Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

lives of saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
lives of saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 டிசம்பர், 2024

டிசம்பர் 07 - அர்ச்‌. அம்புரோஸ்‌

 டிசம்பர் 07ம் தேதி

ஸ்துதியரும்‌, மேற்றிராணியாரும்‌, வேதபாரகருமான
அர்ச்‌. அம்புரோஸ்‌ 

அம்புரோஸ்‌ 340ம்‌ வருடம்‌ பிறந்தார்‌.உரோமையில்‌ சட்டக்கல்வி பயின்‌றார்‌. இவருடைய அசாதாரணமான திறமையைக்‌ கண்ட உரோமை சக்கரவர்த்தி, இவரை, இவருடைய 33வது வயதில்‌, இத்தாலியின்‌ வடக்குப்‌ பிரதேசத்திற்கு ஆளுனராக நியமித்தார்‌. மிலான்‌ அப்பிரதேசத்தினுடைய தலை நகராயிருந்தது.

 374ம்‌ வருடம்‌ மிலான்‌ நகர மேற்றிராணியார்‌ மரித்தார்‌. அச்சமயம்‌, ஆரிய பதிதர்களுக்கும்‌, கத்தோலிக்கர்களுக்கும்‌ இடையே வாக்குவாதமும்‌ கலவரமும்‌ ஏற்பட்டது. இறந்துபோன மேற்றிராணியார்‌, ஆரிய பதிதத்தை ஆதரித்திருந்தவர்‌ என்பதால்‌, அடுத்து வரவேண்டிய மேற்றிராணியாரும்‌ ஆரிய பதிதத்தைச்‌ சேர்ந்தவராயிருக்க வேண்டுமென்று அப்பதிதர்கள்‌ எல்லோரும்‌ வாதிட்டனர்‌. நகர மக்களிடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக, அந்நகர ஆளுனரான அம்புரோஸ்‌ அந்நகரின்‌ கதீட்ரலுக்கு, வீரர்களுடன்‌ விரைந்து வந்தார்‌. அப்போது, அவர்‌ இன்னும்‌ ஞானஸ்நானம்‌ வாங்காத அஞ்ஞானியாக இருந்தார்‌. அப்போது, இரு சாராரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மிக நேர்த்தியான பிரசங்கத்தை, அம்புரோஸ்‌ நிகழ்த்தினார்‌. 

சண்டை இல்லாமலும்‌, மட்டு திட்டத்துடனும்‌, அறிவுடைய மனிதர்களாக இப்பிரச்சினையை அவர்களுக்குள்‌ சுமூகமாக தீர்த்துக்கொள்ளும்படி, அந்நகர மக்களிடம்‌ கெஞ்சிக்‌ கேட்டுக்கொண்டார்‌. அவர்‌ பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென்று கூட்டத்திலிருந்து ஒரு குழந்தை, “இதோ! நம்‌ மேற்றிராணியார்‌, அம்புரோஸ்‌!” என்று இரண்டு முறை கூறியது. உடனே, கூட்டத்தினர்‌ எல்லோரும்‌, “நம்‌ மேற்றிராணியார்‌, அம்புரோஸ்‌!” என்று கூக்குரலிட்டனர்‌.  ஆனால்‌, இன்னும்‌ ஞானஸ்நானம்‌ கூட வாங்காத அம்புரோஸியார்‌, தனது மகிமையான பதவியை விட்டு விட்டு, ஆபத்தான ஆரிய பதிதர்களிடையே, ஒரு கத்தோலிக்க மேற்றிராணியாராக பதவியை, எப்படி ஏற்பது என்பதை உணர்ந்தவராக, கதீட்ரலை விட்டு, ஓடிவிட்டார்‌.  

பின்‌, அம்புரோஸ்‌, சக்கரவர்த்தியிடம்‌, ஞானஸ்நானம்‌ கூட வாங்காத தன்னை மிலான்‌ நகர மேற்றிராணியாராக ஆக்கும்‌ அந்நகர மக்களுடைய தீர்மானத்தை இரத்துசெய்யும்படி விண்ணப்பித்தார்‌.ஆனால்‌, அதற்கு, அவரிடம்‌, “நான்‌ கவர்னராக தேர்ந்தெடுத்த நீங்கள்‌ மேற்றிராணியாராக தகுதியடைந்ததைப்பற்றி மகிழ்ச்சியடைகிறேன்‌!” என்று கத்தோலிக்கரான உரோமை சக்கரவர்த்திக்‌ கூறினார்‌.அதைக்‌ கேட்ட அம்புரோஸியார்‌, ஒரு செனட்டரின்‌ வீட்‌டில்‌ மறைந்திருந்தார்‌. சக்கரவர்த்தியின்‌ தீர்மானத்தை அறிந்ததும்‌, செனட்டர்‌, அம்புரோஸியாரை,அவரிடம்‌, ஒப்படைத்தார்‌.

 உலகத்தில்‌ எங்கு சென்றாலும்‌, இதிலிருந்து தன்னைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ள முடியாது என்பதை உணர்ந்த அம்புரோஸ்‌, ஞானஸ்நானம்‌ பெற்று, குருப்பட்டமும்‌ பெற்றார்‌; அதே வருடம்‌ டிசம்பர்‌ 7ம்‌ தேதியன்று, மிலான்‌ நகர மேற்றிராணியாராக அபிஷேகம்‌ செய்யப்பட்டார்‌.  தன்‌ ஆஸ்திகளையெல்லாம்‌ ஏழைகளுக்கு அளித்த பிறகு, அர்ச்‌. சிம்பிளிசியானிடம்‌ அம்புரோஸ்‌, வேத இயலும்‌, வேதாகமும்‌ கற்றுக்கொண்டார்‌. ஆரிய பதிதர்கள்‌, புதிய மேற்றிராணியாரான அம்புரோஸ்‌, ஏற்கனவே அரசாங்கத்தின்‌ உறுப்பினராக இருந்ததாலும்‌, அரசாங்கத்தில்‌ அநேக ஆரிய பதித உறுப்பினர்கள்‌ இருந்ததாலும்‌, அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்‌, என்று எண்ணினர்‌. 

ஆனால்‌, திருச்சபையையும்‌, அரண்மனையையும்‌, செனட்‌ என்ற பாராளுமன்றத்தையும்‌, சக்கரவர்த்தியுடைய குடும்பத்தையும்‌ மிகவும்‌ துன்புறுத்திய ஆரிய பதித்தை எதிர்த்துப்போராடுவதற்கு, அர்ச்‌.அம்புரோஸ்‌, வழக்கறிஞரான தனது திறமைகளையும்‌, திறமையான பேச்சாளருக்கான திறமைகளையும்‌ பயன்படுத்தினார்‌. மேற்றிராணியார்‌ பதவி தனக்கு வேண்டாம்‌ என்றிருந்த போது, அவர்‌ கொண்டிருந்த அதே உறுதியான மன தைரியம்‌, அர்ச்‌. அம்புரோஸியாருக்கு, இப்போது ஆரிய பதிதத்தை எதிர்ப்பதற்கும்‌, சாங்கோபாங்கத்தின்‌ உத்தமதனத்தை நாடி, அதை அனுசரித்து முன்னேறுவதற்கும்‌ உதவியது. 

கோத்‌ என்ற முரட்டு இன மக்கள்‌ இவருடைய மேற்றிராசனத்திற்குள்‌ நுழைந்து அநேகரைச்‌ சிறைபிடித்துச்‌ சென்றபோது, அர்ச்‌. அம்புரோஸ்‌, தன்னிடமிருந்த பணம்‌ எல்லாவற்றையும்‌ செலவழித்து, சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை மீட்டார்‌. “பணயக் கைதிகளையும்‌ அடிமைகளாகச்‌ சிறை பிடிக்கப்பட்டவர் களையும்‌ மீட்புப்பணத்தை அளித்துக்‌ காப்பாற்றி மீட்பதே பிறா்சிநேக அலுவல்களில்‌ மிகச்சிறந்ததும்‌, மகா பலனுள்ளதுமான காரியம்‌!” என்று அர்ச்‌. அம்புரோஸ்‌ கூறுவார்‌. தேவாலயத்திலிருந்த தங்கப்பாத்திரங்களை உருக்கி, அதை விற்றுப் பணயக்‌ கைதிகளையும்‌ அடிமைகளையும்‌ மீட்டார்‌; அதைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்போது, “ஆண்டவருக்காக ஆன்மாக்களைக்‌ காப்பாற்றுவது, திரவியங்களைச்‌ சேகரிப்பதைவிட மேலானது!” என்று கூறுவார்‌.

 390ம்‌ வருடம்‌, தெசலோனிக்காவில்‌, உரோம சக்கரவர்த்திக்கு எதிராகக்‌ கலகம்‌ ஏற்பட்டதை அறிந்த சக்கரவர்த்தி, சினமடைந்தவராக, தனது படைகளை தெசலோனிக்காவிற்கு அனுப்பி, அந்நகரவாசிகள் 7000பேர்களைக்‌ கொன்று போட்டார்‌. 

உரோமை சக்கரவர்த்தி, தியோடோசியுஸ்‌ , மிலான்‌ கதீட்ரலுக்கு வந்தபோது, மேற்றிராணியாரான அர்ச்‌.அம்புரோஸ்‌, சக்கரவர்த்தியை தேவாலயத்திற்குள்‌ நுழைய அனுமதிக்கவில்லை. “நீர் செய்த மாபெரும்‌ கொலைபாதகத்திற்காக மனஸ்தாபப்‌ படாமல்‌, நுழைய வேண்டாம்!‌ என்று பரிசுத்த மேற்றிராணியார்‌, சக்கரவர்த்தியிடம்‌ கூறினார்‌; சக்கரவர்த்தியும்‌, பகிரங்கமாக மனஸ்‌தாபப்பட்டு, மன்னிப்பு கேட்டார்‌. 397ம்‌ வருடம்‌ ஏப்ரல்‌ 4ம்‌ தேதி, அர்ச்‌.அம்புரோஸியார்‌ பாக்கியமாய்‌ மரித்தார்‌. அவருடைய சரீரம்‌ இன்னும்‌ புதுமையாக அழியாத சரீரமாக இருக்கிறது.அவர்‌ மேற்றிராணியாராக அபிஷேகம்‌ செய்யப்பட்ட டிசம்பர்‌ 7ம்‌ தேதி, அவருடைய வருடாந்திர திருநாளாகக்‌ கொண்டாடப்படுகிறது.திருவழிபாட்டிற்கான எதிரெதிர்‌ தேவாலய இணைக்‌ குழுப்‌ பாட்டுப்பாடும்‌ முறையை, அர்ச்‌.அம்புரோஸ்‌ ஏற்படுத்தி, பரப்பினார்‌;  வேனி ரெடம்டோர்‌ ஜென்சியும்‌ என்ற கிறீஸ்துமஸ்‌ பாடலை இயற்றினார்‌. ஆதியிலிருந்த நான்கு வேதபாரகர்களில்‌, அர்ச்‌. அம்புரோஸியாரும்‌ ஒருவர்‌; மிலான்‌ நகரின்‌ பாதுகாவலராகத்‌ திகழ்கிறார்‌;அர்ச்‌.அகுஸ்தீனார்‌ மனந்திரும்புவதற்கும்‌, ஒரு தலைசிறந்த வேதபாரகராக மாறுவதற்கும்‌, அர்ச்‌. அம்புரோஸியார்‌ காரணமாயிருக்கிறார்‌; ஆரிய பதிதத்தைத்‌ தன்‌ எழுத்துத்‌ திறமையால்‌, அர்ச்‌. அம்புரோஸியார்‌, தன்‌ மேற்றிராசனத்தில்‌, அழித்துப்போட்டார்‌. 

 மகிழ்ச்சியாகக்‌ கொண்டாடக்கூடிய பொது நிகழ்வுகளின்‌ போது, சர்‌வேசுரனை ஸ்துதித்துப்பாடும்‌ வழக்கத்தின்படி பாடப்படுகிற தே தேயும்‌ லவுதாமுஸ்‌ என்ற நன்றியறிந்த ஸ்தோத்திரப்பாடலை,அர்ச்‌. அகுஸ்தீனார்‌ ஞானஸ்நானம்‌ பெற்றபோது, அர்ச்‌. அம்புரோஸியார்‌, அர்ச்‌. அகுஸ்தீனாருடன்‌ சேர்ந்து, எதிரெதிர்‌ இணைக்குழு பாடலாக இயற்றினார்‌. 

“உறங்குகிறவர்களுக்கு தேவ ஆசீர்வாதங்கள்‌ அருளப்படுகிறதில்லை! ஆனால்‌ விழிப்புடன்‌ கண்காணித்துக்கொண்டிருப்பவர்களுக்கே அவை அருளப்படுகின்றன!”-அர்ச்‌.அம்புரோஸியார்‌.

ஸ்துதியரும், மேற்றிராணியாரும், வேதபாரகருமான அர்ச்‌. அம்புரோஸியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 



Feast of St. Ambrose

December 7

Aurelius Ambrosius, better known as Saint Ambrose, was born in 340 A.D. He studied law in Rome and, due to his extraordinary abilities, was appointed by the Roman Emperor as the governor of northern Italy at just 33 years old, with Milan as his headquarters.

The Call to Serve

In 374 A.D., the Bishop of Milan passed away, leading to a fierce dispute between Catholics and Arian heretics over his successor. Arianism denied the divinity of Jesus Christ, and the former bishop had supported this heresy. The rivalry escalated into a riot in the cathedral.

As governor, Ambrose, though not yet baptized, took charge of restoring peace. He addressed the crowd with a plea for harmony and rational decision-making. During his speech, a child suddenly shouted, “Ambrose for bishop!” The crowd echoed this cry, unanimously calling for Ambrose to take the position.

Initially, Ambrose resisted, reluctant to leave his political career for a challenging religious role. He fled and even appealed to the emperor, citing his lack of baptism. However, the emperor supported the people's decision, and Ambrose ultimately surrendered. He was swiftly baptized, ordained, and on December 7, 374 A.D., consecrated as Bishop of Milan.

Leadership and Legacy

Ambrose gave away his wealth to the poor and sought theological instruction from Saint Simplician. Though the Arians expected him to support their cause, Ambrose used his skills as a lawyer and orator to defend Catholic doctrine. His tenacity became a hallmark of his episcopal ministry.

  • Charity: During Gothic invasions, Ambrose ransomed captives using his own funds and even melted Church treasures for the cause, famously stating, “It is better to save souls for the Lord than to save treasures.”
  • Confronting Power: After the massacre of 7,000 people in Thessalonica, Ambrose confronted Emperor Theodosius, barring him from entering the cathedral until he publicly repented—a rare act of moral courage.

Contributions to the Church

St. Ambrose is credited with introducing the antiphonal chant, where one side of the choir alternates with the other. He also composed the Christmas hymn “Veni Redemptor Gentium.”

  • Te Deum Laudamus: Tradition holds that Ambrose and St. Augustine improvised this Latin hymn at Augustine’s baptism.
  • Ambrose influenced St. Augustine, guiding him on his path to sainthood.

Death and Patronage

St. Ambrose passed away on April 4, 397 A.D. His incorrupt body remains venerated. As one of the four original Doctors of the Church, he is the patron saint of Milan.

Wisdom of St. Ambrose

"Divine blessings are not granted to those who sleep, but to those who keep the watch."

🌟 Let us honor St. Ambrose, a model of faith, courage, and wisdom, on this feast day.

திங்கள், 25 நவம்பர், 2024

November 22 - St. Cecilia

 

நவம்பர்‌ 2️2️

வேதசாட்சியும் கன்னிகையுமான

(அழியாத சரீரமுடைய முதல்‌ அர்ச்சிஷ்டவள்‌)

கி.பி.177ம்‌ வருடம்‌ கத்தோலிக்க வேத விசுவாசத்திற்காக கொடூர உபத்திரவங்கள்‌ பட்டு, வேதசாட்சியாக மரித்த இந்த இளம்‌ அர்ச்சிஷ்ட வள்‌, பரிசுத்த கற்பு என்கிற மகா அழகிய நறுமண மலர்களான கிறீஸ்துவ கன்னிகையர்களும்‌ வேதசாட்சிகளுமானவர்களில்‌ மிக முக்கியமான வேதசாட்சியாக திகழ்கின்றார்‌.

அர்ச்‌ செசிலியம்மாள்‌, உரோமை நகரின்‌ மிகவும்‌ பிரசத்திபெற்ற பத்ரீசியாரின்‌ மகளாகப்‌ பிறந்தார்‌.இவர்‌ மட்டுமே, இவருடைய குடும்பத்தில்‌ கிறீஸ்துவளாக இருந்தார்‌. சுரங்கக் கல்லறைக் கோவிலில்‌ நிகழ்ந்த கத்தோலிக்க ஜெபவழிபாடுகளில்‌ செசிலியம்மாள்‌ கலந்துகொண்டார்‌. செசிலியம்மாளுடைய பெற்றோர்கள்‌, ஒன்றில்‌, மகள்‌ மேல்‌ இரக்கப்பட்டு, அதற்கு அனுமதித்திருக்க வேண்டும்‌; அல்லது, மகள்‌ மேல்‌ அக்கறையில்லாதவர்களாக இருந்திருக்க வேண்டும்‌.

இளமையிலேயே அர்ச்‌. செசிலியம்மாள், தன்‌ கன்னிமையை ஆண்டவருக்கு அர்ப்பணித்து ஒப்புக்கொடுத்திருந்தார்‌; பரிசுத்த கற்பின்‌ வார்த்தைப்பாட்டை எடுத்திருந்தார்‌. இருப்பினும்‌, செசிலியின்‌ பெற்றோர்கள்‌, அஞ்ஞானியான ஒரு இளம்‌ உயர்குடிமகனான வலேரியனுக்கு திருமணம்‌ செய்து வைத்தனர்‌. திருமண நாளன்று மாலையில்‌, திருமண விருந்திற்கான இசை இன்னும்‌ காற்றில்‌ மிதந்து கொண்டிருந்த நேரத்தில்‌, உரோமாபுரியின்‌ உயர்குடி மகளும்‌ அறிவிலும்‌ அழகிலும்‌ சிறந்து விளங்கிய இளம்‌ கன்னிகையுமான செசிலியம்மாள்‌, தனது கன்னிமை விரதத்துவத்தைப்‌ புதுப்பித்தார்‌.

அதே திருமண நாளின்‌ மாலை நேரத்தில்‌, வலேரியனிடம்‌, செசிலி, தான்‌ கன்னிமை விரதத்துவத்தின்‌ வார்த்தைப்பாட்டை சர்வேசுரனுக்கு அளித்திருப்பதாகவும்‌, அதற்காக ,தன்னை தனது காவல்‌ சம்மனசானவர்‌ பாதுகாப்பதாகவும்‌ கூறினார்‌. மேலும்‌, வலேரியனிடம்‌, செசிலியம்மாள்‌, “நீங்கள்‌ என்னிடம்‌ அணுகி வந்தால்‌, அது, என்‌ காவல்‌ சம்மனசானவருக்குக்‌ கோபத்தைத்‌ தூண்டக்கூடும்‌; அதன்‌ காரணமாக, உம்மை பழிவாங்கும் படியாக அவரின்‌ தாக்குதல்களுடைய அடிகளுக்கு நீர்‌ ஆளாகக்‌ கூடும்‌!” என்று கூறினார்‌.

அதற்கு வலேரியன்‌, “நான்‌ உன்னுடைய காவல்‌ சம்மனசானவரைக்‌ காண்பேனாகில்‌, உன்னுடைய விருப்பத்தின்படி நான்‌ நடந்துகொள்வேன்!”‌ என்று கூறினார்‌. அதற்கு செசிலியம்மாள்‌, “நீர்‌, கத்தோலிக்கனாக மாறுவீர்‌ என்றால்‌, நிச்சயமாக என்‌ காவல்‌ சம்மனசானவரைக்‌ காண்பீர்!”, என்று வாக்குறுதி அளித்தார்‌;

அதன்‌ பின்‌,வலேரியனை, உர்பன்‌ பாப்பரசரிடம்‌ செசிலியம்மாள்‌ கூட்டிச்‌ சென்றார்‌; ஞானஸ்நானம்‌ பெறும்படியாக, அன்றிரவே, தன்னிடம்‌ வந்த வலேரியன்‌ மட்டில்‌, பரிசுத்த பாப்பரசர்‌ வெகுவாக சந்தோஷமடைந்தார்‌; ஞான உபதேசத்தைக்‌ கற்பித்தார்‌; ஞானஸ்நானத்தையும்‌ அன்றிரவே பாப்பரசர்‌, வலேரியனுக்கு அளித்தார்‌; கிறீஸ்துவராக வலேரியன்‌ தனது மாளிகைக்குத்‌ திரும்பி வந்தார்‌; தன்‌ இல்லத்தை அடைந்ததும்‌, வலேரியன்‌, செசிலியம்மாளுடைய காவல்சம்மனசானவரை மெய்யாகவே கண்டார்‌; காவல்‌ சம்மனசானவர்‌ தன்‌ இருகரங்களிலும்‌ இரண்டு ரோஜா மலர்‌ கிரீடத்தை வைத்திருப்பதைக்‌ கண்டார்‌; வலேரியனுக்கும்‌, செசிலியம்மாளுக்கும்‌, அவர்களுடைய தலைகளில்‌, காவல்‌ சம்மனசானவரே, அந்த ரோஜா மலர்கிரீடங்களைச்சூடினார்‌.

விரைவிலேயே அவர்கள்‌ இருவரும்‌ வேதசாட்சிய முடியைப்‌ பெறப்‌ போகிறார்கள்‌ என்பதை, அர்ச்‌.செசிலியம்மாள்‌ உடனே புரிந்துகொண்டார்‌. அச்சமயம்‌, சர்வேசுரனிடமிருந்து எந்த தேவ வரப்பிரசாதத்தையும்‌ வலேரியன்‌ பெற்றுக்கொள்ளலாம்‌. சர்வேசுரன்‌ வலேரியன்‌ மட்டில்‌ மிகவும்‌ மகிழ்வடைந்திருக்கிறார்‌, என்று, அறிவிக்கப்பட்டது. உடனே, வலேரியன்‌, தான்‌ பெற்ற இந்த தேவ வரப்பிரசாதத்தை, தன்‌ சகோதரனான திபூர்ஷியுசும்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌ என்று விரும்பி, அந்த விருப்பத்தை விண்ப்பித்தார்‌. உடனே வலேரியனுடைய விருப்பத்தின்படி, அவருடைய சகோதரனான திபூர்ஷியுசும்‌ கத்தோலிக்கனாக மனந்திரும்பினார்‌. இரு சகோதரர்களும்‌, பெரிய செல்வந்தர்களாக இருந்ததால்‌, வேத சாட்சிய மரணத்தினால்‌, தந்தையை, தாயை, பெற்றோர்களை, மகன்களை இழந்துபோன கிறீஸ்துவக் குடும்பங்களுக்கு பொருள்‌ உதவி செய்வதிலும்‌, அவர்களை ஆதரிப்பதிலும்‌, வேதசாட்சிகளாக உயிரிழந்த கிறீஸ்துவர்களை அடக்கம்‌ செய்வதிலும்‌ ஈடுபட்டு, இறுதியில்‌ அதே வேதசாட்சிகளாக மரிப்பதற்கும்‌ துணிந்தனர்‌.

அதன்‌ விளைவாக, விரைவிலேயே அவர்கள்‌ இருவரும்‌ சிறை பிடிக்கப்பட்டனர்‌; இவ்விரு சகோதரர்களும்‌ வேதசாட்சிகளாகக்‌ கொல்லப்பட வேண்டிய இடத்திற்குக்‌ கூட்டிச்‌ சென்ற இராணுவ அதிகாரியான மாக்சிமுசையும்‌ மனந்திருப்பினர்‌; வழியில்‌ இவர்கள்‌ மெய்யான சர்வேசுரனைப்‌ பற்றிய ஞான உபதேசத்தைக்‌ கேட்ட மாக்சிமுஸ்‌ மனந்திரும்பி கிறீஸ்துவ விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார்‌. இவர்கள்‌ இருவரையும்‌ கொல்வதற்கான அதிகாரியான மாக்‌சிமுஸ்‌, மரண தண்டனையை ஒரு நாளைக்குத்‌ தள்ளிப்போட்டு விட்டு, இவர்கள்‌ இருவரையும்‌ தன்‌ வீட்டிற்குக் கூட்டிச் சென்றார்‌; தன் குடும்பத்தாருடனும்‌ வீட்டாருடனும்‌, சேர்ந்து ஞானஸ்நானம்‌ பெற்று, கிறீஸ்துவன்‌ ஆனார்‌. வலேரியன்‌, திபூர்ஷியுஸ்‌ மற்றும்‌ அவர்களால்‌ கிறீஸ்துநாதரிடம்‌ கூட்டிவரப்பட்ட மாக்சிமுஸ்‌ ஆகிய மூவரும்‌ தலைவெட்டி வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்‌.

அச்சமயம்‌, செசிலியம்மாள்‌, கைதுசெய்யப்பட்டு, உயிருடன்‌ எரித்து கொல்லப்படும்படியான தண்டனைத்‌ தீர்ப்பை அடைந்தார்‌. ஆனால்‌, நெருப்பு செசிலியம்மாளைத்‌ தீண்டவில்லை! ஆதலால்‌, தலைவெட்டிக்‌ கொல்லப்பட்டார்‌. ஆனால்‌, கொலைக்காரன்‌, செசிலியம்மாளின்‌ கழுத்தை நடுங்கியபடி வெட்டியதால்‌, கழுத்து முழுமையாக வெட்டுப்படாமல்‌ அரைகுறையாக வெட்டப்பட்டு, செசிலியம்மாள்‌; கீழே கிடந்தார்‌; இரண்டு நாட்கள்‌ உயிருடன்‌ இருந்து, கொடிய அவஸ்தைப்‌ பட்டார்‌.

அர்ச்‌. செசிலியம்மாளுடைய பரிசுத்த அழியாத சரீரம்‌, பிரடக்ஸ்டாடுஸ்‌ என்‌ற சுரங்கக்‌ கல்லறையில்‌, 600 வருடங்கள்‌ கழித்து, கி.பி.822ம்‌ வருடம்‌, முதலாம்‌ பாஸ்கல்‌ பாப்பரசரால்‌ கண்டுபிடிக்கப்பட்டது. 1599ம்‌ வருடம்‌ மறுபடியும்‌, அர்ச்‌.செசிலியம்மாளின்‌ பரிசுத்த சரீரம்‌ அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது!

அர்ச்‌.செசிலியம்மாளே! அர்ச்‌.வலேரியனே! அர்ச்‌.திபூர்ஷியஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்‌!

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

August 26 - ST. ZEPHYRINUS - அர்ச்‌. ஸெஃப்ரினுஸ்

 ஆகஸ்டு 2️6️ம்தேதி

வேதசாட்சியும்பாப்பரசருமான
 அர்ச்‌. ஸெஃப்ரினுஸ்திருநாள்

 

உரோமை நகரவாசியான இவர்‌, கி.பி.199ம்வருடம்‌, திருச்சபையின்‌ 15வது பாப்பரசராக, முதலாம்விக்டர்பாப்பரசர்மரித்தபிறகு, பதவியேற்றார்‌. இவருடைய ஆட்சிகாலத்தில்‌,திருச்சபை மிகக்கடுமையான துன்ப உபத்திரவங்களுக்கு ஆளானது! 202ம்வருடம்‌, செப்டிமுஸ்செவேருஸ்என்ற கொடுங்கோலனான உரோமைச்சக்கரவர்த்தி ஆண்டபோது, திருச்சபைக்கு எதிரான மாபெரும்இரத்தக்களரியான 5வது துன்ப உபத்திரவக் காலத்தை கிறீஸ்துவர்களுக்கு எதிராக நிகழ்த்தினான்‌! இது, 9 வருடகாலமாக, இவனுடைய மரணம்வரை, 211ம்வருடம்வரை நீடித்திருந்தது.

இக்கொடிய துன்ப உபத்திரவக்காலம்முடியும்வரை, பாப்பரசர்தனது மந்தையை வழிநடத்தும்படியாக, ஒளிந்திருந்தார்‌; துன்ப உபத்திரவத்தில்அலைக்கழிக்கப்பட்டிருந்த நமதாண்டவரின்சீடர்களான கிறீஸ்துவர்களுக்கு ஆறுதலையும்தேற்றரவையும்அளித்து வந்தார்‌. அச்சமயம்திருச்சபையில்ஜீவித்த ஸ்துதியர்களான குருக்கள்துறவியரைப்போலவே, இவரும்உத்தமமான பிறர் சிநேகத்தினிமித்தமாகவும்துன்புறுகிற கிறீஸ்துவர்கள்மேல்கொண்ட இரக்கத்தினிமித்தமாகவும்‌, அதிக துன்பப்பட்டார்‌. வேதவிசுவாசத்திற்காக தங்கள்உயிரைக்கையளித்து மகிமையான வேதசாட்சிய வெற்றியின்கிரீடத்தை அடைந்த வேதசாட்சிகள்மெய்யாகவே இவருக்கு ஆனந்த சந்தோஷத்தை அளித்தனர்‌; ஆனால்‌, அதே சமயம்‌, வேத விசுவாசத்தில்உறுதியாக இல்லாமல்‌, விசுவாசத்தை மறுதலித்தவர்களாலும்‌, பதிதர்களாலும்‌, ஏற்பட்ட மிக ஆழமான அநேகக்காயங்களால்‌, இப்பரிசுத்தப்பாப்பரசர்மிகவும்துன்புற்றார்‌. திருச்சபையில்சமாதான காலம்திரும்ப வந்த போது, இப்பதிதம்தொடர்ந்து அலைக்கழித்துக்கொண்டிருந்தது!

தெர்துல்லியன்என்ற கிறீஸ்துவ வேதசாஸ்திரி, ஒரு பதிதத் தப்பறையில்வீழ்ந்ததைக்கண்டு, இப்பரிசுத்த பாப்பரசர்பெரிதும்வேதனையடைந்தார்‌. இருப்பினும்‌, தியோடோசியன்பதிதத்தைத்தழுவியிருந்த மேற்றிராணியாரான நாட்டாலிஸ்என்பவரை மனந்திருப்பும்படியாக, சர்வேசுரன்தாமே, மிகக்கண்டிப்பான திருத்தலினுடைய துன்பத்தை அனுப்பினார்‌; அதன்காரணமாக, தன்பதிதத்தப்பறையை நன்குணர்ந்தவராக, கண்கள்திறக்கப்பட்டவராக, நாட்டாலிஸ்‌, உத்தமமான மனஸ்தாபத்துடன்‌, கிறீஸ்துவின்பிரதிநிதியான பாப்பரசரிடம்வந்து முழங்காலிலிருந்து, திருச்சபைக்கு எதிராகத்தான்செய்த கிளர்ச்சிக்காக மன்னிப்பு கேட்டார்‌.

மனந்திரும்பி உத்தம கத்தோலிக்க மேற்றிராணியாரானர்‌. இக்காரியம்பாப்பரசருக்கு ஆறுதலாக இருந்தது! யுசேபியுஸ்என்ற சரித்திர ஆசிரியர்‌, இப்பரிசுத்த பாப்பரசர்‌, பதிதர்களுடைய தேவதூஷணங்களுக்கு எதிராக அயராமல்எவ்வளவு அதிக ஆர்வத்துடன்உழைத்தாரென்றால்‌, இந்த பதிதர்கள்இவரை, உச்சக்கட்ட கோபத்துடன்‌, வெறுத்தார்கள்‌. இவருடைய மகிமையாக, இந்த பதிதர்கள்தாமே, கிறீஸ்துநாதருடைய தேவத்துவத்தின்முதன்மையான பாதுகாவலர்‌, என்று இப்பரிசுத்த பாப்பரசரை, அழைத்தனர்‌. இப்பாப்பரசர்‌, 19 வருட காலம்திருச்சபையை ஆண்டு நடத்தினார்‌; பாஸ்கு திருநாளாம்நமதாண்டவரின்மகிமைமிகு உயிர்ப்பு திருநாளன்று, எல்லா விசுவாசிகளும்திவ்ய நன்மை உட்கொள்ளவேண்டும்என்பதைக்கட்டாயமாக்கினார்‌. 217ம்வருடம்ஸெஃப்ரினுஸ்பாப்பரசர்வேதசாட்சியாகக்கொல்லப்பட்டார்‌: இவருடைய சொந்தக்கல்லறையிலேயே ஆகஸ்டு 26ம்தேதி அடக்கம்செய்யப்பட்டார்‌.

தியோடோசியன்பதிதம்என்றால்என்ன? நமதாண்டவரான திவ்ய சேசுநாதர்சுவாமி, யோர்தான்நதியில்ஞானஸ்நானம்பெறும்வரை சாதாரண மனிதராயிருந்தார்என்றும்‌, அதன்பின்னரே, அவர்கிறீஸ்துநாதராக மாறினார்என்றும்தப்பறையானக்கருத்துக்களை, தியோடோசியன்பதிதர்கள்பரப்பி வந்தனர்‌. 190ம்வருடம்தோன்றிய இப்பதிதத்தப்பறை, 4ம்நூற்றாண்டில்முற்றிலுமாக அழிந்தது!

வேதசாட்சியான அர்ச்‌.  ஸெஃப்ரினுஸ்பாப்பரசரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 

August 25 - St. Louis - அர்ச்‌. லூயிஸ்‌

 

 

ஆகஸ்டு 2️5️ம்தேதி

ஸ்துதியரான அர்ச்‌. லூயிஸ்அரசர்திருநாள்

 

 விசுவாசத்திலும்‌, தைரியத்திலும்‌, நீதியினிமித்தம்கொண்டிருந்த சிநேகத்திலும்‌ , தன்னிகறற்றவராக சகல அரசர்களுக்கும்நன்மாதிரி கையாக, உத்தம கத்தோலிக்க அரசராக திகழ்ந்த அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, “பூமியின்சர்வேசுரனுடைய இராணுவப்படைகளின்தளபதிஎன்று அழைக்கப்பட்டார்‌. பிரான்ஸ்நாட்டின்சரித்திரத்தில்‌, இவரை விட பெரிய அரசர்இல்லை. இவர்தமது சாம்ராஜ்ஜியமான பிரான்ஸ்நாட்டை, 9ம்லூயிஸ்அரசராக, மிகுந்த சமாதானத்துடனும்‌, நீதியுடனும்‌, 44 வரு டங்கள்‌, ஆட்சி செய்து வந்தார்‌; இவர்தமது அரசாட்சியில்‌, மூன்று முக்கியமான காரியங்களை கடைபிடித்தார்‌: முதலில்சர்வேசுரன்மீது தேவ பயமும்‌, தேவபக்தியும்கொண்டிருப்பது: இரண்டாவதாக, சுயக்கட்டுப்பாடு, மூன்றாவதாக தனது குடிமக்கள்மீது உத்தமமான சிநேகமும்பாசமும்கொண்டிருப்பது! இவர்தனது ஆத்தும இரட்சணியத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்‌; அதைவிட, தனது குடிமக்களின்ஆத்தும இரட்சணியத்தின்மீது, அதிக அக்கறையுடன்செயல்பட்டார்‌; இதையே, இவர்தனது அதிமிக முக்கிய தலையாயக்கடமையாகக்கருதினார்‌.

அர்ச்‌. 9ம்லூயிஸ்அரசர்‌ 1214ம்வருடம்‌, ஏப்ரல்‌ 25ம்தேதி, பாரீஸுக்கு அருகிலுள்ள பாய்ஸ்ஸி என்ற இடத்தில்பிறந்தார்‌. இவருக்கு, 12 வயதானபோது, 1226ம்  வருடம்‌, நவம்பர்‌ 8ம்தேதியன்று, இவருடைய தந்தை இறந்தார்‌; அடுத்த ஒரு மாதத்திற்குள்இவரையே, இவருடைய 12வது வயதிலேயே, பிரான்ஸ்நாட்டின்அரசராக, ரீம்ஸ்கதீட்ரலில்முடி சூட்டினர்‌. இவர்சிறுவனாயிருந்ததால்‌, இவருடைய தாயாரான பிளாஞ்ச்மகாராணி, இவருக்கு நாட்டை ஆட்சி செய்வதில்உதவி புரிந்தார்கள்‌. கத்தோலிக்க உத்தமதனத்தில்சிறந்து விளங்கிய புண்ணியவதியான இந்த நல்ல தாயார்‌, சிறு வயதினரான தன்மகன்லூயிசிடம்‌, “மகனே! நீ ஒரு சாவான பாவத்தைக்கட்டிக்கொள்வதை விட, என்காலடியில்நீ இறந்து போவதைப்பார்க்கவே ஆசிக்கிறேன்‌!” என்று கூறினார்கள்‌; தன்தாயின்இப்பொன்மொழியை, அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, தன்வாழ்நாளெல்லாம்நினைவு கூர்ந்து, உத்தம பக்தியுள்ள கத்தோலிக்க அரச ராகக்திகழ்ந்தார்‌; இதுவே, இந்த நல்ல அரசரை, ஒரு அர்ச்சிஷ்டவ ராகும்படிச்செய்தது!  உத்தம கத்தோலிக்க புண்ணியவாளர்களான தாயும்‌, மகனும்பிரான்ஸ்நாட்டை ஆட்சி செய்த ஓராண்டு காலத்திற்குள்ளாக, கத்தோலிக்கப்படை ஒரு விசேஷ தேவ ஆசீர்வாதத்தினால்‌, ஆல்பிஜென்சிய பதிதர்களை அழித்து ஒழித்தது! இவர்பிறப்பதற்கு முன்பாக, பிரான்ஸ்நாட்டில்பரவியிருந்த ஆல்பிஜென்சியப்பதிகத்தை அழிப்பதற்காக, அந்நாட்டிற்கு வந்த அர்ச்‌.  சாமிநாதர்‌, மகா பரிசுத்த தேவமாதாவிடமிருந்து மகா பரிசுத்த ஜெபமாலையைப்பெற்று, ஜெபமாலையின்மீதான பக்தியை பரப்பி வந்தார்‌; ஜெபமாலையை ஜெபிக்கும்விதத்தையும்கற்றுக்கொடுத்தார்‌;

அச்சமயம்‌, அரசியான பிளாஞ்சம்மாள்‌, 12 வருட காலமாக குழந்தையில்லாமலிருந்ததால்‌, அவர்களிடம்‌, அர்ச்‌. சாமிநாதர்‌, ஜெபமாலையை பக்திபற்றுதலுடன், இடை விடாமல்தொடர்ந்து, ‌ ஜெபிக்கும்படி, அறிவுறுத்தினார்‌; அதன்படியே, மகாராணி, ஜெபமாலை ஜெபித்து வந்ததன்பயனாக, குழந்தை பிறந்தது; அதற்கு பிலிப்என்று பெயரிட்டனர்‌; ஆனால்அது இறந்துபோனது; புண்ணியவதியான பிளாஞ்ச்சம்மாள்‌, இன்னும்கூடுதல்பக்திபற்றுதலுடன்ஜெபமாலையை ஜெபித்து வந்ததுடன்‌, அரண்மனையிலிருந்த சகலருக்கும்‌,குடிமக்களுக்கும்‌, ஜெபமாலையை வினியோகித்து, எவ்லோரையும்‌ , தனக்குக்குழந்தை பிறப்பதற்காக ஜெபமாலையை ஜெபிக்கத்தூண்டி வந்தார்கள்‌. நாடு  முமுவதும்ஜெபமாலை ஜெபித்து வேண்டிக்கொண்டபிறகு, பிறந்த குழந்தை தான்‌ , இந்த உன்னத கத்தோலிக்க அரசரான அர்ச்.லூயிஸ்அரசர்‌!  அரசாட்சியின்அலுவல்கள்மத்தியில்‌, இளம்அரசரான லூயிஸ்‌,  கட்டளை ஜெபத்தைத்தவறாமல்‌, ஜெபித்து வந்தார்‌.

தினமும்இருமுறை திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன்கண்டு வந்தார்‌. இந்நாட்டிலிருக்கும்மகிமைமிக்க மாபெரும்தேவாலயங்கள்‌, இப்பொழுதும்கூட, இந்த அர்ச்சிஷ்ட அரசர்  கொண்டிருந்த பக்திபற்றுதலின்உன்னதமான நினைவுச்சின்னங்களாகத்திகழ்கின்றன! இவற்றினுள்பாரீஸ் நகரின்மகா பரிசுத்த தேவமாதாவின் கதீட்ரலிலுள்ள அழகிய செயிண்ட் சேப்பல்  சிற்றாலயம்தன்னிகரற்றவிதமாகக்திகழ்கிறது; இந்த தேவாலயத்தில்‌, இவர்பரிசுத்த பூமியிலிருந்து கொண்டு வந்த ஆண்டவருடைய பரிசுத்த முண்முடி, மாபெரும்அருளிக்கமாக, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! கிறீஸ்துவ உன்னத புண்ணியங்களால்தூண்டப்பட்டவிதமாகவே, அர்ச்‌. லூயிஸ்அரசருடைய சகல அரச அலுவல்களும்திகழ்ந்தன! தேவதூஷணத்தையும்‌ , சூதாட்டத்தையும்‌, கடன்கொடுத்து வட்டி வாங்குபவர்களையும்‌, விபச்சாரத்தையும்தண்டிப்பதற்கான சட்டங்களை இயற்றத்தீர்மானித்தார்‌. 9ம்கிரகோரி பாப்பரசரின்வலியுறுத்தலின்படி, 1243ம்வருடம்‌, தால்முட்என்ற யூதவேதபுத்தகத்தின்‌ 12000 கையெழுத்துப்பிரதிகள்பாரீஸ்நகரில்பகிரங்கமாக நெருப்பினால்சுட்டெரிக்கப்பட்டன! கத்தோலிக்கராக மனந்திரும்பிய நிக்கோலாஸ் டோனின்என்ற ஒரு யூதர்‌, இந்த தால்முட்என்ற யூத வேதபுத்தகத்தை மொழிபெயர்த்திருந்தார்‌; இப்புத்தகத்தில்நமதாண்டவருக்கும்‌, மகா பரிசுத்த தேவ மாதாவிற்கும்‌, கிறீஸ்துவ வேதத்திற்கும்எதிராக அடுத்து அடுத்த அத்தியாயங்களில்எழுதப்பட்டிருக்கும்தேவதூஷணங்களைச் சுட்டிக்காண்பித்து, இப்புத்தகத்திற்கு எதிரான 35 குற்றச்சாட்டுகளை வலியுறுத்தியிருந்தார்‌. இதன்படி, அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, இப்புத்தகத்தைப்பகிரங்கமாக பாரீஸ்நகரில்எரிக்கும்படி கட்டளையிட்டார்‌.

1248ம்வருடம்‌, அர்ச்‌. லூயிஸ்அரசர்ஏழாவது சிலுவைப்போரை  தலைமையேற்று வழிநடத்திச்சென்றார்‌; ஆண்டவருடைய பரிசுத்த  பூமியை விடுவிக்கும்படியாகவும்‌, பிரான்ஸ்நாட்டினுடைய வீரத்துவம்வாய்ந்த வீரர்களை,ஆண்டவருக்காக தங்கள்ஜீவியத்தை அர்ப்பணித்த வீரர்களை தன்னுடன்சேர்த்துக்கொள்ளும்படியாகவும்‌, இந்த சிலுவைப்போரை அர்ச்‌. லூயிஸ்அரசர்நடத்தினார்‌. கிறீஸ்துவ நாடுக ளுக்குள்ளே அதிக செல்வ திரவியமுடைய நாடான பிரான்ஸ்நாட்டி னுடைய அரசராகவும்‌, மிக அதிக கிறீஸ்துவ மக்களுடைய ஜனத்தொகையையுடைய நாட்டின்அரசராகவும்இவர் திகழ்ந்தார்‌. இந்த சிலுவைப்போரின்போது, அநேக இழப்புகள்நேரிடும்என்பதை நன்கறிந்திருந்த அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, உலக இழப்புகளை விட அதிக விலை மதிப்புள்ள பரலோக வெகுமதிகளும்சம்பாவனைகளையும்அடைய லாம்என்பதையே, எப்போதும்கருத்தில்கொண்டிருந்தார்‌.  1250ம்வருடம்‌, எகிப்தில்‌, மகமதியரால்‌, இவர்கைது செய்யப்பட்டார்‌; டாமியட்டா என்ற இடத்தில்‌, சிறைபிடிக்கப்பட்டார்‌;

அச்சமயம்‌, இவருடைய கூடாரத்தினுள்நுழைந்த ஒரு அராபிய சிற்றரசன்‌, இரத்தம்தோய்ந்த தன்குத்துவாளைக்காண்பித்து, இதோ சுல்தானைக்கொன்றுவிட்டேன்‌; எனக்கு ஒரு மாவீரர்பட்டத்தை அளிக்காவிடில்‌, உம்மையும்கொன்று போடுவேன்‌, என்று கூறி, மிரட்டினான்‌. அதற்கு அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, அவனிடம்அமைதியாக, “ஒரு கிறீஸ்துவ மாவீரர்நிறைவேற்றக்கூடிய எந்த கடமைகளையும்‌, ஒரு அவிசுவாசியால்நிறைவேற்ற முடியாது!” என்று பதிலளித்தார்‌. இவருக்கு சட்டபூர்வமான நிபந்தனைகளின்பேரிலான விடுதலை அளிக்கப்பட்டது; ஆனால்‌, தேவதூஷணத்தைக்கக்கக்கூடிய ஒரு வார்த்தைப்பாட்டை எடுக்கும்படி வற்புறுத்தப்பட்டார்‌.

அவிசுவாசிகளும்பதிதர்களுமான மகமதியர்கள்‌, வாள்களால்‌, இவருடைய தொண்டையைக்குறிவைத்தபடி, அந்த தேவதூஷணத்தைக்கூறும்படி வற்புறுத்தப்பட்டார்‌; திரளான கிறிஸ்துவ கைதிகளைக்கொல்லப்போவதாகவும்இரக்கமற்ற அந்த சுல்தான்இவரை அச்சுறுத்தினான்‌; இருப்பினும்‌, ஒரு அநிச்சை செயல்போல்‌, எதையும்சிந்திக்காமல்‌, அர்ச்‌.  லூயிஸ்அரசர்‌, தேவதூஷணமான அந்த வார்த்தைப்பாட்டை எடுப்பதற்கு உடனடியாக மறுத்து விட்டார்‌. பணயத்தொகையினால்‌, மீட்கப்பட்டதும்‌, அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, எகிப்திலிருந்து, பரிசுத்த பூமிக்குச்சென்றார்‌. நாசரேத்தை அடைந்ததும்‌, இவர்குதிரையிலிருந்து இறங்கினார்அங்கேயே முழங்காலிலிருந்து ஜெபித்தார்‌; பின்னர்‌, அந்நகரத்திற்குள்காலணியில்லாமல்‌, வெறுங்காலில்நடந்து சென்றார்‌. ஆண்டவருடைய பரிசுத்த மனிதவதாரத்தினுடைய பரமஇரகசியமான திருநிகழ்வு நிறைவேறிய இல்லத்திற்குள்‌, நாசரேத்பரிசுத்தத்திருக்குடும்பம்வசித்த இல்லத்திற்குள்‌, வெறுங்காலில்நுழைந்தார்‌. 

1252ம்வருடம்‌, இவருடைய தாயாரும்புண்ணியவதியுமான பிளாஞ்ச்மகாராணியார்இறந்ததால்‌, இவர்மறுபடியும்பிரான்ஸ்நாட்டிற்கு திரும்பிச்செல்ல நேரிட்டது. நாட்டின்சூழல்அமைதியடைந்ததும்‌, இவர்மறுபடியும்‌, இரண்டாவது தடவையாக சிலுவைப்போருக்குச்சென்றார்‌; 1270ம்வருடம்தூனிஸில்நிகழ்ந்த சிலுவைப்போரில்‌, மகமதியர்மீது, அர்ச்‌. லூயிஸ்அரசர்வெற்றியடைந்தார்‌. ஆனால்‌, அப்போது ஏற்பட்ட கொள்ளைநோயான விஷக்காய்ச்சல்நோய்க்கு இரையானார்‌. 1270ம்வருடம்‌, ஆகஸ்டு 25ம்தேதியன்று, தனது கூடாரத்தின்படுக்கையினருகில்‌, பக்தி பற்றுதலுடன்முழங்காலிலிருந்தபடி, மகா பரிசுத்த திவ்ய நன்மையை இறுதி தேவ திரவிய அனுமானமாகப்பெற்று உட்கொண்டார்‌. அந்நேரமே, பாக்கியமான மோட்ச பேரின்ப ஆனந்த சந்கோஷத்தினுள்மூழ்கியவராக, பாக்கியமாய்மரித்தார்‌!

 இவ்விதமாக எந்த நித்திய பேரின்ப மகிமை யில்‌, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மற்ற எல்லாவற்றையும்அர்ச்‌. லூயிஸ்அரசர்துறந்தாரோ, அதே நித்திய மோட்சப்பேரின்ப மகிமையை அடைந்தார்‌! 8ம்போனிஃபேஸ்பாப்பரசர்‌, 9ம்‌. லூயிஸ்அரசருக்கு 1297ம்வருடம்அர்ச்சிஷ்டப்பட்டம்அளித்தார்‌. பிரான்ஸ்அரசர்களிலேயே, அர்ச்சிஷ்டப்பட்டம்பெற்ற ஒரே அரசரும்இவரே! விசுவாசப்பிரமாணத்தை ஜெபிக்கும் சமயத்தில், “வார்த்தையானவர்மாமிசமாகிஎன்கிற வேத சத்தியத்தை உச்சரிக்கிறபோது,‌ முழங்காலில்இருந்து மனுவுருவான திவ்ய கர்த்தரை ஆராதித்து வணங்கும்வழக்கத்தை, அர்ச்‌. லூயிஸ்அரசர்தான்‌,முதலில்துவக்கினார்‌.

பின்னர்‌, திருச்சபை, உலகெங்கும்துரிதமாகப்பரவிய இப்பரிசுத்த பழக்கத்தை, திருவழிபாட்டின்விதிமுறையாகச்சேர்த்துக்கொண்டது. ஒருநாள்‌, அரண்மனை சிற்றாலயத்தில்‌, மகா பரிசுத்த தேவநற்கருணை கதிர்பாத்திரத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருந்தபோது, அர்ச்‌. லூயிஸ்அரசர்படிப்பறையில்ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்‌; அச்சமயம்‌, அவருடைய ஊழியர்களில்ஒருவர்‌, விரைந்து ஓடிவந்து, “அரசரே! ஒரு அழகிய புதுமை நம்சிற்றாலயத்தில்நிகழ்ந்து கொண்டிருக்கிறது! மகா பரிசுத்த தேவநற்கருணையில்திவ்ய குழந்தை சேசுநாதர்சுவாமி, காட்சியளித்துக்கொண்டிருக்கின்றார்‌!” என்று கூறினார்‌;அதற்கு, அர்ச்‌. லூயிஸ்‌, அவரிடம்‌, “ஒரு புதுமையை நோக்கிப்பார்த்து தான்‌, மகா பரிசுக்த தேவநற்கருணையில்நமதாண்டவருடைய மெய்யான பிரசன்னத்தை விசுவசிக்க வேண்டுமென்றிருந்தால்‌, நான்இவ்வளவு அதிக உறுதியாக விசுவசித்திருக்கக்கூடாமல்போயிருக்கும்‌! ஏற்கனவே விசுவசிக்கிறவர்களுக்கு புதுமைகள்தேவைப்படுகிறதில்லை!” என்று அமைதியாக பதிலளித்தார்‌. 

ஸ்துதியரான அர்ச்‌. லூயிஸ்அரசரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்‌!