Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

பகுதி 2.

திவ்ய சேசுநாதரின் திரு இருதயத்தினுடைய நன்கொடை அர்ச்.பீட்டர் ஜூலியன் எய்மார்ட்-தியானப் பிரசங்கம் - பகுதி 2.

நீ சர்வேசுரனுடைய வரத்தை.. அறிந்திருந்தால்.. (அரு.4:10) 

திவ்ய சேசுநாதர், தம்மைத் தாமே, இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் நித்திய காலத்திற்குமாக நீடித்திருக்கச் செய்வதற்கு, எவ்வழி முறைகளைக்கையாளுவார்? நமதாண்டவருடைய திவ்ய மனிதவதாரத்தினுடைய பரம இரகசியத்திற்கு திவ்ய இஸ்பி ரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் தாமே, ஏற்புடையகாரணகர்த்தராக விளங்குகின்றார்;கடைசி இராபோஜனத்தின் போது,திவ்ய சேசுநாதர் எல்லாவற்றையும்,தாமே நிறைவேற்றினார்; ஆனால், அதற்குப் பின் வரும் காலங்களில், அத்தகைய உன்னதமான பரம இரகசியத்தினு டைய பரிசுத்தச் சடங்கை தலைமைப்பொறுப்பேற்று நடத்துவதற்கு,யார் தகுதியுடன் இருக் கின்றார்? குருவானவர் அதை நடத்துவார்! உடனே, தேவ ஞானம் அதை எதிர்த்தது. என்ன! சாவுக்குரிய ஒரு மனிதனாகிய குருவால், தன் இரட்சகரும் சர்வேசுரனுமானவரின் மனிதவதாரத்தை புதுப்பிக்க முடியுமா? தேவ வார்த்தையானவரின் இப்புதிய மனிதவ தாரத்தை ஏற்படுத்துவதற்கு, தேவ இஸ்பிரீத்துவானவருடன் கூட மனித ஒத்துழைப்பும் தேவைப்படுமா? எல்லாகாலங்களுக்கும் அரசரும் சர்வாதிகர்த்தருமான சர்வேசுரனுக்கு, ஒரு மனிதன் கட்டளையிடவும், அதற்கு அவர் கீழ்ப்படியவும்வேண்டுமா? அதற்கு, பின் வரு மாறு,திவ்ய சேசுவின் திரு இருதயத்திடமிருந்து பதில் வந்தது: ஆம்! நான் எவ்வளவிற்கு அதிகமாக மனிதனை சிநேகிக்கிறேனென்றால், எல்லா காரியங்களிலும் ,நான் அவனுக்குக் கீழ்ப்பட்டிருக்கும் அளவிற்கு, என்னையே விட்டுவிடுகிறேன். ஒரு குருவின் அழைத்தலுக்கு உடனடியாகக்கீழ்ப்படிந்து, நான் மோட்சத்திலிருந்து கீழே இறங்கி வருவேன். தேவ நற் கருணைப் பேழையில் குடியிருக்கும் நான், விசுவாசிகளின் குறைந்த பட்ச விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு,அப்பேழையிலிருந்து வெளியே வருவேன்: வேதனைமிகுந்த வியாதியின் படுக்கையிலிருக்கும் என் பிள்ளைகளைச் சந்திக்கும்படியாக, நகரத்தின் தெருக்கள் வழியா கச் செல்வேன். சிநேகமானது,சிநேகிப்பதிலும்,தனக்குச் சொந்தமானதைக்கொடுப்பதிலும், தன்னைத்தானேப் பரித்தியாகம் செய்வதிலும், மகிமையடைகின்றது.

அப்பொழுது, தேவ பரிசுத்தத்தனமும் தனது எதிர்ப்பை , பின் வருமாறுவெளிப்படுத் தியது: தேவரீர், உமது மகிமைக்கு ஏற்புடைய விதமாக, குறைந்த பட்சமாக, தேவாலயத்தில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். தேவரீரின் மாட்சி மிக்க இராஜரீகத்திற்கு ஏற்புடைய குருக்களை தேவாலயத்தில் கொண்டிருப்பீர்கள். பழைய ஏற்பாட்டின் சட்டத்தைக் காட் டிலும், புதிய ஏற்பாட்டின்சட்டத்தில், சகலமும் கூடுதல் அதிக அழகு வாய்ந்ததாக இருக்க வேண்டும். அத்தும ஆயத்தம் செய்த, இருதயத்தூய்மையுள்ள நல்லகிறீஸ்துவர்கள் மட்டும், தேவரீரை திவ்ய நன்மையில் உட்கொள்ள வேண்டும். அதற்கு, சேசுவின் திரு இருதயம், பின்வருமாறு பதிலளித்தது: என் சிநேகம் எவ்வித நிபந்தனையையும் கொண்டிருக்கிறதில்லை; அது, தனக்கென்று எதையும் ஒதுக்கி வைப்பதும் கிடையாது. கல்வாரியின் மேல், சிலுவை யில் அறைந்து என்னைக் கொன்ற கொலைஞர்களுக்கு, நான் கீழ்ப்படிந்தேன். இன்னும் கூட மற்ற யூதாசுக்கள் என்னிடம் வந்தாலும், அவர்களுடைய தீமை நிறைந்த தேவதுரோகமான முத்தத்தையும் ஏற்றுக்கொள்வேன். அவர்களுக்கும் கீழ்ப்படிவேன்.

ஆனால், அப்போது, எத்தகைய காட்சி, நம் நேச ஆண்டவர் முன்பாக தோன்றியது! ஆண்டவரின் திவ்ய திரு இருதயமானது, மனிதர் மீதான தனது சிநேகத்தின் இயல்பான நாட்டங்களினுடைய பற்றுதல்களை அடக்கியாள்வதற்காகத் தன் மீதே வலுவந்தம் செய்து போராடும்படியாயிற்று! ஜெத்சமெனி ஒலிவத்தோட்டத்தில் அனுபவிக்கவிருந்த இரத்த வியர்வையின் வேதனை, ஏற்கனவே, நமதாண்டவரை உபாதிக்கத் துவக்கியிருந்தது: பாடு களின் போது,தாம் அனுபவிக்கவிருந்த கொடிய நிந்தை அவசங்கைகள் பற்றிய காட்சியை, ஜெத்சமெனித் தோட்டத்தில் கண்ட போது, நமதாண்டவர், சாவுக்கு ஏதுவான துயரத் திற்குட்பட்டார். மனுமக்களை மீட்டு இரட்சிப்பதற்காக, தாம், இத்தகைய கொடிய சிலு வைப்பாடுகளைப் பட்ட போதிலும், திரளான மனிதர்கள் இரட்சணியத்தை அடைய மாட் டார்கள் என்று நினைத்தபோது, ஆண்டவரின் திவ்ய திரு இருதயம் எவ்வளவிற்கு அக்கொ டிய நினைவினால் தாக்கப்பட்டு வலுவந்தம் செய்யப்பட்டதென்றால், உடனே, வியர்வை நாளங்கள் வழியாக,ஆண்டவரின் திரு இரத்தம் வியர்வையாக வெளியேறியது. மேலும், தமது சொந்த மக்களில் அநேகர், வேத விசுவாசத்தை மறுதலித்தவர்களாக, திருச்சபையி லிருந்து வெளியேறுவதைப் பற்றி எண்ணிய போது, ஆண்டவரின் திவ்ய திரு இருதயம், கொடூரமான வேதனையால் தாக்கப்பட்டது. கடைசி இராப் போஜனத்தின்போது, ஆண்டவரின் திவ்ய திரு இருதயத்தில் எத்த கைய போராட்டம் நிகழ்ந்தது? எத்தகைய கடுந்துயரவேதனை ஏற்பட்டது? தமக்கென்று எதையும் ஒதுக்கி வைக்காமல்,ஆண்டவர் தம்மையே, முழுமையாக, மனிதருக்காகக் கைய ளிக்கச் சித்தமானார்; ஆனால், ஆண்டவரின் இத்தகைய அபரிமிதமானதும் உன்னதமானது மான சிநேகத்தை, ஒவ்வொரு மனிதனாலும், விசுவசித்து ஏற்றுக் கொள்ள முடிந்ததா? அதை விசுவசித்து ஏற்றுக்கொண்டவர்கள் எல்லோரும்,தகுந்த நன்றியறிதலுடன், இந்த சிநேக தேவதிரவிய அனுமானத்தில், அவரை உட்கொள்கின்றனரா? அப்படியே,தங்கள் ஆத்துமங்களில் அவரை வரவேற்கும் எல்லோரும், அவருக்கு எப்போதும் பிரமாணிக்கத் துடன் ஜீவிக்கின்றனரா? இத்தகைய கொடூர நிர்ப்பந்தங்களைக் கண்ட போதிலும், திவ்ய சேசுவின் திரு இருதயம், நிச்சயமாக நிலைக்குலையவு மில்லை; தடுமாறவுமில்லை; ஆனால், கொடூ ரமாக உபாதிக்கப்பட்டது.இந்த மகா பரிசுத்த சிநேகத்தின் தேவ திரவிய அனுமானத்தில், ஒவ்வொரு நாளும் தனது கொடிய சிலுவைப் பாடுகள் மறுபடியும் புதுப்பிக்கப்படுகிறதை, திவ்ய சேசு கண்டார்; இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில்,கிறீஸ்துவ இருதயங்க ளால், தமக்கு அர்ப்பணிக்கப்பட்ட இருதயங்களால்,தமது பாடுகள் புதுப்பிக்கப்படுவதைக் கண்டார்;திவ்யசேசுநாதர்,அநேகர் தம்மை வேத விசுவாச மறுதலிப்பினால், காட்டிக்கொடுப் பதையும், வேறு சிலர், சுயசிநேகத்தினால், தம்மை எதிரிகளிடம் விற்கிறதையும், மற்ற பலர் தங்களுடைய துர்க்குணத்தினால், தம்மை சிலுவையில் அறைகிறதையும் கண்டார்.ஆண்ட வரை,தினமும் திவ்ய நன்மையில் உட்கொள்பவர்களுடைய இருதயங்கள், வெகு அடிக்கடி அவருக்குக் கல்வாரி மலைகளாக மாறுகின்றனர்.

ஓ! இம்மகா சிநேகமிகுந்த தேவ திரு இருதயத்திற்கு, இது எத்தகைய கொடிய சித்திரவதை! இதற்காக, தேவ இரட்சகர் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது?நேச ஆண்ட வர் தம்மையே மறுபடியும் நமக்குக் கையளிப்பார்! அதே போல் எப்போதும், இந்த மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், நேச இரட்சகர், நமக்காகத் தம்மையேத் தொடர்ந்து கையளித்துக்கொண்டிருப்பார்.

எங்கள் மீதுள்ள சிநேகத்தால் பற்றியெரியும் சேசுவின் சற்பிரசாத திரு இருதயமே! உம்மீதுள்ள சிநேகத்தால் எங்கள் இருதயங்கள் பற்றிஎரியச் செய்தருளும்!


 

திவ்ய சேசுநாதர் சுவாமியின் திரு இருதய வணக்க மாதம் 1

  திவ்ய சேசுநாதரின் திரு இருதயத்தினுடைய நன்கொடை தியானப் பிரசங்கம் - அர்ச்.பீட்டர் ஜூலியன் எய்மார்ட்

நீ சர்வேசுரனுடைய வரத்தை .. அறிந்திருந்தால்.. (அரு.4:10)


திவ்ய சேசுநாதர், உலக ஜீவியத்தின் இறுதி முடிவை அடைந்திருந்தார்; பரலோகம், தனது அரசரை, மறுபடியும் தன்னிடத்தில் அழைத்துக்கொண்டது; ஆண்டவர், போதுமான அளவிற்குப் போராடியிருந்தார்;அது, அவர் வெற்றியடைவதற்கான நேரமாயிருந்தது;இருப்

பினும், ஆண்டவர், பசாசின் அடிமைத்தனத்திலிருந்து அப்போது தான் மீட்டு இரட்சித்த ருளிய மனுக்குலத்தை, அவரின் புதிய குடும்பத்தின் பிள்ளைகளை, அப்படியே நிராதரவாக விட்டுச் செல்ல விரும்பவில்லை. நான் உங்களை விட்டுச் செல்கிறேன். மேலும், நான் உங்களி டம் வருவேன், என்று ஆண்டவர், அப்போஸ்தலர்களிடம் கூறினார். ஓ ஆண்டவரே! தேவ ரீர் எங்களிடம் மறுபடியும் வருகிறீர்; தேவரீர், எங்களிடம் தங்கியுமிருக்கின்றீர்; அதே சம யம், எங்களை விட்டும் செல்கின்றீர்; இவ்விரண்டு காரியங்களையும், ஒரே சமயத்தில்,ஆண் டவரே, தேவரீரின் எந்த வல்லமையினுடைய புதுமையினால், செய்கின்றீர்? இது தான், ஆண்டவருடைய திவ்ய திரு இருதயத்தின் பரம இரகசியமும் உன்னத மான அலுவலுமாகும்.திவ்ய சேசுநாதர், இரண்டு மாட்சிமிக்க பத்திராசனங்களைக்கொண்டு திகழ்கின்றார். மோட்சத்தில் மகிமையுள்ள ஒரு பத்திராசனத்தைக் கொண்டிருக்கின்றார்; தாழ்ச்சியும் சாந்தமும் நன்மைத்தனமுமான மற்றொரு பத்திராசனத்தை, நமதாண்டவர், இப்பூமியில் கொண்டிருக்கின்றார்: இரு விதமான இராஜரீகமான அரசவைகளைக் கொண் டிருக்கின்றார். வெற்றியடைந்த மகிமையினுடைய திருச்சபையினரும் சகல மோட்சவாசி களுமடங்கிய பரலோக அரசவையையும், இங்கே, கீழேயுள்ள பூமியில் இரட்சணியமடைந்த சகல புண்ணியவாளர்களுடைய அரசவையையும் கொண்டிருக்கின்றார். திவ்ய இரட்சகர், ஒருவேளை,இவ்விரண்டு இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது என்ற ஒரு நிலை நிச்சயமாக ஏற்படுவதாக இருந்தால், நம்மை விட்டு விட்டுப் பரலோகத்திற்குத் திரும்பிச் செல்வதை விட, நம்முடன் கூட இங்கேயே, பூமியில் தங்கியிருப்பதற்கே, ஆசிப்பார். பர லோக மகிமையை அடைவதற்காக, மோட்சத்திற்குச் செல்வதை விட, தமது விலைமதியாத திரு இரத்தத்தையே கிரயமாகக் கொடுத்து மீட்டு இரட்சித்தருளிய எளிய சிருஷ்டிகளான மனிதர்களில் சின்னஞ்சிறியவர்களுடன் கூட தங்கியிருப்பதையேத் தேர்ந்தெடுப்பார் என்பதை, நேச ஆண்டவர், அநேக அத்தாட்சிகளால், நிச்சயித்திருக்கின்றார்: மனிதர்களின் குமாரர்களுடன் இருப்பதிலேயே, ஆண்டவர் அகமகிழ்கின்றார். திவ்ய சேசுநாதர், எந்த நிலைமையில் நம்முடன் தங்கியிருக்க நேரிட்டது? க்ஷண நேரத்தில் தோன்றி மறைகிற மிகக் குறுகிய காலநேரத்தில், நிலையுறுதியற்ற விதத்தில் தங்கியிருக்க நேரிட்டதா? இல்லை .ஆண்ட வர், நிலைமையாக எப்போதும், நம்முடன், இடைவிடாமல், தொடர்ந்து தங்கியிருப்பார். ஆனால், இந்த நேரத்தில், நமதாண்டவரின் திரு ஆத்துமத்திற்குள் ஓர் ஆச்சரியமானப் போ ராட்டம் நிகழ்ந்தது: தேவ நீதி எதிர்த்தது; மனுக்குல இரட்சணிய அலுவல் நிறைவேறிவிட்டதல்லவா? திருச்சபையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டதே! தன் சொந்த உடைமையாக்கிக் கொள்ளும் படியாக, மனிதனுக்கு, தேவ வரப்பிரசாதமும், சுவிசேஷமும்,தேவ கற்பனைகளும் சட்டங்க ளும், அளிக்கப்பட்டு, அவற்றை அவன் எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்பதையும் கற்பிக் கப்பட்டுவிட்டதல்லவா? திவ்ய சேசுநாதரின் திருஇருதயம், தேவ நீதியின் எதிர்ப்பிற்குப் பின்வருமாறு பதில் கூறியது: மனுக்குலத்தின் இரட்சணியத்தை நிறைவேற்றுவதற்குப்போதுமாயிருந்த காரியங் கள் எல்லாம், மனுக்குலத்தின் பேரில் கொண்டிருந்த தமது அளவில்லாத சிநேகத்தைத் திருப்திப் படுத்துவதற்குப் போதுமானதாக இல்லாமல்போனது: குழந்தையைப் பெற்றெடுப் டன் திருப்தியடையாமல், ஒரு தாயானவள், அதற்கு உணவளித்துப் போஷித்து வளர்ப் பதிலும், அது செல்லுமிடங்களிலெல்லாம், அதனுடன் கூடவே இருந்து,அதைத் தொடர்ந்து கண்காணித்து வருவாள்."உலகத் தாய்மார்களிலேயே மிகச் சிறந்த தாய், தன் பிள்ளையை, நேசிப்பதைவிட மேலாக, நான் மனிதரை சிநேகிக்கிறேன். நான் அவர்களுடன் கூட தங்கி யிருப்பேன்” என்று, திவ்ய சேசுநாதரின் திரு இருதயம், நம்மைப்பார்த்துக் கூறுகின்றது. எந்த காண்டவர் நம்முடன் கூட தங்கியிருப்பார்? மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானம் என்கிற திவ்ய அப்பஉருவத்தில், திரைச்சீலைக்குள் மறைந்திருப்பார். தேவ மகத்துவம் இதை எதிர்த்தது; தேவ இரட்சகர், தமது மனிதவதாரத்தின்போது, தம்மை உட்படுத்திக்கொண்ட தாழ்மை சிறுமையை விட, இம்மகாபரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், அவருக்கு, மாபெரும் விதம் கூடுதலாக ஏற்படக்கூடிய தாழ்மை, சிறுமைக்கு, தேவ மகத்துவம்,மறுப்பைத் தெரிவித்தது. பாடுகளின்போது அனுபவித்த சிறுமை, தாழ்மை
யான நிந்தனைகளை விட, இப்போது, அதிக சுய இழிவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய சுய இழிவை, மனுக்குலத்தின் இரட்சணிய அலுவல் கேட்கவில்லை, என கூறி,தேவமகத்துவம், அதை எதிர்த்தது. அதற்கு உடனே, திவ்ய சேசுநாதரின் திரு இருதயம்,பின் வருமாறு பதிலளித்தது: பழைய ஏற்பாட்டின் காலத்தில், மோயீசனுடைய மகிமை, யூதர்கள் அவரருகில் செல்லாத படிக்குத் தடுத்ததுபோல், என் தேவசுபாவ மகிமையின் மாட்சிமை,என்னிடம், அணுகி வரும்,என் எளிய சகோதரர்களான மனிதரை,தடுத்துவிடாமலிருப்பதற்காக, நான் என்னை யும் என்மகிமையையும் திரையிட்டு மறைத்துக்கொள்ளவே ஆசிக்கிறேன்.என்உன்னதமான புண்ணியங்கள், மனிதனைத் தாழ்மைப் படுத்தாமலிருப்பதற்காகவும், அத்தகைய உத்தம மேரையான எனது நன்மாதிரிகையின் முழுமையான உத்தமதனத்தை அடைவதைக் குறித்து, அவன் ஒரு போதும், அதைரியப்படாமலிருப்பதற்காகவும், நான் என் புண்ணி யங்களின் மேல் ஒரு திரையைப் போட்டு மறைத்துக் கொள்ள ஆசிக்கிறேன். அப்போது, மிக எளிதாக, என் அருகில், மனிதன் வருவான். மேலும், ஒன்றுமில்லாமையாகிய இச்சிறுப் பேழையினுள், அடைபட்டிருக்கும்படி, கீழே குனிந்து இறங்கி, என்னையே தாழ்த்தியிருப் பதைக் கண்டு, அவனும், என்னுடன் கீழே இறங்கி வருவான். அப்போது, அவனிடம், நான் இருதயத் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ளவர் என்பதை என்னிடத்திலிருந்து கற்றுக் கொள், என்று இன்னும் கூடுதல் அதிகாரத்துடன் கூறுவதற்கான உரிமையை, நான் கொண்டிருப்பேன்.

தேவநற்கருணை

 தேவநற்கருணையில் திவ்ய கர்த்தர் மெய்யாகவே பிரசன்னமாயிருக்கின்றார்

சர்வேசுரன் அங்கே இருக்கின்றார்! - அர்ச்.பீட்டர் ஜூலியன் எய்மார்ட் மெய்யாகவே ஆண்டவர் இவ்விடத்திலிருக்கின்றார்; நானோ, இதை அறியாமலிருந்தேன் (ஆதி.28:16).

நமதாண்டவருக்கு, ஆராதனையையும், ஸ்துதியையும் செலுத்துவதன் மூலம், நாம்

சங்கை மரியாதையைச் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். அதுவே, நமது முழு முதல் தலையாயக்கடமை.தன்னியல்பாக,க்ஷண நேரத்தில், உடனடியாக,ஒரு அனிச்சை செயல்போல் ஏற்படும், சங்கை மரியாதையை, நாம் ஆண்டவர் மட்டில் கொண்டிருக்க வேண்டும்; இல்லாவிடில்,கடமைதவறிய குற்றத்திற்கு ஆளாவோம். க்ஷண நேரத்தில், இயல் பாக, சர்வேசுரன் மட்டில் கொண்டிருக்க வேண்டிய சங்கை மரியாதை, முன் யோசனை ஏதுமில்லாமல் நம்மிடம் ஏற்பட வேண்டும். சர்வேசுரன் மட்டில் நாம் கொள்ளும் மேரை மரியாதையானது, நமக்குள் ஓர் அச்சுப் பதிவாகப் பதியப்பட்டிருக்கும் சுபாவத்தினுள் இருக்க வேண்டும். ஆண்டவர் எங்கிருந்தாலும், நாம் அவரைக் கட்டாயமாக ஸ்துதித்து, ஆராதிக்க வேண்டும். கடவுள் மனிதன் என்ற அவருடைய மாட்சிமிக்க தேவ மகத்துவத் திற்கு, சிருஷ்டிகளாகிய நமது ஸ்துதியும்,ஆராதனையும், தேவைப்படுகின்றது; அவருடைய பரிசுத்த திருநாமத்திற்கு, பரலோகத்தினரும், பூலோகத்தினரும், பாதாளத்தினரும் முழங் காலிலிருந்து, பணிந்து தென்டனிட்டு வணங்குகின்றனர்.

மோட்சத்தில், சம்மனசுகள், தேவ மகத்துவத்திற்கு முன்பாக, நடுநடுங்கியபடி, சாஷ் டாங்கமாக விழுந்து, தெண்டனிட்டு, ஆராதிக்கின்றனர். நமது ஆண்டவரின் மகிமையின் ஸ்தலமான மோட்சமானது, உன்னதமான மேரை மரியாதையை, சர்வேசுரன் பெற்றுக்

கொள்ளும் ஸ்தலமாக, விளங்குகின்றது. பூமியிலுள்ள ஒவ்வொரு சிருஷ்டியும்,நமதாண்ட வருக்குக் கீழ்ப்படிந்திருந்தன: ஆழ்கடல் சமுத்திரமானது, ஆண்டவருடைய பாதத்தில், நில மாக மாறி, அவரை ஆராதித்தது; திவ்ய கர்த்தர், சிலுவையில் மரித்த போது, சூரியனும், வானமண்டலத்தின் சந்திரனும், நட்சத்திரங்களும், ஆண்டவருடைய மரணத்தைக் காண சகிக்காமல், தங்களையே மறைத்துக் கொண்டு, வருந்தின.மனிதரெல்லாரும், ஆண்டவரை தூஷித்து சபித்துக் கொண்டிருந்த போது, வானமும் பூமியும் ஆண்டவரை, ஸ்துதித்துப் போற்றின! நரகத்தில், சபிக்கப்பட்ட பாவிகள், ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்கிற வராகிய தேவ நீதிபதியின் கண்டிப்பான நீதித் தீர்ப்பினடியில், அஞ்சி நடுநடுங்கிக் கொண் டிருக்கின்றனர்!

நமதாண்டவரின் தெய்வீகப் பிரசன்னத்திற்கு, நாம் காண்பிக்க வேண்டிய மேரை மரியாதையான ஆராதனைக்கு, எந்த ஒரு காரணத்தையும் கண்டுபிடிக்கத் தேவையில்லை! அரசர் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டதும், எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்; அது ஒரு அனிச்சை செயலாக இருக்கிறது. அரசரோ உயர் அதிகாரியோ கடந்து செல்லும்போது, ஒவ் வொருவரும் அவருக்கு, சங்கைமரியாதை செலுத்துகின்றனர். அரசர் செல்லுமிடமெல்லாம், மரியாதையும் புகழும் செலுத்தும் மக்கள் கூட்டம், உடனுக்குடன் அவரை வாழ்த்துவ தைக் காணலாம். சர்வேசுரனுக்கு ஆராதனை செலுத்தும் உணர்வு இல்லாதவனும், அல்லது, பிறரிடத்தில், சர்வேசுரனுக்கு ஆராதனை செலுத்தும் உணர்வை அழிக்கஆசிப்பவனும், மனித னே இல்லை!

நமதாண்டவரின் பிரசன்னத்தில் அனுசரிக்க வேண்டிய சங்கை மரியாதை இல்லாத கத்தோலிக்கர்கள், வெட்கப்படுவதற்கான காரணங்கள் பல உள்ளன. தேவ சந்நிதானத்தில் இருக்கும்போது, அந்த க்ஷண நேரத்தில் உடனுக்குடன் அனுசரிக்கப்பட வேண்டிய மரியா தையைப் பற்றி தான், கூறுகிறேன். யூதரின் ஜெபக்கூடத்திற்குள் நுழைந்து பார்! அங்கு நீ பேசினாலோ, உன் நடத்தை ஒழுங்கில்லாமல் போனாலோ,நீ வெளியேற்றப்படுவாய்! ஒரு மசூதிக்குள் நுழைவதற்கு முன், உன் பாதணியைக் கழற்ற வேண்டும். தப்பறையான இம் மதத்தினர் எல்லோரும், அவர்களுடைய கோவில்களில் உண்மையான ஒன்றையும் கொண் டிருக்கவில்லை! ஆனால், நம்மிடம் எல்லாம் இருக்கின்றது! இருப்பினும், அவர்கள் தெய்வத்

மட்டில், கொண்டிருக்கும் மரியாதை, சர்வேசுரனிடம் நாம் கொண்டிருக்கும் மரியா தையை, வெகுவாகக் கடந்து, உயர்ந்து இருக்கின்றதே! தம்மைக் காட்டிலும், பசாசுக்கே, மனிதர்கள், அதிகமாக மரியாதை செலுத்துகின்றனர், என்று கூறி, நமதாண்டவர், நம்மீது குற்றம் சுமத்தக்கூடும்!

தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளால், பகிரங்கமாக உதாசீனப்படுத்தப்படுவதற்கு சம் மதிப்பார்களா? நமக்கு மற்றவர் செய்யும் சங்கயீனத்தை மிகப் பெரிதாகக் கருதுகிறோம்; ஆனால், நாம் அதே அவசங்கைகளை,நமதாண்டவருக்கு ஏன்செய்கிறோம்? நமது அற்பமான கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்பட்டால், அது பற்றி அதிகம் வருந்துகிறோம்.ஆனால், ஆண்ட வருக்குரிய சங்கை மேரை, அலட்சியம் செய்யப்படும்போது, அதைப் பற்றி, சற்றும் வருந் தாமல் இருக்கிறோம். நமது கண்ணியம், சர்வேசுரனிடமிருந்து, அவரது பிரதிபலிப்பாக,நம்மி டம் வருகின்றது.ஆகையால், நமதாண்டவர் மட்டில் நாம் கொள்ள வேண்டிய மரியான யை, இழப்பதற்கு அனுமதிப்போமேயாகில், நம் மட்டில், நமக்குரிய மரியாதையையும் அழித்துவிடுவோம்.ஆ! தேவசந்நிதானத்தில் அனுசரிக்க வேண்டிய சங்கை மரியாதையில்லா மலிருந்த பாவத்திற்குத் தகுந்த தண்டனையை,சர்வேசுரன் நமக்கு அளிப்பாரானால், ஐயோ! அது எவ்வளவு பயங்கரமாக இருக்கும்!

எனவே, நமதாண்டவருடைய தேவ பிரசன்னத்திற்குள், நாம் வந்தவுடன், அவரை ஸ்துதித்து ஆராதித்து, ஆண்டவருக்குரிய முதல் வணக்கத்தை அளிப்போமாக! திவ்ய கர்த் தருக்குரிய சங்கை மரியாதையை செலுத்துவதற்கு முன்பாக, நாம் அலட்சியப்போக்கையும், பராக்கையும் நம்மிடம் அனுமதிப்போமேயாகில், நாம் நீசப்பாவிகளாக இருப்போம். ஆம்! தேவநற்கருணைப்பேழையிலிருக்கும் ஆண்டவர் மட்டில் நாம் கொண்டிருக்கும் மரியாதைக் குறைவிலிருந்தே, விசுவாசத்திற்கு எதிரான மாபெரும் பாவங்கள் தோன்றுகின்றன

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

! +


தேவமாதா வணக்க மாதத்திற்கான தியானம்

தேவமாதாவின் மகிமைகள் - அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்

ஞானஉபதேசம் கற்பிக்கப்பட்டகிறீஸ்துவன் என்ற தமது நூலில், பின் வரும் உண் மை நிகழ்வை , சங்.பால் செக்னரி என்ற குருவானவர், எழுதினார்: அநேக பாவகரமான தீயபழக்கவழக்கங்களுடைய ஒரு இளைஞன், உரோமாபுரியில் வாழ்ந்த சங்.நிக்கோலாஸ் சூச்சி என்ற குருவானவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்வதற்கு வந்தான். அவனை, குருவானவர், அன்புடன் வரவேற்றார்;அவனுடைய நிர்ப்பாக்கிய அந்தஸ்தைக் குறித்து, வாலிபன் மீது இரங்கி, அவனிடம், நண்பனே! தேவமாதாவின் மீது, நீ பக்தி கொள்ள வேண்டும். தேவமாதா பக்தியின் வழியாக மட்டுமே,அருவருப்புக்குரிய அத்தீயப் பாவப் பழக்கத்திற்கு அடிமையாயிருக்கும் நீ, உன்னையே, அத்தீமையினின்று, விடுவித் துக் கொள்ள முடியும். ஆதலால், உன் பாவங்களுக்குப் பரிகாரமாக, நீ ஒவ்வொருநாளும் படுக்கையிலிருந்து எழும்போதும், இரவில் படுக்கப்போவதற்குமுன்பும்,தேவ மாதாவிற்குத் தோத்திரமாக, ஒரு அருள் நிறை மந்திரத்தை பக்தியுடன் ஜெபிக்கவேண்டும். இதை, நீ அடுத்த பாவசங்கீர்த்தனம் வரை கட்டாயமாகக்கடைப்பிடிக்க வேண்டும்; அதே சமயம்,நீ உன் கண்களையும்,கைகளையும், உன்சரீரம் முழுவதையும், தேவமாதாவிற்குச் சொந்த உடை மையாகக் கையளித்து, அவற்றை ஏற்றுக் கொண்டு, பரிசுத்தமாகப் பாதுகாக்க வேண்டு மென்று, தேவமாதாவிடம், நீ கெஞ்சி மன்றாட வேண்டும். அதன் அடையாளமாக, நீ சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து, மூன்று முறை தரையை முத்தமிட வேண்டும், என்று,

லிபன் கட்டிக் கொண்ட பாவங்களுக்கான அபராதத்தை, நிறைவேற்றுவதற்கான விவ ரத்தை, குருவானவர், அவனுக்கு அறிவித்தார்.

வாலிபனும், குருவானவர் விதித்த அபராதத்தை, தினந்தோறும் தவறாமல், நிறை வேற்றி அனுசரித்து வந்தான். துவக்கத்தில், அவனுடைய நடத்தையில் சிறிதளவான மாற்ற மே காணப்பட்டது. ஆனால், குருவானவர், வாலிபன் அடுத்தடுத்து செய்த பாவசங்கீர்த்தனங் களுக்கும் அதே அபராதத்தையே,அனுசரிக்கும்படி அறிவுறுத்தினார்;அந்த நல்ல பழக்கத்தை, அவன் தன் ஜீவிய காலத்தில் ஒரு போதும், கைவிடக்கூடாது, என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவன்,எப்போதும்,தேவமாதாவின் அடைக்கலப்பாதுகாவலில்,முழு நம்பிக்கையு டன் தன்னை ஒப்படைத்து, ஜீவிக்க வேண்டும்; அதை ஒரு போதும் மறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். சில மாதங்களுக்குப் பிறகு, அந்த வாலிபன், சக நண்பர்கள் சி உரோமாபுரியை விட்டு வெளியேறி, உலகத்தின் பல நாடுகளுக்குப் பிரயாணம் சென்றான்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, அவன் உரோமாபுரிக்குத் திரும்பி வந்தான். மறுபடியும், சங்.நிக்கோலாஸ் சுவாமியாரைச் சந்தித்தான். அவன் முற்றிலும், நல்லவனாக மாறியிருப்ப தைக் கண்ட குருவானவர், மிகுந்த சந்தோஷமடைந்தார். அவன் முந்தைய சகல பாவப் பழக்கங்களிலிருந்தும் முழுவதுமாக விடுவிக்கப்பட்டிருப்பதைக் குறித்து, குருவானவர் அகமகிழ்ந்தார். அவர், அவனிடம், மகனே! நீ,சர்வேசுரனிடமிருந்து, எவ்வாறு, ஆச்சரியத்திற் குரிய, இந்த முழுமையான மனந்திரும்புதலை, அடைந்து கொண்டாய்? என்று கேட்டார். அதற்கு, அவன், சுவாமி! தேவமாதாவிற்குத் தோத்திரமாக அனுசரிக்க வேண்டும் என்று, நீங்கள், எனக்குக் கற்பித்த அந்த சிறிய பக்தி முயற்சியை நான் தொடர்ந்து அனுசரித்து வந்தேன். அந்த பக்தி முயற்சிக்குக் கைம்மாறாக, திவ்ய இராக்கினி,எனக்கு, இந்த தேவவரப் பிரசாதத்தைப்பெற்றுத் தந்தார்கள், என்று பதில் கூறினான். இச்சம்பவத்தில் நிகழ்ந்த அதிச யம் இத்துடன் முடியவில்லை.

குருவானவர், இந்நிகழ்வைப் பற்றி ஒரு நாள் தமது பிரசங்கத்தில் அறிவித்தார். அதைக் கேட்ட ஒரு இராணுவத் தளபதி, தானும் அந்த வழி முறையைப் பின் பற்ற ஆசித் தான். ஏனெனில், அவனும் ஒரு பாவப் பழக்கத்திற்கு அடிமைப் பட்டிருந்தான்: அநேக வருடங்களாக, ஒரு பெண்ணிடம், அவன், தகாத உறவு வைத்திருந்தான். பசாசிற்கு அடி மையாக, கட்டப்பட்டிருக்கும் அந்த கொடூரமான சங்கிலிகளான பாவப்பழக்கத்திலிருந்து, தானும் விடுவிக்கப்படும்படியாக, தேவமாதா பக்தியை அனுசரிக்கத்தீர்மானித்தான்.பாவப்

பழக்கத்திற்கு அடிமைகளான நிர்ப்பாக்கிய பாவிகள் எல்லோரும், பசாசின் அடிமைத்தனத் திலிருந்து விடுதலையடைய வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அந்த நோக்கத்துடன், தேவமாதாவின் அடைக்கலப் பாதுகாப்பிற்குள் தங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது, தேவமாதா அவர்களை, பசாசின் அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார்கள்; அப்போது, அவர்கள் புண்ணிய நெறியில் ஜீவிப்பதற்கு ஏற்ற வகையில், தேவமாதா, அவர்களுக்கு உதவ முடியும். அதேபோல், அந்த இராணுவத்தளபதி, தேவமாதா பக்தியை அனுசரிக்கத் துவக்கியதும், அந்த தீயப் பாவப்பழக்கத்தை முற்றிலுமாக, கைவிட் டான்; அவனுடைய வாழ்க்கையும், தீய வழியிலிருந்து மாறி,புண்ணிய பாதையை வந்த டைந்தது.

ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவன் தன் பலத்தையே நம்பியவனாக, முட் டாள் தனமாக, அந்த கெட்டப் பெண்ணைக் காண்பதற்காக, அவளுடைய வீட்டிற்குச் சென்றான்; பாசவிகாரத்தினால், தன்னை, அந்நாள் வரைத் தீயபழக்கத்திற்கு, அடிமைப் படுத் தியிருந்த அவளும் மனந்திரும்பியிருப்பாளோ, என்பதை அறிவதற்காக, அவன், அவள் வீட்டிற்குச் சென்றான். ஆனால், அவன், மறுபடியும் அதே பாவப் பழக்கத்திற்கு அடிமையாக விழுந்து விடும் ஆபத்து வெளிப்படையாகவேக் காணப்பட, அவளுடைய வீட்டின் கதவி னருகில் வந்ததும், மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஓர் வல்லமை மிக்க கரத்தினால் உந்தி வெளியேத் தள்ளப்பட்டான்; அவன் எவ்வளவு தூரத்திற்குத் தள்ளப்பட்டானென்றால், அவன் அந்த பெண்ணின் வீட்டிலிருந்து, அந்த தெருவைத் தாண்டி,தன்னுடைய வீட்டின் கதவினருகே வருமளவிற்கு உந்தித் தள்ளப்பட்டான். இப்போது, அவன் தன் வீட்டின் கத வினருகே நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். உடனே, தேவமாதாவின் கிருபையால், தான், இவ்வாறு, நித்திய நரகக் கேட்டிலிருந்து, தான் காப்பாற்றப்பட்டிருப்பதைப் பற்றி, அறிந்துகொண்டான். இந்நிகழ்விலிருந்து, பரலோக இராக்கினி, எவ்வாறு நமக்கும் தயை நிறைந்த தாயாராக திகழ்கின்றார்கள் என்பதை அறியலாம்; பசாசின் அடிமைத்தனத்திலி ருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நம்மை, திவ்ய இராக்கினியி டம் ஒப்புக்கொடுப்போமேயாகில், நம்மேல் கருணையும், அக்கறையுமுள்ள அந்த திவ்ய தாயார், நம்மைப் பாவ அந்தஸ்திலிருந்து மீட்பது மட்டுமல்லாமல், மறுபடியும், அதேப் பாவப் பழக்கத்தில் விழக்கூடிய ஆபத்திலிருந்தும் நம்மை விடுவித்துப் பாதுகாப்பார்கள் என்பதை நாம் கண்டுணரலாம்.


தேவநற்கருணைத் திருநாள்

 பீடங்களின் மீது எழுந்தருளி வீற்றிருக்கும் திவ்ய சேசுநாதர் சுவாமி

ஞானப் பிரசங்கம்

அர்ச். அல்ஃபோன்ஸ்மரியலிகோரியார்

வருந்திச் சுமைசுமந்திருக்கிறவர்களாகிய நீங்களெல்லோரும் என்அண்டையில் வா ருங்கள், நான் உங்களைத் தேற்றுவேன் (மத்.11:28) திவ்யசேசுநாதர், நாம் எல்லோரும் எளிதில் அணுகும்படியாகத் தம்மையேக்கையளிக்கும் விதமாக, பீடத்தின் மீது எழுந்தருளியிருக்கின்றார்: நம் நேச இரட்சகர், இவ்வுலகில், தமது இரட்சணிய அலுவலை நிறைவேற்றிய பின், உலகத்தைவிட்டுப் பிரியும் சமயத்தில், நம்மைத் தனியாக, இக்கண்ணீர் கணவாயில் விட்டுச் செல்வதற்கு விரும்பவில்லை. நம் ஆத்துமங்களின் மட்டில், சேசு கிறீஸ்துநாதர்கொண்டிருக்கும் சிநேகத்தின் அளவில்லாத மகத்துவத்தைப் பற்றி, எந்த நாவும் விவரிக்க முடியாது, என்று அர்ச்.அல்காந்தரா இராயப்பர் வியப்பு டன் கூறுகின்றார். ஆகவே தான், அளவில்லா சிநேகமுள்ள இந்த தேவ பத்தாவானவர், நம் மிடையே இல்லாமல், பரலோகம் செல்ல நேரிட்டால், நாம் அவரை மறந்து போவதற்கான சந்தர்ப்பம் ஏற்படாதபடிக்கு, உலகை விட்டுப் பிரியும் சமயத்தில், அவர் தாமே, நம்மீது கொண்டிருக்கும் அளவில்லாத தமது சிநேகத்தினுடைய ஓர் நினைவுச் சின்னத்தை, அதா வது, இந்த மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தை நம்மிடையே விட்டுச் செல்வதற் கும், அந்த உன்னதமான தேவசிநேகத்தின் அனுமானத்திலேயே தாமும் தங்கியிருப்பதற் கும், திருவுளமானார்.

நேச ஆண்டவர், தம்மைப் பற்றிய நினைவைத் தமது ஊழியர்களிடையே உயிருள்ள தாக நீடித்து நிலைத்திருக்கச் செய்வதற்காக, தமக்கும், தமது ஊழியர்களுக்குமிடையே உள்ள வேறு எந்த பொருளையும் விட்டுச் செல்லாமல், தம்மையே, சிநேகத்தின் பிணையாக, நம்மி டையே விட்டுச் செல்வதற்குத் திருவுளம் கொண்டார்.திவ்ய சேசுநாதர்,நம் மட்டில் வெளிப் படுத்திய இவ்வுன்னதமான தேவ சிநேக முயற்சியின் மூலமாக, நாம் அவர் மீது கொள்ள வேண்டிய மாபெரும் பிரதியன்பிற்குப் பாத்திரவாளராக இருக்கின்றார்.

அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குக் கொடுத்த காட்சியின் போது, ஆண்டவர், தமது திவ்ய இருதயத்தினுடைய ஆவல்களைப் பின்வருமாறு வெளிப்படுத்தினார்: நம்மைச் சந்திக் கும்படியாக, பீடங்களின் மீது, இரவு பகலாக மகா சிநேகமுடன் எழுந்தருளி,குடியிருக்கும், அவருடைய திவ்ய பிரசன்னத்திற்கு, பக்திமுயற்சிகள் மூலமாகவும், தேவசிநேக முயற்சி மூலமாகவும், நாம் சிறிதளவாவது,பிரதி நன்றி செலுத்துவதற்காகவும், அதன் வழியாக, சிநே கத்தின் இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்திற்கு எதிராக, நாள் தோறும், பதிதர் களாலும் கெட்ட கிறீஸ்துவர்களாலும் கட்டிக் கொள்ளப்படும் நிந்தை, அவசங்கை,அலட் சியங்களுக்கு, நாம் பரிகாரம் செலுத்தும்படியாகவும், ஆண்டவர், தமது மகா பரிசுத்த திரு இருதயத்திற்குத் தோத்திரமாக ஒரு திருநாளை ஏற்படுத்த வேண்டும், என்று கேட்டார்.

திவ்ய சேசுநாதர், இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் தம்மையே, நமக் காக விட்டுச் சென்றதற்கான முதல் காரணம் என்னவெனில், அவரை நாம் எல்லோரும் எளிதில் எந்நேரத்திலும் கண்டடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். இரண் டாவதாக, நாம் அவரை,எந்நேரத்திலும்சந்தித்து உரையாடுவதற்காகவே, இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், இரவு பகலாக வீற்றிருக்கின்றார். மூன்றாவதாக, இம்மகா பரி சுத்த தேவ திரவிய அனுமானத்தில், தம்மைச் சந்திக்க வரும் சகல மனிதர்களுக்கும் அபரிமி தமான தேவவரப்பிரசாதங்களை, அளிப்பதற்காகவே, தயவாய் எழுந்தருளிக் காத்திருக்கின்

றார்.

நம் நேச ஆண்டவர், எல்லாவற்றிற்கும் முதலாவதாக, சகல மனிதர்களும், தம்மை மிக எளிதாகக்கண்டடைந்து கொள்வதற்காக, உலகெங்கிலும் உள்ள அநேகப் பீடங்களில்,

தங்கியிருக்கின்றார்.திவ்ய இரட்சகர்,பாவிகளிடையேக் கையளிக்கப்பட்டு, பாடுபட்டுச் சிலு வையில் மரிக்கப் போகும் அந்த இரவில், தங்கள் நேச ஆண்டவரைப் பிரிவதைப் பற்றிய துயரமான நினைவினால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அப் போது, ஆண்டவர்,அவர்களிடம் பின்வருமாறு ஆறுதல் கூறினார்: என்பிள்ளைகளே! உங்கள் மேல் நான் கொண்டிருக்கும் சிநேகத்தை, உங்களிடம் காண்பிக்கும்படியாக, நான் உங்க ளுக்காக, மரிக்கப் போகிறேன். ஆனால், என் மரணத்தின்போது, நான் உங்களைத் தனியாக விட்டு விட மாட்டேன்: நீங்கள் இவ்வுலகத்தில் இருக்கும் வரை, நானும் உங்களுடன் கூட, இந்த மகா பரிசுத்த தேவ திரவிய அனுமானத்தில் தங்கியிருப்பேன். உங்களுக்காக, என் சரீரத்தையும், ஆத்துமத்தையும், தேவத்துவத்தையும், இதில் விட்டுச்செல்வேன்: நான் என்னையே முழுமையாக உங்களுக்காக விட்டுச்செல்கிறேன். நீங்கள் உலகத்திலிருக்கும் வரைக்கும், உங்களிடமிருந்து நான் பிரிந்து செல்ல மாட்டேன். இதோ! நான் உலக முடி யுமட்டும் எந்நாளும் உங்களோடுகூட இருக்கிறேன் (மத்.28:20).

திவ்ய இரட்சகர்,தமது பத்தினியாகிய திருச்சபையைத்தனியாக, இவ்வளவு தூரத்தில், விட்டு விட மனதில்லாதவராக, சிநேகத்தின் இந்த தேவ திரவிய அனுமானத்தை நம்மிடை யே விட்டுச் சென்றார். நண்பர்களிலெல்லாம் அதிமிக சிறந்தவரும் சிநேகமுள்ளவருமான வர் தாமே, சக நண்பராக,தமது பத்தினியான திருச்சபையுடன் கூட,எந்நாளும் இருப்பதற் காகவே,சிநேகத்தின் இம்மகா தேவ திரவிய அனுமானத்தில்,எழுந்தருளி,தங்கியிருக்கின்றார், என்று,அர்ச். அல்காந்தரா இராயப்பர் பிரசங்கிக்கின்றார். சர்வேசுரனை அறியாத அஞ்ஞானி கள், வழிபடுவதற்காக அநேகக் கடவுளர்களைக் கண்டு பிடித்திருக்கின்றனர்.

ஆனால், நம்முடன்கூட எப்போதும், இவ்வளவு அருகில் தங்கியிருந்துகொண்டு, தமது அளவில்லாத சிநேகத்தினால், நமக்கு உதவி செய்து நம்மைப் பராமரித்து வரும் நம் சர்வேசு ரனை விட அதிக நேசமுள்ள கடவுளை அவர்களால், கற்பனை கூட செய்ய முடியாது. நமது தேவனாகிய கர்த்தரை நாம்மன்றாடுகிறபோதெல்லாம், அவர் நமதண்டையில்தானே இருக் கிறார். ஆ! நமது தேவனுக்கும் நமக்கும் இருக்கிற அந்நியோந்நிய நெருக்கம் மற்ற எந்த பிரபலியமான சாதியாருக்கும், அவர்களுடைய தேவர்களுக்கும் உண்டோ ,இல்லை (உபா. 4:7).உபாகமத்தில் காணப்படும் இவ்வேதாகம வாக்கியத்தை, பரிசுத்தத் திருச்சபையானது, தேவ நற்கருணைத் திரு நாளின் போது,திவ்வியபலி பூசை ஜெபத்தில் பயன் படுத்துகின்றது

அப்படியென்றால், இதோ!நம் நேச ஆண்டவர்,நமது பீடங்களில் தங்கியிருக்கின்றார்! அதுவும் இவ்வளவான சிறைகளில், ஒரு சிநேகத்தின் கைதியைப்போல், அடைபட்டவராக, தேவநற்கருணைப் பேழைகளில் வாசம் செய்கின்றார். அவருடைய குருக்கள், பீடத்தின் மீது, தேவநற்கருணை ஸ்தாபகம் செய்யும் சமயங்களிலும், திவ்ய நன்மையை விசுவாசிகளுக்குக் கொடுக்கும் சமயங்களிலும், தேவநற்கருணைப்பேழையிலிருந்து, அவரை, வெளியே எடுப் பார்கள்; பின்னர், தங்கள் நேச ஆண்டவரை, மறுபடியும் முழுவதுமாக அடைபட்டிருக்கும் படி, தேவநற்கருணைப் பேழையிலேயே வைத்து விடுவார்கள்; திவ்ய சேசுநாதரும், இரவு பகலாக அந்தப்பேழையில், அடைபட்டபடி, தங்கியிருப்பதையே ஆசிக்கின்றார்; அதிலே யே திருப்தியுடன் வசிக்கின்றார்; ஆனால், என் நேச இரட்சகரே! விசுவாசிகள் எல்லோரும், தேவாலயக்கதவுகளை பூட்டிவிட்டு, உம்மைத்தனியாக விட்டுச் சென்றபோதிலும், தேவரீர் , ஏன் இரவு நேரங்களிலும், இவ்வளவு அநேகதேவாலயங்களில், தங்கியிருக்கின்றீர்? பகலில் மட்டும், தேவரீர் தேவாலயங்களில் தங்கியிருந்தால் போதுமாயிருக்குமல்லவா? இல்லை. ஆனால், திவ்ய இரட்சகர், இரவு நேரங்களிலும், அங்கு தங்கியிருப்பதையே ஆசிக்கின்றார்: காலையில் தம்மை ஆவலுடன் சந்திக்க வரும் சகலமனிதரும்,உடனடியாகத்தம்மைக் கண்ட டைந்து கொள்ளும்படியாக, தனியாக விடப்பட்டிருந்தாலும், இரவு நேரங்களிலும், தேவ நற்கருணைப் பேழைகளில், தங்கியிருப்பதற்குத் திருவுளம் கொண்டிருக்கின்றார்.

பரிசுத்த பத்தினி தன் நேச பத்தாவைத் தேடிச் செல்வதை, உன்னத சங்கீதத்தில் வாசிக்கின்றோம்; அதில், அவள், எதிரில் வருபவரிடம், என் ஆத்துமநேசரை நீங்கள் கண் டீர்களோ? (உன்.சங்.3:3) என்று கேட்கின்றாள். அவரைக் காண முடியாமல் போனதால், அவள் தன் குரல் சத்தத்தை உயர்த்தி, என் பத்தாவே! நீர் எங்கே இருக்கிறீர் என்று என்னி டம் கூறும் .. ஆ! என் ஆத்தும நேசமே! நீர் உமது மந்தையை மேய விடுகிறது எவ்விடத்

திலே? மத்தியான வேளையில், நீர் எங்கே படுத்து இளைப்பாறுகிறீர்? (உன்.சங்.1:6). பத்தினி, தன் நேச பத்தாவைக் கண்டடையக் கூடவில்லை. ஏனெனில், அப்போது,மகா பரிசுத்த தேவ நற்கருணையை,நமதாண்டவர் ஏற்படுத்த வில்லை.ஆனால், இப்போது, ஒரு ஆத்துமம், தன் நேச பத்தாவான திவ்ய சேசுநாதரைக் கண்டடைவதற்கு ஆசித்தால், தேவநற்கருணை ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் தேவாலயத்திற்குச்சென்றாலே போதும்! அங்கே, அது, தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் தன் தேவ நேசரைக் கண்டடைந்து கொள்ளும்! இந்நாட்டில், தேவ நற் கருணைப் பேழை ஸ்தாபிக்கப்பட்ட தேவாலயங்கள், எல்லா நகரங்களிலும், கன்னியர்,துற வியர் மடங்களிலும் இருக்கின்றனவே! இவ்வெல்லா இடங்களிலும், பரலோக அரசர், மரத்தினால் அல்லது ஒரு கல்லினால் செய்யப்பட்ட ஒரு பெட்டிக்குள்,அடைபட்டபடி தங் கியிருப்பதற்கு, தமது முழு மனஆவலுடனும், திருப்தியுடனும் திருவுளமானார்! அநேக இடங்களில், தமது பிரசன்னத்தை விசுவாசிகளுக்கு அறிவிக்கும்படியாக, எரிந்து கொண் டிருக்கும் அணையா விளக்குகள் இல்லாமலும், தம்மைச் சந்திப்பதற்கும், தம்முடன் கூட தங்கியிருப்பதற்கும் விசுவாசிகள் ஒருவரும் இல்லாமலிருந்தாலும் கூட, அங்கேயும், திவ்ய இரட்சகர், எழுந்தருளவும், தங்கியிருப்பதற்கும் சித்தமானார்.

இதைக் குறித்து, அர்ச்.பெர்னார்டு, ஓ! ஆண்டவரே! இவ்வாறு, உம்மையே, பீடங்க ளின் மீது யாவராலும் கைவிடப்பட்டவர்போல், தங்கியிருப்பது, தேவரீருடைய மாட்சி மிக்க தேவ மகத்துவத்திற்கு ஏற்புடையதல்லவே! என்று புலம்பினார். அதற்கு, ஆண்டவர், அவரிடம், அது பரவாயில்லை! அது, எனது தேவமகத்துவத்திற்கு ஏற்புடையதாக இல்லாவிடி னும்,அது, என் சிநேகத்திற்கு மிகநன்றாகப் பொருத்தமுடையதாக இருக்கிறது! என்று பதில ளித்தார்.

ஓ! திவ்ய சேசுவே! நேச இரட்சகரே! ஓ! என் ஆத்துமத்தின் சிநேகமே! எங்களுடன் இந்த தேவ திரவிய அனுமானத்தில், தங்கியருப்பதற்காக, தேவரீர் எவ்வளவு அதிக விலை கொடுக்க நேர்ந்தது? எங்கள் பீடங்கள் மீது,தங்கியிருப்பதற்காக, தேவரீர், முதலில் கொடிய துன்பம் நிறைந்த சிலுவை மரணத்தை அனுபவிக்கவேண்டியிருந்தது; அதன் பிறகு, உமது தெய்வீகப் பிரசன்னத்தினால், உதவும்படியாக, பீடங்களில் எழுந்தருளியிருக்கும் போது, அநேக மனிதரால் இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்திற்கு ஏற்படும், கொடூரமான நிந்தை, அவசங்கைகளுக்கு, தேவரீர், உம்மையேக் கையளிக்க நேர்ந்தது!

மேலும், இவை எல்லாவற்றிற்குப் பிறகு, உமது தெய்வீகப் பிரசன்னத்தில், உம்மைச் சந்திக்க வந்திருக்கும் எங்களைக் காணும்போது, அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களை எங்கள் மீது பொழிந்து, ஞான செல்வந்தர்களாக எங்களை உயர்த்தும் நோக்கத்திற்காகவே, தேவரீர்,தேவநற்கருணைப் பேழைகளில் மாபெரும் ஆவலுடன், எங்களைச் சந்திப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர் என்பதை அறிந்திருக்கின்றோம்.தேவரீர் எங்கள் மட்டில் கொண் டிருக்கும் அதிசயமானதும், அதி உன்னதமானதுமான சிநேகத்துடன், இம்மகா பரிசுத்த தேவ திரவிய அனுமானத்தில் எழுந்தருளி, எங்களுக்காகக் காத்திருக்கின்றீர் என்பதைப் பற்றி, இவ்வளவு அறிந்தபோதிலும், தேவரீரை சந்திக்கும்படியாக நாங்கள் பக்தி பற்றுதலு டன், அடிக்கடி அனுசரிக்க வேண்டிய தேவநற்கருணை சந்திப்பின் மட்டில், எவ்வளவோ சோம்பலுடனும், அலட்சியத்துடனும் இருக்கிறோமே!

ஓ! நேச ஆண்டவரே! என்னை மன்னித்தருளும்! ஏனெனில், நானும் உமது அதிமிக உன்னத சிநேகத்தை மறந்த நிர்ப்பாக்கிய பாவிகளில் ஒருவனாயிருந்தேன். இன்றிலிருந்து, ஓ! என் திவ்ய சேசுவே! உம்மை அடிக்கடி, தேவ நற்கருணை சந்திப்பின் மூலம் சந்திக்கவும், தேவரீருக்கு நன்றி செலுத்துவதற்கும், உம்மை நேசிப்பதற்கும், உம்மிடம் தேவ வரப்பிரசா தங்களுக்காக மன்றாடிக்கேட்பதற்கும், உமது திருச் சமூகத்தில் எவ்வளவு அதிக நேரம் தங் கியிருக்கமுடியுமோ, அவ்வளவு நேரம் தங்கியிருக்கவும், நான் ஆசிக்கிறேன். ஏனெனில், இந்த நோக்கத்திற்காகவே, தேவரீர், எங்கள் சிநேகத்தின் கைதியாக, இப்பூமியிலுள்ள எல் லா பீடங்களின் தேவ நற்கருணைப் பேழைகளிலும் அடைபட்டபடி, தங்கியிருக்கின்றீர்! ஓ! தேவமாதாவே! இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தின் மீது கொள்ளவேண்டிய மாபெரும் சிநேகத்தை எனக்குப்பெற்றுத் தாரும்! +


தேவமாதாவின் வணக்க மாதம்:

சகோதரர்கள் சமாதானமடைந்த புதுமை

பல வருடங்களுக்கு முன், ஒரு மேற்கத்திய நாட்டில், ஜோசப், அந்தோனி என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள்; சிறுவயதிலேயே, அவர்கள், பெற்றோரை இழந்த னர். இருவரும், ஒன்றாக உழைத்தார்கள்; ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். ஒன்றாக ஜெபித் தார்கள்; வெகு சிரமத்துடன் கல்வி கற்று, முன்னேறுவதற்கான சகல முயற்சிகளும் எடுத்த னர். இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. நாளடைவில், ஜோசப், அந்த ஊரிலேயே, பெரிய பணக்காரன் ஆனான். அந்தோனியின் குடும்பம், ஏழ்மையில் வாடியது. எளிய உடை களை, உடுத்தியிருப்பான். ஜோசப், தன் தம்பியோடு உறவாடாமல், அவனிடமிருந்து விலகி வாழத் துவக்கினான். அந்தோனியும், அண்ணனிடமிருந்து, எந்த பொருளாதார உதவியை யும் எதிர்பார்க்காமல், சொந்த உழைப்பையே நம்பினான்.

ஒரு சமயம், அந்தோனி மீது,அநியாயமாக பழிசுமத்தப்பட்டது; ஆயுள் தண்டனை பெற்று, சிறைக்குச் சென்றான். சர்வேசுரனுக்கு உண்மை தெரியும்; அவரே, என்னை விடு விப்பார், என்று கூறினான். சிறை வாழ்வு மிகக் கடுமையாக இருந்தது; யாரும், அவன் மீது அனுதாபப்படவில்லை; அந்தோனியின் மனைவி,தேவமாதாவை நோக்கி, இடைவிடாமல், உருக்கமாக கணவனின் விடுதலைக்காகத் தொடர்ந்து ஜெபித்து வந்தாள். தேவமாதா, அவ ளின் மன்றாட்டிற்குச் செவி சாய்த்தார்கள்; சர்வேசுரனுடைய இரக்கத்தினால், உண்மையான குற்றவாளி, கண்டு பிடிக்கப்பட்டான்; அந்தோனிக்கு விடுதலை கிடைத்தது. ஐந்து ஆண்டு கள், சிறையில் மிகவும் துன்பங்களுக்கு ஆளாயிருந்தான்.

செல்வந்தனான ஜோசப், தன் தம்பியை, முழு மூச்சோடு வெறுத்துப் பகைத்து வந் தான். அவன் மகன் தாமஸ், தன் சித்தப்பா வீட்டிற்குச் சென்று, சித்தப்பா மகன் விக்டரு டன் தினமும், ஒன்றிரண்டு மணி நேரம் விளையாடிவிட்டு வருவான். அன்று, டிசம்பர் 31ம் தேதி. ஜோசப் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்; அப்போது, தன் தம்பியின் மகன் விக்டர், ஒரு அழகியப்பட்டுச் சட்டை அணிந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.தன் மகன் தாமசுக்கென்று தைத்துக் கொடுத்திருந்த சட்டை அது.அதைக் கண்டதும் சினத்து டன் வீட்டிற்குள் சென்று, தாயுடன் அமர்ந்து, தேநீர் அருந்திக் கொண்டிருந்த தாமசை, முரட்டுத்தனமாக இழுத்து, அடிக்கத் துவக்கினான்.மகனை அடிக்க வேண்டாம் என்று,மனைவி கெஞ்சினாள்; அடிப்பதை நிறுத்தாமலிருந்த தந்தையின் பிடியிலிருந்து, மகனைப் பிடுங்கிக் கொண்டு சென்று, அரவணைத்துக் கொண்டாள். உடனே, ஜோசப், மனைவியைப் பார்த்து, இவனைக் கெடுத்தவள் நீதான். அந்த போக்கிரி, அந்தோனியின் மகன் விக்டருடன் இவன் அலைந்து திரிகிறான். நான் கொடுத்த பட்டுச் சட்டையை அந்த அசுத்தப் பையனுக்குக் கொடுத்திருக்கிறான், என்று கர்ஜித்தான். இதற்குத் தானா, நீங்கள் இவ்வளவு கோபப் படுகி றீர்கள்? தன் தம்பியுடன் விளையாடுவதில் என்ன குற்றம் உள்ளது? அந்தோனி, உங்கள் தம்பி தானே? நாம் மாளிகையில் வாழ்கிறோம். அவரோ, தரித்திரத்தில், ஒரு குடிசையில் இருக்கிறார். ஓ! ஆண்டவரே! அண்ணன் தம்பி இவர்கள் இருவருக்கிடையே இருக்கும்

பகை எப்போது தான் முடியுமோ? என்று புலம்பியபடி, அவன் மனைவி, அங்கிருந்து உணவு தயாரிக்கச் சென்றாள். ஜோசப்பின் மனைவி, அந்தோனியையும், அவன்குடும்பத்தையும் நேசித்தாள்; இரக சியமாக, அவன் குடும்பத்திற்கு உதவி செய்து வந்தாள். மேலும், தேவமாதாவிடம், அண் ணன், தம்பி இருவரிடையே சமாதானம் ஏற்படும்படி தினமும், பக்தியுடன் ஜெபித்து வந் தாள்; குடும்ப ஜெபமாலையை,ஜெபிக்கும் போதெல்லாம், இக்கருத்திற்காக அவள் மோட்ச இராக்கினியிடம் மன்றாடிவந்தாள்.தாமசிடமும், சித்தப்பா குடும்பத்துடன் சமாதானம் ஏற் படுவதற்காக, தேவமாதாவிடம் தினமும் மறக்காமல் ஜெபித்து வேண்டிக்கொள்ள வேண்டு மென்று கூறுவாள்; தம்பி விக்டருடன் விளையாடியதை, பெரிய குற்றமாகக்கருதிய தந்தை, தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதை எண்ணி வருந்திய தாமஸ், உடனே, தேவ மாதா சுரூபத்தின் முன்பாக முழங்காலிலிருந்து சித்தப்பா குடும்பத்துடன் சமாதானம் ஏற் படுவதற்காக பக்தியுடன் ஜெபித்தான். தேவமாதா சுரூபத்தின் முன்பாக, மகன் தாமஸ் ஜெபிப்பதைக் கண்ட ஜோசப், தனிமையில் சிந்திக்கத் துவக்கினான். அப்போது, அவனுக்கு,பழைய கால நினைவுகள் ஒவ் வொன்றாக வரத்துவக்கின. அண்ணன் தம்பி,இருவரும், ஒற்றுமையுடன், தேவமாதா சுரூ பத்திற்கு முன்பாக, பக்தியுடன் ஜெபமாலை ஜெபித்த அந்த இனிய நாட்கள் அவன் கண் முன்பாக, பசுமையாகத் தோன்றின. தாமசிடம், தேவமாதாவிடம் நீ என்ன வேண்டிக் கொண்டாய்? என்று கேட்டான். அதற்கு,அவன், பயந்துகொண்டே, அப்பா! நீங்கள், சித் தப்பாவுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும். அதற்காக தேவமாதாவிடம்வேண்டி னேன், என்று பதிலளித்தான்.அதைக் கேட்டதும், கல்நெஞ்சனும், ஆங்காரியுமான ஜோசப் பின் இருதயத்தில் நடந்த சகோதர பாசத்திற்கு எதிரான போராட்டத்தில், சகோதர பாச மே வென்றது.பயந்தபடி நின்றிருந்த தாமசை, அரவணைத்தபடி, என் கண்மணியே!விக்டர், உன் தம்பியே! நீ இனி அவனுடன் விளையாடலாம். வா, நாம் அவனைப் பார்க்கச் செல் வோம், என்று கூறிய படி,ஜோசப், மகனுடன், தம்பி அந்தோனியின் வீட்டிற்குச் சென்றான். 6 வருடங்களுக்குப்பிறகு, தன் தம்பியைச் சந்தித்த ஜோசப், அவனை, அரவணைத்தான்; அவனிடம் மன்னிப்பு கேட்டான். அன்று மாலை, தேவமாதாவிற்கு நன்றியறிந்த தோத்திர தம்பி இருவரும், குடும்பத்தினருடன் சேர்ந்து, பக்தியுடன் ஜெபமாலை ஜெபித்தனர். ஜோசப், மனைவியிடம், எஸ்தர்! ஜெபமாலை, ஜெபிக்கும் போது, நானும் தம்பியும் சேர்ந்து ஜெபமாலை ஜெபித்த அந்த பாக்கியமான நாட்களை நினைத்துக் கண்ணீர் விட்டேன். அந்த இனிமையான காலம் இனி திரும்பி வராது, என்றான். அதற்கு, எஸ்தர், தேவமாதாவின் சுரூபத்தை பக்தி மேரையுடன் முத்தி செய்தபடி, நம் இரு குடும்பங்களி மாதானம் ஏற்படுவதற்காக, தேவதாயாரிடம், 2 வருடகாலமாக ஜெபித்து வந்திருக்கி றேன். தேவமாதா, உண்மையிலேயே சமாதானத்தின் இராக்கினியாக இருக்கிறார்கள்.நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும், என்று கூறினாள். அடுத்த நாள், ஜனவரி 1ம் தேதி, ஜோசப் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தான். அண் ணனும் தம்பியும் குடும்பத்தினருடன், பக்தியுடன் திவ்வியபலி பூசை கண்டனர். 1 Deo Gratias !

உத்தம மக்களை உருவாக்க:

  நல்ல ஆலோசனை மாதாவின் பிள்ளை

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில், ஈடித் என்னும் சிறுமி வசித்து வந்தாள். அவள் தாய் கத்தோலிக்க மதத்தினள்; தந்தை, புராட்ஸ்ட ன்டு பதிதமதத்தைச் சேர்ந்தவர். அவள் சிறுமியாயிருக்கும்போதே, பெற்றோர் இருவரும், இறந்தனர்.புராட்டஸ்டன்டு உறவி னரே, ஈடித்தை வளர்த்து வந்தனர். அவள் தாய் வளர்த்து வந்த பிரகாரமே, கத்தோலிக்க

வேத கடமைகளை அனுசரித்து வந்தாள்.ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல், திவ்விய பலி பூசை காண்பாள்; உறவினர், அதற்குதடையில்லாமல், அனுமதித்திருந்தனர். எனினும், அவர் களது மிதமிஞ்சிய உலகரீதியான வாழ்வு, சிறுமி, ஈடித்தையும் பாதித்தது. அவள்,தன் வேதக் கடமைகளைத் தொடர்ந்து அனுசரித்தபோதிலும், அவள் இருதயத்தில் உத்தமமான தேவ சிநேகம் வளராமல் போனது.

செல்வந்தர்கள் பயிலும் பள்ளிக்கூடத்திற்கு, ஈடித், கல்வி கற்பதற்காக அனுப்பப்பட் டாள்.நண்பர்கள் அதிகம் பேர் கிடைத்தனர். எல்லாம் இன்பமாகத் தோன்றியது. பள்ளிக் கூடம் முடிந்தது; கல்வி கற்கும் வயது கடந்தது; திருமண வயதை அடைந்தாள்; ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த வாலிபன் ஈடித்தைச் சந்தித்தான்.அவன் ஒருபணக்காரன். அவளிடம், திருமணம் செய்ய, தான் விரும்புவதாகக் கூறினான். அதற்கு, அவள் பதில் ஒன்றும் கூற வில்லை. அவளுடன் வசித்து வந்த அவளின் அத்தை, அந்த வாலிபனை மணந்து கொள்ளும் படி, ஈடித்துக்கு அடிக்கடி புத்திமதி கூறிவந்தாள். ஆனால், அதற்காக யாரும், ஈடித்தை வற்புறுத்தவில்லை.

இந்த நாட்களில், ஈடித் அபூர்வமாகவே திவ்ய பலிபூசை காண்பதற்காக தேவாலயத் திற்குச் செல்வாள். பல வருடங்களாக, அவள் பாவசங்கீர்த்தனம் செய்யாமலிருந்தாள். இவ் வளவாக, அவளின் ஞானஜீவியம், மிகவும் பலவீனமடைந்தபோதிலும், ஒருபோதும், அவள், புராட்டஸ்டன்டு பதிதர்களின் தப்பறையான வழிபாடுகளுக்குச் செல்லாமலிருந்தாள்; அதில், அவள் எப்போதும் கவனமாக இருந்தாள்.வெள்ளிக்கிழமைகளில், மாமிச உணவை, உட்கொள்ள மாட்டாள்.இரவில் எவ்வளவு களைத்திருந்தாலும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவ தியுறும் ஆத்துமங்களுக்காக, குறிப்பாக, தன் நேச தாயாருக்காகவும், தந்தைக்காகவும் ஜெபிக்காமல், உறங்கமாட்டாள். இவ்வாறு ஜெபிக்கும் நல்ல பழக்கத்தை,ஈடித்,தன் தாயின் மடியிலேயே கற்றிருந்தாள்.உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக, சுவாமி! பாதாளங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.. என்கிற சங்கீதத்துடன், அருள் நிறை மந்திரத்தை ஒரு முறை ஜெபிப்பாள். இதைத் தவிர, வேறு எந்த ஜெபத்தையும், அவள் ஜெபித்ததில்லை.

அன்று ஏப்ரல் 26ம்தேதி.ஈடித் பிறந்த நாள்.அவளை விரும்பிய வாலிபன், அவளுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு வைரமோதிரத்தை அவள் விரலில் அணிய ஆசித்தான். அதனிமித் தம், அவளை, பூங்காவிற்கு வரும்படி அழைத்தான்.அவளும் சம்மதித்தாள். பூங்காவிற்குச் செல்லும் வழியில், தேவாலயத்தைக் கடக்க நேரிட்டது; இறந்தவர்களுக்கான மணி அடித் துக்கொண்டிருந்ததைக் கண்டதும், ஈடித், யாரோ இறந்து போயிருக்கிறார், அவருடைய ஆத்தும இளைப்பாற்றிக்காக வேண்டிக்கொள்வோம், என்று கூறி, அந்த வாலிபனையும், கூட் டிக்கொண்டு, தேவாலயத்திற்குள் சென்றாள்.இந்த நல்ல பழக்கத்தையும், ஈடித்,தன் நல்ல தாயாரிடமிருந்து கற்றிருந்தாள்; திவ்ய பலிபூசை முடிந்தது; பிரேதத்தை, குருவானவர் மந் திரித்தார்;அப்போது, குரு, தன்னை உற்று நோக்கியது போல், அவள் உணர்ந்தாள்; பிறகு, ஜெபம் எல்லாம் முடிந்தபிறகு, அவளும் அவளுடைய நண்பனும், வெளியே சென்றனர்; தீர்த்தத் தொட்டியின் மேல், நல்ல ஆலோசனை மாதாவின் படம் இருந்தது;அதனடியில் ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்த படம் மிக அழகாக, இருந்தது; ஈடித், அந்த அழகியப் படத்தையே உற்றுநோக்கியபடி,அதைவிட்டுப்பிரிவதற்கு மனதில்லாதவளாக, அங்கேயே நின்றிருந்தாள்; பரலோக புன்முறுவலுடன்,அந்த படத்தில்காட்சியளித்த தேவமாதாவைக் கண்ட ஈடித், பரவசமாகி, அழுதுகொண்டிருந்தாள்.

இறந்தவருடைய உறவினர் அங்கு வரத் துவக்கியதும், வாலிபன், ஈடித்தைத் தொட் டான்; உடனே, சுயநினைவைப் பெற்றவளாக, ஈடித், அங்கிருந்து,வாலிபனுடன்,வெளியே வந்து, அந்த தேவமாதாவின் படம், என்னை முழுவதுமாக வசீகரித்து விட்டது; தாயாரை ஞாபகப்படுத்தியது, என்று கூறினாள். அவன், அது, உன் முகம் போலவுமிருக் கிறது, என்றான். அவன், நீ கத்தோலிக்க மதத்தினளா? நீயும் என்னைப்போல் எந்த மதத்தை யும் அனுசரிக்காதவள் என்று நினைத்தேன், என்று கூறினான். அதற்கு,அவள்,நான் கத்தோலிக்க

மதத்தினள் தான்.இனி, என் வேத விசுவாசத்தை வெளிப்படையாக அனுசரிப்பேன். இன்று ஒரு குரல் என் இருதயத்தில் பேசியது.தேவாலயத்தைக் கடந்து செல்கையில், அக் குரலைக் கேட்டேன். உங்களுக்கு, எந்த வேதத்திலும் பற்று கிடையாதா? என்று அவனிடம் கேட்டாள்;அதற்கு அவன்,கடவுள் இருப்பதை ஏற்கிறேன். ஆனால், நான் எந்த மதத்தையும்

வன், என்றான். இதைக் கேட்ட ஈடித், அவனிடம், நான் ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. பூங்காவிற்கு நான் வரவில்லை, என்று கூறிவிட்டு, தேவாலயத்திற்கு மீண்டும் திரும்பிச் சென்றாள். அவனும், அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.

தேவாலயத்திற்குள் சென்று, பீடத்தினடியில் முழங்காலிலிருந்து, வெகு நேரம் ஜெபித்தாள். உள்ளே, குருவானவரும் ஜெபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு,வெளியே வந்து, நல்ல ஆலோசனை மாதாவின் படத்திற்கு முன், பக்திபற்றுதலுடன் நின்றுகொண்டிருந்த ஈடித்திடம்,குரு, மகளே! 20 வருடங்களுக்கு முன், எனக்கு அறிமுக மான ஒரு பெண்ணை , நீ நினைவூட்டுகிறாய். அவள் பெயர், பட்டர் பீல்ட். இராணுவத்தின் உத்தியோகதஸ்தர் ஒருவரை திருமணம் செய்தாள்; ஷீலோ போரில் அவர் இறந்தார், என் றார். சுவாமி! அது என் தாய். கத்தோலிக்கரான என் தாயாரை அறிந்த குருவானவரை, சந் திப்பது எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு காலம் நீங்கள் எங்கிருந்தீர் கள்? என்று ஈடித், அவரிடம் கேட்டாள். அவர்,சீனாவிலிருந்தேன், என்றார். அவள், குருவி டம், சுவாமி! இந்தப் படத்தின் பெயர் என்ன? என்று கேட்டாள். அவர், இது, நல்ல ஆலோ சனை மாதாவின் படம். இன்று ஏப்ரல், 26ம் தேதி. நல்ல ஆலோசனைமாதாவின் திருநாளும் இன்று தான், என்று கூறி விட்டு, நல்ல ஆலோசனை படத்தின் வரலாற்றையும் விவரித்தார்.

ஈடித், குருவிடம், சுவாமி! இன்று நான் பிறந்த நாள்.எல்லாவற்றையும், ஆண்டவரே ஒழுங்குபடுத்தி வருகிறார். மோட்சத்தில் இருக்கும் என் அம்மா, எனக்காக வேண்டிக் கொண்டு, இந்த பாக்கியமான நாளில் நான் மனந்திரும்பும்படிச் செய்திருக்கிறார்கள்.நீங்கள் நிறைவேற்றிய திவ்விய பூசையின் போது, இறந்தவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக, பூசை கண்டேன். அவரும் எனக்காக வேண்டியிருக்கிறார். இவ்வற்புதமான நல்லஆலோசனை மாதா வின் படத்தைப்பார்த்தேன்.உடனே,தேவமாதா, நான், என் பழைய பாவ வாழ்விற்காக மனஸ்தாபப்படுவதற்கான வரத்தை எனக்களித்தார்கள், என்று கூறினாள். நல்ல பாவ சங் கீர்த்தனம் செய்தாள்; ஈடித், கத்தோலிக்கர் ஒருவரை திருமணம் செய்தாள்;பல குழந்தைக ளின் தாயாக, உத்தம கத்தோலிக்கக் குடும்பத்தை,நடத்தினாள்.வீட்டின் முக்கிய அறையின் சுவரின் மையப் பகுதியில் சேசுவின் திருஇருதயப்படமும், நல்ல ஆலோசனை மாதாப் பட மும் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன; தினமும் பக்தியுடன் குடும்ப ஜெபமாலை ஜெபிக்கின்றனர். ஏற்கனவே தன் சம்பாவனையைப் பெறும்படியாக மோட்சம் சென்றுவிட்ட,குருவானவரின் படமும் வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்தது. தன் புராட்டஸ்டன்டு உறவினர்கள் மன ந்திரும்பி, கத்தோலிக்கராகும்படி, ஈடித், ஜெபித்து வருகிறாள்.


ஆண்டவர் உயிர்த்தெழுந்த திருநாளுக்கான தியானப்பிரசங்கம்

 அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்-

நன்மரண ஆயத்தம்:29ம் தியானம்

மோட்சப் பேரின்பம்:ஆத்துமமானது, சர்வேசுரனுடைய மகா பரிசுத்த சந்நிதிக்குச் சென்று,அவரை தரிசிக்கும் பேரின்பத்திற்குள் பிரவேசித்த உடனே,அது முதல், அதற்கு யா தொரு துன்பதுரிதமும் இராமல் போய்விடும்.கர்த்தர் அதன் கண்களிலிருந்து சகல கள் ரையும் துடைத்து விடுவார். மோட்சவாசிகள், மரணமென்பதை அறிய மாட்டார்கள்.புலம் புவதும், அழுவதும், துக்கதுயரமென்பதும், மோட்சத்தில் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட சகல உலகைச்சேர்ந்த பழைய சங்கதிகளெல்லாம் கடந்து போய்விட்டன! சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர், இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாய் உண்டாக்கினேன் என்று திருவுளம்பற்றுவார் (காட்சி. 20). அந்தப் பரலோக இராஜ்ஜியத்தில் வியாதியில்லை.தரித்திர முமில்லை; கஷ்டநஷ்டமும் இல்லை. பகல், இரவுஎன்னும் கால பேதமும் இல்லை. குளிரும், உஷ்ணமும் இல்லை. நித்திய பகலும், நித்திய சமாதானமுமாக விளங்கும்.

இடைவிடாத வசந்தகாலம். எவ்வித சந்தோஷமும் கூடிநிறைந்திருக்கும். காய்ம காரமோ,எவ்வித கலக உபத்திரவங்களோ, மோட்சத்தில் காணக் கிடையாது; உத்தமமான சிநேகம் நிறைந்த மோட்ச இராஜ்ஜியத்தில் எல்லோரும், ஒவ்வொருவரையும் உருக்கமாக நேசிப்பார்கள். ஒவ்வொருவரும், மற்றவர்களுடைய சந்தோஷ ஆனந்த பாக்கியத்தைக் கண்டு, அது, தங்களுடைய சொந்தக் காரியம்போல் எண்ணி அகமகிழ்வார்கள்; அங்கே, வியாகுலம், அச்சம் என்பது கிடையாது; ஏனெனில், தேவ இஷ்டப்பிரசாதத்தில், உறுதிப் பட்ட ஆத்துமமானது, இனிமேல் பாவத்தைக் கட்டிக்கொள்ளவும், கடவுளை இழந்து போக

உடியதில்லை. இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகின்றேன். சகலமும் புதிது; சக லருக்கும் சந்தோஷ திருப்தியையும், ஆறுதலையும் விளைவிக்கும். மனோகரத்தை உண்டாக்கத் தக்கவை எல்லாம் அங்கே உண்டு.சர்வ அலங்காரமும் உடைத்தான அந்தப்பரம நகரத்தைப் பார்ப்பதால், கண்களுக்கு ஆனந்த சந்தோஷம் உண்டாகும். பளிங்குக் கண்ணாடியினால், பரவப்பட்ட தெருக்களும் சுத்த வெள்ளியினால், மதில்கள் கட்டப்பட்டும், தூய பொன்னி னால் மேற்கூரைகள் மூடப்பட்டும், அழகிய பொருட்களினாலும், சிறந்த கூண்டுகளினாலும் ஜோடித்து அலங்கரிக்கப்பட்டும் உள்ள அரண்மனைகளும் உள்ள ஒரு நகரத்தைப் பார்க்கும் போது, எவ்வளவோ மதுரமான ஒரு மனசந்தோஷமுண்டாகும். ஆ! இவை எல்லாவற்றை யும் பார்க்க எத்தனையோ தடவை, மோட்ச பரகதி மேலானதாயிருக்கும்! அவ்வளவாக, அந்த மோட்ச வாசிகள் அனைவரும் ஒட்டலோகராய், இராஜரீக பொன் பட்டாடைகளை, அணிந்திருப்பதைப் பார்ப்பது, கண்களை எவ்வளவோ, பறிக்கும்!

அர்ச். அகுஸ்தீன் கூறுகிறபடி, அங்குள்ளவர்கள் எல்லோரும் அரசர்கள். அப் பட்டணத்தில் வசிப்பவர்கள் எவ்வளவு பேரோ, அவ்வளவு பேரும் இராஜாக்கள்! ஆ! மோட்ச இராக்கினியாக தேவமாதாவின் தரிசனம் எப்பேர்ப்பட்டதாயிருக்கும்? பரகதி முழுவதும், அவர்கள் அதிக சிறந்தவர்கள்! கடைசியாய் திவ்ய செம்மறியானவரும்,பத்தாவு மாகிய திவ்ய சேசுநாதரின் தரிசனம், காட்சி எப்பபேர்ப்பட்டதாயிருக்கும்? அர்ச்.தெரசம் மாள், ஒருதடவை, கர்த்தராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதரின் திருக்கரத்தினுடைய ஜோதிப் பிரகாசம், சற்றே மின்னி மறைவது போன்ற காட்சி கண்டாள்; அதன் சௌந்தரியமும், அழ கும் எவ்வளவு பெரியதாக இருந்ததென்றால், அவள் அதனால்,ஸ்தம்பித்து மயங்கி விழுந்தாள். பரலோகத்தின் சுகந்த மணமும், வாசமும், நாசியை முற்றும் கவர்ந்து கொள்ளும். மோட்ச வாசிகளின் சங்கீதங்களும், இனிமை நிறைந்த பாடல்களும் செவிக்கினிய மதுரமான இன் பத்தைக் கொடுக்கும்.

அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், ஒருசமயம், ஒரு சம்மனசு,தன் கையில் இருந்த வயலின் இசைக்கருவியில் ஒரு ஒலியை எழுப்பி,இசைத்ததைக் கேட்டவுடன், தனக்குண்டான பேரானந்த சந்தோஷத்தால், இறந்து போகும் அளவிற்கு மூர்ச்சையடைந்தார்; அப்படியா னால், மோட்ச வாசிகளாகிய சகல அர்ச்சிஷ்டவர்களும், சகல சம்மனசுகளும் ஒன்றாய்க் கூடி, திவ்ய கர்த்தருடைய மகிமையைப் பாடுவதென்றால், எப்படி இருக்கும்? அவர்கள், எக்கால மும், உம்மைப் பாடித் துதிப்பார்கள் (சங்.83).இது, இவ்வாறு உன்னதமான காரியமாயி ருக்க, மோட்ச இராக்கினியாகிய தேவமாதா, தாமே கடவுளைத் துதிப்பது எவ்வளவு மகி மைக்குரியதும் ஆனந்த சந்தோஷ பாக்கியம் தரும் காட்சியாக விளங்கும்! பரலோக வீட்டி லும், தேவமாதா, பாடித்துதிப்பது எப்படி இருக்குமென்றால், ஒரு நந்தவனத்தின் மத்தியில் உட்கார்ந்து பாடும் நைட்டிங்கேல் என்னும் பறவையின் இனிய குரல், மற்ற எல்லா பறவை களினுடைய சத்தத்திற்கெல்லாம் மேலானதாக விளங்குவதுபோல், தேவதாயின் இனிமை நிறைந்த குரலும், சகல அர்ச்சிஷ்டவர்களின் குரலையும் விட மேலானதாயிருக்கும், என்று அர்ச்.பிரான்சிஸ்கு சலேசியார் கூறுகின்றார்.

ஒரே வார்த்தையில் கூறவேண்டுமெனில், மோட்சத்திலே, நாம் விரும்பவும் ஆசிக்க வும் கிரகிக்கவும் தக்க சகலவித இன்ப சந்தோஷங்களும் இருக்கும். ஆயினும், இதுவரை, விவரிக்கப்பட்ட சகல இன்ப சந்தோஷங்களெல்லாம், பரலோக இராஜ்ஜியத்திலுள்ள இன்ப சந்தோஷங்களில் மிகச் சிறியவையும் கடைசியுமானவை. மோட்ச பேரின்பம் முற்றிலும் அடங்கியிருப்பது, சர்வ நன்மைச் சொரூபியாகிய சர்வேசுரனிடத்திலேயே! அர்ச். அகுஸ்தீன்

) அனுபவிக்க எதிர்பார்க்கும் எல்லா பாக்கியமும், சர்வேசுரன் என்னும் ஒரு வார்த்தையிலேயே அடங்கியிருக்கின்றது. கடவுள் நமக்கு சம்பாவனையைத் தருவதாக வாக்களித்திருப்பதெல்லாம், அவருடைய மோட்ச வீட்டின் அழகிலும், மாட்சி மிக்க சிறப் பிலும், அதிசய பேரின்ப அமைப்பிலும், அதன் நானாவித இன்ப சந்தோஷங்களிலும் மாத் திரமல்ல! எல்லாவற்றிலும் முக்கிய சம்பாவனை சர்வேசுரனே!அதாவது:அவரை முகமுகமாய் தரிசிப்பதும், நேசிப்பதுமே முக்கிய சம்பாவனையும் பேரின்பமுமாகும். நாம், உனது மித மிஞ்சின சம்பாவனையாமே (ஆதி. 15).

அர்ச்.அகுஸ்தீன், சபிக்கப்பட்டவர்களுக்கு சர்வேசுரன் தமது திருமுக தரிசனத்தைக் காண்பித்தால், உடனே, அக்ஷணமே, நரகமானது, இனிய பரகதியாக மாறிவிடும், என்று கூறுவார். மீண்டும் அர்ச். அகுஸ்தீன் கூறுகிறதாவது:பூமியினின்று பிரிந்துபோகும் ஆத்துமத் திடம், நீ சர்வேசுரனை ஒரே ஒரு முறைமாத்திரம் பார்த்து விட்டு, அதன்பின் உடனே, நித்திய நரகத்திற்குப் போய் சகல ஆக்கினைகளையும் சகிக்க இஷ்டமோ அல்லது சர்வேசுரனைக் காண வும் மாட்டாய்! நரகத்திற்குப் போகவும் மாட்டாய்! இவ்விரண்டில் உனக்கு எதுப் பிரிய மோ, அதைத் தெரிந்துகொள்! என்று அறிவிக்கப்பட்டால், அந்த ஆத்துமம், சர்வேசுரனை தரிசிக்கவும், அதன்பின், நரக ஆக்கினைகளெல்லாவற்றையும் சகிக்கவும் சம்மதிக்கும்.

பூமியில் சஞ்சரிக்கும் நாம், சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசிப்பதும், அவரை நேசிப் பதும் எப்படிப்பட்டதென்று, கண்டறியக்கூடாதவர்களாக இருக்கிறோம். ஆனால், சிற்சில சம்பவங்களைக் கொண்டு, அறியலாம். அதாவது: தேவசிநேகம் எவ்வளவிற்கு இனிமையான தென்றால்,ஜீவனோடு இருக்கையிலேயே, சில அர்ச்சிஷ்டவர்கள், ஆத்துமத்தை மாத்திரமல் லாமல், அவர்களுடைய சரீரத்தை கூட மேலே உயர்த்தும் வல்லமையைப்பெற்றிருந்தனர். அர்ச்.பிலிப்பு நேரியார், பரவசத்தில் இருந்தபோது, அவருடைய இருதயத்தில் கூடுதலாக அதிகரித்த தேவசிநேகத்தின் காரணமாக, ஒரு முறை, தாம் தாங்கி பலமாய்ப்பிடித்து நின்ற ஒரு பெஞ்சு பலகையோடு கூடவே, வானத்தில் மேலே உயர்த்தப்பட்டார். அதேபோல், அர்ச். அல்காந்தரா இராயப்பர், பக்தி பரவசத்திலிருந்தபோது, அவர் கையில் பிடித்திருந்த ஒரு மரம், வேருடன் பிடுங்கப்பட்டு, பூமிக்கு மேலே உயர்த்தப்பட்டார்!

அநேக வேதசாட்சிகள், தாங்கள் படும் மகா கொடிய வேதனைநிறைந்த ஆக்கினைகள் மத்தியில், தங்கள் இருதயத்திலுள்ள தேவசிநேக மதுரத்தினால், மலர்ந்த முகத்துடன், அக மகிழ்ந்து அந்த சித்திரவதைகளை ஏற்றுக்கொண்டனர். வேதசாட்சியான அர்ச்.வின்செந்தி யார், வேத சாட்சிக்குரிய கொடிய துன்ப உபத்திரவங்களை அனுபவித்துக்கொண்டே, இனி மை நிறைந்த மதுர குணத்துடன், அங்கு தம்மை உபாதித்தவர்களுடன் உரையாடினார்; அதைக் கண்டகூடியிருந்த மக்கள், அவரிடம், துன்பத்தை அனுபவிப்பதற்கு ஒரு மனிதரும், இனிமையாக உரையாடுவதற்கு வேறு ஒருவருமாக, இரண்டு மனிதர்கள் இருக்கின்றனர் என்று நம்பக்கூடிய அளவிற்கு, அவர் அத்துன்ப உபாதைகளை சாந்தகுணத்துடன் பொறு மையாக சகித்துக் கொண்டு, இன்முகத்துடன் உரையாடினார், என்று அர்ச். அகுஸ்தீன் எழுதி யிருக்கின்றார்.

அர்ச். லாரன்ஸ் வேதசாட்சியாக, இரும்பு அடுப்பின்மீது கிடந்து எரியும்போது, கொ டுங்கோலனை நோக்கி, இந்தப் பக்கம் வெந்து விட்டது;இப்போது, என்னைப்புரட்டி சாப்பிடு, என்று இன்முகத்துடன் கூறினார்.அர்ச்.லாரன்சின் இருதயம், அப்போது, வெகுவாய், தேவ

சிநேக அக்கினியினால் பற்றியெரிந்தபடியால், இந்த அடுப்பு நெருப்பு, அவருக்கு ஒரு பொ ருட்டாகத் தோன்றவில்லை. இது தவிர, சில வேளைகளில், ஓர் பாவியானவன், இப்பூலோகத் திலேயே,தன் பாவங்களுக்காக உத்தம மனஸ்தாபப்பட்டு அழும்போது, எவ்வளவோ சந் தோஷ மனோகர இன்பத்தை அனுபவிக்கிறான்." சுவாமி! உமக்காக அழுவதே, இவ்வளவு அமிர்தமாய்த் தோன்றினால், உமக்காக ஆனந்த சந்தோஷப்படுவது எப்படி இருக்குமோ!” என்று அர்ச்.பெர்னார்டு உரைக்கின்றார்.

மேலும் சில வேளைகளில், ஓர் ஆத்துமமானது. ஆண்டவர் தனக்குச் செய்திருக்கும் நன்மையையும், தன் மேல் திவ்ய சேசுநாதர் பொழிந்து வரும் அளவற்ற தயாளமும், அந்த நேச ஆண்டவர் தனக்குக் காண்பித்ததும், காண்பித்து வருவதுமான சிநேகப் பெருக்கத்தை யும், ஓர் தியான ஜெப நேரத்தில், பிரகாசிக்கும் ஓர் ஞான ஒளியினால், கண்டுணரும்போது, அனுபவிக்கும் சந்தோஷமும், ஆச்சரியமும் எவ்வளவோ பெரியதாயிருக்கும்! அத்தருணத் தில், அந்த ஆத்துமம், உடைந்து, தகர்ந்தாற்போல சிநேகப் பெருக்கத்தால் வாடி மயங்கும். இப்படியிருக்க, இந்தத் தருணங்களில் நாம் இப்பூமியில், நம் நேச ஆண்டவரை, அவர் சுயம் பாயிருக்கிறபடி, காண்கிறதில்லை. ஒருவித அந்தகாரத்தில் தான் காண்கிறோம்: “நாம் இப் போது ஓர் கண்ணாடி வழியாக அந்தகாரமாய்க் காண்கிறோம். ஆனால், அப்போதோ முகமுக மாய்க் காண்போம்” (1 கொரி 13).

இப்போது நமது கண் ஒருவிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது; சர்வேசுரன், விசுவாசம் என்னும் திரைச் சீலையினால், மறைக்கப்பட்டிருக்கிறார். தம்மை முழுவதுமாக, அவர் நமக்கு, நன்றாகக் காண்பிக்கிறதில்லை.ஆனால், அந்தக் கட்டு,நமது கண்களிலிருந்து, அவிழ்க்கப்பட்டு, திரைச்சீலையும், உயர்த்தப்பட்டு,ஆண்டவரை முகமுகமாய்த் தரிசிக்கும்போது, எப்படியிருக் கும்?அப்போது ஆண்டவரின் மாபெரும்பேரழகு, சௌந்தரியம் எத்தன்மையானதென்றும், அவர் எவ்வளவோ மகத்துவமிக்கவரென்றும், எவ்வளவோ நீதியுடையவரென்றும், எவ்வள வோ சாங்கோபாங்கமுடையவரென்றும், எவ்வளவோ நம் நேசத்திற்குரியவர் என்றும், நம் மை சிநேகிக்கிறவரென்றும் அறிவோம்.

ஆ! சர்வ நன்மைச் சொரூபியாகிய சர்வேசுரா! எத்தனையோ தடவை, தேவரீரின் சிநேகத்தைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டு ஓடிப்போன அந்த நிர்ப்பாக்கிய பாவி நானே! ஆகையால், உம்மை மறுபடியும் காண்பதற்கும், நேசிப்பதற்கும், நான் ஒருவிதத்திலும் பாத் திரவானேயல்ல. அதெப்படியிருந்தாலும், தேவரீர் என்பேரில் வைத்த இரக்கத்தினிமித்தம், உமதுமேல், சற்றும் இரக்கம் வையாமல், ஓர் சிலுவையில் மரிக்கும்படி தீர்வையிட்டுக் கொண்டீரே! அந்த உமது மரணம், நான் மீண்டும் தேவரீரை ஓர் நாள், முகமுகமாய்க் கண்டு களிப்பேனென்றும், என் சக்தி கொண்ட மட்டும், உம்மை நேசிப்பேனென்றும், நம் பிக்கையை ஏற்படுத்துகிறது. ஆனால், ஒருபோதும்,உம்மைக் காணாமல்,உம்மை இழந்து போ கும் ஆபத்து, எனக்கு இன்னும், இருப்பதினாலும், என் பாவாக்கிரமங்களினால், இதன்முன் நான் உம்மை இழக்க நேரிட்டிருப்பதினாலும், எனக்கு இன்னும் மீதியாயிருக்கும், ஜீவிய காலத்தில், நான் என்ன செய்வேன்? தேவரீருக்கு துரோகம் செய்துகொண்டே திரிவேனோ? இல்லை. என் நேச சேசுவே! நான் தேவரீருக்கு விரோதமாய்க்கட்டிக்கொண்ட துரோகங்க ளுக்காக, என்னாலியன்ற அளவு மனஸ்தாபப்பட்டு, அவற்றை அருவருத்துத் தள்ளுவேன். உமக்கு விரோதமாய் நான் புரிந்த நிந்தை அவமானங்களுக்காக, மிகவும் மனஸ்தாபப்பட்டு, என் முழு இருதயத்தோடு, உம்மை நேசிக்கிறேன்..


தபசுக்காலத்திற்கான தியானம்:

சிலுவைப்பாதையின் 4ம் ஸ்தலம்

வெள்ளிக் கிழமைப் புதுமை-24ம் புதுமை

திவ்ய சேசுநாதர்,கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து செல்கிறார், என்ற செய்தியை அறிந்ததும், தேவமாதா, தம் திவ்ய குமாரன் மரிக்கிற சமயத்தில் அவருடன் கூட, அவர் அருகில் இருக்க விரும்பி, கல்வாரி மலையை நோக்கிப் புறப்பட்டார்கள். தேவமாதா வுக்கு, திவ்ய குமாரன் எந்த வழியாய்ச் செல்கிறாரென்று,மற்றவர்களைக் கேட்பதற்கான தேவை ஏற்படவில்லை. அதேனென்றால், கர்த்தர் சிலுவை சுமந்துபோகிறபோது, அவருடைய திருச்சரீரத்திலிருந்த திருக்காயங்களிலிருந்து புறப்பட்ட திரு இரத்தம், அவர் போகிற வழி யில், சிந்தியிருந்ததென்றும், அதைக் கண்டு, நமது திவ்ய குமாரன் போன வழியை அறிந்து கொண்டோமென்றும், தேவமாதா, அர்ச்.பிரிஜித்தம்மாளுக்கு அறிவித்தார்கள்.

வியாகுலமாதா, திவ்ய கர்த்தர், பின்னால் சென்ற போது, அவருடைய கனிவுள்ள பரி சுத்தமான திருமுகத்தைக் காணும்படியாக, திவ்ய குமாரனுக்கு எதிராகப் போவதற்கு ஆசித்

கள்; அதன் காரணமாக, தேவமாதா, ஆண்டவருக்குப் பின்னால் போகிறதை விட்டு, பக் கத்தில் சென்று, திவ்ய சேசுநாதரை, நேருக்கு நேராக நோக்கியபடி, எதிர் பக்கத்திலிருந்து வந்தார்கள். அப்போது, கண்ட பயங்கரமான காட்சியால், தேவமாதா, மகா கஸ்தி வியா குலமடைந்தார்கள்: மகா பலவீனமுள்ளவருமாய், இரத்தத்தினால் முழுவதும் நனைந்தவரு மாய், பலவகை அசுத்தங்களால் அழுக்கடையப்பட்டவருமாய், இரண்டு கள்ளர்களுக்கு நடு

வே பாரமான சிலுவை சுமந்து கொண்டு வருகிறவருமாய்த் தமது நேசமுள்ள திவ்யகுமா ரனைக் கண்டார்கள்.கண்டவுடனே, தேவமாதா, எப்படி அழுது வியாகுலப்பட்டார்கள் என்று வார்த்தையால் விவரிக்க முடியாது.

இதைப் பற்றி, அர்ச். அன்செல்ம், தமது நூலில் எழுதியிருப்பதாவது: தேவமாதா, தம் திவ்ய குமாரனுக்கு எதிரேபோன சமயத்தில் சேசுநாதரைக் கட்டியிருந்த கயிறுகளை,அவிழ்க் கிறதற்கும், அவருடைய காயங்களைக் கட்டுகிறதற்கும், அவருடைய திருமுகத்தில் வடிகிற திருஇரத்தத்தைத் துடைக்கிறதற்கும், மிகுந்த ஆசையாயிருந்தார்கள்; ஆனால், சேவகர்கள் தடைசெய்ததால், வியாகுலமாதாவால்,ஆண்டவருக்கு ஒரு உதவியும் செய்யக்கூடாமல் போனது. இது தவிர, ஆண்டவர் தமது நேசதாயாரைப் பார்ப்பதற்காக, தமது கண்மேல் உறைந்து போய், கண்ணை மறைத்துக்கொண்டிருந்த, தமது திரு இரத்தத்தைத் தம் திருக்கரத் தினால், தள்ளினாரென்று, அர்ச்.பிரிஜித்தம்மாள், திருச்சபைக்கு அறியச் செய்தாள். இப்படித் தள்ளின பிற்பாடு,திவ்ய கர்த்தர், தம்முடைய பரிசுத்தத் தாயார் அழுகிறதைக் கண்டு, சிலு வை சுமந்து கொண்டு போகிற வேதனையை விட அதிகம் துன்புற்றார்.

ஒரு சமயம், ஒரு அஞ்ஞானி, மகா பக்தியுடனும், ஆசையுடனும், சர்வேசுரனுடைய வேதத்தில் சேர்ந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவருடைய குழந்தை செத்துப்போனது. அப்போது, உறவினரும், பிராமணரும், மற்றவரும் வந்து, நீ பழைய தேவர்களைக் கும்பிடா மல் விட்டுவிட்டதாலும், கிறீஸ்துவ வேதத்தில் சேர்ந்ததாலும், உன்னுடைய குழந்தை துபோனது, என்று துர்ப்புத்தி கூறினர். அந்த துர்ப்புத்திக்கு இடம்கொடாமல், சத்திய வேதத் தில் அவர் உறுதியாயிருந்தார். பிறகு, அவருடைய மாடுகள் இறந்தன,முன்பைவிட அவர்கள் அதிக துர்ப்புத்தி கூறினர். அதற்கும், அவர் இடம்கொடுக்கவில்லை. கடைசியில், அவருக்கு ஒரு கடின வியாதி வந்தது. உடனே, கோடங்கி சாஸ்திரக்காரனை அழைப்பதற்கும், துர்ப் புத்தி கூறினர். அவர்களில், ஒருவன், அவரிடம், நீ, உன் சரீரம், மனைவி, மக்கள் பேரில் நேசமா யிருக்கிறாயல்லவா. அவர்களுக்கு தீங்கு ஏற்படாமல் பாதுகாப்பது உன் கடமையல்லவா? என்று கேட்டான். அப்போது, அவர்களிடம்,அவர்,நீங்கள் அபத்தமான வார்த்தை கூறுகிறீர் கள். அதேனென்றால், நான் சர்வேசுரனுடைய வேதத்தைப்பற்றிக்கொண்டதால், எனக்கு நன் மை வந்ததல்லாமல், தீமை ஏற்படவில்லை.

வேதத்தில் சேராத உலகத்திற்கு பொல்லாப்பு வருகிறதில்லையோ? என்று கூறிவிட்டு,பாடுபட்ட சுரூபத்தைக் காண்பித்து, அவர்களிடம், இதோ அகில உலகத்தின் கர்த்தர். இவர் தாயார்,சகல சிருஷ்டிகளுக்கெல்லாம் மேலான வர்கள். அவர்களுக்கு முன்,நானும் என் குடும்பத்தினரும்,ஒரு நீசப் பூச்சிக்கு சமானம்.ஆண் டவர், என் பாவத்திற்காகப் பாடுபடுகிறபோது, அவர் தாயார் வெகு வியாகுலப்பட்டாலும், அவர் அந்தப் பாடுகளை விடவில்லை. நான் வியாதியால் கொஞ்சம் துன்பம் அனுபவிக்கிற போது, என் சரீரத்துக்காக,கர்த்தரை மறந்துவிடலாமோ?என்று கூறினார். அவர் கூறிய நியா யத்திற்கு எதிராக அவர்களால் ஒன்றும் கூற முடியாமல் போனது. ஆண்டவரும், வியாகுல மாதாவும்,நமக்காக இவ்வளவு பாடுபட்டார்களென்றுஉணர்ந்து, அவர்களுடைய வியாகுலங்களின் மீது,பக்தியுடனிருப்போம்..


அர்ச். சூசையப்பர் திருநாளுக்கான தியானம்

 

பிதாப்பிதாவான அர்ச்.சூசையப்பரின் வல்லமை:

சங்.பினே சுவாமியார்

மாபெரும் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர், எவ்வளவு வல்லமை மிகுந்தவராக விளங்குகின்றார் என்றால், பரலோக பூலோக இராஜ்ஜியங்களை ஆண்டு நடத்தி வரும் இரண்டு மாபெரும் வல்லமை மிக்க அதிபதிகளான திவ்யசேசுநாதர், தேவ மாதா ஆகிய இருவருக்கும், கட்டளையிடுபவராக, திகழ்வதைக் காணும் யாவரும், அவர் கொண் டிருக்கும் மகத்துவமிக்க வல்லமையைக் குறித்து, வியந்து போற்றி, ஆர்ப்பரிக்கின்றனர். கல்வியில் தேர்ச்சி பெற்றமாபெரும் வேதசாஸ்திரியான ஜெர்சன் என்பவர், அர்ச்.சூசையப் பரைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவரை, செல்வாக்கு மிகுந்த பாதுகாவலர் என்றும், சர்வ வல்லமை மிக்க பாதுகாவலர், என்றும் அழைக்கிறார். ஏனெனில், அர்ச். சூசையப்பர், உலக இரட்சகரான திவ்ய சேசுநாதரின் வளர்ப்பு தந்தையாகவும், பாதுகாவலராகவும், தேவமாதா வின் பத்தாவாகவும், பாதுகாவலராகவும் திகழ்கின்றார். இத்தகைய உன்னதமான உயர்ந்த பட்டங்களுடையவருக்கு, எது தான் மறுக்கப்படும்? மோட்சத்திலும், உலகத்திலும், அவர் ஆசிக்கும் சகல காரியங்களும் ஆச்சரியமிக்க விதமாக நிறைவேற்றப்படுகின்றனவே!

திவ்ய சேசுநாதர், தமது பரலோக பிதாவிடம் எதையெல்லாம் கேட்பாரோ, அவற் றையெல்லாம், பரலோக பிதா அளிப்பதற்கு திருவுளம் கொள்கிறார். தமது திவ்ய குமாரனி டம், தேவமாதா எதையெல்லாம் கேட்பார்களோ, அதையெல்லாம், அவர், அளிப்பதற்கு திருவுளம் கொள்கிறார்; அர்ச். சூசையப்பர், தம் பரிசுத்த பத்தினியிடம் எதையெல்லாம் கேட் பாரோ, அவற்றையெல்லாம், தருவதற்கு, தேவமாதா மனதாயிருப்பார்கள். ஆகவே, திவ்ய சேசுநாதர் மூலமாக, தேவமாதா, சர்வ வல்லமையுடன் திகழ்கின்றார்கள் என்கிற உண்மை யைப் பின்பற்றி, தேவமாதா மூலமாக, அர்ச்.சூசையப்பர், சர்வ வல்லமையுள்ளவர் என்று பிரகடனம் செய்யலாம் அல்லவா! ! அர்ச்.சூசையப்பரை பரிந்துரையாளராகக் கொண் டிருப்பது, நமக்கு எவ்வளவு நன்மை பயக்கக்கூடியதாயிருக்கும்! ஏனெனில், இந்த உலகத் தில், எதுவும், அவருக்குக் கூடாத காரியம் அல்ல!

மற்ற எல்லா அர்ச்சிஷ்டவர்களும், திவ்ய சேசுநாதரிடமும், தேவமாதாவிடமும், தங் கள் விண்ணப்பங்களுக்காக மன்றாடி ஜெபிக்கின்றனர். ஆனால், அர்ச்.சூசையப்பரோ, தம் திவ்ய குமாரனிடமும், தம் திவ்ய பத்தினியான தேவமாதாவிடமும், தம் விண்ணப்பங்களை, கட்டளைகளாகக் கொடுக்கின்றார். மாபெரும் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர் கொண்டி ருக்கும் மகத்துவமிக்க இவ்வல்லமையைப் பற்றி, துணிவுடன் ஓரிஜன் என்பவர் வெளிப் படுத்திய இந்தக் கருத்தையே, திருச்சபையின் அநேக வேதபாரகர்கள், ஏற்றுக்கொண்டிருக் கின்றனர். அர்ச். சூசையப்பர், தந்தையைப்போல் பேசுகின்றார்; ஒரு தந்தை, தன் மகனிடம், தன்விருப்பத்தை, நிறைவேற்றும்படி வேண்டுவதற்குப் பதிலாக, கட்டளையாகக் கொடுக்கி றார். சகல அர்ச்சிஷ்டவர்களும், தங்களுடைய மணி மகுடங்களை, திவ்ய செம்மறியானவ ரின் திருப்பாதத்தண்டையில் சமர்ப்பித்து,தங்கள் மன்றாட்டுகளுக்காக ஜெபித்து வேண்டிக் கொள்கின்றனர். பிதாப்பிதாவாகிய அர்ச்.சூசையப்பர், தம் திவ்ய குமாரனிடம், கட்டளையி டுவதுபோல், மிகுந்த தாழ்ச்சியுடன் மன்றாடுகின்றார்; அல்லது, பரிசுத்தத் திருக்குடும்பத்தின் தலைவரின் தாழ்ச்சி எவ்வளவுக்கு அதிகமாயிருந்ததென்றால், அவரால், தமது திவ்ய குமார னும் ஆண்டவருமான திவ்ய சேசுநாதருக்குக் கட்டளையிடுவதற்குக் கூடாமற்போயிற்று; அதே சமயம், நமதாண்டவரின் அளவில்லா நன்மைத்தனம் எவ்வளவிற்கு, பரிசுத்த நீதிமா னாக திகழ்ந்த தம் தந்தையான அர்ச். சூசையப்பரின் தாழ்ச்சியினால், கவர்ந்திழுக்கப்பட்ட தென்றால், அவருடைய ஜெபங்கள் எல்லாவற்றையும், தந்தைக்குரிய கட்டளைகளாக ஏற்க வும்,அந்தவிண்ணப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி, அருளவும் திருவுளம் கொள் ளும்படி, நமதாண்டவரைத் தூண்டியது.

! மிகுந்த பாக்கியம் பெற்ற பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பரே! தேவரீர் மாத்தி ரமே, சகல மனிதருக்குள், விசேஷ உறவுகளுடன் விளங்குகின்றீர்! எவ்வளவோ அந்நியோந் நிய நெருக்கத்துடன், அகில உலகத்தின் இரட்சகருடனும், அவருடைய மகா பரிசுத்த மாதா வுடனும், தேவரீர் ஐக்கியமாக ஜீவிக்கின்றீர்! அர்ச்.கன்னிமாமரியின் திவ்ய குமாரன், உமக்குக் கீழ்ப்படிகின்றார்; உமது திவ்ய பத்தினியாகிய சர்வேசுரனுடைய பரிசுத்த தேவ மாதா,உமக்குக் கீழ்ப்படியவும், உமக்குப் பணிவிடைபுரிந்து, மகிமை செலுத்தவும் கூடிய உன்னதமான வகையில் தேவரீர் பாக்கியம் பெற்றிருக்கிறீர்! அவர்கள் இருவருக்கும் கட்மையை, தேவரீர் பெற்றிருக்கிறீர். அப்படியென்றால், உம்மிடம் அடைக்கல மாக, உதவிகேட்டு வரும் அடியோர்களின் விண்ணப்பங்களை, திவ்ய சேசுநாதரிடமும், தேவமாதாவிடமும், தேவரீர் தயங்காமல், ஜெபித்துப் பெற்றுத் தருவிரல்லவோ!

புதுமை

பல வருடங்களுக்கு முன் ஒரு மேற்கத்திய நாட்டிலிருந்த ஒரு கன்னியர் மடத்தில் மேரி ஆஞ்சலா என்ற நவ கன்னியாஸ்திரி இருந்தாள்.ஒரு நாள், அவளுடைய தாய் வியாதியில் விழுந்து, மரணப் படுக்கையில் பேரா பத்தில் இருப்பதாக, அவளுக்குச் செய்தி வந்தது.தாய்க்கு உதவி செய்யக் கூடிய மக்கள் யாரும் இல்லை. இந்த இளம் துறவி மட்டும், தன் தாய்க்கு நோயில் உதவி புரியக் கூடியவள். இவள் இன்னும், சபையில் வார்த்தைப்பாடு கொடுக்கவில்லை. வீட்டுக்குப்போய்,தாய்க்குத் துணையாயிருப்பது தன் கடமை என்று, மேரி ஆஞ்சலா நினைத்தாள். மடத்தின் சிரேஷ்ட தாயாரிடம் தன் எண்ணத்தைத் தெரிவித்தாள். வீட்டிற்குப்போக வேண்டும் என்ற அந்த நினைவு, சர்வேசுரனிடமிருந்தே வந்ததா, என்பதை,மடத்தின் தாயாரே தீர்மானிக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டாள். சிரேஷ்ட தாயார், மேரியிடம், நீ நவசந்நியாசத்தில் சும்மா இரு. உன் தாய்க்கு உதவி செய்ய வேண்டும் என்று உனக்கு ஆசையாயிருக்கிறது. அந்த ஆசையை உன் தாயின் உடல் நலனுக்காக, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடு, நம் சபைப் பாதுகாவலரான அர்ச். சூசையப்பரிடம் போ. அவரிடம் உன் இந்த அவசர தேவைக்காக, உருக்கமாக வேண்டிக்கொள். அவர் நிச்சயம் உனக்கு இந்த காரியத்தில் தவறாமல் உதவி செய்து, உன் தாயாரைப் பாதுகாப்பார், என்று அறிவுரை கூறினார்கள்.

அவளும், உடனே, அர்ச்.சூசையப்பரின் அடைக்கலத்தை நாடிச் சென்றாள். தன் இருதயத்தை உலுக்கி வாட்டிக்கொண்டிருந்த, அந்த சஞ்சலத்தைப் பற்றிக் கூறி, தன் மன் றாட்டை, அர்ச்.சூசையப்பரின் திருப்பாதத்தண்டையில் சமர்ப்பித்தாள். பின், அன்று இரவு நிம்மதியாக நித்திரைக்குச் சென்றாள்.நித்திரையின்போது, ஒரு கனவு கண்டாள். அவள், தன் தாயின் வீட்டிற்குப் போயிருந்தாள்.இரவு நேரம், நோயாளிக்குக் காவலாயிருந்த பெண் தூங்கி விட்டாள். நோயாளிக்கோ, வேலைக்காரப் பெண்ணை எழுப்புவதற்குப்பலமில்லை. அசையவும் சக்தியற்றுக் கிடந்தாள். தாய் இறக்கும் தறுவாயிலிருந்தாள், என்று கண்டதும், மேரி ஆஞ்சலா மிகவும் பயந்தாள்; தாய்க்கு ஏதாவது செய் என்று யாரோ தன்னை தூண்டுவ தை, உணர்ந்த மேரி ஆஞ்சலா,உடனே,அருகிலிருந்த மருந்து புட்டியை எடுத்தாள்; அதன் மேல் எழுதியிருந்ததை வாசித்து அறிந்து கொண்டவளாக, அதன்படி, சிறிது மருந்தை, நோயாளியின் வாயில் ஊற்றி, விழுங்கும்படி செய்தாள். உடனே, நோயாளி, நோயின் உக் கிரமம் நீங்கியவளாக, அமைதியான நித்திரையில் ஆழ்ந்தாள்.உயிராபத்தும் நீங்கியதாக, மகள் உணர்ந்தாள்.

மறுநாட்காலையில், ஏதாவது கடிதம் வரும் என்று ஆஞ்சலா ஆவலுடன் காத்திருந் தாள். அதற்கு அடுத்த நாள் கடிதம் வந்தது. அம்மாவின் உயிருக்கு ஆபத்தில்லை, சுகமாகி வருகிறார்கள், என்று எழுதியிருந்தது. உடனே, ஆஞ்சலா, அர்ச். சூசையப்பர் பீடத்திற்குச் சென்று,முழு இருதயத்துடன் நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்தினாள்.சில மாதங்களுக்குப் பின்,தாய் தன் மகளைப்பார்ப்பதற்காக, மடத்திற்கு வந்தாள்.தான் கண்ட கனவை, அம்மா விடமும், வேறு யாரிடமும், ஆஞ்சலா அது வரை தெரிவிக்காமலிருந்தாள். தாயுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தாய், அவளைப் பார்த்து, மேரி, நீ தான் என் உயிரைக் காப்பாற்றிய வள், என்று தெரிவித்தாள். மகள் ஆச்சரியத்துடன், தாயை நோக்கினாள். அப்போது, தாய், நடந்ததை பின்வரும் விவரத்துடன் தெரிவித்தாள்:

நான் வியாதியாயிருக்கையில், இத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து குடிக்க வேண்டும்; அதைச் சரியாய்க் குடித்து வந்தால் தான், நான் உயிர் பிழைப்பேன் என்று மருத் துவர் கூறியிருந்தார்.இரவில் குறிக்கப்பட்ட நேரங்களில் மருந்து ஊற்றிக் கொடுப்பதற்காக, நியமிக்கப்பட்டிருந்த வேலைக்காரி, அன்று ஒருநாள் இரவில் தூங்கி விட்டாள்; என்னால், அசையமுடியவில்லை. வேலைக்காரியை கூப்பிட்டு எழுப்பவும் பலமில்லை. அந்த நேரத்தில் மருந்து, குடிக்காவிடில் இறந்துபோய்விடுவேன் என்று எனக்குத் தெரியும். அப்போது, நீ உன் கன்னியாஸ்திரி உடையில், அறைக்குள் நுழைந்து, நேரே மேஜைக்குப் போய், மருந் தை ஊற்றி எனக்குக் கொடுத்தாய். உடனே, எனக்கு சுகமான நித்திரை வந்தது.நீண்ட நேரத் திற்குப் பிறகு, புதிய பலத்துடன் நித்திரையிலிருந்து எழுந்தேன். அதிலிருந்து, எனக்குச் சுகம் உண்டாகி, கடைசியில், பூரண சுகம் பெற்றேன்.

தாயும் மகளும் ஒருவரையொருவர் உற்றுப் பார்த்தனர் .ஆஞ்சலா, தன் தாயிடம், அப்போது நடந்த சகல நிகழ்வுகள் பற்றி, ஒன்று விடாமல் விவரித்தாள்.தாயின் வியாதியைக் குணப்படுத்தியது, அர்ச்.சூசையப்பர் தான், என்று, மேரி ஆஞ்சலா, தன் தாயிடம் அறிவித் தாள். இருவருமாக அர்ச்.சூசையப்பரின் பீடத்தின் முன் சென்று நன்றியறிந்த ஜெபத்தை ஜெபித்தனர். புதுமையாக, நவகன்னியாஸ்திரிக்கும், அவள் தாய்க்கும் உதவி செய்த அர்ச். சூசையப்பருக்கு நன்றியறிதலாக, அவருடைய புதிய சுரூபம் ஒன்று, மடத்தின் கன்னியர் கள், அடிக்கடி சந்தித்து ஜெபிப்பதற்கு வசதியான ஒரு இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. + Deo Gratias!

புதுமை

ஒரு காலத்தில், அர்ச். நோர்பேர்த்தூஸ் உண்டுபண்ணின சபையிலே ஹெர்மன் என்ற ஓர் சந்நியாசியார் இருந்தார். அவர் சிறுவயது முதல், பிதாப் பிதாவாகிய அர்ச். சூசையப்பர் பேரிலே மிகவும் பக்தியாயிருந்ததுமல்லாமல், அர்ச். நோர்பேர்த்தூஸுடைய சபையிலே சேர்ந்தவுடன்,அர்ச். சூசையப்பரின் சுகிர்த புண்ணியங்களைக்கண்டுபாவிப்பதில் இடைவிடா மல் ஈடுபட்டிருந்தார். அர்ச்.சூசையப்பர் மீது கொண்டிருந்த இந்த விசேஷ பக்தி முயற்சியி னாலும், அர்ச்.சூசையப்பரின் விசேஷ உதவியினாலும், அவர் விரைவிலேயே உத்தம சந்நியா சியானார். மற்ற சந்நியாசிகளுக்கு, துறவறத்தின் தெளிந்த கண்ணாடி போல் உத்தம நன் மாதிரிகையுடன் ஜீவித்தார்.

பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பர், தமது பரிசுத்த பத்தினியாகிய தேவமாதா வை சிநேகித்து வணங்கி வந்தாரென்கிறதினாலே, இந்த உத்தம சந்நியாசி, அது ரைக் கண்டுபாவிக்க வேண்டுமென்று, தேவமாதாவை அத்தியந்த பக்திபற்றுதலுடன் சேவித் துக் கொண்டிருந்தார். அந்த பக்திக்குப் பலனாக, மோட்ச இராக்கினியோவெனில், அவரைத் தமது பிரியமுள்ள மகனைப்போல், பேணித் தாபரித்து,அவருக்கு எவ்வித உபகாரசகாயங்களை யும் கட்டளையிடுவார்கள். ஒரு சமயம், தேவமாதா, தம்மை ஒரு காட்சியில் காண்பித்து, சந்நியாசியிடம், நீ, நம்முடைய பரிசுத்த பத்தாவாகிய சூசையப்பர் மீது பக்தியாயிருக்கிற தே, நமக்கு சந்தோஷம். இனிமேல், இந்த பக்திக்குக் குறிப்பாக உன் பெயருடன், சூசை என்கிற நாமத்தையும் சேர்த்துக்கொள், என்று கூறினார்கள்.

காட்சியில், தேவமாதா கூறிய அறிவுரையின்படி, முத்திப்பேறு பெற்ற ஹெர்மன் என்ற சந்நியாசியார், அதற்குப் பிற்பாடு தம்மை ஹெர்மன் சூசை என்று அழைக்கும்படிச் செய்தார். அப்படியே, தாம் எழுதுகிற நிருபங்களில் கையொப்பம் இடுவார். வேறு ஒரு சமயத்தில், தேவமாதா, திவ்ய குழந்தை சேசுநாதரைத் தம் கரங்களில் ஏந்தியபடி, அவருக் குக் காட்சி கொடுத்தார்கள். தேவ பாலனை, ஹெர்மனின் கரங்களில் இறக்கி விட்டார்கள். அப்போது, முத்.ஹெர்மன் ஜோசப் (சூசை), திவ்ய குழந்தையைத் தனது இருதயத்துடன் அரவணைத்தபடி,முத்தமிட்டார்; தேவபாலனுடன் இனிமையாய்ப் பேசி, உரையாடி, சொல்லிலடங்காத பேரின்பத்தை அடைந்தார்.காட்சி மறைந்தது.

நாளுக்கு நாள், அர்ச்.ஹெர்மன் ஜோசப் புண்ணிய நெறியில் அதிகரித்து வந்தார். சேசு மரி சூசை என்கிற திவ்விய குடும்பத்திற்குச் செலுத்தும் விசேஷ வணக்க ஆராதனையை முக்கியப்படுத்தவும், எங்கும் பரவச் செய்யவும் உழைத்தார். நாளடைவில், தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் அவருக்கு அருளிச் செய்த சகல நன்மையைப் பற்றி எழுத வேண்டுமெ னில், அது கூடாத காரியமாயிருக்கும். அவ்வளவு அபரிமிதமான நன்மைகளை, அடைந்திருந் தார். கடைசியில், ஹெர்மன் மரிப்பதற்கு முன், திவ்ய சேசுநாதரும், தேவமாதாவும், அவரி டத்திலே எழுந்தருளி வந்து.அவரைத் தேற்றி, அவர் மோட்ச பேரின்பத்தைச் சுகிக்கும்படிச் செய்தனர். அப்போது, ஹெர்மன் சூசை, தமது இருதயத்தில் தேவசிநேகத்தின் மிகுதியைப் பொறுக்க முடியாதவராக, தமது ஆத்துமத்தை, திவ்ய சேசுநாதருடையவும், தேவமாதாவு டையவும் திருக்கரங்களில் ஒப்புக்கொடுத்து இன்பமாய் மரித்து மோட்சத்திற்குப் போனார்.

கிறீஸ்துவர்களே! மாபெரும் பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரின் சுகிர்த புண்ணி யங்களைக் கண்டுபாவிப்பதால், எவ்வித ஞான நன்மைகள், வருகின்றன என்பதை அறிந்து, அவரைப் பின்செல்வீர்களாக