ஓதிடல் தினமே
அனைவரின் மகிழ்வாமே
தாயினும் மேலாம் தாயுமே நீயே
தமியோர் திரவியமே
அன்பிதே அன்பிதே மாதா
தன்னலமேயற்ற மாதா - தாயினும்
கலைமொழியால் உனைத் துதித்திடல்
நாளும் கவலையும் நீக்குமம்மா
பல வகைப் பாகும் தெளிவுறு தேனும்
தெவிட்டா உணவாமே - அன்பிதே
பஞ்சமும் நோயும் பசியும் தீர
பார்த்திபன் சேசுவையே
அஞ்சலி புரிவோம் அம்மா மரியே
அனவரதமும் ஸ்துதிப்போமே - அன்பிதே
பரிசுத்த தாயே பார் புகழ் மரியே
பாவிகளாம் எம்மையே
பார்த்தருள் வார்த்து பரகதி சேர்க்க
பரன் துணை வேண்டிடுவாய் - அன்பிதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக