தேவநற்கருணை ஆத்துமத்தின் போஜனம்
1. வானோர் போஜனமே மாமரியாயின்
மகனாய் உதித்தோனே - உம்மை
வாழ்த்தி நாம் ஸ்துதித்து போற்றிடுவோமே
வானுலகாள்வோனே.
2. பூங்காவில் வைத்த தீங்கனி போலே
பொழிலுயிர் தருவோனே - நாங்கள்
தீங்கு சூழ்ந்திடும் பேய் ஆங்காரம் நின்று
நீங்கிட அருள்வாயே.
3. ஜீவியம் அளித்து பாவிகள் மோட்சம்
சேர்ந்திடச் செய் அமுதே - எம்மைத்
தேற்றியே நித்தம் காத்து ரட்சிப்பாய்
திவ்விய போஜனமே
4. மக்களைத் தேற்ற மிக்குறும் அன்பால்
வானில் நின்றே வருவாய் எம்மை
வானில் சேர்த்திடவே பானமாயுமது
மேனி ரத்தம் அளிப்பாய்.
5. தந்தை தன் மக்கள் நொந்திடா அருகில்
வந்திருப்பது போலே -நீயும் இந்தப்
பூவுலகில் சொந்தம் பாராட்டி
சந்நதமே இருப்பாய்.
6. கன்னியின் வயிற்றில் உன்னரும் வகையாய்
கனியென உதித்தோனே - எம்மைக் காத்து
ஆண்டிடுவாய் பார்த்துத் தேற்றிடுவாய்
கன்னியர் போஜனமே.