ஆகஸ்டு
1️9️ம் தேதி
யூடிஸ்ட்ஸ் குருக்கள் சபை என்று அழைக்கப்படுகிற, சேசுமரியாயின் சபையின் ஸ்தாபகரான அர்ச். யூட்ஸ் அருளப்பர் திருநாள்
அர்ச்.
யூட்ஸ் அருளப்பர்,
1601ம் வருடம், பிரான்சிலுள்ள நார்மண்டியைச் சேர்ந்த ரி என்கிற கிராமத்தில்,
பக்தியுள்ள பெற்றோர்களிடம் பிறந்தார். அவர்கள் இவரைப் பிறந்தவுடனேயே மகா பரிசுத்த தேவ
மாதாவிற்கு அர்ப்பணம் செய்து ஒப்புக்கொடுத்தனர். 1615ம் வருடம், கான்
என்ற இடத்திலுள்ள சேசுசபைக் கல்லூரியில் படித்தபோது, அர்ச். யூட்ஸ் அருளப்பர் பரிசுத்த கற்பு வார்த்தைப் பாட்டைக் கொடுத்தார்; தன்னை முழுமையாக மகா பரிசுத்த தேவ மாதாவிற்கு
அர்ப்பணித்தார்;அன்று முதல், மகா பரிசுத்த தேவமாதாவின்
மீதான அத்தியந்த பக்தியானது, இவரிடம் இன்னும் ஆழமாகவும், இன்னும் உயரமாகவும் குறிப்பிடத்தக்கவிதமாக, அதிகரிக்கத் துவங்கியது.
1623ம் வருடம்,
இவர், வந்.பெரூலின் கர்தினால்
ஆண்டகையால் ஸ்தாபிக்கப்பட்ட பிரான்ஸினுடைய ஜெபக்கூட துறவற சபையில் சேர்ந்தார். 1625ம் வருடம் டிசம்பர்
20ம் தேதியன்று,குருப்பட்டம் பெற்றார்; அப்போஸ்தல வேதபோதக அலுவலில் ஈடுபட்டு, நார்மண்டியிலும், பர்கண்டியிலும், பிரான்சின் ஏழைகள் வசிக்கும் சேரிகளிலும் மூலை முடுக்குகளிலும், பிரிட்டனியிலும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்து
வந்தார். குருக்களுக்கு
அளிக்க வேண்டிய பயிற்சி மிக முக்கியமானது, என்பதை
உணர்ந்தவராக, அர்ச். யூட்ஸ் அருளப்பர், செபக்கூட துறவற சபையிலிருந்து வெளியேறி, சேசுமரியாயின் சபையை ஸ்தாபித்தார். இது யூடிஸ்ட்ஸ் துறவற
சபை என்று அறைக்கப்படுகிறது; இச்சபையின் முக்கிய
நோக்கம், மிகச் சிறப்பான குருமடத்தினகல்வியை குருமாணவர்களுக்கு அளிப்பதாகும்.
இதனுடைய
முதல் குருமடம் , கான் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது;:
பின் விரைவிலேயே,மற்ற பல
இடங்களிலும் துவங்கப்பட்டது. தீய வழிகளில் ஜீவிக்கும்
பெண்களை மனந்திருப்புவதற்காகவும், பாவ வழியிலிருந்து மனந்திரும்பிய
உத்தம கத்தோலிக்க ஜீவியம் ஜீவிக்கிற
நிராதரவான பெண்களுக்கு உதவும்படியாகவும், மகா பரிசுத்த தேவமாதாவின்
பிறா்சிநேகத்தின் சபையை அர்ச். யூட்ஸ் அருளப்பா் ஸ்தாபித்தார்; புறக்கணிக்கப்பட்ட
கத்தோலிக்கர்களிடம் சுவிஷேத்தையும் ஞான உபதேசத்தையும் போதிப்பதற்காக,
பங்குகளில் செயல்படக்கூடிய ஒரு வேதபோதக நிறுவனத்தையும்
ஸ்தாபித்தார். நீண்ட காலமாக, அர்ச். யூட்ஸ் அருளப்பர், தேவாலயங்களிலும், திறந்த வெளி மைதானங்களிலும், திரளான
கூட்டங்களுக்கு, அல்லது அரண்மனைகளில் அரசவையிலுள்ள உயர்குடி மக்களுக்கும் அரசருக்கும் பிரசங்கித்து வந்தார்; மக்களிடையே நிலவிய பாவாக்கிரமங்கள் பற்றி, மிக பலமாகக் கண்டித்துப்
பிரசங்கித்து வந்தார்; இவர் அனுசரித்த தன்னிகறற்ற பரிசுத்தத்தனத்துடன் கூட செய்த நேர்த்தியான
பிரசங்கங்கள், மக்களின் இருதயங்களை மிக ஆழமாக ஊடுருவும்
சக்திவாய்ந்தவையாக திகழ்ந்தன!
பிரான்ஸ்
நாடுமுழுவதும், இவருடைய பிரசங்கங்கள் மிகவும் பிரபல்யமடைந்தன! திரளான மக்கள் பாவ ஜீவியத்தை விட்டு
மனந்திரும்பினர்! உத்தம கத்தோலிக்கர்களாக ஜீவிக்கலாயினர்! நமதாண்டவருடையவும், தேவமாதாவுடையவும் மகா
பரிசுத்த திவ்ய திரு இருதயங்கள், நம்மேல்
கொண்டிருக்கும் அளவில்லாத சிநேகத்தினால் பற்றியெரிந்துகொண்டிருக்கின்றன!
என்பதை கேட்பவர் இருதயங்களில் ஊடுருவும்படியாக, சேசுமரிய திரு இருதய பக்தியை
அயராமல் சென்ற இடங்களிலெல்லாம், பரப்பி வந்தார். நம் மேல் சர்வேசுரன்
கொண்டிருக்கும் அளவில்லாத சிநேகத்தினுடைய அடையாளமாக, திவ்ய சேசுமரிய திரு இருதயங்கள் நமக்கு
வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன!
என்றும், இவ்விரு மகா பரிசுத்த திவ்ய
திரு இருதயங்கள் மீது பக்திகொண்டிருக்கும் ஒரு உத்தம
கத்தோலிக்க சமுதாயத்திற்கு நாம் எவ்வாறு அழைக்கப்பட்டிருக்கிறோம்? என்பதைப் பற்றியும் அயராமல், அர்ச். யூட்ஸ் அருளப்பர் சென்ற இடங்களிலெல்லாம், ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பிரசங்கித்து வந்தார்.
மகா
பரிசுத்த சேசுமரிய திவ்ய திரு இருதயங்களுக்குத் தோத்திரமாக, இவர்
திவ்ய பூசை ஜெபங்களையும், திருவழிபாட்டின்
மற்றும் துறவியர் கன்னியர் ஜெபிக்கக்கூடிய கட்டளை ஜெபங்களையும் இயற்றினார்; 1648ம் வருடம், அவுட்டனில்,
மகா பரிசுத்த தேவமாதாவின் மாசற்ற திரு இருதயத்தின் திருநாள்
பிப்ரவரி 8ம் தேதி கொண்டாடப்படுவதற்கு
ஏற்பாடு செய்தார். 1672ம் வருடம், அக்டோபர்
20ம் தேதி, திவ்ய சேசுநாதர்சுவாமியின் மகா பரிசுத்த திவ்ய
திரு இருதயத் திருநாள் கொண்டாடப்பட்டது. அர்ச். யூட்ஸ் அருளப்பர், 1680ம் வருடம், ஆகஸ்ட்
19ம் தேதியன்று, சேசுமரியாயின் மகா பரிசுத்தத் திவ்ய
திருநாமங்களை பக்திபற்றுதலுடன் உச்சரித்தபடி பாக்கியமாய் மரித்தார். 1925ம் வருடம், மே
31ம் தேதியன்று, 11ம் பத்திநாதர் பாப்பரசரால்
இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது. இவர் மரித்தபிறகு, சேசுமரியாயின் சபை, தொடர்ந்து வளர்ந்து
கொண்டு வந்தது. 1789ம் வருடம், பிரஞ்சுப்
புரட்சி துவங்கியபோது, இத்துறவற சபைக் குருக்கள் 15 குருமடங்களை நடத்தி வந்தனர்; சில கல்லூரிகளையும், சில
பங்குகளையும் நடத்தி
வந்தனர். பிரஞ்சுப் புரட்சியின்போது, இச்சபையின் எல்லா மடங்களும் மூடப்பட்டன ; இச்சபைக் குருக்கள் மற்ற நாடுகளுக்கு சிதறி
ஓடினர்; இவர்களில் நான்கு குருக்கள், உதவி தலைமை அதிபரான
சங்.பிரான்சிஸ் லூயிஸ் ஹெர்பா்ட் சுவாமியார் உட்பட , பாரீசில் பிரஞ்சுப் புரட்சிக்காரர்களால், வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். 1926ம் வருடம் இவர்களுக்கு
முத்திப் பேறுபட்டமளிக்கப்பட் டது. ✝
“மற்ற
மனிதர்களுடன் வியாபார விஷயமாக, ஏதாவது பேச்சு வார்த்தை நிகழ்த்துவதற்கு முன்னதாக,இந்த குறிப்பிட்ட அலுவலின்போது,
அதன்விளைவாக, சர்வேசுரனுக்கு அதிமிக மகிமை ஏற்படவேண்டும் என்பதன்பேரில், அந்த மனிதர்களும் ஏற்புடன்
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற கருத்திற்காக, எப்போதும்,
அவர்களுடைய காவல் சம்மனசானவர்களிடமும், அவர்களுடைய பாதுகாவலர்களான அர்ச் சிஷ்டவர்களிடமும் வேண்டிக்கொள்ளவேண்டும்!”- ✍🏻+
அர்ச். யூட்ஸ்
அருளப்பர்
ஸ்துதியரான
அர்ச். யூட்ஸ் அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக