தேவ தாய் அர்ச். பிரிஜிட் அவர்களுக்கு காட்சி அளித்து, அன்னையுடைய ஏழு வியகுலங்களை தியானித்து, ஏழு அருள் நிறைந்த மரியாயே என்ற செபத்தை தினமும் செபித்தால் அன்னை அவர்களுக்கு பல வரப்பிரசாதங்களை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்.
அந்த வாக்குறுதிகள்
- அவர்களுடைய குடும்பங்களுக்கு அமைதியை அருளுவேன்.
- அவர்களுக்கு ஞான வெளிச்சத்தை கொடுப்பேன்.
- அவர்களுடைய துன்பங்களில் அவர்களுக்கு ஆறுதலாகவும், அவர்களுடைய பணிகளில் அவர்களுக்கு துணையாகவும் இருப்பேன்.
- அவர்கள் என்னை நோக்கி கேட்கும் எல்லா நன்மைகளையும் அவர்களுக்கு நான் அளிப்பேன்.
- அவர்கள் மோட்சம் செல்ல வேண்டிய அனைத்து உதவிகளையும் சேசுவிடம் இருந்து பெற்று தருவேன்.
- அவர்களுடைய ஞான யுத்தத்திலே அவர்களுக்கு அரணாகவும், அவர்களுடைய வாழ்நாள் முழுதும் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பேன்.
- அவர்களுடைய மரண நேரத்தில் நானே அவர்களுக்கு தோன்றி அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்.
- இந்த பக்தியை அதிகமாக பரப்புகிறவர்களுக்காக நான் என் மகனிடம் அவர்களுக்காக மன்றாடி, அவர்களுடைய கண்ணீரையும், துன்பங்களையும் நீக்கும் படியாக மன்றடுவேன். அவர்களுடைய மரண சமயத்தில் அவர்களுடைய அற்ப பாவங்கள் எல்லாம் மன்னிக்கப் பெற்று உததரிக்கிற ஸ்தலத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பேன்.
அன்னையுடைய ஏழு வியாகுலங்கள்
- சிமியோன் தீர்க்கதரிசியுடைய தீர்க்கதரிசனம் (லூக். 2. 34-35)
- எகிப்து தேசத்துக்கு தப்பியோடியது. (மத் . 2. 13-14)
- குழந்தை சேசு கோவிலில் காணாமல் போனது.(லூக். 3. 43-45)
- தேவமாதா தனது குமாரனை சிலுவை சுமந்து போகும் போது சந்தித்தது.
- சேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது.
- சேசுநாதர் சிலுவையில் இருந்து இறக்கி மாதா மடியில் வளர்தப்பட்டது.
- சேசுநாதர் அடக்கம் பண்ணப்பட்டது.
To download Catholic Songs pls Click here...
To download Catholic Books pls click here..
To download life history of St. Antony in Mp3 pls Click here...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக