Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சின்னக் குறிப்பிடம் Tamil Catechism Book

சின்னக் குறிப்பிடம் Tamil Catechism Book
முதல் பிரிவு 
ஏக திரித்துவ சர்வேசுரன் பேரில் 

1. சர்வத்துக்கும் கர்த்தாவாயிருக்கிறவர்  யார் ?
   
    சர்வேசுரன் 

2. எத்தனை சர்வேசுரன்?

     ஒரே சர்வேசுரன் 

3. அவர் தேவ சுபாவத்திலே ஒருவராய் இருந்தாலும் ஆள் வகையிலே எப்படி இருக்கிறார்?
  
     திரித்துவமாய் இருக்கிறார்.

4. திரித்துவமாய் இருக்கிறார் என்பதற்கு அர்த்தம் என்ன?

     ஆள் வகையிலே மூவராய் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

5. இந்த மூன்று ஆட்களுக்கு பெயர் என்ன?

     பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்து.

6.  பிதா சர்வேசுரனா?

     சர்வேசுரன்.

7.  சுதன் சர்வேசுரனா?

    சர்வேசுரன் 

8.  இஸ்பிரித்து சாந்து சர்வேசுரனா?

    சர்வேசுரன் 

9/ மூவரும் மூன்று சர்வேசுரனா? ஒரே சர்வேசுரனா?

    ஒரே சர்வேசுரன்.

10.  எப்படி ஒரே சர்வேசுரன்?

      இந்த மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம்,ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருக்கிறபடியினலே மூவரும் ஒரே சர்வேசுரன் தான்.

11.  இவர்களுக்குள்ளே வல்லமை மகிமை முதலான இலட்சனத்தில்  வித்தியாசம் உண்டோ?

      இல்லை.  மூவரும் எல்லாத்திலும் சமமாயிருக்கிரார்கள்.

12.  இப்படி ஏகமும்  திருத்துவமாய் இருக்கிற சர்வேசுரனுக்கு பிரதான இலட்சணங்கள் எத்தனை?

     ஆறு.

13.   ஆறும் சொல்லு?
  
  1. சர்வேசுரன் தாமாய் இருக்கிறார்.
  2. தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்.
  3. சரீரம் இல்லாமலிருகிறார்.
  4. அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராய் இருக்கிறார்,
  5. எங்கும் வியாபித்திருக்கிறார்.
  6. எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாய் இருக்கிறார்.

இரண்டாம் பிரிவு 


உலக சிரிஸ்டிப்பின் பேரிலும் மனிதனுடைய கேட்டின் பேரிலும் 



14.  சர்வேசுரன் எல்லாத்துக்கும் ஆதி காரணமாய் இருப்பது எப்படி?
           
           பரலோகத்தையும் பூலோகத்தையும் அவற்றில் அடங்கிய சகலத்தையும் உண்டாக்கி காப்பாற்றுகிரதினாலே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாய் இருக்கிறார்.

15.  சர்வேசுரன் உண்டாக்கினவைகளில் பிரதான வஸ்துக்கள் எவை?

            சரீரமில்லாத சம்மனசுக்களும் சரீரமும் ஆத்துமமும் உள்ள மனிதர்களும் தான்.

16.  சம்மனசுக்கள் எல்லாரும் தங்கள் மேன்மையான அந்தஸ்திலே நிலைக் கொண்டார்களா?

           இல்லை.   சிலர் ஆங்கரதினாளே மோட்சத்தை இழந்து நரக ஆக்கினைக்கு உள்ளானார்கள்.

17.  இப்படி கேட்டுப் போன சம்மனசுக்கள் பெயர் என்ன?

          பசாசுக்கள்.

18.  சர்வேசுரன் மனிதனை எதற்காக உண்டாக்கினார்?

          தம்மை அறிந்து சிநேகித்து சேவிக்கவும் அதனால் மோட்சம் அடையவும் உண்டாக்கினார்.

19.  அவர் எந்த அந்தஸ்திலே ஆதிப் பெற்றோரை உண்டாக்கினார்?

        பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்திலே அவர்களை உண்டாக்கினார்.

20.    அவர்கள் அதை போக்கடித்ததெப்படி?
           
            பசாசை நம்பி சர்வேசுரனால் விலக்கப்பட்ட கனியை தின்றதினாலே அதைப் போக்கடித்தார்கள்.

21.  அதனால் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியர்ருக்கும் வந்த கேடு என்ன?

       பசாசுக்கு அடிமையாகி, சாவு நரகம் முதலிய ஆக்கினைக்கு பாதிரவான்கள் ஆனார்கள்.

மூன்றாம் பிரிவு

மனிதனுடைய இரட்சிப்பு

22.  நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்தவர் யார்?
 
      அர்ச். தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் தான்

23.   அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?
       இஸ்பிரித்து சாந்துவினாலே கர்ப்பமாய் உற்பவி;த்து அற்புதமாய் பிறந்தார்.

24.   யாரிடத்தினின்று பிறந்தார்?
        ஒருக்காலும் கன்னிமை கெடாத அர்ச். கன்னிமரியம்மாளிடத்திலே நின்று பிறந்தார்.

25.   சுவாமி பிறந்த எட்டாம் நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?
         சேசு என்னும் பெயரிட்டார்கள்.

26.   சேசு என்னும் பெயருக்கு அர்த்தமென்ன?
         நம்மை இரட்சிக்கிறவர்.

27.  ஆகையால் சேசு கிறிஸ்துநாதர் யார்?
  
           நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனேயாம்.

28.   சேசுநாதர் சுவாமி இவ்வுலகில் எத்தனை ஆண்டுகாலம் இருந்தார்?
         33 ஆண்டுகாலம் இருந்தார்.

29.  இவ்வுலகத்தில் என்ன செய்து கொண்டு வந்தார்?
      
            சகல புண்ணியங்களையும் அற்புதங்களையும் செய்து நம்முடைய திவ்விய வேதத்தை போதித்து அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.

30.  சேசுநாதர் சுவாமிக்கு எத்தனை சுபாவங்கள் உண்டு?

       தேவசுபாவம் மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.


31. எந்த சுபாவத்திலே பாடுபட்டார்?

       மனித சுபாவத்திலே பாடுபட்டார்.

32.  யாருக்காக பாடுபட்டார்?

       நமக்காக பாடுபட்டார்.

33.  என்ன பாடுபட்டார்?

        போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

34.  அப்போது சுவாமியுடைய திரு ஆத்துமம் எங்கே போனது?

       பாதாளங்களிலே இறங்கி அங்கே இருந்த புண்ணிய ஆத்துமாக்களுக்கு மோட்சபாக்கியம் கொடுக்கப் போனது

35. சேசுநாதர் சுவாமி கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினாரா?

        மரித்த மூன்றாம் நாள் கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினார்.

36.  உயிர்த்த பிற்பாடு பூலோகத்திலே எத்தனை நாள் தங்கியிருந்தார்?
 
        40 நாட்கள்.

37.  அந்த நாற்பது நாளும் என்ன செய்து கொண்டு வந்தார்?

       அநேகம் விசை தம்முடைய சீடர்களுக்கு தரிசினையாக தம்மை காண்பித்து அவர்களை வேத சத்தியங்களில் ஸ்திரப்படுத்திக் கொண்டு வந்தார்.

38. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?

        பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலதுப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

39.  இப்போது சேசுநாதர் சுவாமி எங்கே இருக்கிறார்?

       சர்வேசுரானாகிய மட்டும் எங்கும் இருக்கிறார்.  சர்வேசுரனும் மனிதனுமாகிய மட்டும் பரலோகத்திலும் திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்.

நான்காம் பிரிவு 

இஸ்பிரித்து சாந்துவின் வருகையும் திருச்சபையும் 



40. சேசுநாதர் சுவாமி பரலோகத்திற்கு எழுந்தருளின பத்தாம் நாள் என்ன
செய்தார்?
      
       தம்முடைய அப்போஸ்தலருக்கு திடனாக இஸ்பிரித்து சாந்துவை அனுப்பினார்.

41. இஸ்பிரித்து சாந்துவை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?

     உலகின் எத்திசையிலும் பிரசங்கித்து திருச்சபையை பரவ செய்தார்கள்.

42. திருச்சபைக்கு தலைவராக இருப்பவர் யார்?

     சேசுநாதர் சுவாமி தான்.

43. அவர் தமக்கு பதிலாக காணக்கூடிய தலைவராக யாரை நியமித்தார்?

      அர்ச்.  இராயப்பரை நியமித்தார்.

44. அர்ச். இராயப்பருக்கு பதிலாக திருச்சபைக்கு தலைவராக இருப்பவர் யார்?

      அர்ச்.  பாப்பானவர்.

45. மற்ற அப்போஸ்தலருக்கு பதிலாக இருப்பவர்கள் யார்?

      மேற்றிராணிமார்கள் 

46. சேசுநாதர் எத்தனை திருச்சபையை ஸ்தாபித்தார்?

      கத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஸ்தாபித்தார்.

47. திருச்சபை சொல்படி கேளாதவர்களுக்கு மோட்சம் உண்டா?

    இல்லை.

48. இல்லையென்கிறதற்கு அத்தாட்சி என்ன?

     திருச்சபையின் சொற்படி கேளாதவன் அக்கினியைப் போல் உனக்கு ஆக கடவான் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார்.

ஐந்தாம் பிரிவு 


மனிதனுடைய முடிவுகள் 



49.  பாவத்தின் நிமித்தம் சகல மனிதர்களுக்கும் வருகிற ஆக்கினை என்ன?

          சாவு 

50.  சாவுக்குப் பின் சம்பவிப்பதென்ன?
    
         தனித் தீர்வை 

51.  தனித் தீர்வைக்குப் பிறகு சாவான பாவமுள்ள ஆன்மாக்கள் எங்கே போகிறார்கள்?

         நரகம் 

52.  பரிசுத்த ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?

         மோட்சம் 

53.    தங்கள் பாவங்களுக்கு முழுதும் உத்தரியாத ஆன்மாக்கள் எங்கே போகிறார்கள்?

           உத்தரிக்கிற ஸ்தலம் 


54.  உத்தரிக்கிற ஸ்தலதில் என்னவாக இருக்கிறார்கள்?
  
          தங்கள் பாவங்களுக்கு தக்க வேதனைப் பட்டு உத்தரிக்கிரார்கள்.  முழுதும் உத்தரித்த பிறகு மோட்சத்தை அடைவார்கள்.

55.   தனித் தீர்வை அல்லாமல் வேறே தீர்வை உண்டோ?

         பொதுத் தீர்வை உண்டு.

56.  பொது தீர்வை எப்போது நடக்கும்?
  
         உலகம் முடிவிலே நடக்கும்.

57.   உலகம் எப்படி முடியும்?

          உலகமெல்லாம் நெருப்பிலே வேக மனிதர்கள் எல்லோரும் செத்துப்போவார்கள்.

58.   பின்னும் என்ன சம்பவிக்கும்?
   
          சேசுநாதர் சுவாமி மனிதர் எல்லோரையும் ஆத்தும சரீரத்தோடு எழுப்பி மிகுந்த வல்லபத்தோடு  நடுத் தீர்க்க வருவார்.

59.   எப்படி நடுத் தீர்ப்பார்?

         அவனவன் செய்த பாவ புண்ணியங்களை எல்லாம் சகலருக்கும் முன்பாக அறிய பண்ணி பாவிகளை சபித்து நரகத்திலே தள்ளி நல்லவர்களை ஆசிர்வதித்து மோட்சத்திற்கு கூட்டி கொண்டு போவார்.

60.   பாவிகள் நரகத்திலே படுகிற ஆக்கினை என்ன?

         சர்வேசுரனை ஒருகாலும் காணாமலும் ஊழியுள்ள காலம் பசாசுகளோடு நெருப்பிலே வெந்து சகல ஆக்கினைகளையும் அனுபவிப்பார்கள்.

61.  நல்லவர்கள் மோட்சத்தில் அனுபவிக்கிற பாக்கியம் என்ன?

        சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து எப்போதும் சகல பேரின்ப பாக்கியங்களையும் அனுபவிப்பார்கள். 


ஆறாம் பிரிவு
கற்பனைகளும், பாவமும், புண்ணியமும்

62.  மோட்சத்தை அடைவதற்கு வேத சத்தியங்களை விசுவசிகிரதல்லாமல் இன்னும் செய்யவேண்டியதென்ன?

                     சர்வேசுரனுடைய கற்பனைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரித்து பாவத்தை தள்ளி புண்ணியத்தை செய்ய வேண்டியது.

63.   சர்வேசுரனுடைய கற்பனைகள் எத்தனை?
                    
                        பத்து

64.   பத்தும் சொல்லு?
                    

65.   திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?
                      
                        ஆறு

66.   ஆறும் சொல்லு?


67.   பாவம் ஆகிறதென்ன?

                         தேவ கட்டளைகளை மீறுகிறதே பாவம்

68.   எத்தனை வகை பாவம் உண்டு?

                            ஜென்ம பாவம்
                             கர்ம பாவம்

69 .ஜென்ம பாவம் ஆவதென்ன?
        
            ஆதித்தாய் ஆதித் தகப்பனாலே உண்டாகி நம்மோடு கூடப் பிறக்கிற பாவம்.

70. கர்ம பாவம் ஆவதென்ன?

           அவரவர் புத்தி விவரம் அறிந்த பிற்பாடு மனது பொருந்தி செய்கிற பாவம்.

71. கர்ம பாவம் எத்தனை வகையுண்டு?

          சாவான பாவம், அற்ப பாவம் ஆகிய இரண்டு வகையுண்டு.

72. சாவான பாவம் ஆவதென்ன?

          தேவ இஷ்டப் பிரசாதத்தை போக்கடித்து நம்மை நரகத்துக்கு பாத்திரவான்களாக்குகிற பாவம்.

73. அற்ப பாவம் ஆவதென்ன?

         நம்மிடத்தி;ல் தேவசிநேகத்தை குறைத்து சாவான பாவத்துக்கு வழியுமாக்கி நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு பாத்திரவான்களாக்குகிற பாவம்.

74. தலையான பாவங்கள் எத்தனை?
        
            ஏழு

75. ஏழும் சொல்லு?


76. மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்கள் எவை?

            விசுவாசம்
            நம்பிக்கை
            தேவசிநேகம் ஆகிய இவைகளாம்.

77. தலையான பாவங்களுக்க எதிரான புண்ணியங்கள் எத்தனை?

      ஏழு

78. ஏழும் சொல்லு?














Download Traditional Tamil Catholic Songs for free.... Click here....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக