Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 16 மார்ச், 2021

அலை ஒளிர் அருணனை - Tamil Catholic Songs (Our Lady Songs)

அலை ஒளிர் அருணனை அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ வாழ்க்கையின் பேரரசி - வழுவில்லா மாதரசி கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ காலமும் காத்தருள்வாய்

அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே பொல்லாத கூளியின் தொல்லைகள் நீங்கிட வல்ல உன் மகனிடம் கேள்

அகோரப் போர் முழங்கி அல்லலும் தோன்றுதன்றோ எல்லோரும் விரும்பிடும் நல்லதோர் அமைதியை சொல்லாமல் அளித்திடுவாய்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக