நவம்பர்
23ம் தேதி
வேதசாட்சியான
🌹கிளமென்ட் யூதமதத்திலிருந்து கிறிஸ்துவராக
மனந்திரும்பியவர்; அர்ச். இராயப்பருக்கும் அர்ச். சின்னப்பருக்கும் சீடராயிருந்தார்;
அர்ச். சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தில், இவரைப் பற்றி எழுதியிருக்கிறார்:
“அவர்கள் கிளமெந்த் என்பவரோடும், எனக்கு உதவிசெய்த மற்றவர்களோடும்,சுவிசேஷத்தைப்பற்றி
என்னோடு கூட உழைத்தவர்கள்” (பிலிப் 4:3).
அனிக்ளிதுஸ் பாப்பரசருக்குப்
பிறகு அர்ச். கிளமென்ட் கி.பி. 88ம் வருடத்தில், பாப்பரசரானார். கொடுங்கோலனான
டிராஜன் என்கிற உரோமைச் சக்கரவர்த்தியினால், இவர், தண்டிக்கப்பட்டு, கிரீமியா நாட்டிற்கு
நாடு கடத்தப்பட்டார். அங்கு ஏற்கனவே தண்டனையை அனுபவித்து வந்த 2000 கத்தோலிக்கர்களுக்கு,
அர்ச். கிளமென்ட் பாப்பரசர் ஆறுதலாயிருந்தார்;
அவர்களுக்கு இவர் அளித்த அறுதல்
வார்த்தைகள்: “சர்வேசுரன், உங்களுடன் கூட இருக்கும்படியாக, இந்த இடத்திற்கு
என்னை அனுப்பியதன் மூலம் , வேதசாட்சிய முடியின் மகிமையில் உங்களுடன் கூட பங்கேற்கும்
படியான தேவ வரப்பிரசாதத்தை எனக்கு அருளியிருக்கின்றார்; ஆனால் அதற்கு நான் தகுதியற்றவனாயிருக்கிறேன்.”
அர்ச்.கிளமென்ட், கி.பி.100ம்
வருடம், கழுத்தில் நங்கூரம் கட்டப்பட்டவராக கடலில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
கப்பல் படையினருக்கும் கல்லை வெட்டுபவர்களுக்கும் அர்ச். கிளமென்ட் பாதுகாவலராயிருக்கிறார்.
அர்ச்.கிளமென்ட்டே! எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக