அர்ச். பார்பராள்
பிறப்பு : 3ம் நூற்றாண்டு
இறப்பு : 4ம் நூற்றாண்டு
திருவிழா : Dec. 6
வேதசாட்சி.,
அர்ச். பார்பரா ஒரு அஞ்ஞான பெற்றோருக்கு மகளாக பிறந்தார். அவருடைய தந்தை அவரை வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்து வளர்த்து வந்தார். வெளியே சென்றால் மனம் திரும்பி விடலாம் என்று கருதி இந்த ஏற்பாடு.
இருப்பினும் தன் தந்தைக்கு தெரியாமல் அவள் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவ மதத்திற்கு திரும்பினாள். ஒரு சமயம் அவளது தந்தை அவளை ஒரு அஞ்ஞானிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தான். ஆனால் அவள் அதற்கு சம்மதிக்கவில்லை.
ஒரு சமயம் தன் தந்தை வீட்டில் இல்லாத போது, தன் அறையில் அர்ச். தமத்திருத்துவத்துக்கு தோத்திரமாக மூன்று ஐன்னல்கள் வைத்து இருந்தாள்.
அவளுடைய தந்தைக்கு தனது மகள் கிறஸ்தவ மதத்திற்கு மாறின விஷயம் தெரியவே மிகுந்த கோபம் கொண்டான். தனது மகளை தானே நீதிமன்றத்தில் நிறுத்தினான். அவள் மிகுந்த உபத்திரங்களைப் பட்டாள். பின் வேதசாட்சி மரணம் அடைந் தாள். அவளது தந்தையே தன் மகளின் தலையை இரக்கமின்றி கொடூரமாக வெட்டினான்.
ஆனால் அவனை ஆண்டவர் உடனே தண்டித்தார். அவளது ஆன்மாவை சம்மனசு ஆண்டவரிடம் கொண்டு செல்லும் போது ஒரு பெரிய மின்னல் தாக்கி அவளது தந்தை அந்த நீதிமன்றத்திலே இறந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக