தேவதாய் பல முறை ' உலகில் காட்சி அளித்துள்ளார்கள்' ஒவ்வொரு காட்சியிலும் நம்மிடம் கேட்பது என்னவென்றால் ஜெபம் செய்யுங்கள்
பாவங்களுக்கு பரிகாரம் செய்யுங்கள் என்பது தான் . நாம் பாவம் செய்யும் போது ஆண்டவரையும் தேவ அன்னையும் மனம் நோகச் செய்கிறோம். பாத்திமாவில் மூன்று சிறுவர்களுக்கு காட்சி அளித்து உலகிற்காக செபம் செய்யுங்கள். பாவிகளுக்குக்காக செபம் செய்யுங்கள் என்று தான் அன்னை கேட்கிறார். அர்ச். பெர்னதத் அவர்களுக்கு காட்சி அளிக்கும் போது தன்னுடைய கரங்களில் செபமாலை எந்தியவர்களாய் காட்சியளித்தார்.
மாதாவின் ஒவ்வொரு காட்சியிலும் தன் மக்களை நரக நெருப்பில் இருந்து காத்து மோட்சம் கூட்டி சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.
Our Lady of Guadalupe (குவாடுலுபே மாதா)
காட்சி : 1531
நாடு : மெக்ஸ்சிகோ (Mexico )
காரணம் : தனக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்றும் அதன் மூலம் பலரை மனம் திருப்புவேன் என்று மாதா கூறினார்.
காட்சி பெற்றவர் : அர்ச் . ஜூவான் தியாகோ (St. Juan Diego )
Our Lady of the Miraculous Medal (புதுமை பதக்கம்)
காட்சி : 1830
நாடு : பாரிஸ்(Paris)
காரணம் :
காட்சி பெற்றவர் : அர்ச் . கத்தரின் லபோரே (St. Catherine Laboure)
Our Lady of La Salette (சலேத் மாதா)
காட்சி : 1846
நாடு : சலேத் (la Salette, France)
காரணம் : உலக மக்கள் ஆண்டவருக்கு கீழ்படிய வேண்டும் என்றும், கடவுளின் நாட்களை அனுசரிக்க வேண்டும் என்பதை மாதா இங்கு குறிப்பிடுகிறார். நாம் ஞாயிற்று கிழமை, கடன் திருநாட்களில் சர்வேசுரனுக்கு வேண்டிய காரியங்களில் செலவிட வேண்டும் என்று அன்னை கேட்டுக் கொண்டார்.
காட்சி பெற்றவர் : இரண்டு ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கு மாதா காட்சி அளித்தார். ( Mélanie Calvat and Maximin Giraud)
Our Lady of Lourdes (லூர்து மாதா)
காட்சி : 1858
காரணம் : நாமே அமல உற்பவம் என்று அன்னை உலக மக்களுக்கு வெளிப்படுத்தினார். செபமாலை எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிப்பதற்காக கையில் செபமாலையுடன் காட்சி அளித்தார்.
காட்சி பெற்றவர் : அர்ச் . பெர்னதத் (St. Bernadette)
Our Lady of Fátima(பாத்திமா மாதா)
காட்சி : 1917
நாடு : போர்ச்சுக்கல் (Portugal)
காரணம் : மாதா இங்கு செபமாலை சொல்ல சொல்லுகிறார். அதிகமாக செபமாலை சொல்ல சொல்லுகிறார். நரகத்தில் விழும் பாவிகளை சிறுவர்களுக்கு காண்பித்து பாவிகளுக்காக செபிக்க சொல்லுகிறார்.
காட்சி பெற்றவர் : ஆடு மேய்க்கும் சிறுவர்களான லூசி (Lucy), ஜெசிந்தா(Jesintha), பிரான்சிஸ் (பிரான்சிஸ்)
Our Lady of Beauraing
காட்சி : 1932
நாடு : பெல்ஜியம் (Belgium)
காரணம் : செபம், செபம், செபம்
காட்சி பெற்றவர் : பள்ளி சிறுவர்கள்
Our Lady of Velankanni (வேளாங்கண்ணி மாதா )
காட்சி : 1570
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக