ஜனவரி 29ம் தேதி
மேற்றிராணியாரும், ஸ்துதியரும், வேதபாரகருமான அர்ச். பிரான்சிஸ் சலேசியார் திருநாள்
இவர் கி.பி. 1567ம் வருடம் பிரான்சில் பிறந்தார். இராணுவத்தில் மிக உயர்ந்த பதவியை இவர் அடைய வேண்டும் என்று, இவருடைய தந்தை ஆசித்தார். அதனால், இவரை பாரீஸ் நகரத்திற்கு அனுப்பி கல்வி கற்கும்படிச் செய்தார்; பதுவா நகரில், சட்டத்துறையில் முனைவர் (டாக்டர்) பட்டத்தை, இவர் தனது 25வது வயதில் பெற்றார்.
பிரான்சிஸ், தனது இருதய ஆழத்தில், சர்வேசுரன் தன்னை துறவற ஜீவியத்திற்கு அழைப்பதை உணர்ந்தார். குதிரையில் அமர்ந்தபடி கத்திசண்டை பயிலும்போது, இவர் மூன்று முறை குதிரையிலிருந்து கீழே விழுந்தார்; மூன்று முறையும், இவருடைய வாளும், வாளின் உறையும் ஒன்றன் மேல் ஒன்றாக சிலுவை அடையாளத்தை தரையில் வரைந்ததுபோல் கீழே விழுந்தன!
இவர், குடும்பத்தினரிடம் திருச்சபைக்காக உழைக்கும்படியாக குருவானவராக போவதைப் பற்றி வெளிப்படுத்தியபோது, மிக நுட்பமான போராட்டம் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இடையே ஏற்பட்டது. இவருடைய எதிர்காலத்தைப் பற்றி கொண்டிருந்த திட்டங்கள் எல்லாம் கலைந்துபோவதை, இவருடைய தந்தையால் ஏற்கக்கூடாமலிருந்தது.
அச்சமயம், ஜெனிவா மேற்றிராணியாரான வந். கிளாட் டே கிரானியர் ஆண்டகை, பாப்பரசரின் ஆதரவுபெற்ற ஜெனிவா நகர ஆளுனர் பதவியை, தன் சொந்த முயற்சியினால், பிரான்சிஸுக்குப் பெற்றுக்கொடுத்தார். அந்த மேற்றிராசனத்தில் அது மிகப்பெரிய பதவியாகும். பின்னர், பிரான்சிஸ் குருப்பட்டம் பெற்றார்.
இச்சமயம் புராட்டஸ்டன்டு தப்பறைகளின் புரட்சி துவங்கியிருந்தது. புராட்டஸ்டன்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே ஐரோப்பா முழுவதும் ஆங்காங்கே போர்கள் நடந்து கொண்டிருந்தன. பிரான்சிஸ் ஜீவித்த பகுதியிலிருந்த மலைப்பிரதேசத்தில் சுவிட்சர்லாந்து நாடு இருந்தது. இப்பிரதேசம் முழுவதும் கால்வினிஸ்ட் பதிதர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இப்பகுதியை மறுபடியும் சவாய் நாட்டின் கத்தோலிக்க இளவரசர் கத்தோலிக்க ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தார். அங்கு இருந்த 60,000 கால்வினிஸ்டுகளையும் மறுபடியும் கத்தோலிக்க மதத்திற்கு மனந்திருப்பிக் கொண்டு வர பிரான்சிஸ் தீர்மானித்தார்.
இம்மாபெரும் அலுவலுக்கான பயணத்தில், இவர் மட்டுமே தனியாக உழைத்தார்; ஆர்வமிகுதியினால் இவர் நிறைவேற்ற ஆசித்த இத்திட்டத்திற்கு, இவருடைய தந்தை எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை. இவருடைய மேற்றிராசனம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்தது; அதனால், மேற்றிராசனமும், அவருக்கு இத் திட்டத்தில் உதவக்கூடாமலிருந்தது.
மூன்று வருட காலமாக பிரான்சிஸ், கால்வினிஸ்டு பதிதத்தப்பறையில் மூழ்கியிருந்த கிராமப்புறங்களுக்குச் சென்றார். ஆனால், அங்கிருந்த வீடுகளின் கதவுகள் இவருடைய முகத்திற்கு முன்பாக சத்தத்துடன் மூடப்படுகின்றன! கற்கள் இவர் மேல் எறியப்படுகின்றன! ஆனால், அசாதாரணமான பொறுமையுடனும், உத்தமமான ஆன்ம ஈடேற்ற ஆவலுடனும், காணாமற்போன ஆடுகளைத் தேடும் நல்ல மேய்ப்பராக, அர்ச். பிரான்சிஸ், பதிதத்தப்பறையில் நரகப் பாதையில் ஜீவித்த கால்வினிஸ்டுகளை மனந்திருப்புவதற்காகத் தொடர்ந்து தனியாக உழைத்து வந்தார்.
பிரான்சிஸ், தனக்கு முன்பாக மூடிக்கொள்ளும் வீடுகளுக்குள் நுழைவதற்கான ஒரு வழியை இறுதியில் கண்டடைந்தார்! கதவின் அடியில் அந்த வழியைக் கண்டடைந்தார்! இவர், ஞானப் பிரசங்கங்களை கையால் எழுதி, அவற்றின் பிரதிகளையும் கையால் எழுதி, எடுத்துச் சென்றார். பிரசங்கத்தின் ஒவ்வொரு பிரதியையும், ஒவ்வொரு வீட்டின் கதவின் அடியின் வழியாக உள்ளே நுழைத்துவிட்டு வந்தார். மக்களிடம் வலியுறுத்தி அறிவுறுத்தக்கூடிய கத்தோலிக்க வேதத்தின் கோட்பாடுகளை சிறு பிரசுரங்களாக அச்சிட்டு கொடுக்கும் பழக்கத்தை, இவ்விதமாக முதலில் அர்ச். பிரான்சிஸ் சலேசியார் தான், துவக்கினார், என்பது குறிப்பிடத்தக்கது!
அர்ச். பிரான்சிஸ் சலேசியார், 40,000 புராட்டஸ்டன்டுகளை மறுபடியும் மனந்திருப்பி கத்தோலிக்க திருச்சபையில் சேர்த்தார். 1602ம் வருடம், இவர் ஜெனிவா நகர மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார். இவருடைய ஜீவிய காலத்தில், 70,000க்கும் மேற்பட்ட கால்வினிஸ்டுகளை மனந்திருப்பி சத்திய வேதத்தில் சேர்த்தார். தன்னிகரற்ற விதமாக, அர்ச். பிரான்சிஸ் சலேசியார், 8ம் கிளமென்ட் பாப்பரசரால், "அயராத ஆன்ம தாகம் கொண்ட உத்தம மேற்றிறாணியார்!" என்று பாராட்டப்பட்டார்.
இவர் தனது 55வது வயதில், டிசம்பர் 28ம் தேதியன்று பாக்கியமாய் மரித்தார். வார்த்தை அலங்காரமில்லாததும், மிகக் குறுகியதும் நேரிடையாக விளக்கப்படுகிறதுமான எளிமையான பிரசங்கங்களையே, இவர் எப்போதும் நிகழ்த்தி வந்தார்.
"எவ்வளவுக்கு அதிகமாக நீ பேசுவாயோ, அவ்வளவுக்குக் குறைவாகவே, மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்" – அர்ச். பிரான்சிஸ் சலேசியார்.
அர்ச். பிரான்சிஸ் சலேசியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
St. Francis de Sales
Francis de Sales was born in France in 1567. His father wished for him to attain a high position in the military and sent him to study in Paris. Later, he earned a doctorate in law from the University of Padua at the age of 25.
Deep in his heart, Francis felt called to the religious life. While training in swordsmanship, he fell from his horse three times, and each time, his sword and scabbard formed the shape of a cross on the ground. When he revealed his desire to become a priest, it led to a significant struggle between him and his father, who had other plans for his future.
At that time, St. Claude de Granier, the Bishop of Geneva, secured a position for Francis as the governor of Geneva under the Pope's authority. Francis was later ordained a priest and eventually became the Bishop of Geneva.
During this period, the Protestant Reformation was spreading across Europe, and conflicts between Protestants and Catholics were widespread. The region where Francis lived bordered Switzerland, which was under Calvinist influence. Determined to bring back 60,000 Calvinists to the Catholic faith, he embarked on a mission without any financial or familial support.
For three years, Francis traveled alone through Calvinist strongholds, facing hostility. Doors were slammed in his face, and stones were thrown at him. However, with extraordinary patience and dedication, he tirelessly preached and sought to bring back lost souls.
Realizing that people refused to listen to him directly, Francis found a way to enter their homes—through written messages. He wrote Catholic teachings by hand and slipped them under doors. This was one of the first instances of using printed materials to spread religious messages, a method that would later become widespread.
Through his efforts, Francis brought back 40,000 Protestants to the Catholic Church. In 1602, he was consecrated as the Bishop of Geneva, and during his lifetime, he converted over 70,000 Calvinists. Recognizing his unwavering spiritual dedication, Pope Clement VIII praised him as a "tireless shepherd of souls."
Francis de Sales passed away on December 28 at the age of 55. He was known for his simple, clear, and direct sermons, avoiding unnecessary embellishments.
Famous Words of St. Francis de Sales:
"The more you talk, the less people remember."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக