Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

February 20 - St. Eleutherius of Tournai

  பிப்ரவரி 20ம்‌ தேதி 

வேதசாட்சியான அர்ச்‌.எலியுதெரியுஸ்‌

இவர்‌ முதல்‌ சில்டெரிக்‌ அரசனுடைய காலத்தில்‌ டூர்னை என்கிற இடத்தில்‌ பிறந்தார்‌. கிறீஸ்துவர்கள்‌ உபத்திரவப்படுத்தப்பட்டதால்‌, இவருடைய குடும்பத்தினர்‌,பிலான்டினியம்‌ என்ற கிராமத்திற்கு ஓடினர்‌. ஆனால்‌, பிரான்ஸ்‌ நாட்டின்‌ குளோவிஸ்‌ அரசன்‌ கிறீஸ்துவராக மாறி யதும்‌,இவருடைய குடும்பத்தினர்‌, இவர்களுடைய கிராமத்தில்‌ ஒரு தேவாலயத்தைக்‌ கட்டினர்‌. 

ஐந்தாம்‌ நூற்றாண்டின்‌ இறுதியில்‌, வடக்கு பிரான்ஸ்‌ பகுதியில்‌ திருச்சபையின்‌ அதிகாரிகளை, அர்ச்‌.ரெமிஜியுஸ்‌ ஏற்படுத்திய பிறகு, டூர்னையின்‌ மேற்றிராணியாராக, எலியுதெரியுஸ்‌ அபிஷேகம்‌ செய்‌ யப்பட்டார்‌. பாப்பரசர்‌, ஆரியப்‌ பதிதத்திலிருந்து திருச்சபையைப்‌ பாதுகாப்பதைப்‌ பற்றி, இவரிடம்‌ ஆலோசனை நடத்தினார்‌. 

ஆரியப்‌ பதிதர்களுடன்‌, இவர்‌ மிகுந்த ஞானத்துடன்‌ வேத சத்தியங்கள்‌ பற்றி தர்க்கம்‌ செய்து வாதாடினார்‌; இவரை அவர்கள்‌ வாதத்தினால்‌ ஜெயிக்கக்‌ கூடவில்லை, என்பதால்‌, அப்பதிதர்கள்‌, இவர்‌ மேல்‌ வெகுவாகக்‌ கோபமடைந்தனர்‌. இவர்‌ ஒருநாள்‌ தேவாலயத்திற்குச்‌ செல்கிற வழியில்‌, ஆரியப்‌ பதிதர்களுடைய கூட்டத்தினால்‌, அடிக்கப்பட்டார்‌; அதனால்‌ ஏற்பட்ட காயங்களால்‌, திரளான இரத்தம்‌ சிந்தி, கி.பி.532ம்‌ வருடம்‌ வேதசாட்சியாக மரித்தார்‌.

  இவர்‌ மரிக்கும்போது, தன்‌ மேய்ப்பின்‌ கீழ்‌ இருந்த ஞான மந்தை யை அர்ச்‌.மெதார்துவிடம்‌ ஒப்படைத்தார்‌.

அர்ச்‌.எலியுதெரியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!



St. Eleutherius of Tournai – Defender of the Faith

Feast Day: February 20

St. Eleutherius was a native of Tournai, born during the reign of Childeric I. Due to Christian persecution, his family fled to Blandinium. After King Clovis of France converted to Christianity, they built a church there.

He was consecrated bishop of Tournai following the church's reorganization by St. Remigius in the late 5th century. A strong defender against Arianism, he was consulted by the Pope on safeguarding his people. His arguments angered the Arians, and he was fatally attacked while on his way to church in 532 A.D.

On his deathbed, St. Eleutherius entrusted his flock to St. Medardus.

St. Eleutherius, pray for us!

Tag: #SaintEleutherius #MartyrOfFaith #DefenderOfTruth #CatholicSaints

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக