அர்ச். ஜான் போஸ்கோ
ஸ்துதியரும், சலேசிய சபை ஸ்தாபகருமான அர்ச். ஜான் போஸ்கோ
அர்ச். ஜியோவான்னி மெல்கியோர் போஸ்கோ (அர்ச். ஜான் போஸ்கோ) 1815 ஆகஸ்ட் 16 அன்று இத்தாலியின் பெக்கி கிராமத்தில் பிறந்தார். அந்நேரத்தில், நெப்போலியன் போர்களால் ஏற்பட்ட சீரழிவுகள் காரணமாக, இத்தாலியில் பஞ்சமும் வறுமையும் நிலவியது.
ஜான் போஸ்கோ 2 வயதாகும்போது, அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் மார்கிரட் போஸ்கோ, மூன்று மகன்களை வளர்ப்பதற்கு கடினமாக உழைத்தார்.
வறுமையின் காரணமாக, சிறுவயதில் ஜான் ஆடுமாடுகளை மேய்த்தார். முதல் ஞான உபதேசத்தை பங்கு சுவாமியாரிடம் கற்றார்.
1835ல், 20வது வயதில், குருமடத்திற்குள் நுழைந்தார். 1841 ஜூன் 5 அன்று, குருப்பட்டம் பெற்று, தூரின் நகரில் பங்கு குருவாக நியமிக்கப்பட்டார்.
தூரின் நகரில் தொழிற்சாலைகள் அதிகமாக இருந்ததால், பல பிள்ளைகள் வேலை தேடித்திரிந்தனர். சிலர் தீய வழியில் சென்றனர். இதைப் பார்த்த அர்ச். ஜான் போஸ்கோ, அவர்களை கல்வி கற்றுக்கொடுத்து, நல்ல வழியில் நடத்தவேண்டும் என தீர்மானித்தார்.
1841 டிசம்பர் 8, மகா பரிசுத்த தேவமாதா ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த திருநாளன்று, அவர் திவ்ய பலிபூசைக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது, ஒரு ஏழை சிறுவன் அவரிடம் வந்து பூசைக்கு உதவ முன்வந்தான். இதை அவர் ஆவலுடன் ஏற்றுக்கொண்டார். இதுவே பின்னாளில் "ஆரட்டரி" (Oratory) எனும் ஜெபக்கூடம் உருவாகக் காரணமானது.
1842 பிப்ரவரி மாதம், 22 சிறுவர்களுடன் ஆரட்டரி துவங்கப்பட்டது. 1846 மார்ச் மாதம், இதில் 400 சிறுவர்கள் சேர்ந்தனர்.
சலேசிய சபையின் தோற்றம்
அர்ச். பிரான்சிஸ் சலேசியாரின் எழுத்துக்களை பின்பற்றி, அர்ச். ஜான் போஸ்கோ, "சலேசிய சபை" (Salesian Society) எனும் துறவறச் சபையை உருவாக்கினார்.
மேலும், மரிய தோமினிக்கா மசரெல்லா என்பவருடன் இணைந்து, "கிறிஸ்துவர்களின் சகாய மாதாவின் குமாரத்திகள்" (Daughters of Mary Help of Christians) எனும் கன்னியாஸ்திரி சபையையும் நிறுவினார்.
10 இலட்சம் பிராங்குகள் மதிப்பில், கிறிஸ்துவர்களின் சகாய மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான பேராலயத்தையும் கட்டினார். 1868 ஜூன் 9 அன்று, இது அபிஷேகம் செய்யப்பட்டது.
1888 ஜனவரி 31 அன்று அர்ச். ஜான் போஸ்கோ பாக்கியமாய் மறைந்தார்.
1934 ஏப்ரல் 1 (ஈஸ்டர் ஞாயிறு), இரட்சணியத்தின் ஜூபிலி ஆண்டின் நிறைவு நாளில், 11ம் பத்திநாதர் பாப்பரசர் அவரை அர்ச்சிஷ்டராக (Saint) பிரகடனம் செய்தார்.
அர்ச். ஜான் போஸ்கோவின் அறிவுரை
"எதை நீ செய்தாலும், உன்னால் கூடியதை மிகச் சிறந்த விதமாகச் செய்! தேவையானதை சர்வேசுரனும், தேவமாதாவும் செய்து முடிப்பார்கள்!"
"கெட்ட நண்பர்களை விலக்கி விடு! எப்போதும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டுக்கொண்டிரு!"
அர்ச். ஜான் போஸ்கோவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
ST. JOHN BOSCO
⚡
(Founder of the Salesians)
Giovanni Melchiorre Bosco was born on 16 August 1815 at Becchin in Italy.
It was a time of great shortage and famine in the countryside, following the devastation wrought by the Napoleonic wars
When John was little more than two years old his father died, leaving the support of three boys to the mother, Margaret Bosco. John's early years were spent as a shepherd and he received his first instruction at the hands of the parish priest.
In 1835 he entered the seminary at Chieri and was ordained priest on the eve of Trinity Sunday and then was appointed in the diocese of Turin.
While working in Turin, where the population suffered many of the effects of industrialization and urbanization, he dedicated his life to the betterment and education of street children.
On 8 December, 1841, the feast of the Immaculate Conception, while John Bosco was vesting for Mass, the sacristan drove from the Church a poor boy because he refused to serve Mass. John Bosco heard his cries and recalled him, and the first seed of the "Oratory" was sown. In February, 1842, the Oratory numbered 22 boys, in March of the same year, 30, and in March, 1846, four hundred.
John Bosco, was a follower of the spirituality of St. Francis de Sales, hence he named his Order, "Salesians".
Together with Maria Domenica Mazzarello, he founded the Institute of the Daughters of Mary Help of Christians, a religious congregation of nuns
The church built by him at Turin at a cost of more than a million francs, was consecrated on 9 June, 1868, and is known today as the Basilica of Mary Help of Christians.
St. John Bosco died on 31 January 1888 and was canonized on Easter Sunday, 1st April 1934, the closing of the "jubilee year of Redemption" by Pope Pius XI.
"Do the best you can! God and our Lady will do the rest!" = St. John Bosco
His advice for youths:
"Avoid bad companions & stay busy"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக