அர்ச். மார்டினம்மாள் – ஜனவரி 30
உரோமாபுரியின் வேதசாட்சியான அர்ச். மார்டினம்மாள்
மார்டினம்மாள் உரோமை அதிபரின் மகள். சிறிய வயதிலேயே பெற்றோர்களை இழந்து அனாதையாகினார். அவர் வெளிப்படையாக கிறிஸ்தவம் அனுசரித்ததால், உரோமை அதிகாரிகள் அவரை பிடித்தனர்.
அலெக்சாண்டர் செவெருஸ் உரோமை சக்கரவர்த்தியாக இருந்தபோது, கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் சட்டங்களை அமல்படுத்தினார். மூன்று அதிகாரிகள் மார்டினம்மாளை தேவாலயத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது பிடித்து, அவரை அப்போல்லோ தேவதையின் கோவிலுக்குச் செல்லும்படி கட்டளையிட்டனர். மார்டினம்மாள் மகிழ்ச்சியுடன் சம்மதித்து, ஜெபித்துவிட்டு வருவதாக தெரிவித்தார்.
அதிகாரிகள், மார்டினம்மாள் மிக எளிதாக கிறிஸ்தவத்தை மறுக்குவாள் என நினைத்தனர். ஆனால், அவர் "மெய்யான சர்வேசுரனுக்கு மட்டுமே பலி செலுத்துவேன். அப்போல்லோ போன்ற விக்கிரகங்களுக்கு ஒருபோதும் பலி செலுத்தமாட்டேன்!" என்று உறுதியாக தெரிவித்தார். இதைக் கேட்ட உரோமை அதிகாரிகள் கோபமடைந்து, இரும்புக் கொக்கிகளால் அவரை சித்ரவதை செய்தனர்.
ஆனால், அவர் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருந்தார். திடீரென, வானத்தில் இருந்து மிகப்பெரிய ஒளி வந்தது. அவரை துன்புறுத்திய அதிகாரிகள் தரையில் வீழ்ந்தனர். அவர்கள் எழுந்ததும், கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றுக்கொண்டனர்.
அடுத்த நாள், மார்டினம்மாளை சக்கரவர்த்தி முன் அழைத்து, கொடூரமாக சித்ரவதை செய்தனர். பின்னர், அவரை டயானா தேவதையின் கோவிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அந்த விக்கிரகத்தில் இருந்த பிசாசு பயங்கரமாக கூச்சலிட்டு வெளியேறியது. அதே நேரத்தில், பரலோகத்திலிருந்து வந்த நெருப்பு அந்த விக்கிரகத்தின் மேல் விழுந்து அதை எரித்தது. அந்த விக்கிரகம் விழுந்து, அஞ்ஞானர்களையும் பூசாரிகளையும் நசுக்கிக்கொன்றது.
மற்றும் பல கொடிய துன்பங்களை அனுபவித்த பிறகு, மார்டினம்மாளை ஒரு சிங்கத்துக்கு முன் விட்டனர். ஆனால், அந்த சிங்கம் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவரை பெரிய நெருப்புச் சூளையில் போடினார்கள், ஆனால் அவர் எந்த தீங்கும் அடையவில்லை.
இறுதியாக, கி.பி. 228ம் ஆண்டில், முதலாம் உர்பன் பாப்பரசர் ஆண்ட காலத்தில், மார்டினம்மாள் தலை வெட்டிக் கொல்லப்பட்டு, வேத சாட்சியத்தின் மகிமையைப் பெற்றார்.
அர்ச். மார்டினம்மாளின் மறைவு மற்றும் நினைவு
1634 அக்டோபர் 25 அன்று, மார்டினம்மாளின் புனித உடல்கள் மேமர்டைன் சிறைச்சாலையின் அருகிலுள்ள பழைய தேவாலயத்திற்குள் கண்டெடுக்கப்பட்டன. பாப்பரசர் 8ம் உர்பன் அந்த தேவாலயத்தை புதுப்பித்தார். மேலும், அவர் மார்டினம்மாளுக்கு அர்ப்பணித்து பாடல்களை இயற்றினார். ஜனவரி 30 அன்று, அவர் நினைவாக உரோமாபுரியில் திருநாள் கொண்டாடப்படுகிறது.
மார்டினம்மாள் உரோமாபுரி நகரத்தின் முக்கிய பாதுகாவலர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
அர்ச். மார்டினம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
St. Martina of Rome
Martina was the daughter of a Roman consul and was left an orphan at an early age. She so openly testified to her Christian faith that she could not escape the persecutions under the pagan emperor Alexander Severus.
One day, three officers of a search party discovered Martina in a church and commanded her to follow them to a temple of Apollo. She cheerfully agreed, saying she would do so after praying for a short time.
The pagan Roman officers reported their important capture to the emperor, believing she would readily renounce her faith. But when he ordered her to speak, she replied that she would sacrifice to none other than the true God and never to the pagan idols. Martina was then tortured by iron hooks, but as she prayed, her executioners were thrown to the ground amid a great light. When they arose, they were miraculously converted to the Catholic faith, just like Saint Paul.
The following day, she was tormented again before the emperor, cruelly scourged while being tied by her hands and feet to posts. Later, she was taken to a temple of Diana, where the demon inhabiting the idol left with horrible screams. Fire from heaven then fell, burning the idol, which collapsed and crushed many of its priests and pagan worshipers.
After enduring further tortures, Martina was spared by an enraged lion and survived a fiery furnace. Finally, in AD 228, during the Pontificate of Pope Urban I, she was beheaded, receiving the glorious crown of martyrdom.
Discovery of Her Relics
The relics of St. Martina were discovered on 25 October 1634 in a crypt of an ancient church near the Mamertine prison, dedicated to the saint.
Pope Urban VIII, who was the Pontiff at the time, ordered the church to be repaired and composed hymns in her honor, which are still sung on her feast day, 30 January.
St. Martina is one of the special patrons of the city of Rome.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக