⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
🇻🇦மே 1️⃣5️⃣ம் தேதி
🌹ஸ்துதியரான அர்ச். டில சால் பாப்டிஸ்ட் அருளப்பர் திருநாள்🌹
🌹இவர், பிரான்சிலுள்ள ரீம்ஸ் நகரில் கீர்த்திபெற்ற ஒரு உயர்ந்த குடும்பத்தில், ஏப்ரல் 30ம் தேதி, 1651ம் வருடம் பிறந்தார். சிறு வயதிலிருந்தே, தன்னிகரற்ற மிகச்சிறந்த அர்ச்சிஷ்டவரும், உன்னத பரிசுத்தத்தனத்தினுடைய புண்ணியங் களால் அலங்கரிக்கப்பட்டவரும், சர்வேசுரனுடைய பரிசுத்த ஊழியருமாக ஆவார், என்பதை இவருடைய புண்ணியமிகுந்த நன்னடத்தை வெளிப்படுத்தியது! ரீம்ஸ் பல்கலைக்கழகத்தில், இலக்கியத்தையும், தத்துவ இயல் சார்ந்த அறிவியல் பாடங்களையும் கற்றுத் தேர்ந்தார்; இச்சமயத்தில், இவர் கொண்டிருந்த சிறந்த அறிவின் திறன்களும், காண்பவரை மகிழ்விக்கும் இனிய நடத்தையும், சகலரையும், தன்பால் கவர்ந்திழுத்தார்; இருப்பினும், அருளப்பர், தன் சக தோழர்களிடமிருந்து, எப்போதும் தன்னைப் பிரித்துக்கொண்டு, தனிமையான உள்ளரங்க ஜீவியத்திற்குச் செல்லவே பெரிதும் ஆசித்தார்; சர்வேசுரனுடன் தனிமையில் அதிக நேரம் செலவிடுவதையே பெரிதும், ஆசித்துத் தேடினார். குருப்பட்டம் பெற விருக்கும் குருக்களுடைய பட்டியலில், இவருடைய பெயர் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்தாலும், ரீம்ஸ் நகர கதீட்ரல் தேவாலய நிர்வாக அதிகாரிகளான (canons) குருக்களுடைய பட்டியலிலும் இவருடைய 16வது வயதிலேயே, சேர்க்கப்பட்டார். பாரீஸ் நகருக்குச் சென்று, சோர்போன் பல்கலைக்கழகத்தில், வேத இயல் கற்றார்; அர்ச்.சுல்பீஸ் குருமடத்தில் குருமாணவராகச் சேர்ந்தார்.ஆனால், இவருடைய பெற்றோர்கள் மரித்ததால், விரைவிலேயே, இவர், வீட்டிற்குத் திரும்ப நேரிட்டது! அச்சமயம், இவர் தன் இளைய சகோதரர்களுடைய கல்வியை அளிப்பதற்கான அலுவலில் ஈடுபட்டார்; அதே சமயம், இவர் வேத இயல் கல்வியையும், தடையில்லாமல், கற்று தேர்ச்சிபெற்றார்; ஒரே சமயத்தில் இவ்விரு அலுவல்களையும் திறம்பட மாபெரும் வெற்றியுடன் நிறைவேற்றினார்; இறுதியாக, இவர் குருப்பட்டம் பெற்றார்; உறுதியானதும் உன்னதமானதுமான கத்தோலிக்க விசுவாசத் துடனும், தன் ஜீவிய காலம் முழுவதும் கொண்டிருந்த ஆத்துமத்தினுடைய அத்தியந்த பக்தி பற்றுதலுடனும், முதல் திவ்ய பலிபூசையை நிறைவேற்றினார்; இதே பக்தி பற்றுதலுடனும் தீவிரமாக அர்ச்.டில சால் பாப்டிஸ்ட் அருளப்பர், தன் ஜீவிய காலம் எல்லாம், மகா பரிசுத்த பரம இரகசியமான இந்த திவ்யபலிபூசையை சகல ஆத்துமங்களின் இரட்சணியத்திற்காக , பற்றியெரியும் ஆன்ம ஈடேற்ற ஆவலுடன் நிறைவேற்றி வந்தார்; தன்னையே ஆன்ம இரட்சணிய அலுவலுக்காக முழுமையாக அர்ப்பணித்தார்; சிறுமிகளுடைய கல்விக்காக ஸ்தாபிக்கப்பட்ட திவ்ய குழந்தை சேசுநாதரின் கன்னியாஸ்திரிகளின் துறவற சபையினருடைய ஆன்ம இயக்குனராக திறம்பட செயல்பட்டு வந்தார்; இக்கன்னியர் சபையை, மாபெரும் விமரிசையுடன் நிர்வகித்து வழிநடத்தியதுடன் கூட, அக்கன்னியர் மடங்கள் கலைக்கப்படும் நிலையிலிருந்தும், காப்பாற்றினார். இச்சமயத்தி லிருந்து, ஏழை சிறுவர்களுக்கு, சத்திய வேதத்தின் மட்டிலும், நல்லொழுக்கங்கள் மட்டிலும் அளிக்கப்பட வேண்டிய கல்வியின் மீது, இவருடைய கவனம் திரும்பியது; இந்த நோக்கத்திற்காகவே, அதாவது, ஏழை சிறுவர்களை பராமரிப்பதிலும், ஞான உபதேசக் கல்வியை அளிப்பதிலும், இடைவிடாமல் மிகுந்த திறனுள்ள கவனத்துடன் தங்களையே அர்ப்பணிக்கிற துறவற சகோதரர்களுடைய ஒரு புதிய துறவற சபையை , திருச்சபையில் ஸ்தாபிக்கிற நோக்கத்திற்காகவே, சர்வேசுரன் இவரை இந்நிலைமைக்கு உயர்த்தினார். தேவ பராமரிப்பு இவரிடம் ஒப்படைத்த இவ்வுன்னத அலுவலை, அநேக எதிர்ப்புகளுக்கும், மாபெரும் துன்ப வருத்தங்களுக்கும் மத்தியில், இவர் திறம்பட வெற்றிகரமாக நிறைவேற்றினார். கிறீஸ்துவ பள்ளிக்கூடங்கள், என்று இவர் ஸ்தாபித்த இந்த துறவற சகோதரர்களுடைய நிறுவனத்திற்கு பெயர் வைத்தார்.
Download Catholic Books (English)
அர்ச். டிலசால் பாப்டிஸ்ட் அருளப்பரர், தன்னுடன் கூட, இம்மாபெரும் கடினமான அலுவலில் உழைத்த ஆண் உதவியாளர்களான அலுவலர்களை, முதலில் தன் இல்லத்தில் வரவேற்று தங்க வைத்தார். பிறகு, அவர்களை ஒரு அதிக பொருத்தமான தங்குமிடத்தில் தங்க வைத்தார்; சிறுவர்களுக்கான ஞான உபதேச கல்வியை ஏழை சிறுவர்களுக்கு அளிப்பதற்காக இவர் திட்டமிட்டிருந்த அருமையான முறையினாலும், அதற்காக இவர் ஏற்படுத்திய விதிமுறைகளாலும், கவர்த்திழுக்கப்பட்டவர்களாக, இந்த அலுவலர்கள் முழுமையாக தூண்டி ஏவப்பட்டார்கள். அவற்றை அவர்கள் பெரிதும் பாராட்டி கொண்டடினார்கள். இக்கல்விமுறையையும், அதற்கான விதிமுறைகளையும், பின்னர், 13ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசர் அங்கீகரித்து உறுதிப்படுத்தினார்.
தாழ்ச்சியினாலும், ஏழ்மை தரித்திரத்தின் மீது கொண்டிருந்த சிநேகத்தினாலும், இவர் முதலில், தனது கதீட்ரல் தேவாலய நிர்வாக அதிபர் குரு பதவியை இராஜினாமா செய்தார்; அத்துடன், தனது ஆஸ்திகளையும் சொத்துக்களையும், விற்று ஏழைகளுக்கு அளித்தார். பின்னர், அநேக தடவை முயற்சித்தும் தோல்வியடைந்தபோதிலும், இறுதியாக, இவர், தானே ஸ்தாபித்த ஏழை சிறுவர்களுக்கான கிறீஸ்துவ பள்ளிக்கூட நிறுவனத்தின் நிர்வாகப்பொறுப்பை, தனது முழு மன விருப்பத்துடன், இராஜினாமா செய்தார். ஆனால், அதே சமயம், பல்வேறு இடங்களில், இவர் துவங்கியிருந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் அதில் பணிபுரியும் சகோதரர்கள் மட்டிலும் இவர் கொண்டிருந்த ஆர்வமுள்ள அக்கறை ஒருபோதும் குறையவில்லை! இவர், அதிக விடாமுயற்சியுடன், தன்னையே சர்வேசுரனுக்கு முழுமையாகக் கையளித்து அர்ப்பணிக்க துவங்கியிருந்தபோதிலும், தமது நிறுவனங்களில் பணிபுரிவதற்குத் தொடர்ந்து சகோதரர்களை அழைத்தும், சேர்த்தும், பராமரித்தும் வந்தார். இடைவிடாமல் ஒருசந்தி உபவாசமிருப்பதிலும், சாட்டை கசை வார்களினால் தன் சரீரத்தை அடித்துக்கொள்வதிலும் , இன்னும் மற்ற அநேக கடின தபசு முயற்சிகளிலும், இரவுகண்விழித்து ஜெபிப்பதிலும் ஈடுபட்டவராக தொடர்ந்து எப்போதும் சுயத்தை வெறுத்து வந்தார்! சுய மறுப்பை அனுசரித்து வந்தார்! எளிதில் எல்லோருடைய கவனத்தையும் உத்தமமான புண்ணிய பாதையில் நடத்திச் செல்வதற்குத் தூண்டும் விதமாக, எல்லா புண்ணியங்களிலும் , விசேஷமாக கீழ்ப்படிதலிலும், தேவ திருச்சித்தத்தை எப்போதும் நிறைவேற்றுவதற்கான ஆர்வத்திலும், பாப்பரசர் மட்டில் கொண்டிருந்த சிநேகத்திலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார். பேறுபலன்களால் நிறைந்தவராக, பக்திபற்றுதலுடன் இறுதி தேவ திரவிய அனுமானங்களைப்பெற்று, தனது 68வது வயதில் 1719ம் வருடம், ஏப்ரல் 7ம் தேதியன்று, பாக்கியமாய் ஆண்டவரில் மரித்தார்! 13ம் சிங்கராயர் பாப்பரசர், இவருக்கு முத்திப்பேறு பட்டத்தையும், 1900ம் வருடம் ஜுபிலி வருடத்தில் அர்ச்சிஷ்டப் பட்டத்தையும் அளித்தார்.🌹✝
🌹ஸ்துதியரான அர்ச். டி ல சால் பாப்டிஸ்ட் அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! 🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
✨
May 1️⃣5️⃣
St. John Baptist de LaSalle, Confessor
John Baptist de La Salle, born of an honorable family at Rheims, when still a boy showed by his manners and actions that he was called by destiny to the Lord, and was to be adorned with the excellence of holiness. As a youth he studied literature and the philosophical sciences at the academy at Rheims. During this time, although his mental powers and his lively and pleasant disposition endeared him to all, he nevertheless shrank from the company of his fellows, so that, being inclined to solitude, he might the more easily find time for God. Already having been for some time enlisted in the ranks of the clergy, he was enrolled among the canons of Rheims at the age of sixteen years. He went to Paris to study theology at the university of the Sorbonne, and was admitted to the Sulpician seminary. But he was soon forced to return home because of the death of his parents, and undertook the education of his brothers, which he carried on, without meanwhile interrupting his sacred studies, and with the greatest success, as was proved by subsequent events.
He was finally ordained priest, and said his first Mass with the intense faith and ardor of the soul which, throughout his whole life, he brought to those holy Mysteries. Meanwhile, burning with zeal for the salvation of souls, he devoted himself wholly to their service. He undertook the direction of the Sisters of the Infant Jesus, founded for the education of girls; and not only managed them most prudently, but saved their institute from dissolution. From this time onwards he turned his attention to the education of poor boys in religion and good morals. And God had raised him up for this very end, namely, that he should found in his Church a new family of religious men, and should look after boys' schools, especially of poor boys, with unceasing and efficient care. And, indeed, this duty, entrusted to him by Divine providence, was successfully accomplished, in spite of very much opposition and great hardships, by the foundation of an institute of brothers which he named the Christian Schools.
His male associates in this great and arduous work he at first received into his own house; and then, establishing them in a more suitable dwelling, thoroughly inspired them with his method and with those wise laws and regulations which were afterwards confirmed by Benedict XIII. Because of humility and love of poverty, he first resigned his canonry and distributed all his property among the poor; and later also, after many unsuccessful attempts to do so, he of his own will resigned the government of the institute which he had founded. But meanwhile his solicitude for the brothers and for the schools which he had opened in different places, did not lessen, though he began to give himself more diligently to God. Showing his hatred for self in constant fastings, in the use of the discipline and in other austerities, he spent his nights in prayer. At length, conspicuous for every kind of virtue, especially, obedience, and zeal for fulfilling the divine will, and love and devotion to the Apostolic See, full of merit, and having devoutly received the sacraments, he fell asleep in the Lord in the sixty-eighth year of his age. The supreme Pontiff Leo XIII placed him in the list of the Blessed; and, illustrious by new miracles, he was adorned with honors of the Saints in the year of jubilee, 1900.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக