Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

அர்ச். பிளெய்ஸ் (St. Blaise)

அர்ச். பிளெய்ஸ் ✠ (St. Blaise)



*வேதசாட்சி, பரிசுத்த உதவியாளர் : (Hieromartyr, Holy Helper)

*பிறப்பு : தெரியவில்லை
செபஸ்டீ, வரலாற்று ஆர்மேனியா (Sebastea, historical Armenia)

*இறப்பு : கி.பி. 316


*பாதுகாவல் :
விலங்குகள், கட்டிடப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், தொண்டை, கல் வெட்டும் தொழிலாளர், செதுக்கும் பணி செய்பவர்கள், கம்பளி தொழிலாளர்கள், குழந்தைகள், "மராட்டி" (Maratea), "இத்தாலி" (Italy), "சிசிலி" (Sicily), "டாலமஷியா" (Dalmatia), "டப்ரோவ்னிக்" (Dubrovnik), "சியுடாட் டெல் எஸ்ட்" (Ciudad del Este), "பராகுவே" (Paraguay), "காம்பானரியோ" (Campanério), "மேடிரா" (Madeira), "ரூபியரா" (Rubiera).

அர்ச். பிளெய்ஸ், ஒரு மருத்துவரும், பண்டைய "வரலாற்று ஆர்மேனியாவின்" (Historical Armenia) "செபஸ்டீ" (Sebastea) எனுமிடத்தின் ஆயருமாவார். இது, தற்கால "மத்திய துருக்கி" (Central Turkey) நாட்டிலுள்ள "சிவாஸ்" (Sivas) எனுமிடமாகும்.

நம்மிடமிருக்கும் அவரைப்பற்றிய முதல் குறிப்பு, 5ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 6ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உள்ள ஒரு மருத்துவர், "அடியஸ் அமிடெனஸ்" (Atius Amidenus) மருத்துவ எழுத்துக்களின் கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது; தொண்டையில் சிக்கியிருக்கும் பொருட்களை நீக்கி சிகிச்சையளிப்பதில் அவரது உதவி அங்கு இருந்திருக்கிறது. அர்ச் பிளெய்ஸ், வேதசாட்சி என்ற மகத்துவம் பெற்ற இடம், "செபஸ்டீ" (Sebastea) என்று அறிவித்தது, இத்தாலியின் பெரும் வர்த்தகரும், ஆராய்ச்சியாளரும், மற்றும் எழுத்தாளருமான "மார்க்கோ போலோ" (Marco Polo) ஆவார். இத்திருத்தலம் "சிட்டாடல்" மலைக்கு (Citadel Mount) அருகில் இருப்பதாக 1253ம் ஆண்டு அறிவித்தவர், பிளெமிஷ் பிரான்சிஸ்கன் மிஷனரியும், மற்றும் ஆராய்ச்சியாளருமான (Flemish Franciscan missionary and explorer) வில்லியம் (William of Rubruck) ஆவார். இருப்பினும், அது தற்போது இல்லை.

தாம் பிறந்த ஆர்மேனியாவின் செபஸ்டீ நகரில், தமது இளமையில் தத்துவம் கற்ற இவர், ஒரு மருத்துவராக பணியாற்றினார். உடல் வியாதிகளை குணமாக்கிய அர்ச். பிளெய்ஸ், ஒரு ஆன்மாக்களின் மருத்துவர் ஆவார். அனைத்து பகுதிகளிலிருந்தும், உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்துவதற்காக மக்கள் அவரிடம் திரண்டனர். தாமாக தம்மைத் தேடி வந்த விலங்குகளைக்கூட அவர் குணப்படுத்தியதாகவும், பின்னாளில், அவர் அவைகளால் உதவி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், தமது தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஒரு குகைக்கு சென்று செப வாழ்வில் ஈடுபட்டார். "செபஸ்டீ" ஆயராக, பிளெய்ஸ், தமது மக்களுக்கு தமது வாய் வார்த்தைகளை முன்னுதாரணமாக அறிவுறுத்தினார். கடவுளுடைய ஊழியரான பிளெய்ஸின் மகத்தான நற்பண்புகளும், பரிசுத்த தன்மைகளும் அவருடைய பல அற்புதங்களால் உறுதிப்படுத்தப்பட்டன.

(Acta Sanctorum) எனும் புனிதர்களின் சரித்திர பதிவு நூலின்படி, இவர் அடித்து துன்புறுத்தப்பட்டும், கூரிய இரும்பினாலான முனைகள் கொண்ட சீப்பு போன்ற ஆயுதத்தால் (Iron comb) சித்திரவதை செய்யப்பட்டும், இறுதியில் தலை வெட்டப்பட்டும், மறைசாட்சியாக படுகொலை செய்யப்பட்டார்.

316ம் ஆண்டு, "கப்படோசியாவின்" ஆளுநரான (Governor of Cappadocia) "அக்ரிகோலா" (Agricola) என்பவரும், "லெஸ்ஸர் ஆர்மேனியா" (Lesser Armenia) என்றும், "ஆர்மேனியா மைனர்" (Armenia Minor) என்றும் அழைக்கப்படும் அதிகாரியும் இணைந்து, "ரோமப்பேரரசர்" (Emperor of the Roman Empire) "லிசினியஸ்" (Licinius) என்பவரின் உத்தரவின்படி, கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். பிளெய்ஸ் பிடிபட்டார். விசாரணை மற்றும் கடுமையான வாதங்களின் பின்னர், அவர் சிறையில் தள்ளப்பட்டார். பின்னர் அவர் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில், தமது ஒரே குழந்தையின் தொண்டையில் மீன் முள் சிக்கியதால் துயருற்ற தாய் ஒருவர், இவரது காலடியில் வந்து விழுந்தாள். தமது குழந்தையை குணமாக்க வேண்டி அவரது பரிந்துரையை வலியுறுத்தினாள். நின்று, அவளுடைய துயரத்தைத் தொட்டு, அவர் குழந்தைக்காக செபித்தார்.; குழந்தை குணப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, தொண்டை காயங்கள் மற்றும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக பிளேஸ் அழைக்கப்படுகிறார்.

கவர்னரின் வேட்டைக்காரர்கள் அவரை திரும்ப செபஸ்டீ கொண்டு செல்லும் வழியில், ஒரு ஏழைப் பெண்ணை சந்தித்தனர். அந்த பெண்ணுடைய ஒரே பன்றியை ஒரு ஓநாய் பிடித்ததாக அழுதாள். பிளெய்ஸின் கட்டளையின்பேரில், ஓநாய் பன்றியை உயிருடனும் காயப்படுத்தாமலும் விட்டுச் சென்றது.

இவரது நினைவுத் திருநாளானது, "இலத்தீன்" (Latin Church) திருச்சபைகளில் ஃபெப்ரவரி மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.


St. Blaise


Little is known about St. Blaise, a 4th-century bishop who died a martyr. He was forced to flee due to religious persecution. While hiding in a cave, legend has it that he was discovered by a group of hunters, who found him surrounded by wild animals he had tamed. The hunters dragged him off to prison. On the way, he encountered a mother with a young son who had a bone stuck in his throat. Blaise commanded the bone be dislodged, and the child coughed up the bone.

St. Blaise's feast day is celebrated with the Blessing of the Throats with the following prayer:

Through the intercession of St. Blaise, bishop and martyr, may God deliver you from ailments of the throat and from every other evil. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen.


St. Blaise is also venerated as one of the "Fourteen Holy Helpers," a group of saints invoked as early as the 12th century in Germany and who are honored on Aug. 8: St. Denis of Paris (headache and rabies), St. Erasmus or Elmo (colic and cramp), St. Blaise (throat ailments), St. Barbara (lightning, fire, explosion and sudden and unprepared death), St. Margaret (possession and pregnancy), St. Catherine of Alexandria (philosophers and students, and wheelwrights), St. George (protector of soldiers), Sts. Achatius and Eustace (hunters), St. Pantaleon (tuberculosis), St. Giles (epilepsy, insanity, and sterility), St. Cyriac (demonic possession), St. Vitus (epilepsy), and St. Christopher (travelers). The German Dominicans promoted this veneraion, particularly at the Church of St. Blaise in Regensburg (c. 1320).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக