தூசியாயிருக்கிறாய், திரும்பவும் தூசியாய்ப் போவாய் ( மரணம் பற்றி )
நீ தூசியாயிருக்கிறாய், திரும்பவும் தூசியாய்ப் போவாய் என்ற உண்மையை தீர்க்கமாய் தியானி. நீ செத்துக் கல்லறையில், அழுகி, நாறி, புழுக்கள் உன் மூடு போர்வையாகும் என்ற இசையா வசனத்திருக்கிறார். இதே கதி பிரபுக்கும், குடியானவருக்கும், அரசனுக்கும், அழமைக்கும் சம்பவிக்கும்ää நீர் அவாகளின் உயிரைப் பறித்தால்? அவர்கள் மாண்டு, மண்ணாய்ப் போவார்கள். என்று தாவீது அரசன் பாடியபடி, ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிந்த உடனே நித்தியத்தில் பிரவேசிக்கும். சரீரம் அழிந்து, மக்கி தூசியாய்ப் போகும்.
இப்போது ஒரு உயிர்விட்ட மனிதனை பார்ப்பதாக நினைத்துக்கொள். படுக்கையில் கிடக்கும் அவன் பிரேதத்தைப் பார். தலையானது மார்பில் சாய்ந்து கிடக்கிறது. தலைமயிர் மரண வேதனையால் நணைந்து, அலோங்கோலமாய் கிடக்கிறது. கண்விழிகள் துவாரத்துக்குள் மூழ்கிப்போயின. உதடும் நாக்கம் உறுதியாகி, சரிரம் குளிர்ந்து பளுவாகி, பார்வைக்கு அலங்கோலமாய்க் கிடக்கிறது. சவத்தை சூழ்ந்து நிற்பவர்கள் துக்கத்தால் முகம் மாறி புலம்பி அழுகிறார்கள். என்ன அவலக் காட்சி. எத்தனையோ பேர் தங்கள் சுற்றத்தார், சிநேகருடைய மரணத்தைப் பார்த்தப்பின் உலகத்தைத் துறந்துவிட்டார்கள்.
சரிரம் அழிந்து நாறத் துவக்கும்போது அதை பார்ப்பவர்களுக்கு எவ்வளவோ அறுவறுப்பும் அச்ச நடுக்கமும் உண்டாகும். இதோ இந்த வாலிபன் இறந்து பத்து நாழிகை கூட ஆகவில்லை. அதற்குள்ளாக வயிறு ஊதி பொறுக்க முடியாத நாற்றம் விசுகிறது. அதனால் கதவு வாசலை விசாலமாய் திறந்துவிட்டு ஏராளமான வாசனை ஊதிபத்திகளை புகைக்க வேண்டி இருக்கிறது. அந்த வியாதி விட்டிலுள்ள மற்றவர்களுக்கு பிடிக்காதபடி, பிரேதத்தை கல்லறையில் புதைக்க தீவிரிக்கிறார்கள்.
தனவந்தனுடைய சரீரம் அதிகமாய் புழுத்து நாறும் என்ற ஞானி எழுதியபடி, செத்தவன் ஐசரியனாய் இருந்தால் அவன் சரிரத்தினின்று அதிக நாற்றம் உண்டாகும். பெருமை சிலாக்கியத்திலும், தாறுமாறிலும் சிற்றின்ப சுகத்திலும் சீவித்து வந்த இந்த நிர்பாக்கிய மனிதனுடைய முடிவைப்பார். இவன் சாவதற்குமுன் மற்றவர்கள் கண்டு பேச மிக்க ஆவலுடன் காத்துகொண்டிருந்தார்கள். இப்போதோ வெறுப்புடன் தூரத்தில் நின்று பார்க்கிறார்கள். அவன் உயிரோடும் இருக்கும் போது அவன் புத்தி சாமர்த்தியம் திறமை முதலிய குணங்களை பற்றிச் சகலரும் பேசி புகழ்ந்தார்கள். ஆனால் அவன் மரித்த பின் அவன் ஞாபகம் ஓர் சத்தத்தால் அழிந்து போயிற்று. என்னும் தீர்க்கதரிசன வாக்கியத்தின் படி அவனை சகலரும் வெகு சீக்கிரத்தில் மறந்து போவார்கள். அவன் குடும்பத்துக்கு மகிமை ஆபரணமாய் இருந்தான் என்றும்ää சிலர் தங்களுக்கு அவனால் ஏதாவது நன்மை வந்தபடியால் துக்கிப்பார்கள். இன்னும் சிலர் அவன் செத்ததினால் உண்டான லாபத்தைப் பற்றி சந்தோஷிப்பார்கள்.
ஆனால் சிறிது காலம் சென்ற பின் ஒருவரும் அவனைப்பற்றி நிணைக்கமாட்டார்கள். உன் உற்றார் சிநேகதருடைய மரண வேளையில் நீ எவ்விதமாக நடந்து கொண்டாயோ அவ்விதமே நீ சாகும்போதும் மற்றவர்களும் நடந்து கொள்வார்கள். ;இவ்விதமாக உன் மரணமானது வெகு சீக்கிரத்தில் பெரும் சந்தோஷத்திற்கு காரணமாகும். நீ உயிர் விட்டு யேசுகிறிஸ்துநாதரால் நடுதீர்க்கப்பட்ட அதேயிடத்தில் மற்றவர்கள் ஆடிப்பாடி, சிரித்து உல்லாசம் கொள்வார்கள். அப்போது உன் ஆத்துமம் எங்கே இருக்குமென்று சற்று யோசித்துப் பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக