பிப்ரவரி21 - வேதசாட்சியான அர்ச். பீட்டர் மாவிமேனுஸ் திருநாள்
இவர் டமாஸ்கஸ் நகரிலுள்ள ஒரு துறவற மடத்தில்
சந்நியாசியாக ஜீவித்து வந்தார். ஒரு சமயம், இவர் வியாதியாய் இருந்தபோது, இவரைச் சந்திக்க
வந்த அராபிய மகமதியர்கள், இவரிடம், இஸ்லாம்
மதத்திற்கு மாறும்படி கூறினர்; உடனே, இவர்,
அவர்களிடம்,
”கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளாத எவனும்,
உங்களுடைய கள்ள தீர்க்கதரிசியான முகமது நபியைப் போல் நித்திய
தண்டனையை அடைந்து நரகத்திற்குப் போவான்!” என்று
அறிவித்தார். இதைக் கேட்டு ஆத்திர மடைந்த மூர்க்கர்களான அந்த மகமதியர்கள்,
அர்ச்.பீட்டர் மாவிமேனுஸை அங்கேயே கொன்று போட்டனர்; கி.பி.743ம் வருடம், அர்ச்.பீட்டர் மாவிமேனுஸ்,
வேதசாட்சிய முடியைப் பெற்றுக்கொண்டார்.
கள்ள தீர்க்கதரிசியான முகம்மது நபி தோற்றுவித்த மிகப்
பெரிய பதிதத் தப்பறையான மதமாகிய இஸ்லாமிய மதத்தைப் பற்றியும், நபியைப் பற்றியும் அர்ச்சிஷ்டவர்கள்
அநேகக் காரியங்களைக் கூறியிருக்கின்றனர்; அவற்றிலிருந்து
ஒரு சிலவற்றைப் பார்ப்போம்:
9ம் நூற்றாண்டில், ஸ்பெயின் நாட்டை மகமதியர்கள் ஆக்கிரமித்திருந்த போது, அநேகக் கத்தோலிக்கத் துறவிகளும் கன்னியர்களும், விசுவாசிகளும்
வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்; அப்போது வேதசாட்சிகளாகக்
கொல்லப்பட்டவர்களில் ஒரு சில குறிப்பிட்ட வேதசாட்சிகள் (அர்ச்.ஹபேனிதுஸ்,
அர்ச்.ஜெரேமியா, அர்ச்.பீட்டர், அர்ச். சபினியான், அர்ச்.வாலாபோன்சுஸ், அர்ச் விஸ்ட்ரெமுன்டுஸ்) பின்வருமாறு கூறியுள்ளனர்: “திவ்ய சேசுகிறீஸ்துநாதா் சுவாமி! தான், மெய்யான
சர்வேசுரன்! என்று நாங்கள் ஏற்று விசுவசிக்கிறோம். ஆனால், உங்கள் கள்ள தீர்க்கதரிசியான முகமது நபி அந்திக்கிறீஸ்துவினுடையவும்,
அவசங்கையான கள்ள மதத்தினுடைய போதகக்தினு டையவும், முன்னோடியாயிருக்கிறான்!”.
வேதபாரகரும், கத்தோலிக்க துறவியுமான அர்ச்.தமாசின் அருளப்பர், இஸ்லாம்
என்ற பதித மதத்தைப் பற்றிப் பின்வருமாறு எழுதியுள்ளார்: “இஸ்லாமியருடைய
மூட நம்பிக்கைகள், இன்று வரை மக்களை தப்பறையில்
வைத்திருக்கின்றன. அக்காலத் திலிருந்து, இன்றுவரை, அந்திக் கிறீஸ்துவின் முன்னோடியான முகமது நபி, அம்மக்களின்
நடுவில் தோன்றி இருக்கிறான். இந்த மனிதன், பழைய ஏற்பாடு,
புதிய ஏற்பாடு, ஆகிய வேதாகமங்களைப் பற்றி
தெளிவில்லாத அறிவுடன் மேலோட்டமாகப் படித்ததாலும், ஆரிய
பதிதத்தைச் சார்ந்த ஒரு துறவியுடன் உரையாடி, அத்துறவியின்
வழிநடத்துதலினால் பாதிக்கப்பட்டதாலும், இவன், ஒரு சொந்த பதித மதத்தை உருவாக்கினான். அது தான் இஸ்லாமிய மதம்.
பின்னர், இவன்
ஒரு பக்திமானைப்போல் தோற்றமளித்து, மக்களுடைய நல்லெண்ணத்
திற்குள் தன்னையே பெரிய ஆளாக நம்ப வைத்தான்; பின்,
பரலோகத்திலிருந்து தனக்கு ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டதாகக்
கூறினான்; அதில் கேலிக்குரிய காரியங்களை எழுதியிருந்தான்;
கத்தோலிக்க வேதத்தினுடைய சில காரியங்களை ஆங்காங்கே எழுதி
மழுப்பியிருந்தான்; இப்புத்தகத்தை, வணக்கத்திற்குரிய
புத்தகமாக மக்களுக்குக் கொடுத்தான்.
வேதசாட்சியான அர்ச்.பீட்டர் மாவிமேனுஸே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
—
பிப்ரவரி21 - வேதசாட்சியும் ஸ்கிதோபோலிஸ் மேற்றிராணியாருமான அர்ச்.செவரியானுஸ்
மார்சியன் மற்றும் அர்ச்.புல்கேரியா கிழக்கு உரோமை
சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட காலத்தில், சால்செடன்
பொதுச்சங்கம் கூட்டப்பட்டது; இச்சங்கம் கிழக்கத்திய
நாடுகளில் தோன்றியிருந்த யுடிசியன் பதிதத் தப்பறையைக் கண்டனம் செய்து கண்டித்தது!
நமதாண்டவருக்கு தேவ சுபாவம் மனித சுபாவம் என்கிற இரு சுபாவங்களும் இருப்பதை,
இப்பதிதத் தப்பறையினர், ஏற்றுக்கொள்ளவில்லை!
மாறாக, ஆண்டவருக்கு ஒரே ஒரு சுபாவம் தான் உண்டு என்று
தப்பறையாக போதித்து வந்த இந்த பதிதர்கள், நாளடைவில், ஆண்டவருக்கு தேவத்துவமும் இல்லை, என்று போதிக்கவும்
துணிந்தனர்! பாலஸ்தீனிய துறவற மடங்களின் மடாதிபதிகளில் மாபெரும் அதிகாரத்தையுடைய
மடாதிபதியான அர்ச். யுதிமியுஸ் மற்றும் அ்நநாட்டிலிருந்த அநேக துறவியர்களும்,
இப்பதிதத் தப்பறையைக் கண்டித்துக் கண்டனம் செய்தனர்!
இப்பதிதத்திற்கு எதிராக இப்பொதுச் சங்கம் இயற்றிய தீர்மானங்களை அங்கீகரித்து
ஏற்றுக்கொண்டனர்!
ஆனால், யுடிசியன் பதிதத் தப்பறையைத் தழுவியிருந்த
தியோடோசியுஸ் என்கிற அறிவிலியும், கொடுங்கோண்மை
குணமுடையவனுமான ஒரு துறவி, அநீதியான முறையில் , ஜெருசலேம் மேற்றிராசனத்தின் அரண்மனையை அபகரித்து, அதன்
மேற்றிராணியாரை, வலுவந்தமாக வெளியேற்றினான். இந்த பதிதன்,
இறந்துபோயிருந்த சின்ன தியோடோசியுஸ் என்ற சக்கரவர்த்தியின்
மனைவியும், சக்கரவர்த்தினியுமான யுடோக்சியாவின் ஆதரவிலும்,
பாதுகாப்பிலும், இவ்விதம் கொடூரமாக நடந்து கொண்டிருந்தான்!
அச்சமயம், யுடோக்சியாவும் ஜெருசலேமில் தங்கியிருந்தாள். இப்பதிதன், மற்ற அநேக
சகத் துறவியரையும் தன் தப்பறையான பதிதத்திற்குள் சேர்ந்து கொள்ளும்படிச்
செய்தான்! இப்பதிதத்தில் சேராத மற்ற
எல்லாரையும், இவன் கொடூரமாகக் கொன்று போட ஏற்பாடு செய்தான்;
ஜெருசலேம் நகரமே இரத்த வெள்ளத்தினால் நிரம்பியது! பெரிய படைவிரர்களுடைய சேனையைக் கொண்டு, அந்நாடு முழுவதும் தன்னுடைய பதிதத் தப்பறையை வலுவந்தமாக பரப்புவதற்காக,
அதை எதிர்த்த எல்லா மக்களையும் கொன்று போட்டு, பேரழிவைக் கொண்டு வந்தான். இருப்பினும்,
அநேகக் கிறீஸ்துவர்கள், சத்திய வேத
விசுவாசத்திற்காக, இவனையும், இவனுடைய
கொடூர உபத்திரவங்களையும், துணிவுடன் எதிர்த்து நின்றனர்! இவர்களில், ஸ்கிதோபோலிஸ்
மேற்றிராணியாரான அர்ச். செவெரியன், மிக அதிக உத்தம மேரையுடனும், உறுதியுடனும், சத்திய வேத விசுவாசத்தில்
நிலைத்திருந்தார்; அதற்கான மகிமையான வேதசாட்சிய கிரீடத்தைப்
பெற்றுக்கொண்டார்; படை வீரர்கள் இவரைப் பிடித்து, நகரத்திற்கு
வெளியே இழுத்துச் சென்று, அங்கே இவரைக் கொன்று போட்டனர்!
வேதசாட்சியும் ஸ்கிதோபோலிஸ் மேற்றிராணியாருமான
அர்ச்.செவரியானுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக