Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 25 நவம்பர், 2024

Nov. 25 - St. Catherine of Alexandria

நவம்பர்‌ 25ம் தேதி

வேதசாட்சியான

அர்ச்‌.அலெக்சான்டிரியா கத்தரீனம்மாள்


அலெக்சான்டிரியா நகரத்தில்‌,ஒரு உயர்குடி பதித குடும்பத்தில்‌,கி.பி.287ம்‌ வருடம்‌,கத்தரீனம்மாள்‌ பிறந்தார்‌. இவருக்கு 18 வயதான போது,இவரும்‌,இவருடைய தாயாரும்‌,கத்தோலிக்க வேதத்தைத்‌ தழுவினர்‌: கத்தரீனம்மாள்‌,கிறீஸ்துவர்களைக்‌ கொல்வதைக்‌ குறித்து,உரோமாபுரியின்‌ சக்கரவர்த்தியான மாக்சென்ஷியுஸை,வெளிப்படையாகக்‌ கண்டித்தார்‌. சக்கரவர்த்தியும்‌,அவனுடைய அஞ்ஞான கடவுள்களும்‌ போலியான கடவுள்கள்‌,என்று பகிரங்கமாகக்‌ கூறினார்‌. 

இதைக்‌ கேட்டதும்‌,சக்கரவர்த்தி,கத்தரீனம்மாள்‌ மேல்‌ கடுங்கோபம்‌ கொண்டான்‌.உடனே, 50 அஞ்ஞான தத்துவ இயல்‌ ஆசிரியர்களை வரவழைத்து,கத்தரீனம்மாளுடன்‌ வேதத்தைப்‌ பற்றி தர்க்கவாதம்‌ செய்ய ஏற்பாடு செய்தான்‌. அதைக்‌ கேட்பதற்காக மாபெரும்‌ பார்வையாளர்‌ கூட்டம்‌ சேர்ந்தது. சக்கரவர்த்தி,மாபெரும்‌ கோபவெறியுடன்‌,தன்‌ பத்திராசனத்தில்‌ அமர்ந்தான்‌. அவனைச்‌ சுற்றிலும்‌,அரண்மனையைச்‌ சேர்ந்த சகலரும்‌ அமர்ந்தனர்‌. தர்க்க வாதத்தில்‌ அஞ்ஞான தத்துவ இயல்‌ ஆசிரியர்கள்‌ படுதோல்வியை அடைந்தனர்‌. அதே சமயம்‌,சிறுபெண்ணான கத்தரீனுடைய ஞானத்தைக்‌ கண்டு அதிசயப்பட்டனர்‌கத்தரீனம்மாள்‌ கூறிய சத்திய வேதத்தினுடைய ஞான உபதேசத்தினால்‌ கவர்ந்திழுக்கப்பட்டவர்களாக 50 அஞ்ஞான தத்துவ இயல்‌ ஆசிரியர்களும்‌,மனந்திரும்பி,கத்தோலிக்க வேதத்தில்‌ சேர்ந்தனர்‌. அதனால்‌ அவர்கள்‌ மேல்‌ ஆத்திரமடைந்த மாக்சென்ஷியுஸ்‌அவர்களை உயிருடன்‌ எரித்துக்கொல்லும்படிச்‌ செய்தான்‌.அவர்கள்‌ அனைவரும்‌ வேதசாட்சிகளாக மரித்தனர்‌! 

இதைக்‌ கண்ட மாக்சென்ஷியுஸ்‌,கத்தரீனம்மாள்‌,கத்தோலிக்க வேதத்‌தை மறுதலித்தால்‌,அரசியின்‌ பதவியை அளிப்பதாகவும்‌,தானே திருமணம்‌ செய்து கொள்வதாகவும்‌,கூறினான்‌.ஆனால்‌,அதை கத்தரீனம்மாள்‌ உடனே மறுத்து விட்டார்‌. தன்னை திருமணம்‌ செய்துகொள்ள மறுத்துவிட்ட கத்தரீனை,சக்கரவர்த்தி,சாட்டையால்‌ அடித்து,சிறையில்‌ அடைக்கச்‌ செய்தான்‌.

சிறையிலிருந்தபோது,அர்ச்‌.கத்தரீனம்மாள்‌,சக்கரவர்த்தி்யுடைய மனைவியையும்‌,உரோமப்‌ படைவீரர்கள்‌ 200 பேரையும்‌,அவர்களின்‌ தலைவனையும்‌ மனந்திருப்பி கத்தோலிக்க வேதத்தில்‌ சேரும்படிச்‌ செய்தார்‌.இதைக்‌ கேள்விப்பட்ட சக்கரவர்த்தி,அவர்கள்‌ எல்லோரையும்‌ கொன்றுபோடச்‌ செய்தான்‌.இவர்கள்‌ அனைவரும்‌ வேதசாட்சிகளாக மரித்தனர்‌! பின்னர்‌,கத்தரீனம்மாளை சித்ரவதைச்‌ செய்வதற்காகவே,கொடியவனான சக்கரவர்த்தி,கூரான கத்திகளும்‌,கூர்மையான இரும்புக்‌ கம்பிகளும்‌ பொருத்தப்பட்ட ஒரு சக்கரத்தைக்‌ கண்டுபிடித்திருந்தான்‌. அந்த சக்கரத்துடன்‌ சேர்த்து கத்தரீனம்மாளை பிணைத்துக்‌ கட்டினான்‌.அதைக்‌ கண்ட சகல மக்களும்‌ அஞ்சி நடுங்கினர்‌.ஆனால்‌,அந்த சக்கரம்‌ ஓடத் துவக்கியபோது,புதுமையாக அதன்‌ இணைப்புகள்‌ எல்லாம்‌ பிரிந்து,உடைந்து சிதறியது!அச்சமயம்‌ அதிலி ருந்த 3000 கூர்மையான கம்பிகள்‌ நான்கு பக்கமும்‌ சிதறி,சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருந்த 3000 அஞ்ஞானிகள்‌ மேல்‌ பாய்ந்து,ஊடுருவிக்‌ குத்திக்‌ கொன்றது! இதைக்கண்டு கோபவெறியுடன்‌ மூர்க்கனான சக்கரவர்த்தி கி.பி.310ம்‌ வருடம்‌,கத்தரீனம்மாளை தலையை வெட்டிக்கொல்லும்படி கட்‌டளையிட்டான்‌. கத்தரீனம்மாளுடைய சரீரத்தை,பிறகு,சம்மனசுகள்‌,சீனாய்‌ மலை அடிவாரத்திலிருந்த ஒரு சந்நியாசிகள்‌ மடத்திற்குக்‌ கொண்டு வந்தனர்‌. 

சிலுவைப்போர்களின்‌ சமயத்தில்‌,அர்ச்‌.அலெக்சான்டிரியா கத்தரீனம்மாள்‌ மீதான பக்தியை அனுசரிப்பது எல்லா கிறீஸ்துவர்களிடமும்‌ இன்றியமையாத ஒரு பக்தி முயற்சியாக பிரபலமடைந்திருந்தது! மாணவர்களுடையவும்‌, ஆசிரியர்களுடையவும்‌ ,நூலக ஆசிரியர்களுடையவும்‌,வக்கீல்களுடையவும்‌ பாதுகாவலராக அர்ச்‌. அலெக்சான்டிரியா கத்தரீனம்மாள்‌ திகழ்கிறார்‌. 

திருச்சபையின்‌ 14 பரிசுத்த உதவியாளர்களான அர்ச்சிஷ்டவர்களுள்‌ அர்ச்‌. அலெக்சான்டிரியா கத்தரீனம்மாளும்‌ ஒருவர்‌.அதிலும்‌ குறிப்பாக ஜெர்மனியிலும்‌,ஹங்கேரியிலும்‌,இவர்‌ விசேஷ பாதுகாவலராக வணங்கப்படுகிறார்‌! அர்ச்‌.ஜோன்‌ ஆஃப்‌ ஆர்க்கிற்கு,அதிதூதரான அர்ச்‌.மிக்கேல்‌ சம்மனசானவரும்‌,அர்ச்‌.அலெக்சான்டிரியா கத்தரீனும்‌ பரலோக ஆலோசகர்களாகத் திகழ்ந்தனர்‌,என்பது குறிப்பிடத்தக்கது!


அர்ச்‌.அலெக்சான்டிரியா கத்தரீனம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக