1. தேவதாயின் மூலமாகத் தான் இயேசு நாதர் இந்த உலகில் வந்தார். அவர் மூலமாகத்தான் இந்த உலகை அவர் ஜெயம் கொள்வார்
2. மாதா இஸ்பிரித்துசாந்து வினால் அழைக்கப்பட்டிருந்தாலும் அவருடைய வாழ்நாள் முழுவதும் ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய தாழ்ச்சியின் காரணமாக ஒரு மறைந்த வாழ்வு வாழ்ந்தார்
3. அவர் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார்.
4. ஆண்டவர் அவரை அவர் உற் பவித்தது முதல் அவர் தம் ஆத்தும சரிரத்தோடு பரலோகத்துக்கு ஆரோபணம் ஆகும் வரையில் அவரை மறைத்து வைத்திருந்தார்.
5. அவருடைய பெற்றோருடைய கண்களுக்கும் அவர் மறைவாக இருந்தார்
வானதூதர் களுடைய கண்களுக்கும் அவர் மறைவாக இருந்தார்.
6. பிதாவாகிய சர்வேசுரன் அவருக்கு புதுமைகளை செய்யும் வரம் கொடுத்திருந்தாலும் அவர் அதை இந்த உலகில் வாழும் போது செய்யவில்லை
7. சுதனாகி சர்வேசுரன் தமது அளவு கடந்த ஞானத்தை மாதாவுக்கு கொடுத்தார். ஆனாலும் அவர் பேசியது குறைவே
8. இஸ்பிரித்துசாந்து சுவிஷேகர்களையும் அப்போஸ்தலர்களையும் மாதாவைப் பற்றி கொஞ்சமாக பேசவும் எழுதவும் .தூண்டினார். அப்போது தான் யேசுவைப் பற்றி அதிகமாக உலகுக்கு சொல்ல முடியும் என்பதால் தான்
9. ஆண்டவர் அவரை எவ்வளவு மகிமைப்படுத்தினார என்றால் வானதூதர்கள் அனைவரும் " அருள் நிறைந்த மரியாயே " என்று புகழ்கின்றனர். மரியாயினுடைய ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
10 . இந்த உலகம் முழுவதும் மரியாயின் மகிமையால் நிறைந்துள்ளது.
11. ஆண்டவருக்கு மாதாவினுடைய பெயரால் பல கத்தோலிக்க தேவாலயங்கள் கட்டப்பட்டு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளன.
12. முந்தைய காலங்களில் கோவில்களில் தேவதாய்க் கென ஒரு பீடம் உண்டு.
13. தேவதாய் புகழ்ச்சிக்கும் மரியாதைக்கும,அன்பிற்கும், சேவைக்கும் முற்றும் உரியவர்.
14. ஆண்டவர் தமது மிகப் பெரிய காரியங்களை மரியாயின் மூலம் நிறைவேற்ற அவரைப் படைத்தார். ஆண்டவர் அந்த திட்டங்களில் மாறுதலையோ அல்லது மாற்றமோ செய்ய மாட்டார்.
15. பிதாவாகிய சர்வேசுரன் தமது குமாரனை அர்ச். தேவதாயின் மூலம் இந்த உலகுக்கு தர சித்தமானார். பல பிதா பிதாக்களும், தீர்க்கதரிசிகளும், பழைய ஏற்பாட்டில் உள்ள அர்ச்சிஷ்டவர்களும் சுமார் 4000 வருடங்கள் ஆண்டவருடைய வருகைக்காக காத்திருந்தாலும், ஆண்டவர் இந்த உலகிற்கு வந்தது தாய் மரியாள் மூலமாகத் தான்.
அர்ச். அகுஸ்டின் சொல்வது போல் கடவுள் தம்முடைய குமாரனை தேவதாயின் மூலம் உலகுக்கு தர சித்தமானார்.
16. சேசுநாதர் சுவாமி நம்மை இரட்சிப்பதற்காக மரியாயிடத்தில் மனிதவதாரம் எடுத்தார். எனவே நாம் தேவதாய் மூலமாகவே இரட்சிக்கப்படுவோம்.
17. சேசு நாதார் சுவாமி மனித அவதாரம் எடுப்பதற்கு முன் அர்ச். கபிரியேல் சம்மனசு மூலம் அனுமதி கேட்ட பின் தான் மரியாயினிடத்தில் மனித அவதாரம் எடுத்தார்.
18. தேவசு தன் அவருடைய உதரத்திலே ஒரு புது ஆதாமாக உருவெடுத்தார்.
19. தேவதாய் ஆண்டவரை பெறும் போது மட்டுமல்ல, அவருடைய இறப்பிலும் அவரோடு கல்வாரி மலையிலே இருக்க சித்தமானார்
20. பழைய ஏற்பாட்டிலே ஆபிரகாமை கடவுள் கேட்ட போது தமது ஒரே மகனை பலி கொடுக்க சித்தமானார். அதே போல் தேவதாயும் தாம் பாலுட்டி சீராட்டி வளர்த்த மகனையும் கல்வாரி மலையில் நமக்காக ஒப்பு கொடுத்தார்.
21. ஆண்டவருடைய 30 வருட மறைந்த வாழ்வு சுவிஷேஷத்தில் சொல்லப் படவில்லை. அவர் மரியாளுக்கும் சூசைக்கும் கீழ்படிந்திருந்தார்.
22. தேவமாதாவினுடைய வார்த்தையே எலி செபத்தம்மாள் வயிற்றில் இருந்த ஸ்நாபக அருளப்பரை பரிசுத்தமாக்கியது.
23. பிதாவாகிய சர்வேசுரன் உலகில் உள்ள எல்லா ஜலத்தையும் ஒன்றினைத்து அதற்கு கடல் என்று அழைத்தார். அதைப் போல் தமது வரப்பிரசாதங்களையும் ஒன்றினைத்து அதற்கு மரியாள் என்று பெயரிட்டார்.
24. தேவதாய் மூலமாக தான் அனைத்து மோட்ச வரப்பிரசாதங்கள் நமக்கு கிடைக்கின்றன.
25. தேவமாதா இந்த உலகில் கடவுளின் தாயாகவே இருந்தார்.
26. சேசு நாதரும் இந்த உலகில் உள்ள குழந்தைகள் தன் தாயை எவ்வாறு நேசிக்கு மோ அதைவிட மேலாகவே அவர் மாதாவை நேசித்தார்.
27. சேசுநாதருக்கு மாதா தாயாக இருந்தாலும் இந்த உலகத்து தாய்மார்களைப் போல தன் மகனுக்கு கட்டளைகளை கொடுக்கவில்லை.
28. தேவமாதா கர்த்தரிடத்தில் இருந்து எதையும் கேட்கவோ ஆசிக்கவோ இல்லை .
29. சேசுநாதர் முன்னிலையில் மாதாவினுடைய ஜெபங்களும் மன்றாட்டுகளும் அதிக பலம் வாய்ந்தது.
30 . அவருடைய தாழ்ச்சியின் காரணமாக மோட்சத்திலுள்ள தூதர்கள் மற்றும் சகல அர்சிஷ்டவர்கள் மீதும் சகல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
31. ஆண்டவர் மாதாவை வானுலகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் அரசியாகவும் , அவருடைய படைகளுக்கு தலைவராகவும், ஞான பலன்களுக்கு பாதுகாவலாகவும், அவருடைய வரப்பிரசாதங்களை பகிர்ந்து அளிப்பவராகவும், மனிதர்களுக்கு மனு பேசுகிறவராகவும், அவருடைய பகைவர்களை அழிப்பவராகவும் ஏற்படுத்தினார்.
32. பிதாவாகிய சர்வேசுரன் தேவமாதாவை உலக முடியும் மட்டும் தமது மனு குலத்தின் தாயாக இருக்க விரும்புகிறார்.
33. நமக்கு இயற்கையாகவும் உடல் ரீதியாகவும் தாய் தந்தை இருப்பது போல, நமக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்திலும், ஞான விதத்திலும் தாய் தந்தையாக மரியாளும் பிதாவாகிய சர்வேசுரனும் இருக்கிறார்கள்
34. ஆண்டவர் தேவதாயை பிந்தைய காலங்களில் அதிகமாக வெளிபடுத்த சித்தமானார்.
1. எனெனில் தேவமாதா தன்னையே இந்த உலகில் இருந்து ஒளித்துக் கொண்டார்.
2. மாதா தன்னையே ஒரு புழுதியை விட தாழ்வாக தாழ்த்திக் கொண்டார்.
3. தேவமாதவின் தாழ்மையான வாழ்க்கை
4. தேவதாய் தான் சேசுநாதர் இந்த உலகில் வரக் காரணமாக இருந்தார்
5. சேசு நாதருடைய இரண்டாம் வருகையும் தேவமாதாவின் மூலமாக மட்டுமே இருக்கும்.
6. நாம் சேசுநாதரை அடைவதற்கு உத்தமமான வழி தேவமாதா ஒருவர் மட்டுமே
35. தேவமாதாவை கண்டடைகிறவர்கள் எல்லோரும் வாழ்வை கண்டடைகிறார்கள். அதாவது சேசுநாதரை கண்டடைகிறார்கள்.
36. தேவமாதாவை தேடாத யாரும் அவரை கண்டடைவதில்லை. அவரை அறியாத யாரும் அவரை தேட மாட்டார்கள். எனவே தேவமாதா முந்தைய காலங்களை விட பிந்தைய காலங்களில் அதிகமாக அறியப்பட வேண்டும்.
37.
Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
சனி, 23 மே, 2015
தேவமாதாவின் மகிமை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக