Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

lives history of saints லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
lives history of saints லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 31 - அர்ச். இராபர்ட் பெல்லார்மின் (St. Robert Bellarmine)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 

🇻🇦மே 1️⃣3️⃣ம் தேதி

🌹வேதபாரகரும் கர்தினாலுமான அர்ச். இராபர்ட் பெல்லார்மின் திருநாள்🌹


Feast day          13 May (General Roman Calendar, 1932–1969)

Venerated in   Catholic Church

Title as Saint   Confessor and Doctor of the Church

Beatified           13 May 1923 Rome, Kingdom of Italy by Pius XI

Canonized       29 June 1930 Rome, Vatican City by Pius XI



🌹இவர் இத்தாலியின் டஸ்கனி யிலுள்ள மோந்தெபுல்சியானோவில் , 1542ம் வருடம் பிறந்தார்; இவருடைய தாயார், சினிசியா செர்வினி என்பவர், 2ம் மர்செல்லுஸ் பாப்பரசரின் சகோதரியாவார்.

இவர் சிறுவனாயிருந்தபோது, இத்தாலி யிலும், இலத்தீனிலும் அநேகக் கவிதை கள் எழுதினார்; இவர் எழுதிய பாடல் களில் ஒன்று, அர்ச். மரிய மதலேனம் மாள் பற்றிய பாடல், இது உரோமன் கட்டளை ஜெபப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது.

இவர் சேசுசபை மடத்தில் 18வது வயதில் சேர்ந்தார்; 28வது வயதில், 1570ம் வருடம், குருப்பட்டம் பெற்றார்; புராட்டஸ்டன்டு பதிதர்களின் தாக்குதல் களுக்கு ஏற்ப திருச்சபையின் வேத சத்தியங்களின் விளக்க நூல்களை முறைப்படி தயாரித்து பரப்பினார்;  மிக நெருக்கமாகச் சென்று, புராட்டஸ்டன்டு பதிதங்களைப் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வை நடத்தினார்; 1592ம் வருடம்,இவர், உரோமன் கல்லூரியின் அதிபரானார்; 1598ம் வருடம், மேற்றிராணிமார்களின் பரிசோதகரானார்; 1599ம் வருடம் கர்தினாலானார். உடனே, 8ம் கிளமென்ட் பாப்பரசர், இவரை தலைமை நீதி விசாரணையாளராக நியமித்தார்; ஜியோடானோ புரூனோ என்ற பதிதனை, அவன் கடைசி வரை பதிதத்தப்பறையிலேயே மூர்க்கனாய் நிலைத் திருந்ததால்,  நெருப்பில் எரிக்கும்படியான தீர்ப்பிற்கு இவர் ஒப்புதல் அளித்தார்; 

1616ம் வருடம், 5ம் சின்னப்பரின் கட்டளைகளின்பேரில், அர்ச். ராபர்ட் பெல்லார்மின், கலிலேயோவை, கோபர்நிகன் தப்பறையைக் கைவிடும்படி கூறினார்; கலிலேயோவும் அதற்கு ஒப்புக்கொண்டார். 

இராபர்ட் பெல்லார்மின் தனது முதிர்ந்த வயதில், மோந்தேபுல்சியானோ வில் மேற்றிராணியாராக நான்குவருட காலம் அலுவல்புரிந்தார்; அதன்பின், உரோமையிலுள்ள அர்ச்.பெலவேந்திரர் சேசு சபைக் கல்லூரியில் இளைப்பாறி ஓய்வெடுக்கும்படி  தங்கியிருந்தார்; இங்கு, 1621ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதியன்று, 78வது வயதில், அர்ச்.இராபர்ட் பெல்லார்மின் பாக்கியமாய் மரித்தார்.🌹✝


🌹அர்ச்.இராபர்ட் பெல்லார்மினே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here


செவ்வாய், 7 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 28 - அர்ச். ஸ்தனிஸ்லாஸ் (St. Stanislaus - May 7)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐ 

 மே 0️⃣7️⃣ம் தேதி

🌹ஸ்துதியரும் மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அர்ச். ஸ்தனிஸ்லாஸ் திருநாள்🌹




🌹இவர் போலநது நாட்டில், ஸெப்பானோவ் என்ற நகரில் 1030ம் வருடம் பிறந்தார். துவக்கக் கல்வியை போலந்து நாட்டில் கற்றபிறகு, பாரீஸ் நகரில் உயர்கல்வியை முடித்து, குருப்பட்டம் பெற்றார். கிராகோ நகர மேற்றிராணியார் 1072ம் வருடம் இறந்த பிறகு, அர்ச்.ஸ்தனிஸ்லாஸை ஒரு மனதாக அந்நகரின் அடுத்த மேற்றிராணியாராகத் தேர்ந்தெடுத்தனர்.  அச்சமயம் அப்பதவியை இவர் மறுத்து வந்தார்;  அப்போது பாப்பரசராக இருந்த 2ம் அலெக்சாண்டரின் நேரடிக் கட்டளை வந்தபிறகே, மேற்றிராணியார் பதவியை அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் ஏற்றுக் கொண்டார்.

போலந்து நாட்டின் அரசனான 2ம்போலஸ்லாசுடன் இவருக்கு ஏற்பட்ட முதல் முரண்பாடு, ஒரு நிலத்தகராறின்போது, துவங்கியது. மேற்றிராணியாரான அர்ச். ஸ்தனிஸ்லாஸ் தனது மேற்றிராசனத்திற்காக விஸ்டுலா நதியின் கரையில் லுப்லின் நகருக்கு அருகில் பியோடர் என்பவரிடமிருந்து, சிறிதளவு நிலத்தை வாங்கியிருந்தார். பியோடர் இறந்தபிறகு, அந்த நிலத்தை அவருடைய குடும்பத்தினர் அந்த நிலத்தின் மீது உரிமை கொண்டாடி வழக்கு தொடுத்தனர். இதில், அரசன், மேற்றிராணியாருக்கு எதிராக தீர்ப்பு வழங்கினான். 

இதற்குத் தேவையான சாட்சியை, அதாவது, தான் நிலத்தை வாங்கிய பியோடரையேக் கூட்டி வருவதற்கு, அர்ச்சிஷ்ட மேற்றிராணியார் அரசனிடம் மூன்று நாள் அவகாசம் கேட்டார்! உடனே, இறந்தவனைக் கூட்டி வருவதாக, மேற்றிராணியார் கேட்கும் இந்த அபத்தமான விண்ணப்பத்தின் பேரில், அரசனும், அவனுடைய அவையிலிருந்தவர்களும் கேலி செய்து நகைத்தனர்; இருப்பினும், அரசன் அதற்கு சம்மதித்து மூன்று நாள் அவகாசம் கொடுத்தான்.

மூன்று நாட்களுக்குப் பின், அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், பியோடருக்கு மறுபடியும் உயிர் கொடுத்து, போலஸ்லாஸ் அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினார். அதைக்கண்ட அரசனும் அவனுடைய அவையிலிருந்தவர்களும் ஆச்சரியத்தினால் வாயடைத்துப் போயினர்! பியோடர், தன் மூன்று மகன்களையும் கடிந்து கொண்டார்; பின் அரசனிடம், பியோடர், மேற்றிராணியார் உண்மையாகவே தன் நிலத்தைத் தன்னிடமிருந்து,, விலைக்கு வாங்கியிருந்தார், என்ற வாக்குமூலத்தை அளித்தார். அரசனும் வேறுவழியில்லாமல், மேற்றிராணியாருக்கு எதிரான இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தான். பின் அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், தேவ உதவியால், புதுமையாக கல்லறையிலிருந்து உயிருடன் எழுப்பி தன்னுடன் கூட்டி வந்திருந்த, பியோடரிடம் இன்னும் கொஞ்சம் காலம் உயிருடனிருப்பதற்கு ஆசையிருந்தால், வாழலாம், என்று கூறினார். பியோடர், “ஆண்டகையே! வேண்டாம்! என்னை திரும்பவும் கல்லறையிலேயே விட்டு விடுங்கள்”  என்று கூறினார். அதன்படி, அவரை கல்லறைக் குழியினுள் கிடத்தியவுடன், அவருடைய சரீரம், மறுபடியும் எலும்புக்கூடாக மாறியது; கல்லறையில் மறுபடியும் அவரை அடக்கம் செய்தனர்.

அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், அரசனுடைய ஒழுக்கக் கேட்டைக் குறித்து, அவனைக் கண்டித்து, திருச்சபை விலக்கம் செய்தபோது, மிகப் பெரிய முக்கியமான முரண்பாடு அரசனுடன் ஏற்பட்டது.

இதன் காரணமாக, அரசன் மூர்க்க வெறிகொண்டவனாக, தனது காவலர்களை, மேற்றிராணியாரான அர்ச். ஸ்தனிஸ்லாஸை கொல்வதற்காக, அனுப்பி வைத்தான். ஆனால், அவர்கள், அர்ச்சிஷ்டவரைத் தொடுவதற்கு துணியாமலிருந்தனர். இதைக் கண்ட அரசன் தனது சொந்த கரங்களினாலே, அர்ச்சிஷ்டவரைக் கொன்றான். 1079ம் வரும் அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் திவ்யபலிபூசை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அரசன் அவரை நெருங்கிச் சென்று, தன் வாளால் அவருடைய தலையை வெட்டிக் கொன்றான். கிராகோ நகர மேற்றிராணியாரான அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் இவ்விதமாக மகிமைமிகு வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார்.

போலஸ்லாஸ் அரசன், செய்த இக்கொலை, போலந்து நாடுமுழுவுதும், அவனுக்கு எதிராகக் கலகம் ஏற்படுவதற்குக் காரணமாயிற்று: அதனால், அவன் அரசபதவியிலிருந்து அகற்றப்பட்டான். நாட்டு மக்களிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹங்கேரி நாட்டில் தஞ்சம் அடைந்தான்.  இவனுக்குப் பிறகு, இவனுடைய சகோதரன் முதலாம் விலாடிஸ்லாஸ் ஹெர்மன் போலந்து நாட்டின் அரச பதவியிலமர்ந்தான். அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், 4ம் இன்னசென்ட் பாப்பரசரால், அசிசி நகரில், 1253ம் வருடம் அர்ச்சிஷ்டவராக பீடத்திற்கு உயர்த்தப்பட்டார். 🌹✝


🌹அர்ச்.ஸ்தனிஸ்லாஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



--


🇻🇦

May 0️⃣7️⃣


Martyrdom 🌟🌹

ST. STANISLAUS

Stanislaus was born in AD 1030 at Szczepanów, in Poland. After initial studies in Poland, he completed his education in Paris, and was ordained a priest.

When the bishop of Cracow died in 1072, Stanislaus was unanimously elected as his successor, but accepted the office only at the explicit command of Pope Alexander II.

The first conflict of Bishop Stanislaus with King Bolesław of Poland was over a land dispute. The Bishop had purchased for the diocese a piece of land on the banks of the Vistula River near Lublin from a man named Piotr, but after Piotr's death the land had been claimed by his family. The king gave the verdict against Stanislaus.

Bishop Stanislaus asked the King for three days to produce his witness, Piotr himself. The King and his court laughed at the absurd request, but granted Stanislaus the three days.

After 3 days Stanislaus brought Piotr back to life & brought him  before King Bolesław. The dumbfounded court heard Piotr reprimand his three sons and testify that Stanislaus had indeed paid for the land. Unable to give any other verdict, the King dismissed the suit against Bishop Stanislaus.

A more substantial conflict with King Bolesław arose after Stanislaus criticized the King for his immorality &  excommunicated him.

King Bolesław was furious and sent his guards to kill Bishop Stanislaus, but when the guards didn't dare to touch the Bishop, the King killed him with his own hands by striking Stanislaus on the head with a sword while Mass was being celebrated in the year 1079.

The murder stirred outrage throughout Poland and led to the dethronement of King Bolesław II, who had to seek refuge in Hungary and was succeeded by his brother, Władysław I Herman.

St. Stanislaus was canonized in 1253 by Pope Innocent IV at Assisi.





🔵




வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

வேதசாட்சியான அர்ச்‌.ஒனேசிமுஸ்‌ - ST. ONESIMUS


வேதசாட்சியான அர்ச்‌.ஒனேசிமுஸ்‌ 




இவர்‌ பிறப்பினால்‌ ஃபிர்ஜியனாகவும்‌, பிலமோன்‌ என்பவரின்‌ அடிமையாகவும்‌ இருந்தார்‌. அர்ச்‌.பிலமோன்‌, என்பவர்‌ ஏற்கனவே அப்‌போஸ்தலரான அர்ச்‌. சின்னப்பரால்‌ கிறீஸ்துவராக மனந்திருப்பப்பட்‌டிருந்தார்‌. 

இவர்‌, தன்‌ எஜமானாகிய பிலோமனிடமிருந்து திருடிவிட்டு, ஓடிப்போனார்‌; பின்‌ எதிர்பாராதவிதமாக, உரோமையில்‌, சிறைபட்‌டிருந்த அர்ச்‌. சின்னப்பரை இவர்‌ சந்திக்க நேர்ந்தது. அர்ச்‌. சின்னப்பர்‌ இவரை மனந்திருப்பி, ஞானஸ்நானம்‌ கொடுத்தார்‌. பின்‌, இவரை,  இவருடைய எஜமானரான அர்ச்‌. பிலமோனிடம்‌ அனுப்பி வைத்தார்‌. அச்சமயம்‌, அர்ச்‌. சின்னப்பர்‌, ஒரு அழகிய கடிதத்தை பிலமோனுக்கு, எழுதி இவரிடம்‌ கொடுத்து அனுப்பினார்‌. அது, சுவிசேஷத்தில், நமக்கு பிலமோனுக்கு எழுதிய நிரூபமாகக்‌ கிடைத்தி ருக்கிறது! அந்த கடிதத்தில்‌, பிலமோனிடம்‌, அவருடைய அடிமையான ஒனேசிமுஸை மன்னிக்கும்படியும்‌ மன்னித்து, அவருடைய உதவியாளராக சேர்த்துக்கொள்ளும்படியும்‌, அர்ச்‌. சின்னப்பர்‌ கேட்டுக்‌ கொள்வதை வாசிக்கிறோம்‌. 

அர்ச்‌. சின்னப்பரின்‌ அறிவுரையின்பேரில்‌, பிலமோன்‌, ஒனேசிமுஸை மன்னித்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து முழு சுதந்திரத்‌தை அளித்தார்‌; அதன்‌ பின்,‌ தன்‌ ஞான தந்தையான அர்ச்‌.சின்னப்பர்‌ ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பேரில்‌, ஒனேசிமுஸ்‌, திரும்பி அப்போஸ்தலரான அர்ச்‌. சின்னப்பரிடமே வந்து சேர்ந்தார்‌.அவருக்கு பிரமாணிக்கத்துடன்‌ ஊழியம்‌ செய்து வந்தார்‌. 

 அர்ச்‌. சின்னப்பர்‌, கொலோசியருக்கு எழுதிய நிரூபத்தை, தீகிக்கு என்பவரிடம்‌ கொடுத்தனுப்பியபோது, அவருடன்‌ ஒனேசிமுஸையும்‌  சேர்த்து அனுப்பி வைக்தார்‌.(கொலொ 4:7-9).  பின்னர்‌, ஒனேசிமுஸ்‌, உரோமாபுரி ஆளுநனால்‌, மிகக்‌ கொடிய உபத்திரவங்களால்‌ சித்ரவதை செய்யப்பட்டார்‌; திருமணம்‌ செய்யாமல்‌ பரிசுத்த ஜீவியம்‌ ஜீவிக்கும்‌ கத்தோலிக்கக்‌ குருத்துவத்தைப்‌ பற்றி இவர்‌ பிரசங்கித்தபோது, அதைக்‌ கேட்டுக்‌ கோபமடைந்த உரோமை ஆளுநன்‌, இவரை சிறையிலடைத்து, 18 நாட்கள்‌ தொடர்ந்து உபாதித்தான்‌: இவருடைய கால்களையும்‌, கைகளையும்‌ குண்டாந்தடியால்‌ அடித்து, முறித்தனர்‌; பின்‌ கல்லால்‌ எறியப்பட்டு கி.பி.95ம்‌ வருடம்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டார்‌. சர்வேசுரனை சிநேகிக்கிறவர் களுக்குச்‌ சகலமும்‌ நன்மைக்கேதுவாக உதவுகிறதென்று, அறிந்திருக்கிறோம்‌; அவர்கள்‌, தேவ தீர்மானத்தின்படி, அர்ச்சிஷ்டவர்களாக அழைக்கப்பட்டிருக் கிறார்களாமே! (அர்ச்‌.சின்னப்பர்‌ உரோமையருக்கு எழுதிய நிரூபம்‌ 8:28).

அர்ச்‌.ஒனேசிமுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


Tamil Catholic Quotes

Tamil Catholic Songs Lyrics


திங்கள், 5 பிப்ரவரி, 2024

அர்ச். ஆகத்தா - St. Agatha, February 5

அர்ச். ஆகத்தா (பிப்ரவரி 05
கன்னிகை, வேதசாட்சி



நிகழ்வு

நம் புனிதை ஆகத்தா கொடுங்கோலனும் காமுகனுமாகிய குயின்டசின் ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவளைச் சிறையில் அடைத்து, பலவாறாக சித்ரவதை செய்து, அவளுடைய மார்புகளை குறடுகளால் சிதைத்து, குற்றுயிராய் போட்டிருந்தான்.

அப்போது அவள் இருந்த சிறையின் கதவுகளைத் திறந்துகொண்டு பெரியவர் ஒருவர் வந்தார். அவருடைய கையில் கொஞ்சம் மருந்து இருந்தது. அவர் ஆகத்தாவிடம் வந்து, “அம்மா! உன்னுடைய உடல் முழுவதும் ஏற்பட்டிருக்கும் காயங்களில் மருந்து தடவிவிடுகின்றேன். இதனால் உன்னுடைய காயங்கள் ஆறி, வேதனை தணிந்து விரைவில் நீ குணம் பெறுவாய்” என்றார். ஆகத்தா அவரிடம், “நான் ஆண்டவருக்காக எத்தகைய பாடுகளை மனமுவந்து ஏற்கத் தயார். தயவுசெய்து நீங்கள் என்னுடலில் மருந்து தடவி, நான் ஆண்டவருக்காக பாடுகள் படுவதை தடுத்து விடாதீர்கள்” என்றார். அதற்கு அந்த மனிதர் அவரிடம், “அம்மா! நான் வேறு யாருமல்ல இயேசுவின் தலைமைச் சீடராகிய இராயப்பர்தான். என்னை இங்கே ஆண்டவர் தான் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். அவர்தான் என்னை உன்னுடைய காயங்களில் மருந்து தடவி விடச் சொல்லி, விசுவாசத்தில்
 இன்னும் திடப்படுத்திவிட்டு வரச் சொன்னார்” என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்து ஆகத்தா, இராயப்பர் தன்னுடைய காயங்களில் மருந்து தடவ அனுமதித்தாள். இதனால் அவள் மறுநாளே உடல் நலம்தேறி, புதுப்பொழிவு பெற்றாள்.

வாழ்க்கை வரலாறு

காத்தோலிக்க கிறிஸ்தவ நெறியை பின்பற்றவது என்பது இன்றைக்கு இருப்பது போல் அன்று அவ்வளவு சுலபமல்ல, கிறிஸ்தவம் படிப்படியாக வளர்ந்த அந்த தொடக்க காலகட்டங்களில் கிறிஸ்தவ நெறியைக் கடைப்பிடித்து வாழ்வது என்பது மிகவும் சவாலான காரியம். அத்தகைய சூழலிலும் ஆண்டவர் இயேசுவை தன்னுடைய ஆண்டவராக, எல்லாமுமாக ஏற்றுக்கொண்டு, அவருக்காக தன்னுடைய உயிரைத் தந்தவர்தான் கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். ஆகத்தா.

ஆகத்தா கி.பி மூன்றாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் (235 -251) பிறந்தவர், இவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர். அக்காலத்தில் உரோமையை குயின்டஸ் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் உரோமைக் கடவுளை வழிபடுவதை விட்டுவிட்டு, கிறிஸ்துவை வழிபடுகின்றவர்களை எல்லாம் கொடுமையாகச் சித்ரவதை செய்து கொலை செய்தான். இவனுடைய அச்சுறுத்தலுக்கு எல்லாம் பயப்படாது கிறிஸ்துவின் மீது உறுதியான விசுவாசம் கொண்டு விளங்கியவர்தான் ஆகத்தா.

ஆகத்தா கிறிஸ்துவின்மீது உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறாள் என்ற செய்தி மன்னன் குயின்டசுக்குத் தெரிய வந்தது. எனவே, அவன் படைவீரர்களை அனுப்பி ஆகத்தாவை இழுத்து வரச் சொன்னான். மன்னனின் உத்தரவின்பேரில் படைவீரர்கள் அவரை மன்னனுக்கு முன்பாக இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஆகத்தாவை ஒருகணம் பார்த்த மன்னன் அவளுடைய அழகில் மயங்கி, அவளைச் சித்ரவதை செய்ய விரும்பாமல், தன்னுடைய ஆசைக்கு உட்படுத்த நினைத்தான். ஆனால் ஆகத்தாவோ, “நான் ஆண்டவருக்கு என்னையே முழுமையாய் அர்ப்பணித்து விட்டேன். அதனால் யாருக்கும் என்னைத் தருவதாய் இல்லை” என்று தன் கொள்கையில் உறுதியாய் இருந்தாள். இதனால் மன்னன் அவரை சிறையில் அடைத்து அவருடைய சதையை பிய்த்து எடுத்து பலவாறாக சித்ரவதை செய்தான். அப்படியிருந்தாலும் ஆகத்தா தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். இதனால் கடும் சினமுற்ற மன்னன் அவரை எரியும் தீயில் போட்டு கொன்று போட்டான்.

ஆகத்தா இறக்கும்போது அவருக்கு வெறும் 15 வயதுதான். அப்படியிருந்தாலும் அவர் ஆண்டவர் இயேசுவுக்காக செய்த தியாகம் அளப்பெரியது.

கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்

விசுவாசத்திற்கு சிறந்த முன்மாதிரியாய் விளங்கிய அர்ச். ஆகத்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.



ஆண்டவருக்கு முழுமையாய் நம்மை அர்ப்பணித்தல்

அர்ச். ஆகத்தாவின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கின்றபோது அவர் எப்படி ஆண்டவருக்காக தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழ்ந்தார் என்பதுதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது.

தன்னுடைய ஆசைக்கு ஆகத்தா இணங்க மறுத்ததும் குயின்டஸ் என்ற அந்தக் காமுகன் அவரை அப்போடிசியா என்ற விலைமகளிடம் அனுப்பி வைத்து, தன்னுடைய மாயவலையில் சிக்க வைக்க நினைத்தான். ஆனால், விலைமகளின் திட்டம் ஆகத்தாவிடம் செல்லுபடியாக வில்லை. மட்டுமல்லாமல் அந்த விலைமகன் ஆகத்தாவிடம் தான் செய்த செயலுக்காக மன்னிப்புக் கேட்டான். தான் போட்ட திட்டம் கைகொடுக்காததினால் கடும்கோபம் கொண்ட மன்னன் அதன்பிறகு ஆகத்தாவை பலவாறாக சித்ரவதை செய்து கொலை செய்தான். இப்படி எத்தனையோ சோதனைகள், அச்சுறுத்தல்கள் வந்தபோதும் ஆகத்தா ஆண்டவர் இயேசுவுக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழ்ந்தது நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.

அர்ச். ஆகத்தாவின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்த அர்ப்பண உணர்வை, உறுதியான விசுவாசத்தை நமதாக்குவோம். அதன்வழியாக ஆண்டவருடைய அருளை நிறைவாய் பெறுவோம்.