Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

old christian songs lyrics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
old christian songs lyrics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 ஜனவரி, 2024

வானோர் போஜனமே - Tamil Catholic song lyrics

 

தேவநற்கருணை ஆத்துமத்தின் போஜனம்

1. வானோர் போஜனமே மாமரியாயின்
மகனாய் உதித்தோனே - உம்மை
வாழ்த்தி நாம் ஸ்துதித்து போற்றிடுவோமே
வானுலகாள்வோனே.

2. பூங்காவில் வைத்த தீங்கனி போலே
பொழிலுயிர் தருவோனே - நாங்கள்
தீங்கு சூழ்ந்திடும் பேய் ஆங்காரம் நின்று
நீங்கிட அருள்வாயே.

3. ஜீவியம் அளித்து பாவிகள் மோட்சம்
சேர்ந்திடச் செய் அமுதே - எம்மைத்
தேற்றியே நித்தம் காத்து ரட்சிப்பாய்
திவ்விய போஜனமே

4. மக்களைத் தேற்ற மிக்குறும் அன்பால்
வானில் நின்றே வருவாய் எம்மை
வானில் சேர்த்திடவே பானமாயுமது
மேனி ரத்தம் அளிப்பாய்.

5. தந்தை தன் மக்கள் நொந்திடா அருகில்
வந்திருப்பது போலே -நீயும் இந்தப்
பூவுலகில் சொந்தம் பாராட்டி
சந்நதமே இருப்பாய்.

6. கன்னியின் வயிற்றில் உன்னரும் வகையாய்
கனியென உதித்தோனே - எம்மைக் காத்து
ஆண்டிடுவாய் பார்த்துத் தேற்றிடுவாய்
கன்னியர் போஜனமே.