Chrysostom says that Saint Peter remained there for a long period, while Saint Gregory the Great states that he was Bishop of Antioch for seven years. Though he did not reside there at all times, he governed its apostolic mission with wisdom.
If, as tradition affirms, he spent twenty-five years in Rome, then his establishment at Antioch must have occurred within three years after Our Lord’s Ascension, since he would have gone to Rome in the second year of Claudius' reign.
St. Peter likely left Jerusalem following the persecution that arose after the martyrdom of Saint Stephen (Acts 8:1). He remained in Antioch until his miraculous escape from prison during the reign of King Herod Agrippa in 43 A.D. (Acts 12). Knowing he would be pursued in Antioch, Peter went to Rome.
The Significance of This Feast
In the early Church, especially in the East, Christians customarily observed the anniversary of their Baptism by renewing their baptismal vows and thanking God for their adoption as His children. Bishops similarly observed the anniversary of their consecration. Saint Leo the Great’s sermons mention how the faithful continued to celebrate these anniversaries even after their bishops' passing, out of reverence for their memory.
This feast of Saint Peter’s Chair at Antioch was instituted in very early times. Saint Leo states that we should celebrate the Chair of Saint Peter with no less joy than his martyrdom, for just as his martyrdom exalted him to a throne of glory in heaven, his chair represents his installation as the Head of the Church on earth.
Related Feast
The feast of Saint Peter’s Chair at Rome is celebrated on January 18, commemorating the establishment of the Holy See in Rome.
Suggested Hashtags
#SaintPeter #FeastDay #ChairOfSaintPeter #Antioch #CatholicChurch #ChristianHistory #EarlyChurch #HolySee #CatholicFaith #ChurchFathers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக