Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 22 பிப்ரவரி, 2025

சப்தரிகை ஞாயிற்றுக்கிழமைக்கான பிரசங்கம்: இரட்சணியத்தினுடைய முக்கியத்துவத்தின் பேரில்- அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்

சப்தரிகை ஞாயிற்றுக்கிழமைக்கான பிரசங்கம்: 

இரட்சணியத்தினுடைய முக்கியத்துவத்தின் பேரில்- அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் 

அவன் அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப் பினான் (மத்20:2) நம் ஆத்துமங்கள், ஆண்டவருடைய திராட்சைத் தோட்டங் களாக இருக்கின்றன! நம் நல்ல அலுவல்களால், அவற்றை வளப்படுத்தி செழுமையாக்கவும், அதனால், நித்திய மகிமையினுள் நாம் அனுமதிக்கப்படுவதற்காகவும், ஆண்டவர் நமக்கு திராட் சைத் தோட்டங்களாகிய ஆத்துமங்களை அளித்திருக்கிறார். இது எப்படி நிகழ்கிறது? ஒரு கிறீஸ்துவன் விசுவசிக்கிறான்! இருப்பி னும், எதிர்காலத்தைப் பற்றி, அவன் பயப்படாமல் இருக்கிறான்! இது எப் படி நிகழ்கிறது, என்று ஸ்லாவியன் என்பவர் ஆச்சரியத்துடன் கூறுகின்றார். அதாவது, கிறீஸ்துவர்கள், மரணம், தீர்வை, நரகம், மோட்சம் என்ற நான்கு இறுதிக்கதிகளை விசுவசிக்கின்றனர்; ஆனால், இந்த வேத சத்தியங்கள் எல் லாம், மனித அறிவினால், புனையப்பட்ட கட்டுக் கதைகள் என்பதை ஏற்று, இந்த வேத சத்தியங்களை நம்பாதவர்கள் போல் ஜீவிக்கின்றனர்! ஒருபோதும் சாக மாட்டோம் என்பதுபோலவே அநேகர் ஜீவிக்கின்றனர். அல்லது, நரகமோ, மோட்சமோ, எதுவும் இல்லை என்பது போலவும், உலக ஜீவியத்தின் முடிவில், சர்வேசுரனுக்கு, தங்கள் ஜீவியத்தினுடைய கணக்கை ஒப்படைக்கத் தேவையில்லை என்பது போலவும் அநேகக் கிறீஸ்துவர்கள் உலகத்தில் ஜீவித்து வருகின்றனர்! ஒருவேளை அவர்கள், இந்த வேத சத்தியங்களை விசுவசியாமலிருக்கிறார்களா? இல்லை! அவர்கள், விசுவசிக்கின்றனர்! ஆனால், அவற்றைப் பற்றி தியானிப்பதில்லை! இவ்வித மாகவே அவர்கள் நித்தியத்திற்குமாக இழக்கப்படுகின்றனர்! உலகக் காரி யங்கள் பற்றி தங்களால் கூடிய சகல கவனத்தையும், செலுத்துகின்றனர். ஆனால், அதே சமயம், அவர்களுடைய ஆத்துமங்களின் இரட்சணியத்தின் மீது எந்த கவனத்தையும் அக்கறையையும் கொண்டிருக்க மாட்டார்கள். உங்கள் ஆத்துமங்களின் இரட்சணியமானது, எல்லா காரியங்களிலும் மகா முக்கியமான காரியமாயிருக்கிறது என்பதை, இன்று, நான், உங்களுக்குக் காண்பிப்பேன். முதல் தியானக்கருத்து: உங்கள் ஆத்துமங்களின் இரட்சணியமானது, எல்லா காரியங்களிலும் மகாமுக்கியமான காரியமாயிருக்கிறது. ஏனெனில், ஆத்து மம் இழக்கப்பட்டால், சகலமும் இழக்கப்பட்டுவிடும்! இரண்டாம் தியானக்கருத்து: உங்கள் ஆத்துமங்களின் இரட்சணியமானது, எல்லா காரியங்களிலும் மகாமுக்கியமான காரியமாயிருக்கிறது. ஏனெனில், ஒரு முறை ஆத்துமம் இழக்கப்பட்டால், அது நித்தியத்திற்குமாக இழக்கப் பட்டு விடும். முதல் தியானக்கருத்து: உங்கள் ஆத்துமங்களின் இரட்சணியமானது, எல்லா காரியங்களிலும் மகா முக்கியமான காரியமாயிருக்கிறது. ஏனெனில், ஆத்து மம் இழக்கப்பட்டால், சகலமும் இழக்கப்பட்டுவிடும்! 1.ஆனால், நாங்கள், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் (1 தெச 4:10-11) என்று அப்போஸ்தலரானஅர்ச்.சின்னப்பர் அறிவுரை கூறுகின்றார். பெரும்பான்மையான உலக நேசர்கள், உலகத்தைச் சார்ந்த அலுவல்க ளில் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டிருப்பார்கள்; எத்தகைய தளரா ஊக் கத்துடன் நீதி மன்ற வழக்கில், வெற்றியடையவோ அல்லது, நல்ல சம்பளத் தையுடைய வேலையைப் பெறவோ, அயராமல் அவர்கள் உழைப்பார்கள்!
அதற்காக எத்தனை வழிமுறைகளுக்குள் தங்களையே உட்படுத்திக் கொள் வார்கள்? அல்லது, எத்தனை விதிமுறைகளை அனுசரிப்பார்கள்? அவர்கள் சாப்பிடவும் மாட்டார்கள்! தூங்கவும் மாட்டார்கள்! ஆனால், அவர்களுடைய ஆத்துமங்களைக் காப்பாற்ற என்னென்ன முயற்சிகள் எடுப்பார்கள்? அவர்களுடைய குடும்ப காரியங்களில் அலட்சிய மாக இருந்து, கவனக்குறைவாக இருப்பதைப் பற்றி கூறும்போது, எல்லோ ரும் வெட்கப் படுவார்கள்.ஆனால், அவர்களுடைய ஆன்ம இரட்சணியத் தின் மட்டில் அலட்சியமாக கவனக்குறைவாக இருப்பதைப் பற்றிக் கூறும் போது, எவ்வாறு வெகு சிலரே வெட்கப்படுகின்றனர்? சகோதரரே! உங்கள் சொந்த அலுவல்களைப்பார்த்துக்கொள்ளுங்கள், என்று கூறும்போது, அர்ச்.சின்னப்பர், உங்களுடைய நித்திய இரட்சணியத் தினுடைய அலுவல்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதைப் பற்றியே, வலியுறுத்தி அறிவுறுத்துகின்றார். 2.சிறுவர்களுடைய அற்பக் காரியங்கள், அற்பக் காரியங்கள் என்று அழைக் கப்படுகின்றன.ஆனால், பெரியவர்களான மனிதர்களின் அற்பக்காரியங்கள் அவர்களுடைய அலுவல்கள் என்று அழைக்கப்படுகின்றன. அற்பக்காரியங் களான இவ்வலுவல்களின் நிமித்தமாக எவ்வளவு அநேக மனிதர்கள்,அவர் களுடைய ஆத்துமங்களை நித்தியத்திற்குமாக இழந்துபோயிருக்கின்றனர்! என்று அர்ச்.பெர்னார்டு கூறுகின்றார். ஒரு உலக பரிவர்த்தனையில்,உனக்கு இழப்பு ஏற்படுமாகில், மற்றொரு உலக பரிவர்த்தனையின் மூலமாக இந்த இழப்பை நீ ஈடு செய்வாய்.ஆனால், நீ சர்வேசுரனுடன் பகைமையில், இறந்து, உன் ஆத்துமத்தை நித்தியத்திற்குமாக இழக்க நேரிட்டால், இந்த மாபெரும் இழப்பை, உன்னால் எவ்வாறு ஈடு செய்யக்கூடும்? அவன் தன் ஆத்துமத்துக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26) என்று,நம தாண்டவர் தாமே அறிவுறுத்துவதை சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். இரட்சணியத்தின் மட்டில் விழிப்புடன் கவனமாயிருப்பதில் அலட்சி யம் செய்கிறவர்களைப் பார்த்து, அர்ச்.யுத்தேரியுஸ், உன்னை சிருஷ்டித்த திவ்ய கர்த்தரை விசுவசியமாலிருக்கும் மனிதனே! உன்னை எவ்வளவு விலைமதிப்புள்ளவனாக அவர் சிருஷ்டித்திருக்கிறார், என்பதை நீ அறிய மாட்டாயா? என்று திவ்ய இரட்சகர் உன்னிடம் கேட்கின்றார், என்று கூறு வார்.சர்வேசுரனுடைய சொந்த சாயலாகவே சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற நீ, உன் ஆத்துமத்தினுடைய விலைமதியா மதிப்பை புரிந்து கொள்ளவில்லை என்றால், உன்னைத் தமது சொந்த விலைமதியாத திவ்ய திரு இரத்தத்தி னால் மீட்டு இரட்சித்த நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்து நாதர்சுவாமி யிடமிருந்து அதைக் கற்றுக்கொள். அழிவுள்ள பொன்னினாலும், வெள்ளியினாலும்,நீங்கள் இரட்சிக்கப் படாமல், மாசுமருவற்ற ஆட்டுக்குட்டிக்கொப்பாகிய கிறீஸ்துநாதருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் (1 இரா 1:18,19) என்று அர்ச்.இராயப்பர் பிரசங்கிக்கின்றார். 3.அப்படியென்றால், சர்வேசுரன், உன் ஆத்துமத்திற்கு, அவ்வளவு மகா பெரிய விலைமதிப்பை நிர்ணயம் செய்திருக்கிறார்.அது, அவ்வளவு அதிக விலைமதிப்புள்ளதாயிருக்கிறதால் தான், அதைக் கைப்பற்றி தனது ஆதிக்கத் திற்குள் கொண்டு வந்து, தனக்குச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக., பசாசு, இரவு பகலாக துாங்காமல், இடைவிடாமல் அலைந்து திரிந்து, அதைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. ஆகவே தான், உன் சத்துரு உறங்குகிறதில்லை! நீ யோ உறங்கிக்கொண்டிருக்கிறாய்! என்று அர்ச்.அகுஸ்தீனார், ஆச்சரியத்து டன் கூக்குரலிடுகின்றார். உன் சத்துரு எப்போதும் உன்னைக் காயப்படுத் துவதற்காக, தூங்காமல் விழித்திருக்கிறான்; நீயோ சோம்பலாய் அசமந்த மாய் இருக்கிறாய்! ஒரு சமயம், 12ம் பெனடிக்ட் பாப்பரசரிடம், ஒரு இளவரசன் ஒரு உதவியை, தூதுவர் மூலமாகக் கேட்டபோது, பாப்பரசர், தூதுவரிடம், இளவரசரிடம் நான் கூறுவதைக் கூறுங்கள்: என்னிடம் இரண்டு ஆத்துமங் கள் இருக்குமாயின், ஒரு ஆத்துமத்தை இழந்து, இளவரசர் கேட்பதைக் கொடுப்பதன் மூலமாக நான் அவரை மகிழவைக்கக் கூடும்.ஆனால், என்னி டம் ஒரு ஆத்துமம் மட்டுமே இருக்கிறபடியால், அதை இழக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்! என்று, இளவரசருக்கு உதவக்கூடாமலி ருப்பதற்கான காரணத்தை விளக்கிக் கூறி, தூதுவரை அனுப்பிவைத்தார்; இவ்விதமாக பாப்பரசர், இளவரசர் கேட்ட உதவியை செய்ய மறுத்தார்.




4.சகோதரரே! நீங்கள் உங்கள் ஆத்துமங்களைக் காப்பாற்றினால், உங்கள் உலகக் காரியம் ஒவ்வொன்றிலும் அடையக்கூடிய தோல்விகள், மிக அற்ப மான காரியமாக இருக்கும்;ஏனெனில், நீங்கள் இரட்சணியத்தை அடைந் தால், முழுமையான பேரின்ப சந்தோஷத்தை முடிவில்லாமல் நித்தியத்திற் குமாக மோட்சத்தில், அனுபவிப்பீர்கள். ஆனால், உங்கள் ஆத்துமங்களை இழந்துபோனால், இந்த உலகத்தினுடைய சகல செல்வங்கள், மகிமைகள், கேளிக்கைகள் ஆகியவற்றினால், உங்களுக்கு என்ன பயன்? உங்கள் ஆன் மாக்களை நீங்கள் இழந்து போனால்,சகலமும் உங்களுக்கு இழக்கப்பட்டு விடும்! மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும்,தன் ஆத்து மம் சேதப்பட்டால்,அவனுக்குப் பிரயோசனமென்ன?(மத் 16:26) என்று நமதாண்டவர் தாமே,நம்மை எச்சரிக்கிறதை சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். ஆண்டவர் கூறிய இப்பொன்மொழியினால், அர்ச்.இலொயோலா இஞ்ஞாசியார், அநேகருடைய ஆத்துமங்களை, சர்வேசுரனிடம் கொண்டு வந்தார். அத்தகையவர்களில் குறிப்பிடத்தக்கவர், அர்ச்.பிரான்சிஸ் சவேரி யார். இவர் அச்சமயம், பாரீஸ் நகரில் உலக நன்மைகளை ஈட்டும்படியாக உழைப்பதில் தன்னையே அர்ப்பணித்திருந்தார். ஒருநாள், அர்ச். இஞ்ஞாசி யார், இவரிடம், பிரான்சிஸ்!நீர் யாருக்கு ஊழியம் செய்கிறீர்?உலகத்திற்கு ஊழியம் செய்கிறீரா? அது ஒரு துரோகி! அது செய்வதாக வாக்களிக்கும்! ஆனால் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாது! அப்படியே,அதுஅவற்றை யெல்லாம் நிறைவேற்றினாலும், அதனுடைய பொருட்கள் எல்லாம் எவ்வ ளவு காலம் நீடித்திருக்கும்? அவையெல்லாம், இந்த உலக ஜீவியத்தை விட அதிகமாகக் கடந்து நீடித்திருக்குமா? இறந்தபிறகு, நீர் உமது ஆத்துமத்தை இழந்துபோயிருந்தால், அவற்றினால் உமக்கு என்ன பிரயோசனம் உண் டாகும்? என்று கேட்டார். பின்னர், அர்ச்.இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரி யாரிடம், சுவிசேஷ பொன்மொழி வாக்கியங்களை நினைவுபடுத்தினார்: மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமம் சேதப்பட்டால்,அவனுக்குப் பிரயோசனமென்ன? ஒரு காரியம் தான் அவ சியம்! (லூக் 10:42)ஆகிய சுவிசேஷ வாக்கியங்களை அடிக்கடி நினைவுபடுத் திக் கொண்டிருப்பார்.


இந்த உலகத்தில், மகிமை பெருமை கண்ணியங்களைப்பெற்றுபெரிய செல்வந்தனாக ஆக வேண்டுமென்பது அவசியமல்ல! நாம் நம் ஆத்துமங்க ளை இரட்சிப்பதே அவசியமான காரியம். ஏனெனில், நாம் மோட்சத்தை அடையவில்லையெனில்,நரகத்திற்கு நாம் தீர்ப்பிடப்படுவோம்.இரண்டிற் கும் இடைபட்ட நிலைமை எதுவும் இல்லை. ஒன்றில் நாம் இரட்சிக்கப்படு வோம்; அல்லது, நித்தியக் கேட்டிற்குத் தீர்ப்பிடப்படுவோம். சர்வேசுரன் நம்மை இந்த உலகத்திற்காக சிருஷ்டிக்கவில்லை. நாம் உலகத்தில் செல்வந் தர்களாக வாழ வேண்டும் என்பதற்காகவோ, அல்லது கேளிக்கைகளை அனுபவிக்க வேண்டுமென்பதற்காகவோ, சர்வேசுரன் நம் உயிரைப் பாது காக்கவில்லை! இப்பொழுதோ, பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டுச் சர்வேசுர னுக்கு அடிமைகளானதினாலே, உங்களுக்குப் பலனாகப் பரிசுத்தத்தனமும், முடிவாக நித்திய ஜீவியமும் கிடைக்கின்றது!(உரோ 6:22) என்று, இக்கருத் தைப் பற்றியே,அர்ச்.சின்னப்பர் நமக்கு உபதேசிக்கின்றார். நாம் நித்திய மோட்ச மகிமையை அடைவதற்காகவே, சர்வேசுரன் நம்மை சிருஷ்டித்து நம்மைப் பாதுகாத்து வருகிறார். 5.சகல காரியங்களுக்கும் மேலாக, தன் ஆத்துமத்தினுடைய இரட்சணியத் தைத் தேடாதவன், ஒரு முட்டாள், என்று கூறுவதை அர்ச்.பிலிப் நேரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வுலகில் அழியக்கூடியவர்கள் மற்றும் அழியக்கூடாதவர்கள் என்கிற இருவிதமான மனிதர்கள் இருந்தார்கள் என்று கற்பனை செய்து பார்ப்போம்; அழியக்கூடாதவர்கள் முழுமையாக உலக ஆஸ்திகளை சேர்த்து வைப்பதிலேயே அர்ப்பணித்து வாழ்வதை, அழியக்கூடிய மனிதர்கள் காண்பார்களேயாகில், அவர்கள்,அழியக்கூடாத மனிதர்களைப் பார்த்து, நீங்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறீர்கள்? நித்திய நன்மைகளை மோட்சத்தில் சேர்த்து வைப்பதற்கான வல்லமையை நீங்கள் கொண்டிருக்கிற போதிலும், மரணத்துடன் அழிந்துபோகக்கூடிய உலக பொருட்களை சேகரிப்பதிலேயே உங்கள் ஜீவிய காலத்தை வீணில் செலவிடுகிறீர்களே! இவ்வுலகப் பொருட்கள் காரணமாகவே, நீங்கள் நித்தி ய நரக உபத்திரவங்களை அடையக்கூடிய அபாயத்தில் உங்களையே நிறுத்தியிருக்கிறீர்களே! ஆதலால், இந்த மரணத்துடன் முடிந்து விடக்கூடிய இவ்வுலகப்பொருட்களை கவனிக்கும் அலுவலை எங்களிடம் விட்டுவிடுங் கள்! எங்களுக்கு எல்லாம் இந்த மரணத்துடன் முடிந்து விடும்!என்று கூறுவ ார்கள். ஆனால், சகோதரரே!நாம் எல்லோரும் அழியக்கூடாதவர்கள்.நாம் ஒவ்வொருவரும் மறுவுலகத்தில், ஒன்றில்,நித்தியத்திற்கும் பேரின்ப பாக்கிய சந்தோஷத்தை அடைவோம்; அல்லது, நித்திய நரக உபாதையைஅனுபவிப் போம். ஆனால், பெரும்பான்மையான மனுக்குலத்தினரின் துர்ப்பாக்கிய மான நிலைமை என்னவெனில், அவர்கள்,தற்கால ஜீவியத்தின் மேல் எப் போதும் அதிக ஆர்வமுள்ளவர்களாகவே இருப்பதும், எதிர் காலத்தைப் பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை என்பதும் தான்.ஆ! அவர்கள் ஞானத் தை அடைவது எப்போதோ?அவர்களுக்குஎப்போதோ அறிவு உண்டாகும்? தங்களுக்கு என்ன கதி வரப்போகிறதென்று அவர்கள் யோசிக்காதிருக்கிற தென்ன? (உபா 32:29) என்று உபாகமத்தில், இதற்கான அறிவுரையை வாசிக்கிறோம். ஓ! அற்ப நேரமே நீடிக்கிற தற்கால உலக நன்மைகளிலிருந்து, தங்க ளையே எவ்வாறு விடுவித்துக் கொள்வது என்பதையும், மோட்சப் பேரின்ப மகிமையை அடைவதற்கும், நித்திய நரகத்தில் பசாசின் அடிமையாக விழா மல் தப்பிப்பதற்கும், எதை அவசியமாகக் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் நன்றாக அறிந்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! ஒரு சமயம், அர்ச்.பிலிப் நேரியார், பிரான்சிஸ் சாஸ்ஸெரா என்ற ஒரு இளைஞனிடம் உரையாடிக்கொண்டிருந்தார்; அவன் மிகத் திறமைசாலி யாயிருந்தான்; உலக மகிமையை அடையக்கூடியவன் என்று எல்லோரா லும் எதிர்பார்க்கப்பட்டவன்.அர்ச்சிஷ்டவர், அவனிடம், நீ பெரும் பாக்கி யமான நிலைமையை அடைவாய். நீ ஒரு மேற்றிராணியாராகவும், பின்னர் கர்தினாலாகவும் ஆகக்கூடும். முடிவில், நீ ஒரு பாப்பரசராகவே கூட ஆக லாம். ஆனால், அதன் பின் கட்டாயமாக என்ன வரும்? கட்டாயமாக வர வேண்டியது என்ன? இப்பொழுது, மகனே! போ! இந்த வார்த்தைகள் பற்றி சிந்தனை செய்! என்று கூறி அனுப்பி வைத்தார். கடைசியாகக் கட்டாயமாக என்ன வரவேண்டியிருக்கிறது? என்பதன் பேரில் தியானித்த பிறகு, அந்த இளைஞன், உலகத்தையும், தன் ஆஸ்திகளையும் துறந்து, தன்னையே முழுமையாக சர்வேசுரனுக்கு அர்ப்பணித்தான். அர்ச்.பிலிப் நேரியாரின் குருக்களுக்கான ஜெபக்கூடத்தின் துறவறசபையில் சேர்ந்து, பரிசுத்தமாய் மரித்தான். 6.இவ்வுலகத்தின் கோலம் மாயமாய்ப் போனது (1கொரி 7:31) என்று அர்ச். சின்னப்பர் போதிக்கின்றார். இப்பகுதியைப் பின்பற்றியே, கொர்னேலியுஸ் என்பவர், இந்த உலகமானது, நாடக மேடையாக இருக்கிறது என்கிறார். தற்கால ஜீவியமானது, கடந்துபோகும் ஒரு நாடகமாக இருக்கிறது. இந்த உலக ஜீவியமான நாடகத்தில் தன் ஆத்துமத்தைக் காப்பாற்றிக் கொள்வதன் மூலம், ஒருவன், தன் பாகத்தை நன்கு நடிக்கிறான்.ஆனால், அவன் உலக செல்வங்களை,மகிமைகளை சேகரிப்பதிலேயே தன் ஜீவியத்தை செலவிடு வானால், அவன் முட்டாள் என்று அழைக்கப்படுவான். மேலும், அவன் மர ணநேரத்தில், சுவிசேஷத்தில், பணக்காரனைப் பார்த்து, சர்வேசுரன், மூட னே! இந்தஇராத்திரியில் தானே,அவர்கள், உன் உயிரை உன்னிடத்தின்று வாங்குவார்களே!அப்போது நீ தேடினவைகள் யாருடையனவாகும்? (லூக் 12:20)என்று கூறுவதுபோல், இவனையும் பார்த்துக் கடிந்துகொள்வார். அவர்கள் உன் உயிரை வாங்குவார்கள், என்கிற வாக்கியத்தைப் பற்றி தொலேதுஸ் என்பவர், பின்வருமாறு விவரிக்கின்றார்: ஆண்டவர் நமக்கு ஆத்துமங்களை அளித்திருக்கிறார்; நாம் ஞான சத்துருக்களின் தாக்குதல் களிலிருந்து, நம் ஆன்மாக்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற் காகவே, சர்வேசுரன் நமக்கு ஆன்மாக்களை அளித்திருக்கிறார். ஆகவேதான், நம் மரண சமயத்தில், அந்த உயிரை வாங்க அல்லது, ஆத்துமத்தை வாங்க சம்மனசானவர் நம்மிடம் வருவார். பின்பு, அவர் நம் ஆத்துமங்களை திவ்ய சேசுகிறீஸ்துநாதரின் நீதியாசனத்திற்கு முன்பாக சமர்ப்பிப்பார். ஆனால், நாம் உலக ஆஸ்திகளை சம்பாதிப்பதிலேயே, கருத்தாயிருந்து நம் ஆத்துமங்களை இழந்தோமாகில், இந்த உலக ஆஸ்திகளும் இனி நமக்கு சொந்தமில்லாமல், மற்றவர்களுக்குச் சொந்தமாகிவிடும்; அதே சமயம், நம் ஆத்துமங்களுக்கு அப்போது என்ன நேரிடும்?
7.பரிதாபத்திற்குரிய உலக நேசர்கள்! அவர்கள் சேர்த்து வைத்தத் திரளான உலக செல்வங்கள், இந்த ஜீவியத்தில் அவர்கள் காண்பித்த வீண் ஆடம்பரம் ஆகியவற்றினுள், அவர்கள் மரிக்கும்போது, எதைக் கண்டடைவார்கள்? அவர்கள் நித்திரை கொண்டார்கள்; இந்த ஆஸ்திக்காரர்களுடைய கையில் ஒன்றும் அகப்படவில்லை (சங்.75:6) என்று சங்கீதத்தில் வாசிக்கிறோம். இவ்விதமாக தற்கால ஜீவியத்தினுடைய கனவானது, மரணத்துடன் முடிவடையும். அப்போது, அவர்கள், நித்தியத்திற்காக ஒன்றையும் சேகரித் திருக்க மாட்டார்கள். இந்த உலகத்தினுடைய மாபெரும் மனிதர்களாக அபரிமிதமான செல்வசெழிப்பின் மத்தியிலும், மகிமைகள், இன்பங்கள் மத் தியிலும் ஜீவித்து, மரித்தபிறகு, இப்போது, நரகத்திலிருக்கும் அநேக அரசர் கள், சக்கரவர்த்திகளிடம்,அவர்கள், உலகத்தில் வைத்திருந்த அந்த செல்வங் கள், மகிமைகள், இன்பங்கள் எல்லாம் இப்போது என்னவாயின? என்று கேளுங்கள்! அதற்கு,அவர்கள், ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! என்று கண் ணீருடன் பதில் கூறுவார்கள்! அவற்றில் எஞ்சியனவாக ஏதாவது இருக்கின் றனவா? என்று கேளுங்கள். அதற்கு அவர்கள், ஒன்றுமில்லை! ஒன்றுமில் லை! என்று கூக்குரலிட்டு ஊளையிடுவார்கள்! 8.இதைப் பற்றிதான் அர்ச்.பிரான்சிஸ் சவேரியார், இந்த உலகத்தில் ஒரே ஒரு நன்மையும், ஒரே ஒரு தின்மையும் உண்டு என்று கூறுகின்றார்:அந்த ஒரே ஒரு நன்மை, நம் ஆத்துமங்களை இரட்சித்துக் கொள்வதிலும், அந்த ஒரே ஒரு தின்மை, நம் ஆத்துமங்களை இழப்பதிலும் அடங்கியிருக்கிறது! ஆகவே தான், நான் ஆண்டவருடைய வீட்டில், என் ஜீவிய காலம் முழுவதும் குடிகொண்டு, ஆண்டவருடைய ஆனந்தத்தைப் பார்த்து,அவர் ஆலயத்தில் அகமகிழ்வதாகிய இவ்வொரே காரியத்தை மாத்திரம், நான் ஆண்டவரிடத்தில் கேட்டேன் (சங்.26:4) என்று தாவீதரசர் கூறுவதை, சங் கீதத்தில் வாசிக்கிறோம். ஒரே காரியத்தை மட்டுமே நான் தேடினேன்.என் ஆத்துமத்தை இரட் சிப்பதற்கான தேவ வரப்பிரசாதத்தை எனக்கு சர்வேசுரன் அனுக்கிரகம் செய்யும்படியாக, அதையே நான் எப்போதும் என்றென்றைக்கும் தேடு வேன். ஏனெனில்,நான் என் ஆத்துமத்தைக் காப்பாற்றினால், எல்லாம் எனக்கு பாதுகாப்பாய் இருக்கும்.நான் அதை இழந்துபோனால், சகலத் தையும் நான் இழந்துபோவேன். இரண்டாம் தியானக்கருத்து: உங்கள் ஆத்துமங்களின் இரட்சணியமானது, எல்லா காரியங்களிலும் மகாமுக்கியமான காரியமாயிருக்கிறது. ஏனெனில், ஒரு முறை ஆத்துமம் இழக்கப்பட்டால், அது நித்தியத்திற்குமாக இழக்கப் பட்டு விடும். 9. மனிதர்கள் ஒரே முறை தான் மரிக்கின்றனர். ஒருவேளை ஒரு கிறீஸ்துவன் இரண்டு தடவை மரிப்பானேயாகில், முதல் தடவை, அவன் ஆத்துமத்தை இழந்துபோனாலும், இரண்டாவது தடவை அவன் அதைக் காப்பாற்றிக் கொள்வான். ஆனால் நம்மால் ஒரு தடவை தான், மரிக்க முடியும். முதல் தடவையாக ஆத்துமத்தை இழந்துபோனால்,அது நித்தியத்திற்குமாக இழக் கப்பட்டு விடும்! இந்த சத்தியத்தை தனது சகக் கன்னியர்களின் மனதில் பதியவைப்பதற்காக, அர்ச்.அவிலா தெரசம்மாள், ஒரே ஆத்துமம்! ஒரே நித்தியம்! என்று அடிக்கடி கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நமக்கு ஒரே ஒரு ஆத்துமம் இருக்கிறது.அது இழக்கப்பட்டால், எல்லாம் நமக்குஇழக்கப்பட்டதாகிவிடும்! நமக்கு ஒரே நித்தியம் உண்டு!ஆத்துமம் ஒரு தடவை இழக்கப்பட்டால், அது நித்தியத்திற்குமாக இழக்கப்பட்டு விடும், என்று அர்ச்.அவிலா தெரசம்மாள் கூறுவார்கள். 10.நித்திய இரட்சணியத்தின் மட்டில் கொண்டிருக்கிற அலட்சியத்தைப் போல், மாபெரும் தவறு வேறு எதுவுமில்லை, என்று அர்ச்.யுக்கேரியுஸ் கூறு கின்றார். இந்த தவறு மற்ற எல்லா தவறுகளையும் வெகுவாய்க் கடந்து, மகாபெரியதவறாக இருக்கிறது.ஏனெனில், இது பரிகரிக்க முடியாத தவறாக யிருக்கிறது. மற்ற தவறுகள் அல்லது பிழைகள், திருத்திக்கொள்ளக் கூடியன வாயிருக்கின்றன : ஒருவன் தன் ஆஸ்தியை, ஒரு வழியில் இழப்பானேயா கில், மற்றொரு வழியில், அதை அவன்வேறு விதமாக அடைந்து கொள்ள முடியும்.அவன், ஒரு சந்தர்ப்பத்தை, கண்ணியத்தை இழந்துபோனால், பின் னர்,அவற்றைமறுபடியும் அடையக்கூடும்.அவன் தன் உயிரை இழந்தாலும், ஆத்துமத்தை இழந்துபோகாத வரை, அவனுக்கு எல்லாம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், ஆத்துமத்தை இழந்த ஒருவனுக்கு, அந்த இழப்பை ஈடு செய்யக்கூடிய வழிமுறை ஒன்றுமில்லை. அவர்களுக்கு இனி இரட்சணி யத்தினுடைய காலம் இல்லை! இரட்சணியத்தின் காலம் அவர்களுக்கு முடி வடைந்து விட்டது என்ற நினைவிலிருந்தும், அவர்களுடைய நித்திய கேட் டிலிருந்து அவர்களை விடுவிக்கக் கூடிய பரிகாரத்திற்கான வழிமுறையைப் பற்றிய நம்பிக்கை எதுவும் இல்லை என்கிற நினைவிலிருந்தும், நரகத்திலிருக் கும் நிர்ப்பாக்கிய பாவிகளின் அழுகுரலின் ஓலம், தோன்றி, இடைவிடாமல் அலறிக்கொண்டிருக்கிறது. முதுவேனிற்காலமும் கடந்தது. நாம் இன்னும் விடுதலையடையவில்லை (எரே 8:20)என்று அவர்களின் புலம்பலைப் பற்றி எரேமியாஸ் தீர்க்கதரிசி கூறுகின்றார். ஆகையால்,நாமல்லோ சத்தியத்தின் மார்க்கத்தை விட்டகன்று திரிந் தோம்;நீதியின் ஒளி நமக்கல்லோ பிரகாசிக்கவில்லை. அறிவின் சூரியன் நமக்கல்லோ உதிக்கவில்லை (ஞான 5:6) என்று ஞானாகமத்தில் வாசிக்கிற தைப்போல, அவர்கள், நித்தியத்திற்குமாக ஆறுதல் இல்லாமல் புலம்பி அழுதுகொண்டிருப்பார்கள். ஆனால், இனி அவர்களால் அந்த தவற்றிற்கு பரிகாரம் செய்வதற்கான காலம் மிகவும் பிந்திவிட்ட நிலையில், அல்லது, முடிந்து விட்ட நிலைமையில், அவர்கள் செய்த தவறைப் பற்றி அறிவதால், அதனால் அவர்களுக்கு என்ன பயன்? 11.அவர்கள் ஆத்துமத்தை நித்தியத்திற்குமாக இழந்துபோனதைப் பற்றிய நினைவிலிருந்தும், அதுவும் அவர்களுடைய சொந்தக் குற்றத்தினாலேயே, ஆத்துமத்தை இழந்துபோனதைப் பற்றிய நினைவிலிருந்தும், தோன்றுகிற உபத்திரவத்தின் ஆக்கினையே, நித்தியக் கேட்டை அடைந்த நிர்ப்பாக்கிய பாவிகள் நரகத்தில் அனுபவிக்கிற ஆக்கினைகளிலேயே மகா பெரிய ஆக்கி னையாக இருக்கிறது! இஸ்ராயேலே! உன் சேதாரம் உன்னிடத்தியதே! நம்மிடத்தில் மாத்திரம் உனக்கு உதவி கிடைக்கும் (ஓசே 13:9) என்று சர்வேசுரன் தாமே, மனிதனிடம், அவனுடைய கேட்டிற்குக் காரணம் அவனுடைய சொந்த குற்றமே, என்று கூறுவதாக, ஓசே தீர்க்கதரிசி ஆகமத்தில் வாசிக்கிறோம்.
ஓ! பரிதாபத்திற்குரியவனே! உன் அழிவு உனக்குச் சொந்தமாயிருக்கிறது; அதாவது, உன்னாலேயே உனக்கு அந்த அழிவு வந்தது. நீ கட்டிக்கொண்ட பாவத்தினால், உன் நித்திய கேட்டிற்கு, நீயே காரணமாயிருக்கிறாய்!ஏனெ னில், நீ உன் இரட்சணியத்தின் மட்டில் கவனமாய் ஈடுபட நீ ஆசித்திருந் தால், நான் உன்னை இரட்சிப்பதற்குத் தயாராயிருந்தேன்! என்று சர்வேசு ரன் நித்தியக்கேட்டை அடைந்த நிர்ப்பாக்கிய பாவியிடம் கூறுகின்றார். ஒருவன், ஒரு அற்பப்பொருளை தன் சொந்தக் குற்றத்தினால், இழப்பானே யாகில், அதைக் குறித்து அவன் மனம் சஞ்சலமடைகிறது; அவனுடைய சமாதானம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஓ! திவ்ய கர்த்தரே!அப்படியென் றால்,தன் சொந்தக்குற்றத்தினாலேயே ஆத்துமத்தையும் சகலத்தையும் இழந் ததைப் பற்றிய நினைவுடன், நரகத்தினுள் நுழையும்போது நித்தியக் கேட் டை அடைந்த ஒவ்வொரு நிர்ப்பாக்கிய பாவியும் அனுபவிக்கிற உபத்திர வத்தின்ஆக்கினைஎவ்வளவு மகா பெரியதாயிருக்கும்! என்று, அர்ச்.அவிலா தெரசம்மாள், கன்னியாஸ்திரிகளுக்கு அறிவுறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். 12.அப்படியென்றால், நாம் இன்றுமுதல், கட்டாயமாக, நம் ஆத்துமங்களை இரட்சிப்பதற்கான அலுவலில் நம் எல்லா கவனத்தையும் கொண்டு ஈடுபட வேண்டும். ஏதோ ஒரு உலகப்பொருளை இழப்பதைப் பற்றி எந்த கேள்வி யுமில்லை. அதை என்றாவது ஒருநாள் இழக்க வேண்டியிருக்கும். ஆனால், மோட்சத்தையே இழப்பது என்பதும்,நித்தியத்திற்குமாக நரகத்தில் உபாதிக் கப்பட்டுத் துன்புறுவது என்பதும் மிகப்பெரிய கேள்விக்குரிய காரியமாகும்! நாம் கட்டாயமாக அஞ்சி நடுங்க வேண்டும். இவ்விதமாகவே நாம் நித்திய பேரின்ப மோட்ச சந்தோஷத்தை அடைந்துகொள்ளக் கூடும். அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள் (பிலிப் 2:12) என்று இதைப் பற்றியே அர்ச்.சின்னப்பர் நமக்கு அறிவுறுத்துகின்றார்.ஆக வே, நாம் நம் ஆத்துமங்களை இரட்சித்துக்கொள்வதற்கு ஆசிப்போமேயா னால், ஆத்துமத்திற்கு ஆபத்தான சந்தர்ப்பங்களை விலக்குவதிலும், சோத னைகளை எதிர்ப்பதிலும், தேவதிரவிய அனுமானங்களை அடிக்கடி பக்தி பற்றுதலுடன் பெற்றுக்கொள்வதிலும், அயராமல் மிகக் கடினமாக உழைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். உழைப்பு இல்லாமல், நாம் மோட்சத்தை அடைய முடியாது. இதைப் பற்றியே நமதாண்டவர், ஸ்நாபக அருளப்பர் நாள்முதல் இதுவரையில் பர லோக இராஜ்ஜியம் பலவந்தப்படுகின்றது; பலவந்தம் பண்ணுகிறவர்களே, அதைப் பறித்துக்கொள்கிறார்கள் (மத் 11:12) என்று கூறுகின்றார். அர்ச்சிஷ் டவர்கள், நித்தியத்தைப் பற்றிய நினைவின் மட்டில் அஞ்சி நடுங்கினார்கள். அர்ச்.அவெல்லினோ பெலவேந்திரர், நான் இரட்சணியமடைவேனா? அல் லது நித்தியக் கேட்டிற்குத் தீர்ப்பிடப்படுவேனா, யாருக்குத் தெரியும்? என்று கூறியபடி அழுதுகொண்டிருப்பார். அதேபோல், அர்ச்.லூயிஸ்பெட் ரான்டு என்பவர், மறுவுலகத்தில் என் கதி என்னவாயிருக்குமோ? என்று அஞ்சி நடுங்கியபடி கூறுவார். அப்படியென்றால், நாம் அஞ்சி நடுங்க வேண்டாமா? நமதாண்டவரி டமும்,அவருடைய மகா பரிசுத்த தாயாரிடமும், நாம் நம் ஆத்துமங்களை இரட்சித்துக் கொள்வதில் நமக்கு உதவும்படியாக வேண்டிக் கொள்வோ மாக! இதுவே, நம் எல்லா காரியங்களிலும் மகா முக்கியமான காரியமாக இருக்கிறது: இதில் நாம் வெற்றியடைந்தால், நித்திய காலத்திற்கும் நாம் சந் தோஷமாயிருப்போம்! இதில் தோல்வியடைந்தால், நித்திய காலத்திற்கும் நாம் கட்டயாமாக கொடிய நரக ஆக்கினைக்கு உட்பட்டு துன்புற வேண் டும். ஓ! மகா பரிசுத்த தேவமாதாவே! என் மேல் இவ்வளவான சிநேகமும் இரக்கமும் உள்ள தேவரீரிடம், சோதனைவேளைகளில், நான் எப்போதும் உதவித் தேடி ஓடிவரத் தேவையான நல்ல மனதையும், ஆண்டவரை தின மும் அதிக அதிகமாக நேசிக்கவும், தேவரீர் பேரில் உத்தமமான பக்தியைக் கொண்டிருக்கவும் தேவையான தேவவரப்பிரசாதத்தை, அளித்தருளவும் வேண்டுமென்று, மன்றாடுகிறேன்.ஆமென். அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக