Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 25 மார்ச், 2019

அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - *ஆறாம் நாள்*


ஆறாம் நாள்
மோந்ததே பாவோலோ மடத்தில் நடந்த வரலாறு
பாவிகளை மனந்திருப்புவதற்கும், பிரிவினைக்காரரை வெட்கப்படுத்திக் கலங்க அடிக்கிறதற்கும் அர்ச். அந்தோனியாரைத் தெரிந்துகொண்ட கடவுள், கொஞ்ச காலம் அவர் தனிவாசத்திலும் தாழ்மையிலும் இருக்கும்படி சித்தமானார்,
அர்ச், அந்தோனியார் மோந்த்தே பாவோலோ மடம் சேர்ந்தபோது சமையற் சாலையில் தரைகளையும், சமையல் பாத்திரங்களையும் கழுவுகிற வேலையையும், கூட்டிச் சுத்தம் பண்ணுகிற வேலையையும் தமக்குக் கொடுக்கவேண்டுமென்று சிரேஷ்டரை மன்றாடி அந்தத் தாழ்மையான வேலைகளை மகா சுறுசுறுப்போடு செய்து வந்தார். சகோதரர் ஒருவர் அருகிலிருந்த ஒரு கெபியில் ஒரு சிறு குடிசை கட்டிருந்தார், அந்தக் குடிசையை அந்தோனியார் பார்த்தபோது அதைத் தனக்குக் கொடுத்து , விடச் சகோதரரை மன்றாடி, அவருடைய சம்மதத்தின் பேரில் நடுச் சாமத்துச் செபத்துக்குப் பிறகு அந்தோனியார் அந்தக் குடிசைக்குள் போய் செபத்தியானம் பண்ணுவார். கொஞ்சம் உரொட்டியும் தண்ணீருமாத்திரம் சாப்பிட்டு தமக்கு ஒழிந்த உத்தரவான நேரமெல்லாம் அந்தக் குடிசையில் தன்னைத் தானே ஒறுத்துத் தபசு செய்துகொண்டு வந்தார். பசாசுகள் அவரைச் சும்மா விடவில்லை. அவைகள் அவருக்குச் செய்துவந்த தந்திரங்கள் எவ்வளவு பெரிதானாலும் தமது தவ முயற்சிகளாலும், செபத்தினாலும் அவைகளை வென்று பசாசுகளைத் துரத்தியடிப்பார்.
உயர்ந்த குலத்திற் பிறந்த அவர், மேலான சாஸ்திரம்களைக் கற்றறிந்த அவர், அநேகரைத் தமது அருமைப் பிரசங்கங்களால் மனம் திருப்ப வேண்டிய அவர், பதிதருடைய சம்மட்டியென்று அழைக்கப்பட வேண்டிய  அவர், சர்வேசுரன் அவருக்கு அருளிய வரத்தால் அதிக அற்புதங்களைச் செய்ய வேண்டிய அவர், இப்படி தம்மை தானே தாழ்த்தி நீசத் தொழில்களைச் சந்தோஷமாய்ச் செய்து வந்தது எவ்வளவோ ஆச்சரியத்துக்குரிய தாயிருக்கின்றது. அர்ச். அந்தோனியார் தம்முடைய புண்ணியத்துக்காகவும், அர்ச்சியசிஷ்டதனம் அடையவும், பிறர் ஆத்துமங்களை ஈடேற்றத் துக்கு முந்தியும் (செய்துவந்த புண்ணியங்களை நாம் கண்டு அதிசயிக்கத்  தான் செய்வோம். ஆத் (At) என்னுங் குருவானவர் சொல்லியிருக்றெதென்னவென்றால், தாழ்ச்சியென்னும் புண்ணியம் அர்ச். அந்தோனியாரிடத்தில் விசேஷமான விதமாய் விளங்கிற்று. (கொத்திர மகிமையையும், சாஸ்திரத் திறமையையும் கொஞ்சமாவது யோசிக்காமல் தன்னை அற்பமாகவே எப்போதும் எண்ணி வந்தார் என்கிறார்,
தாழ்ந்த வேலைகளை மனச் சந்தோஷத்தோடு செய்து வருவார். இஸ்பிரீத்துசாந்துவானவருடைய நல்ல ஏவுதல்களை அறிந்து தம் இருதயத்தில் அவைகளைப் பதியவைக்க கெபிகளையும் தனி இடங்களையும் தேடித் தியானஞ் செய்வார்,
இந்த அர்ச்சியசிஷ்டவரிடத்தில் விளங்கின புண்ணிய மாதிரிகளை, மட்டற்ற தாழ்ச்சியை, உலக மகிமை கீர்த்தியின்மேல் வெறுப்பைக் கண்ட நாம் நம்மிடத்திலும் அந்தப் புண்ணியங்கள் கொஞ்சமாவது விளங்குவதற்குப் பிரயாசைப்படாதிருக்கலாமோ. பிரயாசைப்பட்டால் அவருடைய ஒத்தாசையைக் கொண்டு நமது பிரயாசைக் களவு அந்தப் புண்ணியங்களை அடைவோம்.
செபம்
உலக வீண் பெருமை சிலாக்கியங்களை அகற்றி நிந்தித்துத் தள்ளின அர்ச். அந்தோனியாரே, தாழ்ச்சியின் உத்தம மாதிரியான சேசுநாதரை பணிவுடன் கண்டுபாவித்த நீர், நாங்களும் எங்கள் ஆங்காரப் பெருமை சிலாக்கியத்தைத் தள்ளி, உம்மை எங்களால் கூடுமான மட்டும் கண்டு பாவிக்கத் தயை செய்தருளும். - ஆமென்.
நற்கிரியை - தாழ்ச்சி முயற்சி ஏதாவது செய்கிறது
மளவல்லயச் செபம் - உத்தம் தாழ்ச்சியிள் மாதிரி யான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - *ஐந்தாம் நாள்*


ஐந்தாம் நாள்

-அர்ச். அந்தோனியாருக்கு மரோக்கு தேசத்தில் நடத்த
நிகழ்ச்சிகள்

சர்வேசுரனுடைய சித்தத்தை ஆசைப்பற்றுதலோடு நிறைவேற்றுகிறதே உத்தம குணம் எனப்படும். என்கிறார் நம் அர்ச்சியசிஷ்டவர், அர்ச். அந்தோனியாருடைய பக்தியுள்ள ஆசை நிறைவேறுகிறதாயிருந்தது. அவர் அர்ச். அகுஸ்தீன் மடத்தை விட்டுப் போனபோது அம்மடத்துச் * சந்நியாசியார் ஒருவர் அவரை நோக்கிப் பரிகாசமாக, எங்களை விட்டுத் தூரமாய்ப் போய்த்தான் அர்ச் சியசிஷ்டவர் ஆகப்போகிறீர் என்றார். அதற்கு அந்தோனியார் மறுமொழியாகத் தாழ்ச்சியோடு சொன்னதாவது: என் சகோதரரே, நான் அர்ச்சியசிஷ்ட பட்டம் பெறுவதை நீர் கேள்விப்படும்போது அதற்காக நீர் சர்வேசுரனுக்குத் தோத்திரஞ் செலுத்துவீர் என்றார். தாம் ஆசித்த காரியம், சர்வேசுரனுடைய வேதத்துக்காகத் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி வேதசாக்ஷியாகப் போகவேண்டுமென்று எண்ணின எண்ணம் நிறைவேறுங் காலம் சமீபித்திருக்கிறதென்று கண்ட அந்தோனியார் மிக்க சந்தோஷத்தோடு தான் பிறந்த நாட்டையும் உற்றார் பெற்றார் உறவின் முறையாரையும் சிநேகிதரையும் விட்டுப் புறப்பட்டு 'கப்பலேறி காற்றென்றும் அலையென்றும் பாராமல் கடலைக் கடந்தார். போகிற வழியில் செபத்திலும் தியானத்திலும், தபசிலும் தன்னைத்தானே தான் பெறவிருக்கும் பெரும் பாக்கியத்துக்குப் பாத்திரவானாகும் படியாக தயாரிப்பு செய்துவந்தார். அவர் வேதசாக்ஷி முடி அடைய விரும்பிய தேசம் வந்து சேர்ந்தபோது அத்தேசத்து உஷ்ணந் தாளமாட்டாமல் கடின வியாதியாய் விழுந்து, படுக்கையாய்ச் சில மாதங்கள் ருந்ததைக் கண்ட பெரியவர்கள் அவர் போர்த்துகல் தேசத் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டார்கள். வேதசாக்ஷ முடியை வெகு ஆவலோடு தேடி வந்த அவர் சர்வேசுரனுடைய சித்தம் (வேறாகையால் அமைந்த மனதோடு திரும்பினார், அவருடைய பிதாவான அர்ச். பிரான்சிஸ்கு அநேகம் பாவிகளையும் பிரிவினைக்காரரையும் மனந்திருப்பி ஆயன் மந்தையிற் சேர்த்தவண்ணம் அந்தோனியாரும் செய்ய நியமித்திருந்தார் சர்வேசுரன். கப்பலேறி எஸ்பாஞா தேசத்தை நாடிச் செல்லுகையில் பெருங்காற்று எழும்பி கப்பல் அலைமோதி கடலில் புதைக்கப்படும் ஆபத்தான நிலையில் அந்தோனியார் ஆதிபரனுடையவும், சமுத்திரத்தின் நட்சத்திரமாகிய கன்னி மாரியம்மாளுடையவும் உதவியை மன்றாடி, அதிகாரத்தோடு அலைகளுக்குக் கட்டளையிடவே அலைகள் அமர்ந்து சிசிலியா தீவின் தாவோர்மினா பட்டணத்தின் (Taormina en Sicals) கரையோரங் கப்பல் சேர்ந்தது. கப்பலைவிட்டிறங்கி இரண்டு மாத காலம் அவ்விடந் தங்கியிருந்த போது கிணறொன்றெடுக் கசி செய்தார். அக்கிணற்று நீரால் இக்காலத்திலும் அநேக நோயாளிகள் செளக்கியமடைந்து வருகிறார்கள். அவர் கையால் நட்ட எலுமிச்சஞ் செடி இப்போதும் வருஷா வருஷம் பூத்துக் காய்த்து வருகின்றது. அவ்விடத்தினின்று அவரும் காஸ்தீல் பட்டணத்து பிலிப் என்னுஞ் சகோதரரும் {Frore Philippe de Castile) 1221-ம் வருஷம் மே மாதம் 30-ந் தேதி சம்மனசுகளின் மாதா (Notre Dame des Anges) மடத்தில் கூடின சபை சங்கத்துக்கு வந்தார்கள்.
அச்சங்கத்துக்கு வந்திருந்த அர்ச். பிரான்சிஸ்குவும் தாழ்ச்சியால் விளங்கினார். அவருடைய மாதிரியைப் பின்பற்றி வந்த அர்ச். அந்தோனியாரும் தாம் இன்னாரென்று காண்பிக்காமலிருந்ததால் மற்றெவரும் அவருடைய கோத்திரத்தின் மகிமையையும், கல்வி சாஸ்திரத் திறமையையும், புண்ணிய மகிமை பெருமையையும் அறிந்தவர்களல்ல. அச்சங்கத்துக்கு வந்திருந்த ரோமாஞா (Romagna} நாட்டின் அதிசிரேஷ்டர் அவரைத் தம்மோடு அழைத்துப் போகச் சம்மதித்து மோந்த்தே பாவோலோ {Mkhte Paolo) பான்னும் மடத்தில் அவரிருக்கும்படி நியமித்தார்.
அர்ச். அந்தோனியார் தம்மைக் குறித்து ஒன்றும் சொன்னவரல்ல. தமது உன்னத மாதிரியான சேசு நாதருடைய பாதத்தில் தம்மை முழுமையும் ஒப்புவித்து அவருடன் ஒன்றித்திருப்பதை மாத்திரமே தேடி வந்தார்.
அர்ச்சியசிஷ்டவர்களிடத்தில் இரண்டு வித்தியாசமான காரியங்களை நாம் கண்டறிய வேண்டியது அவசியம். நாம் கண்டு பாவிக்கவேண்டிய அவர்களுடைய புண்ணியங்கள், நாம் கண்டு ஆச்சரியப்படவேண்டிய அவர்களுடைய புதுமைகள், அர்ச். அந்தோனியாருடைய புதுமைகளை. அப்புதுமைகளைச் செய்யச் சர்வேசுரன் அவருக்குத் தந்தருளின வல்லபத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவது மல்லாமல் முக்கியமாய் அவருடைய அரிய புண்ணியங்களை நம்மாலானமட்டும் கண்டுபாவிக்கப் பிரயாசைப்படுவோ மானால் அவருடைய ஒத்தாசையை அடைவோமென்பதில் கொஞ்சமாவது சந்தேகமில்லை.

செபம்
! சிறந்த புண்ணியங்களால் விளங்கி, மேன்மை பெற்றவரான அர்ச். அந்தோனியாரே, வேதசாக்ஷ முடி அடைவதற்காக அதியாசையோடு பக்திச் சுவாலகருகி கொப்பான அர்ச், பிரான்சிஸ்கு சபையில் உட்படத் தீர்மானித்தரே. தவத்தினுடையவும் ஒறுத்தலினுடையவும் ஆசையை எங்களுக்கு அடைந்தருளக் கிருபை புரியும் - ஆமென்.

நற்கிரியை - ஒருசந்தி அனுசரிப்பது.
மனவல்லயச் செபம் - விரும்பி வேதசாயியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.