பிப்ரவரி 01ம் தேதி
அப்போஸ்தலரான அருளப்பரின் சீடரும், மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அந்தியோக்கு இஞ்ஞாசியார்
அந்தியோக்கு மேற்றிராணியாரான இஞ்ஞாசியார் தான் முதன் முறையாக அகில உலக திருச்சபையை "கத்தோலிக்க திருச்சபை" என்று அழைத்தார்.
இராயப்பர், எவோடியஸுக்கு அடுத்ததாக, இஞ்ஞாசியாரை அந்தியோக்கு நகரின் மூன்றாவது மேற்றிராணியாராக நியமித்தார். உரோமாபுரிக்கு தனது தலைமையகத்தை மாற்றுவதற்கு முன்பு, இராயப்பர் அந்தியோக்கு நகரின் முதல் மேற்றிராணியாராக இருந்தார்.
இவருடைய காலத்தில், உரோமத்தை ஆண்ட டிராஜன் சக்கரவர்த்தி அந்தியோக்கு நகரத்திற்கு வந்தபோது, அங்கிருந்த கிறிஸ்துவர்கள் அனைவரும் அஞ்ஞான விக்கிரகங்களை வழிபாடு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டான். அதைப் பழுதுபடுத்த மறுத்த கிறிஸ்துவர்களை கொன்று போடும்படி உத்தரவிட்டான்.
இஞ்ஞாசியார் விரைவில் கைது செய்யப்பட்டு, டிராஜன் முன்பாக நிறுத்தப்பட்டார். குற்றம் சுமத்தப்பட்டவராக சங்கிலிகளால் கட்டுண்டு, உரோமாபுரி நகரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். அங்கு உரோமாபுரி மக்களுக்கு முன்பாக காட்டுமிருகங்களுக்கு இரையாகப் போடப்பட்டார்.
இஞ்ஞாசியார், உரோமாபுரிக்கு பயணமாக செல்லும் போது ஏழு கடிதங்கள் எழுதினார். அவை திருச்சபையால் பாதுகாக்கப்பட்ட பிரசித்தி பெற்றவையாகும். ஐந்து கடிதங்கள் துருக்கியிலுள்ள ஆசியாவிலுள்ள கிறிஸ்துவர்களுக்கு எழுதப்பட்டன. திருச்சபை அதிகாரிகளுக்கும் சர்வேசுரனுக்கும் கீழ்ப்படிந்து, வேத விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆறாவது கடிதம், ஸ்மிர்னா நகர மேற்றிராணியாரான போலிக்கார்ப்புவிற்கு எழுதியது. இவர் பின்னாளில் வேதசாட்சியாக கொல்லப்பட்டார். ஏழாவது கடிதம் உரோமையிலிருந்த கிறிஸ்துவர்களுக்கு எழுதப்பட்டது.
அக்கடிதத்தின் ஒரு பகுதி:
“துன்புறுகிற என் சர்வேசுரனை கண்டு பாவிக்கும்படியாக என்னை அனுமதியும். நான் கிறிஸ்துநாதரின் மிகத் தூய்மையான அப்பமாக மாறும்படியாக, சர்வேசுரனின் கோதுமை மணியாயிருக்கிற நான், சிங்கங்களின் பற்களால் நன்றாக அரைக்கப்படவேண்டியிருக்கிறது.”
(இது, இவருடைய திருநாள் திவ்ய பலிபூசையின் போது ஜெபிக்கப்படுகிற ஜெபமாக பாதுகாக்கப்பட்டுள்ளது).
கி.பி. 107ம் வருடம், கொலோசிய மைதானத்தில் இரண்டு சிங்கங்களுக்கு இரையாக அவர் தன்னைத் தானே ஒப்புக்கொடுத்தார். இவ்வாறு அவர் மகிமைமிக்க வேதசாட்சிய முடியைப் பெற்றுக்கொண்டார்.
அந்தியோக்கு இஞ்ஞாசியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
St. Ignatius of Antioch – The Martyr Who Defined Catholicism
February 1 – Feast of St. Ignatius of Antioch
St. Ignatius of Antioch, a revered early Church Father and martyr, played a crucial role in shaping Christianity. He was the first to use the term "Catholic" to describe the universal Church, emphasizing its unity and apostolic foundation.
The Third Bishop of Antioch
Appointed by St. Peter himself, St. Ignatius succeeded Evodius as the third Bishop of Antioch. It is significant to note that before shifting the Holy See to Rome, St. Peter was the first Bishop of Antioch. This city holds a special place in Christian history, as it was here that the disciples were first called Christians (Acts 11:26).
Persecution Under Emperor Trajan
During the reign of Emperor Trajan, a decree was issued in Antioch demanding that Christians worship pagan idols alongside their neighbors. Those who refused faced severe persecution and execution.
St. Ignatius, unwavering in his faith, was arrested and brought before Trajan. Accused of defying the emperor’s edict, he was condemned to be chained and transported to Rome, where he would be thrown to wild beasts as a public spectacle.
The Seven Letters of St. Ignatius
During his arduous journey to Rome, Ignatius wrote seven profound letters that continue to inspire Christians today:
Five letters were addressed to Christian communities in Asia Minor, urging them to remain steadfast in their faith, obey Church leaders, and reject heretical teachings.
The sixth letter was written to St. Polycarp, the Bishop of Smyrna, who would later become a martyr himself.
The seventh letter, addressed to the Christians in Rome, contains one of his most famous declarations of faith:
> “Permit me to imitate my suffering God ... I am God’s wheat and I shall be ground by the teeth of lions, that I may become the pure bread of Christ.”
These words are preserved today in the Communion prayer of his feast day Mass.
Martyrdom in Rome (AD 107)
Upon reaching Rome, St. Ignatius was led to the Coliseum, where he was devoured by two ferocious lions. His martyrdom remains a powerful testimony to unwavering faith and complete surrender to God’s will.
The Legacy of St. Ignatius
St. Ignatius' contributions to Christianity extend beyond his martyrdom:
He was the first to refer to the Church as Catholic (from the Greek καθολικός, meaning “universal”).
He played a significant role in defining Christian identity, alongside the fact that Antioch was the first place where believers were called Christians.
His writings continue to be a source of theological wisdom, reinforcing the unity of the Church and its teachings.
St. Ignatius of Antioch, pray for us!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக