பல்லவி
தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோர்க்கு
தஞ்சமும் ஆதரவும் நீரே
சரணங்கள்
1. தீயில் மெலிந்து வெந்து சோர்ந்து உந்தன்
திருத்தயை கேட்க நீரோ அறிந்து
தூயவான் கதியினிற் சேர்ந்து உம்மை
ஸ்துதித்திட அருள் செய்வீர் புரிந்து
உலகம் பசாசைத் தினம் வென்றார் தங்கள்
உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார்
கலகமெல்லாம் கடந்த பின்னும் சொற்பக்
கறையினால் துறை சேரார் இன்னும் தாயே
தாய் விட்டுப் பிள்ளை நிற்கலாமோ உந்தன்
தயை விட்டால் துயர் விட்டுப் போமோ !
தூய கருணை நிறை ஆயே இவர்
துயரெல்லாம் நீக்க வரும் தாயே
உம் மகன் தன்னைக் காணாதாலும் தீயில்
உழன்று வருந்து வதினாலும்
நன்மை நிறை கன்னியாந் தாயே மோட்ச
நாடுதந் தாதரிப்பீர் ஆயே
5. பாவிகட் கடைக்கலம் நீரே-மிக
பரிதவிப் போர்க் குதவி நீரே
சேவிப் போர்க்கு துணையும் நீரே-தம்
சென்றோர்க்கு இராக்கினியும் நீரே