Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

catholic christian லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
catholic christian லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - விபூதி (Ash)

விபூதி

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

விபூதி என்பது சாம்பல், தபசுகாலத்துக்கு ஆரம்பமாகியிருக்கிற புதன்கிழமை விபூதித் திருநாள் என்று பெயர் வழங்கிவருகிறது. தபசுகாலம் நாற்பது நாள் அடங்கியது. நாம் நமது சரீரத்தைத் தண்டித்து அடக்க வேண்டும் என்பதின் அவசியத்தைத் திருச்சபை நமக்கு இந்த நாட்களில் நினைப்பூட்டுகிறது. தபசு செய்யாமல் அலட்சியமாயிருக்கிறவன் கெட்டழிந்துபோகும் ஆபத்தைத் தேடிக் கொள்கிறான். கிறீஸ்தவன் தனது கடைசி முடிவையும், மண்ணுக்குத் திரும்பிப் போகவேண்டியதையும் எக்காலமும் மறந்துபோகக் கூடாது என்பதும் திருச்சபையின் கருத்து.



நாம் பிறக்கும்பொழுதே, பாவத்தோடு பிறக்கிறோம். பின்னும் புத்தி விபரம் அறிந்தது முதல் எத்தனையோ பாவங்களைக் கட்டிக் கொள்கிறோம். இவைகளால் சர்வேசுரனுக்கு உண்டாகும் கோபத் தைத் தபசினாலும் பரித்தியாக முயற்சிகளினாலும் தணிக்கப் பிரயாசப்பட வேண்டுமென்று திருச்சபை வலியுறுத்துகிறது. நம் மேல் சுமத்தப்பட்ட இந்தக் கடமையை நமக்கு எடுத்துரைப்பதற்காகவே விபூதி திருநாள் அன்று சாம்பலை மந்திரித்து நெற்றியில் பூசுகிற சடங்கு ஏற்படலாயிற்று.

பூர்வீக வழக்கம்:

இருச்சபையில் வழங்கி வருகிற மற்ற அநேக ஆசாரங்களைப் போலவே, சாம்பலின் உபயோகமும் ஜனங்களுக்குள். ஏற்கனவே அநுசரிக்கப்பட்டுவந்த வழக்கங்களில் ஒன்றுதான். பழைய ஆகமங்களில் இதன் உபயோகத்தைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாவீது இராஜா தன் பாவங்களுக்காகப் பச்சாதாபப்பட்டு, "சாம்பலைப் போஜனம் போலும் புசித்துக் கண்ணீரால் என் பானத்தைக் கலந்தேன்" என்று கூவினார். யோனாஸ் தீர்க்கதரிசி செய்த பிரசங்கத்தின் பயனாக, நினிவே நகரத்தார் தபசு செய்யத் தீர்மானித்து சாக்குத் துணியை உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்து இருந்தார்கள். ஆகையால் திருச்சபை ஆரம்பத்தில் மனந்திரும்பின யூதர் இந்த வழக்கத்துக்குக் காரணமாயிருந்தார்கள் என்று சொல்ல நியாயமுண்டு.

திருச்சபை ஆரம்ப காலங்களில் சாம்பல் பெரும் பாவிகளுக்கு விதித்த தண்டனைகளில் ஒன்றாயிருந்தது. கனமான பாவங்களைக் கட்டிக்கொண்டவர்கள் மன்னிப்படைய வேண்டுமானால், விபூதித் திருநாட் காலையில் தபசுக்குரிய உடை உடுத்திக் கோவில் வாசற்படியில் வந்து நிற்பார்கள். அப்போது அவர்களுக்குச் சாக்குத்துணியை அணிந்துகொள்ளக் கொடுத்துச் சாம்பலை அவர்கள் மேல் தூவுவார்கள். அன்று முதல் பெரிய வியாழக்கிழமை வரைக்கும் கோவிலில் பிரவேசிக்கக்கூடாது என்று சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பிரசித்தமான பாவிகளல்லாதவர்களில், பக்திமான்கள் சிலர் தாழ்ச்சியின் காரணமாக மேற்கூறினவர்களுக்குப் போலவே தங்கள் பேரிலும் சாம்பலைத் தூவும்படி கேட்டுக் கொண்டார்கள். இதிலிருந்துதான், நாளாவட்டத்தில் கத்தோலிக்கர் யாவருக்கும் சாம்பல் பூசுகிற வழக்கம் உண்டானது. 1090-ம் வருடத்தில் இதைப்பற்றிச் சட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

தற்கால வழக்கம்:

முந்தின வருடக்கில் குருத்து ஞாயிறன்று மந்திரித்த குருத்துகளைச் சுட்டு அந்த சாம்பலைத்தான் விபூதித் திருநாள் அன்று உபயோகிக் கிறார்கள். சில ஞான ஆசிரியர் இதற்கு ஓர் அர்த்தமுங் கூறி விளக்கி யிருக்கிறார்கள். குருத்து வெற்றிக்கு அடையாளம். பாவத்தின் பேரி லும், பசாசின் பேரிலும் நாம் வெற்றி அடையவேண்டும். தாழ்ச்சியும் தபசுமின்றி இந்த வெற்றியை நாம் அடைய முடியாது என்பதற்குச் சாம்பல் அடையாளம் என்று சொல்கிறார்கள்.


சாம்பலை மந்திரிக்கும் போது குருவானவர் சொல் கிற நான்கு ஜெபங்களில் வெகு நேர்த்தியான கருத் துக்கள் நிறைந்துள்ளன. பாவிகளாகிய நம்மை சர்வேசுரன் காப்பாற்றி, சாம்பலும் தூசியுமான நமது பேரில் இரக்கமா யிருந்து, இந்த சாம்பலை  நமக்கு இரட்சண்ய மருந் தாக்கி, நினிவே நகரத் தார் தபசு செய்யத் தீர்மானித்ததைக் கண்டு சர்வேசுரன் அவர்களை அழித்துப் போடாமல் காப்பாற்றின வண்ணம் தபசு செய்து மன்னிப்படைய விரும்புகிற நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடுவதே இந்த ஜெபங்களில் உள்ள சாராம்சம்.

சாம்பலை மந்திரித்தபின் குருவானவர் அதை எடுத்து இதர குருக்கள் உச்சியிலும் விசுவாசிகளின் நெற்றியிலும் பூசி, "மனிதனே. நீ தூசியாயிருக்கிறாய், மீண்டும் தூசியாய் போவாய் என்று நினைத்துக்கொள்” என்று சொல்கிறார். நாம் எல்லோரும் ஒருநாள் மரிக்கவேண்டும் என்னும் சத்தியத்தை இது நமக்கு நினைப்பூட்டு கிறது. ஓர் ஞான ஆசிரியர் சொல்லியிருப்பதுபோல் சுட்ட சாம்பலை இன்னும் சுடாத சாம்பலோடு கலக்கிறார். ஆண், பெண், பெரியோர், சிறியோர் சகலரும் இதை நெற்றியில் தரித்துத் தங்கள் கடைசி முடிவை ஞாபகப்படுத்திக் கொள்வார்களாக. சாம்பலை மந்திரித்துப் பூசுவது நாம் ஒருநாள் மரிக்க வேண்டும் என்பதையும், தாழ்ச்சியும், தபசு முயற்சிகளும் பாவத்துக்குப் பரிகரிக்க அவசியம் என்பதையும் நினைப்பூட்டுவதற்காகவேயன்றி வேறல்ல.

விபூதி மந்திரிக்கும் சடங்கு:

முந்தைய ஆண்டு குருத்து ஞாயிறன்று மந்திரித்த ஒலிவ மரக் கொம்புகள் அல்லது குருத்தோலைகளைச் சுட்டெரித்து எடுத்த சாம்பலைக் குருவானவர் பூசைக்குமுன் மந்திரிக்கிறார். (குரு ஊதா காப்பாவைத் தரித்துக்கொண்டு, பீடத்திலேறி நடுவில் முத்தஞ்செய்து, நிருபப்பக்கஞ் சென்று பின்வருமாறு சொல்லுவார். பாடகர் பாடுவார்கள்.)

ஆரம்ப வாக்கியம் - சங். 68:17:

ஆண்டவரே. உமது இரக்கம் மகா பட்சம் நிறைந்த தாகையால், எங்கள் விண்ணப்பத்திற்கு செவிசாய்த்தருளும். ஆண்டவரே, தேவரீருடைய இரக்கங்களின் பெருக்கத்திற் கேற்றபடி எங்களை நோக்கியருளும். (சங். டிெ:2) சர்வேசுரா. தேவரீர் என்னை இரட்சியும்; ஏனெனில் வெள்ளம் என் ஆத்துமம் மட்டும் பெருகி நுழைந்தது. பிதாவுக்கும். (மறுபடியும்: "ஆண்டவரே...."சங்கீதம் வரையில்)

 (குரு அங்கேயே நின்றுகொண்டு, கரங்களைக் குவித்த வண்ணம்:)

குரு: ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக;
பரி: உமது ஆவியோடும் இருப்பாராக.

செபிப்போமாக: (செபம் 1)

சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, பச்சாதாபப் படுகிறவர்களை மன்னித்தருளும்; தேவரீரை மன்றாடுகிறவர்கள்மீது இரக்கமாயிரும்: பரமண்டலங்களிலிருந்து உமது பரிசுத்த சம்மனசானவரைத் தயவுகூர்ந்து அனுப்பி, இந்தச் சாம்பலை (இரு முறை சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு) ஆசீர்வதித்து அர்ச்சிக்கும்படி செய்தருளும். உமது பரிசுத்த நாமத்தைத் தாழ்ச்சியோடு மன்றாடு கிறவர்களுக்கும். தங்கள் பாவங்களைத் தாங்களே மனதார உணர்ந்து தங்கள் குற்றங்களைக் தாங்களே ஒப்புக்கொண்டு, உமது தெய்வீகத் தயவின் சமுகத்தில் தங்கள் அக்கிரமங்களை நினைத்து, மனம் நொந்து வருந்துகிறவர்களுக்கும், அல்லது உமது தாராளம் நிறைந்த நன்மை பெருக்கத்தைத் தாழ்மையோடும் தளரா நெஞ்சத் தோடும் இரந்து மன்றாடுகிற யாவருக்கும். இந்தச் சாம்பல் இரட் சண்ய சுகந்தரும் மருந்தாயிருப்பதாக! இந்தச் சாம்பலை இட்டுக் கொள்ளுகிறவர்கள் எல்லோரும் மது மகா பரிசுத்த நாமத்தை மன்றாடுவதின் மூலமாகத் தங்கள் பாவங்களினின்று விடுதலை யடையவும், சரீர சுகத்தையும் ஆத்துமப் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளவும் அநுக்கிரகஞ் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.

செபிப்போமாக: (செபம் 2)

பாவிகள் அழிந்துபோகவேண்டுமென்றல்ல. ஆனால் அவர்கள் பச்சாதாபப்படவேண்டுமென்று விரும்புகிற சர்வேசுரா, மனித சுபாவத்தின் பலவீனத்தைத் தயவாய்க் கண்ணோக்கி, தாழ்ச்சிக்கு அடையாளமாகவும், பாவமன்னிப்படையப் பேறுபெற்றவர்களாகவும் எங்கள் நெற்றியிலிட்டுக் கொள்ள நாங்கள் தீர்மானித்திருக்கும் இந்தச் சாம்பலை உமது நன்மைத்தனத்தை முன்னிட்டு (சிலுவை அடையாளம் வரைந்துகொண்டு)ஆசிர்வதித்தருளக் கிருபை செய்து, தாங்களும் சாம்பலாயிருக்கிறோமென்றும், எங்கள் அக்கிரமத்துக் குத் தண்டனையாக மீளவும் சாம்பல் ஆவோமென்றும் அறிந்திருக் கிற நாங்கள் சகல பாவங்களுக்கும் மன்னிப்பையும், மனஸ்தாபப் படுகிறவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிற சம்பாவனையையும் தேவர்ருடைய இரக்கத்தால் அடையும் அநுக்கிரகஞ் செய்தருளும். - எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.


செபிப்போமாக: (செபம் 3)

தாழ்மையைக் கண்டு மனம் இளகுகிறவரும், பாவப் பரிகாரத்தினால் கோபந் தணிகிறவருமான சர்வேசுரா, எங்கள் விண்ணப்பங்களுக்குத் தேவரீருடைய அன்பின் செவிசாய்த்து, இந்தச் சாம்பலைப் பூசிக் கொள்ளும் உம் அடியார்கள் சிரசின் மீது உமது ஆசீர்வாத அருளைப் பரிவுடன் பொழிந்து, அவர்களை மனஸ்தாப உணர்ச்சியால் நிரப்பி, அவர்கள் நியாயமாய் கேட்கும் வரங்களைத் தவறாமல் தந்து, தந்தருளிய கொடைகள் எந்நாளும் பழுதின்றி நிலைத்திருக்கும்படி கட்டளையிட்டருளும். -எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துளின் பேரால் -ஆமென்,

செபிப்போமாக: (செபம் 4)

சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, சாம்பலும் சாக்குத் துணியும் அணிந்து தவம் செய்த நினிவே நகரத்தாருக்கு தேவரீருடைய இரட்சண்ய சுகந்தரும் மன்னிப்பையளிக்கச் சித்தமானீரே; தாங்களும் அவர்களைப் போல் மன்னிப் படைவதற்கு ஏற்ற வண்ணம், அவர்களுடைய தவத்தை வெளியரங்கமாய்ச் சாம்பல் பூசிப் பின்பற்றும்படி எங்களுக்குத் தயவாய் அநுக்கிரகஞ் செய்தருளும் எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.

வெள்ளி, 22 டிசம்பர், 2023

அன்னையின் ஆரோபணத் திருநாள்(Assumption of Our Lady)

 

-சங் J.M. நிக்கொலாஸ் சுவாமி

சின்ன  ஆசியாவிலுள்ள கால்சிதன் என்னும் இடத்தில் கி.பி. 451 ம் ஆண்டில் திருச்சபையின் பேர்பெற்ற பொது சங்கம் ஒன்று நடைபெற்றது. திருச்சபையின் பிதாக்கள் திரளான பேர் அங்கு கூடியிருந்தனர். உரோமைச் சக்கரவர்த்தி மார்ஸியன் கூட்டத்தினுள் நுழைந்தார். பிதாக்களிடம் அவர் ஒரு காரியம் கேட்டார். "கடவுளுடைய மாதாவின் உடலை எப்படியாவது கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். அத்திரு உடலுக்கென்று ஓர் அழகிய ஆலயம் அமைக்கத் தீர்மானித்திருக்கிறேன். அந்த மாசற்ற உடலே உலகில் மிக விலையேறப்பெற்ற அர்ச்சியசிஷ்ட பண்டம். ஆதலின் ஒரு மகா தேவாலயம் அதற்குத் நேசத்திரமாக எழுப்பப்படல் நியாயமே மரியாயின் மாசற்ற உடலை நீங்கள் கண்டுபிடித்துக் கொடுப்பீர்களானால், நான் அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து முத்திரையீட்டு, விலையேறுப்பெற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் கீழ் அதை வைப்பேன். வணக்கத்துக்குரிய பிதாக்களே, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: ஒரு காலத்தில் மாமிசமான கடவுளின் வார்த்தையானவருடைய உறைவிடமாயிருந்த அந்த சரீரத்தைக் கண்டுபிடியுங்கள்" என சக்கரவர்த்தி மன்றாடினார். கூட்டத்திலிருந்தவர்கள் திகைத்தார்கள். இராயப்பர். சின்னப்பர் இவர்களுடைய உடல்கள் எங்கிருந்தன என அவர்கள் அறிவார்கள். கொன்ஸ்தாந்தின் சக்கரவர்த்தியின் தாயான ஹெவேனா கண்டுபிடித்த கிறீஸ்துநாதருடைய சிலுவை இருந்த இடம் அவர்களுக்குத் தெரியும். கிறிஸ்தவ மறையின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட வேதசாட்சிகள். கன்னியர் இவர்களுடைய எலும்புகள் அழகிய பெட்டிகளிலும் ஆயிரக்கணக்கான பீடங்களிலும் இருந்தன. ஆனால் எந்தப் பட்டணமாவது; எந்த மேற்றிராசனக் கோவிலாவது, திருச் சேத்திரமாவது தேவதாயின் உடல் தன்னிடம் இருந்ததாகப் பாராட்டவில்லை. 

ஜெருசலேம் நகர் மேற்றிராணியாரான (அர்ச்) யுவெனால் கூட்டத்தின் மத்தியில் எழுத்து நின்றார்.

மரியம்மாளின் மரணத்திற்குப்பின் நிகழ்ந்ததை, ஜெருசலேம் கிறீஸ்தவர்கள் தலைமுறை தலைமுறையாய் அறிந்து வந்ததை யுவெனால் எடுத்துரைத்தார். அந்தச் சபையிலிருந்த பிதாக்களுக்கு அந்த வரலாறு ஏற்கனவே தெரியும்: ஆனால் சக்கரவர்த்தி ஆவலுடன் வரலாற்றுக்குச் செவிசாய்த்தார்.

ஆதாமுடைய பிள்ளைகள் யாவரும் சாகவேண்டும். அந்த நேரம் தேவதாய்க்கு அணுகி வந்தது. அவர்களுடைய மகன் இறந்தார். இப்பொழுது மரியம்மாள் அந்த நேரத்தை சுஎதிர்பார்த்து படுக்கையில் இருந்தார்கள். பாவமே மனிதனை உருக்குலைத்து சீரழிப்பது. தேவதாயோ தன் வாழ்வின் இறுகிக் கட்டக்கிலும் வெகு அழகுடனிருந்தார்கள். 

வேதம் போதிப்பதற்காக உலகின் பல திசைகளுக்கும் சென்றிருந்த அப்போஸ்தலர்கள் இஸ்பிரித்துசாந்துவின் ஏவுதால் தங்கள் அரசியின் மரணப் படுக்கையண்டை வந்து சேர்ந்தனர். கிறீஸ்துநாதருடைய மரணத்திற்குப்பின் அவர்களை விடாது பின்சென்ற அப்போஸ்தலர்கள். இஸ்பிரித்துசாத்துவின் வருகைக்குப்பின், அவர்களை அருளப்பருடைய பராமரிப்பில் விட்டுப் பிரிந்தனர். ஆனால் எப்பொழுதுமே அவர்கள் அப்போஸ்தலர்களுடைய தாய், அரசி, துயரத்தில் அவர்களது திடம்.

கிறிஸ்துநாதருடைய தூதர்களான அப்போஸ்தலர்கள் கிறிஸ்துநாதருடைய மாதா தன் மகனிடம் போகுமுன் அவர்களைப் பார்க்கவேண்டுமென்று வந்தார்கள். சேசுவுக்கு எத்தனையோ செய்திகள் சொல்லி அனுப்பினார்கள்.

அமைதியாய் யாதொரு அவஸ்தையுமின்றி அன்னை உயிர் வீட்டார்கள். கிறிஸ்துநாதருடைய முப்பத்துமூன்று வருட மறைந்த வாழ்க்கையைப்பற்றி இனி அவர்கள் வாயிலிருந்து ஒன்றும் கேட்க முடியாது. உலகத்தை அவரிடம் கொண்டு சேர்ப்பதில் அவளிடம் ஆலோசனைக் கேட்க முடியாது. இது அவர்களுக்கு விசனத்தைக் கொடுத்தது.

கிறீஸ்துநாதரின்றி மரியன்னைக்கு உலகம் வெறுமனாகக் காணப்பட்டதென அப்போஸ்தலர்கள் அறிவார்கள். சற்பிரசாதத்தில் அவர் இருந்தபோதிலும் நேரில் பாரப்பதற்குச் சமானமாகுமா? அவர் பரலோகத்திற்கு எழுந்த பிற்பாடு, அவருடன் தான் ஒன்று சேர அவர் எப்பொழுது அழைப்பார் என அவர்கள் பொறுமையாய்க் காத்திருந்தார்கள். வாழ்நாள் முழுவதுமே அவர்கள் அவரது அழைப்புக்கும் விருப்பங்களுக்கும் இணங்கி வந்தவர்களல்லவா? இப்பொழுதும் அவருடைய அழைப்பை, மரணத்தை, பொறுமையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

கடைசியாக அது வந்தது. அச்சத்துடன் நோக்கப்படும் வெற்றியாளனைப்போலல்ல. ஆனால் விடுதலை செய்பவனை போல் அது வந்தது. தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் அப்போஸ்தலர்கள் ஒருவிதத்தில் மகிழ்த்தனர். அவர்களை அழைத்துச்செல்ல வந்த தன் மகனுடன் மாமரி இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார்கள்.

அந்த நாட்டில் இறப்பவர்களது சடலங்களை நெடு நேரம் வைத்திருப்பதில்லை. அப்போஸ்தலர்கள் தங்கள் அன்னையின் சரீரத்தைத் தூக்கீச் சென்று கல்லறையில் வைத்தனர். அடக்கச் சடங்கின்போது, அவர்கள் நாங்கள் பங்கு பற்றாத இன்னொரு அடக்கத்தைப்பற்றி நினைத்தனர். கல்வாரியிலிருந்து அரிமத்தியா குசையின் கல்லறைக்குச் சென்ற அந்த சுற்றுப்பிரகாரத்தைப்பற்றி அன்னை அவர்களுக்குப் பலமுறை சொல்லியிருந்தார்கள். அந்நியரால் அவர் அடக்கம் செய்யப்படுகையில் தாங்கள் மறைந்திருந்ததைப்பற்றி அப்போஸ்தலர்கள் வெட்டு துக்கித்தனர். பெரிய வெள்ளிக் கிழமையன்று செய்த அந்த தவறுக்குப் பரிகாரமாயிருக்கும்படி. அவரது தாயாரை பரிவுடன் அடக்கம் செய்தனர்.

வழக்கம்போல் தோமையார் பிந்தி வந்தார். முக்கியமாக சம்பவங்களுக்கெல்லாம் அவர் பிந்திதான் வருவார் போலும். ஆனால் அவர் பிந்தியது நமக்கு நல்லதாயிற்று. உயிர்த்தெழுந்த கிறீஸ்துவை அப்போஸ்தலர்கள் முதன்முறை சந்தித்தபோது தோமையார் அங்கு இல்லை. கிறீஸ்துநாதர் உயிர்த்தெழுந்தார் என்பதை முதலில் சந்தேகித்தார். பின் அதை நாம் உண்மை என ஏற்றுக் கொள்ளுவதற்கான நிபந்தனைகளை விதித்தனர். கடைசியாக தம் விரல்களை கிறீஸ்துநாகருடைய காயங்களிலும், கரத்தை அவரது விலாவிலும் வைத்தார். சேசு உயிர்த்தெழுத்தார் என்பதற்கு நல்ல அத்தாட்சி தந்ததற்காக நாம் தோமையாருக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

மாமரி இறந்தபோதும் அவர் பிந்திப் போனார். அடக்கத்துக்கு முன் அவர் வந்திருப்பாரானால் அன்னை கல்லறையிலிருந்து மோட்சத்திற்கு எடுக்கப்பட்டதை நாம் அறியாதிருக்கலாம்.

"அன்னையின் அந்திய காலத்தில் நான் இங்கு வரமுடியவில்லை. அவர்களது திரு முகத்தையாவது நான் பார்க்க வேண்டும். எல்லோரும் என்னுடன் வாருங்கள். கல்லைப் புரட்டிப் பார்த்துவிட்டு வருவோம்" என வற்புறுத்தினார். அந்த இனிய முகத்தை இன்னொரு முறை பார்க்க அப்போஸ்தலர்களுக்கு பெரும் ஆவல். தோமையாருடன் போய். கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டினார்கள். உடலைக் காணோம். எவரும் அதைத் திருடியிருக்க மாட்டார்கள். அது நிச்சயம். தன் மகனைப் போலவே, தாயும் சரீரத்துடன் மோட்சம் சேர்ந்தார்கள் என தீர்மானித்தனர்.

கல்லறை வெறுமையாயிருத்து. அவர்களது சடலம் இருந்த இடத்தில் அழகிய மலர்கள் காணப்பட்டன. மரண நாற்றம் அங்கு இல்லை. மலர்களின் மணமும் பரலோக வாசனையுமே வீசின.

உயிர்த்த சேசு தம் மாதாவையும் தம்முடன் இருக்கும்படி எடுத்துக்கொண்டார். கிறீஸ்துநாதருடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி குறுகியது. கிறீஸ்துநாதருடைய உடலைச் சுமந்தவர்களுடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி நீடிக்க முடியாத வெற்றி மாமரி பூமியிலிருந்து பரகதிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.

வெறுமையாயிருந்த கல்லறையருகில் அப்போஸ்தலர்கள் முழந்தாளிட்டு, தாயையும் மகனையும் ஒருங்கே கொண்டிருந்த மோட்சத்தை நோக்கினார்கள். பின் மன மகிழ்வுடன் வீடு திரும்பினர்.

அன்றிலிருந்து கிறீஸ்தவ உலகம் மரியாயின் உடலுக்காக தேடி அலைந்ததில்லை. அது தன் தூய ஆத்துமத்துடன் ஒன்றித்து கடவுளருகில் இருந்தது என அவர்கள் அறிந்திருந்தார்கள்.

அர்ச். யுவெனால், சக்கரவர்த்தி மார்ஸியனுக்கும் அவரது அழகிய மனைவி புல்க்கேரியாவுக்கும் கால்ஸிதளில் கூடிய பொதுச் சங்கத்தில் இருந்த திருச்சபையின் பிதாக்களுக்கும் காடுத்துரைத்த வரலாறு இதுதான். யாவகும் முழுத் திருப்தியுடன் தலைகுனிந்து தங்கள் அங்கீகாரத்தை வெளியிட்டனர்.

மரியாயி மோட்சத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட திருநாள்

(ஆகஸ்ட் 15)

பரிசுத்த கன்னிகையின் பாக்கியமான மரணம்

மரியாயி இறந்தது நோயினாலல்ல, முதிர்பீராயத்தால் அல்ல, பாவத்தின் தண்டனையாகவுமல்ல. ஏனெனில் அவர்கள் ஒருபோதுமே பாவம் செய்தவளல்ல. நேசத்தால் அவள் உயிர்விட்டாள். அவளுடைய நேச மகன் பரலோகத்துக்கு ஆரோகணமானதிலிருந்து நேசத்தால் அவரை நோக்கியே ஏங்கிக் கொண்டிருந்தார்கள். நன் நேச மகன் ஒன்றிக்கும். நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றார்கள். அவரைப் பிரிந்து வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கு வேதனையாயிருந்தது. அவரது ஆத்துமத்தை உடலுடன் பிணைத்திருந்த கட்டுகளை நேசமானது இறுதியாக அறுத்தது. அவர்களது தூய ஆத்துமம் பரலோகத்திற்கு பறந்து சென்றது. உலகப்பொருட்கள் மேல் பற்றின்றி வாழ்கிறவர்கள் பாக்கியவான்கள்; கடவுளைப் பார்த்து நித்தியத்திற்கும் அவரைக் கொண்டிருக்கும்படி அவர்கள் உயிர் ஆசையாயிருக்கிறார்கள்.

 பிதாப்பிதாக்களும் இவ்வித ஆசையுடன் இருந்தார்கள். அவர்களது கண்கள் எப்பொழுதும் தங்களது பரலோக வீட்டையே நோக்கி நின்றன. தாவீது அரசர் இப்பூமியில் தம்மை பரதேச வாசியாக மதித்து பரகதியை நாடினார். எனது தேகக்கட்டு அவிழ்ந்து, என் ஆத்துமம் தன் சிறையைவிட்டு வெளியேறி சேசுவுடன் ஒன்றிக்க வேண்டும் என அர்ச் சின்னப்பர் ஆசிந்தார்.  கிறீஸ்துவை அனுபவிப்பதே நமது ஏக ஆசை என் வேதசாட்சியான அர்ச். இஞ்ஞாசியார் மொழிந்தார். இப்பூமியின் பிரயாணி போல் எங்காதவன் மோட்சத்தில் பிரஜைபோல் வாழ மாட்டான் என அர்ச். அகுஸ்தீன் சொல்கிறார். அசிசி அர்ச். பிரான்சிஸ் எப்பொழுதும் பரகதியையே நோக்கி நின்றார் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் இரவு நேரத்தில் அழகிய வானத்தை நோக்கிக்கொண்டிருப்பார்: “பரலோகத்தை நோக்கும் பொழுது பூமி எத்தனை நிர்ப்பாக்கியமாகத் தோன்றுகிறது" என்பார். மோட்சத்தை நினைத்து ஆசைப் படாதவன் கிறீஸ்தவனல்ல.

பரிசுத்த கன்னியின் உத்தானம்.

கடவுள் மீது மரியாய் கொண்டிருந்த நேசமானது. உடலினின்று அவர்களது ஆத்துமத்தை அகற்றியது. அவர்களது தூய்மையானது. அழியாமை என்னும் அரச ஆடையால் அவர்களைப் போர்த்தியது. இத்தனை பரிசுத்தமான உடல் கல்லறையில் அழிவது தகுதியல்ல, பாவத்தின் தண்டனையே இந்த அழிவு, கன்னிமாமரி பாவம் செய்தவர்களல்ல. இவ்விதம் சேசு தம்முடைய மாதாவை நித்திய மகிமைக்கு உயர்த்தினார், கற்பு குன்றா உடல்கள் மேலும் இருதயங்கள் மேலும் கடவுளுக்குள்ள நேசத்தைக் கண்டு நாம் அதிசயிப்போமாக. இனிமேலாக நாம் நமது உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருப்போமாக. அற்ப இன்ப சுகத்திற்காக அதை நரகத்திற்கு உள்ளாக்க மாட்டோம். மோட்ச மகிமையை இழக்க மாட்டோம். ஓ பரிசுத்த கற்பே, மரியாயின் உடலை நீ எவ்வளவு அழகுபடுத்தி யிருக்கிறாய்! எங்கள் மதிப்புக்கும் நேசத்திற்கும் நீ எவ்வளவோ உரிமை பெறுகிறாய்? மிக விலையுயர்ந்த திரவியமாக உன்னை நாங்கள் மதித்துக் காப்பாற்றி வரவேண்டும்.

மரியாயி மோட்ச அரசி

பூமியில் நாம் நம்மைத் தாழ்ந்தும் அளவு பரகதியில் நாம் உயர்த்தப்படுவோம். இது கடவுளது சட்டம் (லூக் 14:17). மரியாயி தன்னை எல்லா சிருஷ்டிகளுக்கும் கீழாகத் தாழ்த்தினார்கள். சுடவுளுடைய தாய் என்ற மட்டில் அரசியான அவர்கள் தன்னை ஓர் அடிமை என்றார்கள். சம்மனசுகளைவிடக் தூய்மை வாய்ந்த அவர்கள், சுத்திகர நாளன்று தேவாலயத்தில் சாதாரண பெண்களைப்போல் போய் நின்றார்கள். அரசர்களின் குமாரத்தியான அவர்கள், சாதாரண பெண்ணைப்போல் தன்னைத் தாழ்த்தி, உழைத்து வந்தார்கள். எல்லோருக்கும் கீழாக அவர்கள் தன்னைத் தாழ்த்தியமையால் எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலாக அவர்கள் உயர்த்தப்பட உரிமை பெற்றார்கள். இதை அவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளில் கடவுள் செய்தார். மகிமையுடன் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அவர்கள், மேகங்களுக்கு மேல் வெற்றி வீரப்பெண்போல் எழும்புகிறார்கள். சம்மனசுக்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். "வனாந்தரத்திலிருந்து எழும்பி வருகிற இவள் யாரோ?" (உத், சங். 8:8) என்று அவர்களுடைய மகிமையைப் பாடுகிறார்கள். அவர்கள் மோட்சத்தில் நுழைந்ததும் தீர்க்கதரிசிகளும் பிதாப்பிதாக்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். மோயீசன், யாக்கோபின் நட்சத்திரம் என தாம் முன்னறிவித்தவளை வரவேற்கிறார். இசையாஸ், கன்னித் தாய் என தாம் முன்னறிவித்தவளை, எசேக்கியேல், கீழ்த் திசையின் வாசல் எனத் தாம் கூறியவளை, தாவீது மன்னன். அரசரின் வலது பக்கத்தில் நிற்கும் அரசி எனத் தாம் சொன்னவளை, குதூகலத்துடன் வரவேற்கின்றனர். இந்த மகிழ்ச்சிக் கீதங்களின் மத்தியில் மரியாயி தன் தேவகீதத்தை இசைத்து, "என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப் படுத்துகின்றது" என்கிறார்கள். இது தொடக்கமே. மரியாயிக்கென தயாரிக்கப்பட்டிருந்த சிம்மாசனத்தில் கடவுள் மரியாயை வைத்து, அவளது சிரசில் அரச கிரீடத்தைச் சூட்டி, அவள் பரலோக பூலோக அரசி என சம்மனசுக்களுக்கும் மனிதருக்கும் காட்டுகிறார். ஓ என் மாதாவே. ஓ என் அரசியே. ஓ என் ஆண்டவளே, மகிமையில் வீற்றிருக்கும் உம்மை நான் வணங்குகிறேன். என்னை முழுவதும் உமக்கு அர்ப்பணம் செய்து, உமது சிநேக ஆட்சியின் கீழ் என்னை வைத்து விடுகிறேன். நீர் உண்மையாகவே என்னுடைய பாதுகாவலியாகவும், அன்னையாகவும் இருப்பீராக. சமாதானமும் கத்தோலிக்க மறையும், கடவுள்மீது அன்பும், திருச்சபைமீது நேசமும் உமது மன்றாட்டால் எங்கும் அரசுபுரியச் செய்யும். ஆமென்.



Source: Sancta Maria 2012 - July August

வெள்ளி, 8 டிசம்பர், 2023

அன்னையின் அமலோற்பவத் திருநாள் - Feast of Our Lady of Immaculate Conception

அன்னையின் அமலோற்பவத் திருநாள்

(டிசம்பர்-8)

-சங். J.M.நிக்கொலாஸ் சுவாமி

கன்னிமரியம்மாள் கடவுளின் அன்னை ஆக வேண்டியவள் என்னும் ஒரு காரணமே அவள் ஜென்மப் பாவ மின்றி உற்பவித்திருக்கவேண்டும் என்பதற்குப் போதும். 



ஒரு கன்னியின் வயிற்றில் கடவுள் மனிதனாக உற்பவிக்கத் திருவுளமிரங்குகிறார். இது மகத்தான ஒரு காரியம். இதை நிறைவேற்ற, நன் இருக்கையின் முதல் வினாடியிலிருந்தே பாவமின்றிருந்த ஒருவரைத் தவிர, வேறு யாரையும் கடவுள் தேர்ந்தெடுக்க முடியாது. கடவுளது நரம்புகளில் ஓட இருந்த இரத்தம் அதன் ஊற்றிலே கறைப்பட்டிருக்கலாமா? நித்திய வார்த்தையானவர் மரியம்மாளின் உதரத்தை தன் இருப்பிடமாக்கத் தீர்மானித்தார். அந்தப் பரிசுத்த ஸ்தலத்தைப் பசாசு முதலில் தனது வாசஸ்தலமாக்க அவர் சம்மதிப்பாரா? பசாசாகிய சர்ப்பத்தின் தலையை நகக்க வேண்டிய அவன், அவள் ஒரு வினாடி முதலாய் மாசின் அதிகாரத்தில் இருப்பது நியாயமா? கடவுளுடையத் தாயாக வேண்டிய அவள் உற்பவித்த வினாடியிலிருந்தே தன் உயர்பதவிக்கு ஏற்புத் தூய்மையுள்ளவளாயிருந்தாள்; பரிசுத்தவதியாயிருந்தாள்.

அவள் கடவுளுடைய மாதாவாக வேண்டியவள். அதே கடவுளுடைய பிதா. பரலோக பிதாவே. தம்முடைய சுதனுக்கு மாதாவாக வேண்டியவளை, அவளது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே, சம்மனசுக்களைவிட அதிகத் தூய்மையும், பரிசுத்தமுமுள்ளவளாக்கினார். நித்திய வார்த்தையானவர். தம் தாயாகும்படி ஒரு பெண்ணை நித்தியத்திலிருந்தே தேர்ந்தெடுத்தார். அவள் எப்பொழுதும் முற்றிலும் தூய்மையுள்ளவளாயிருக்கும்படிச் செய்தார். அவர் தம் தாய்க்குத் தம்மால் இயன்ற அளவு நன்மை செய்ய விரும்பினார். தம்முடன் அவள் ஒன்றித்துப் பசாசை முறியடித்து, இரட்சண்ய வேலையைச் செய்து முடிக்கவேண்டும். எனவே அவளது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே அவளை அலங்கரித்தார், அவளிடம் பாவக்கறை படாதபடி பார்த்துக்கொண்டார். மரியாயிடமாய் மனித கடவுளை உருவாக்க வேண்டியவர் இஸ்பிரித்துசாந்து: இவ்விதம் மரியாயை அவர் தம் நேசபத்தினி என்னும் புதவிக்கு உயர்த்த இருந்தார். எனவே அவள் முற்றிலும் பரிசுத்தவதியாகவும். ஒரு சிருஷ்டி கொண்டிருக்க வேண்டிய புண்ணியங்கள் அனைத்தையும் கொண்டவளாகவும் இருக்க வேண்டும். ஆதலின் மரியாயி தனது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே பாவமின்றி இருக்கவேண்டும் என்றும். சகல வரப்பிரசாதங்களையும் நிரம்ப கொண்டிருக்க வேண்டும் என்றும், சகல அர்ச்சியசிஷ்டவர்களையும், சம்மனசுக்களையும் விட அவள் அதிக பரிசுத்தவதியாயிருக்க வேண்டும் என்றும் கடவுள் நித்தியத்திளிருந்தே தீர்மானித்தார். இவ்விதம் மாதாவாக வேண்டிய அவளுக்கு அமலோற்பவம் என்னும் மகிமை வழங்கப்பட்டது. அகில உலக கத்தோலிக்கரும் அக மகிழ்ந்து ஆர்ப்பரிக்க, 9-ம் பத்திநாதர் பாப்பரசர். கன்னிமரி ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள் என்பது வேத சத்தியம் எனப் பிரகடனம் செய்தது முற்றிலும் நியாயமே. மரியாயின் கிரீடத்தை அலங்கரிக்கும் இப்புதிய இரத்தினத்தை முன்னிட்டு மரியாயை நாம் வாழ்ந்துவோமாக; திருச்சபை யுடன் சேர்ந்து, "என் நேசமுள்ளவளே, நீர் முற்றிலும் அழகு வாய்ந்தவள், ஜென்மப் பாவத்தின் தோஷம் உம்மிடத்தில் இருந்ததில்லை" என்போம்.

மரியாயின் புண்ணியங்கள் அனைத்திற்கும் ஆதித்தொடக்கம் அவளது அமல உற்பவமே மரியாயி தனது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே மிகப் பரிசுத்தவதி என்றாலும், அவள் மென்மேலும் தன்னை உயர்த்திக்கொண்டு வந்தாள். புண்ணியத்தில் அதிகரித்து வந்தாள். உதிக்கும்பொழுதே மிக்க பிரகாசத்துடன் இருந்த இந்த நட்சத்திரமானது விடாமல் எழும்பிக்கொண்டு வந்ததுடன், பரிசுத்ததனம் என்னும் கதிர்களை தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் வீசிவந்தது. சாதாரண மக்களின் ஆத்துமங்களில் இருக்கும் வரப்பிரசாதத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; நன்மை செய்ய ஆசிக்கும்போது எதிர்ப்பு உண்டாகிறது. தீமையை நோக்கி நாட்டம் இருக்கிறது. நாம் பிறந்ததிலிருந்தே இவ்விரண்டும் நம்மிடம் உண்டு. ஆனால் மாசின்றி உற்பவித்த மரியாயிடம், வரப்பிரசாதமானது எதிர்ப்பை காணவில்லை: ஆத்துமத்தின் சகல வாய்க்கால்களும் வரப்பிரசாதத்தை ஏற்க தயாராயிருந்தன. அவளது ஆத்துமத்தில் வரப்பிரசாதமானது தன்னைத் தடையின்றி பரப்புகிறது, வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சகல புண்ணியங்களும் அங்கு வளரச் செய்கிறது. ஆகவே, உள்ளும் புறமும் அழகுடன் இருந்த மரியம்மாள் மோட்சத்தின்முன், கண்ணைப்பறிக்கும் வெண்மையான அழகிய லீலி மலர்போல் காணப்பட்டாள். எளிய குடிசை என்றாலும் அரசர்களும் அதை மதிக்கச் செய்யும் தாழ்ச்சி அவளிடம் இருந்தது: வேதனையாலும் முறியடிக்க முடியாத பொறுமையை அவள் கொண்டிருந்தாள். அவளிடம் இருந்த இனிமையானது எந்த எதிர்ப்பாலும் பாதிக்கப்படவில்லை. ஆபத்து நேரத்திலும் அவள் மன அமைதியுடன் இருந்தாள். மலைகளை அசைக்கும் விசுவாசம் மாத்திரமல்ல, ஆனால் நித்திய வார்த்தையானவரை பரலோகத்திலிருந்து இறங்கச் செய்யும் விசுவாசம் அவளிடம் இருந்தது; அபிரகாமிடம் இருந்த நம்பிக்கையை விட அதிக வீரத்தனம் வாய்ந்த நம்பிக்கை மரியாயிடம் இருந்தது; அவளது சிநேகம், எரியும் சுவாலைக்குச் சமம். மரியாயின் பரிசுத்ததனம் எல்லா உள்ளங்களையும் பரவசப்படுத்தக்கூடியது. "பல புத்திரிகள் திரவியங்களைச் சேகரித்தார்கள். நீயோ சகலரையும் மேற்கடந்தாய்” (1. 31:29), "மகா உன்னதமானவர் தமது வாசஸ்தலத்தை அர்ச்சித்தா?" (சங். 45:3). எனவே மரியாயின் உள்ளத்தை மிக மகிழ் விப்பது, அவள் பரலோக இராக்கினி கான்பதல்ல; பூலோக அரசி என்பதல்ல; ஆனால் அவளது அமல உற்பவமே. அதனாலேயே லூர்து கெபியில் அன்னையின் பெயரை பெர்நதெத் வினவியபோது. "அமலோற்பவம் நாமே" என அவள் பதிலளித்தாள்.

அன்னையைப் பின்பற்றி புண்ணிய பாதையில் நாம் எப்பொழுதும் முன்னேறிக்கொண்டிருக்கவேண்டும். முன்னேறியது போதுமென ஒருபோதும் சொல்லலாகாது. கடவுளுக்குப் பிரியப்படுவதே அனைத்திலும் நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.

பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே, உம்மைத் தேடிவருகிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அமலோற்பவமானது வரப்பிரசாதங்களின் களஞ்சியம்

 இயற்கையானது தாய்மாரின் உள்ளங்களில் ஒருவித பவவீனத்தை வைத்திருக்கிறது; அதனாலேயே, பிள்ளைகள் நாங்கள் கேட்பதற்கு அதிகமாகவே தாய்மாரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். அதேபோல் மரியாயை அமலோற்பவி என வாழ்த்துகிறவர்களின் மீது ஓர் அன்புணர்ச்சி மரியாயின் உள்ளத்தில் இருக்கிறது. பாவச் சோதனையால் துன்புறுத்தப்பட்ட ஆத்துமங்கள் பாவமில்லாத மரியாயைக் கூவியழைத்திருக்கிறார்கள். அவர்கள் சோதனையில் வெற்றிபெற்றார்கள்; துன்புற்ற ஆத்துமங்கள் ஆறுதலடைந்தன; கலங்கியிருந்த உள்ளங்கள் அமைதியடைந்தன; தைரியமற்றிருந்தோர் திடன் பெற்றார்கள். முற்றுகையிடப்பட்ட பட்டணங்களின் வீடுகளின் கதவுகளில் "மரியாயி பாவமின்றி உற்பவித்தவள்” என எழுதியமையால் நாசத்தினின்று அவை காப்பாற்றப்பட்டன. நெருப்புக்கு இரையாக இருந்த கட்டிடங்கள் ஆயிரம் ஆபத்துக்களால் சூழப்பட்டிருந்த தனி நபர்கள் இந்த வார்த்தைகளை எழுதியதால் அல்லது அவற்றை உச்சரித்ததால் அழிவினின்று தப்பித்தார்கள். பாவமில்லாமல் உற்பவித்த மரியாயின் உருவத்தைத் தாங்கிய சுரூபங்கள் உலகத்தை அதிசயங்களால் நிரப்பியிருக்கின்றன. அந்தச் சுரூபமானது துன்பங்களை விரட்டி யடித்திருக்கிறது. வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. பாவிகளை மனந்திருப்பியிருக்கிறது. இதனால் அது புதுமை சுரூபம் என எங்கும் அழைக்கப்படுகிறது. பாரீஸ் நகரின் மத்தியில் இருக்கும் ஜெய இராக்கினி மாதாக்கோவில் ஒரு காலத்தில் முற்றிலும் கைவிடப்பட்டதாயிருந்தது; அதை மரியாயின் மாசற்ற இருதயத் திற்கு அர்ப்பணம் செய்ததும், உலகிலேயே மிகப் பிரசித்திபெற்ற ஆலயமாயிற்று அது. மக்கள் அந்த ஆலயத்தை விரும்பி சந்திக் கிறார்கள். அநேக புதுமைகள் அங்கு நடக்கின்றன. 9-ம் பத்திநாதர் பாப்பானவர் எதிரிகளின் தாக்குதல்களின் மத்தியில் தம்மை, ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயிக்கு ஒப்புக் கொடுத்தார். இதன் விளைவாக, பேரதிசயம் நடந்தது. கொடிய சத்துருக்களால் சூழப்பட்டிருந்த உரோமை நகரில் ஒரு பொதுச் சங்கத்தை நடத்தக்கூடியவரானார். என்னென்ன துன்பம் வந்தாலும், திருச்சபை அதையெல்லாம் மேற்கொள்ளும்; மாசற்ற மரியாயி வழியாக திருச்சபை வெற்றிப் பெற்றுவரும். நமக்குத் துன்பங்களும், சோதனைகளும் வரும்போது அமல உற்பவ அன்னையிடம் நம்பிக்கையுடன் செல்வோமாக.

அமல உற்பவம் நமக்குப் படிப்பினைகளைத் தருகிறது

அமல உற்பவ அன்னையைப் போல் நாம் தூய உள்ள முள்ளவர்களாய் இருக்கவேண்டும். திவ்விய நன்மை உட்கொள்ள இந்தத் தூய்மை அவசியம். மாமிசமான வார்த்தையானவரை தன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள மரியாயி இத்தனை தூய்மையாயிருப்பது தேவையாயிருந்தால், அதே கடவுளை திவ்விய நற்கருணை வழியாக உட்கொள்ளும் நாம், மாசு மறுவற்றவர்களாய் இருக்க வேண்டு மல்லவா? மங்கள வார்த்தை நாளன்று மரியாயி தேவசுதனை தன் உதரத்தில் ஏற்றாள். நாமோ நம் வாழ்நாளில் பலமுறை அவரை ஏற்றுவருகிறோம்.

நாம் நம் மீது, நமது சிந்தனையின் மீது, நமது புத்தியின் மீது, நமது இருதயங்கள் மீது, விழிப்பாயிருக்க வேண்டுமென்று அன்னையின் அமல உற்பவம் படிப்பிக்கின்றது. முற்றிலும் தூய்மையுள்ளவளான, நேர்மையுள்ளவளான, மாசுமருவற்ற, மரியாயி தன் மீது மிக விழிப்புடனிருந்திருக்க, மிக்கபலவீனரும். தீமை மீது அதிக நாட்டம் கொண்டவர்களும், எளிதில் தவறுகிறவர்களுமான நாம் இன்னும் அதிக கவனத்துடன் நம் மீது விழிப்பாயிருக்க வேண்டும்.

உத்தமதனத்தின் பாதையில் நாம் விடாது முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றும் அமல உற்பவ அன்னை கற்பிக்கிறாள். சகல புண்ணியங்களையும் நிரம்பக் கொண்டிருந்த மரியாயி, தன் வாழ்நாளெல்லாம் புண்ணியங்களில் வளர்ந்து வந்தாள். வரப்பிரசாதத்துடன் ஒத்துழைத்து, அதிக பரிசுத்தவதியாகும் வண்ணம் உழைத்தாள். குறைகள் நிறையப்பெற்றுள்ள நாம் சோம்பேறிகளாய் முன்னேறாமல், பழைய நிலையிலேயே திருப்தியடையலாகாது. முன்னேறாதிருப்பது பின்வாங்குவதாகும். நாம் ஒவ்வொரு நாளும் அதேக வரப்பிரசாதங்களைக் கடவுளிடமிருந்து பெற்றுவருகிறோம். அவற்றுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். நமது இவ்வுலகப் பற்றுதல்களை அகற்றி, கடவுள் அழைக்கும் பரிசுத்த நிலையை நோக்கி முன்னேறிச்செல்ல வேண்டும்.

"என் அன்பே, நீ பூரண ரூபவதி, உன்னில் பழுதே கிடையா!"(உந்நத சங்கீதம். 4:7



Source: Sancta Maria (Magazine) Nov. - Dec. 2012

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 12 அர்ச்.பீட்டர் ஆர்மங்கல்

 

அர்ச்.பீட்டர் ஆர்மங்கல் 

திருநாள் ஏப்ரல் 27ம் தேதி 


இஸ்பானியா நாட்டில், டார்ரகன் அதி மேற்றிராசனத்தில், குவார்டியா டெல்ஸ் பிராட்ஸ் என்ற ஓர் குக்கிராமத்தில், 1238ம்வருடம் பிறந்தார். ஆரகன், மற்றும் காஸ்டில் அரசர்கள், பார்சலோனா மற்றும் ஊர்கல் இளவரசர்களின் வம்சாவளியைச் சேர்ந்த உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகுந்த கவனத்துடன் கத்தோலிக்கக் கல்வி அளிக்கப்பட்ட போதிலும், இளம் வயதில், பீட்டர், கெட்ட நண்பர்களின் சகவாசத்தால், தீமையில் உழன்று திரிந்தார். அரசு அதிகாரிகளால் தேடப்பட்ட ஓர் அக்கிரம் கொள்ளைக்கூட்டத்துடன், சேர்ந்துகொண்டு, மலைப்பகுதியில் தங்கியிருந்தார். விரைவிலேயே, கொள்ளைக்கூட்டத்திற்குத் தலைவனானார். அவரது தந்தை, ஆர்னால்டு ஆர்மங்கல், தன் மகனின் கெட்ட நடத்தையைக் கண்டு பொறுமை இழந்தவராக, வலேன்ஷியாவிற்கு குடிபெயர்ந்து சென்றார். வலேன்ஷியா சிற்றரசு, அப்போது தான், ஜெயிம் அரசரால், மூர் இனத்தவரிடமிருந்து, ஒரு போரில் மீட்கப்பட்டது. இந்த அரசர், ஒரு முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்சு அரசரை சந்திக்கும்படி, மோன்ட்பெல்லியருக்கு செல்ல நேரிட்டது. அரசர் தனது பயணத்தினுடைய பாதுகாப்பிற்காக, ஆர்னால்டுவை தனக்கு முன்பாக, மற்ற காவல் அதிகாரிகளுடன் செல்லும்படி பணித்தார்; ஏனெனில், ஆர்னால்டு, அரசரின் பாதுகாவல் அதிகாரியாக இருந்தார். மலைப்பகுதியில் கள்வர் கூட்டத்தினருடைய தாக்குதல்களிலிருந்து, அரசரைக் காப்பாற்றுவதற்காக, காவல் படையினரை, ஆர்னால்டு, விழிப்புடன் நடத்திச் சென்றார். பிரனீஸ் மலைப்பகுதியில் வசித்து வந்த கொள்ளையர்கள், பயணிகளை கொள்ளையடித்து, அவர்களைக் கொல்வதை, வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பயணத்தின்போது, ஒரு ஆபத்தான கட்டத்தில், அரசரைக் கொள்ளைக் கூட்டத்தினர் சூழ்ந்தனர். இதைக்கண்ட தலைமைப் பாதுகாவலர் ஆர்னால்டு, தனது காவல் படையினருடன் அங்கு விரைந்துச் சென்று, அதிரடியாகக் கொள்ளையரைத் தாக்கிச் சிதறடித்தார். கொள்ளையர் தலைவனுடன், நேருக்கு நேரான தாக்குதலில், ஆர்னால்டு ஈடுபட்டார். அப்போது, இருவரும் ஒருவர் ஒருவரை வாளால் தாக்கினர்; தந்தையும் மகனும் நேரடிச் சண்டையில் ஈடுபட்டனர்; யாரைத் தாக்குகிறோம் என்பதை உணர்ந்ததும், இருவரும் மன சஞ்சலத்துடன் போரிட்டனர். உச்சக் கட்ட சண்டையின் போது, மிகுந்த மனஸ்தாபத்துடன், கொள்ளையரின் தலைவனாகிய பீட்டர், தந்தையின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து அழுதபடி, தன் வாளை கீழே வைத்து, சரணடைந்தார்; தன் இருதயத்துடன் கூட, தந்தையிடம், பீட்டர் முழுமையாக சரணடைந்தார்.

குழப்பமும், வெட்கமும் நிரம்பியவராக, பீட்டர், தன் கடந்த கால பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டார்; அவற்றைப் பரிகரிப்பதற்காக, தபசு செய்தார்; சில நாட்களில், பார்சலோனாவிலிருந்த இரக்கத்தின் சந்நியாசிகளுடைய ஓர் மடத்தில் சந்நியாசியாக சேர்ந்தார். அப்போது, அவர், தன் பாவங்களால், சர்வேசுரனுக்கு ஏற்பட்ட நிந்தைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற ஓர் மாபெரும் ஆவலினால் மேற்கொள்ளப்பட்டார்; மகமதியர்களால், சிறை பிடிக்கப்பட்ட கத்தோலிக்கக் கிறீஸ்துவர்களை விடுவிப்பதற்காகவே, அர்ச்.பீட்டர் நொலாஸ் கோ ஏற்படுத்திய துறவற சபையில் ஒரு துறவியாக சேரத் தீர்மானித்தார். அவர் எவ்வித ஆவலுடன் தன் இருதய ஆவலையும், அதைத் தீர்மானிப்பதற்கான அத்தாட்சிகளையும் கூறினாரென்றால், அதைக்கேட்ட அதிபர், வண. வில்லியம் தே பாஸ் (அர்ச்.பீட்டர் நொலாஸ்கோவிற்குன் அடுத்ததாக, சபையை நிர்வகித்த அதிபர்) தடையேதுமில்லாமல், உடனே, பீட்டரைத் தனது சபையில் ஏற்றுக்கொண்டார். இதுவரை, மூர்க்கத்தனத்திற்கும், வன்முறைக்கும் தன் ஆளுமையையும் திறமையையும், தேக பலத்தையும் கையளித்திருந்த பீட்டர், தற்போது, துறவற ஜீவியத்தில், அதற்கு முற்றிலும் நேர்மாறாக, தன்னையே ஒறுத்து, உடனுக்குடன் ஞான அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவதிலும், சபை ஒழுங்கை நுட்பமாகவும், கவனமாகவும் அனுசரிப்பதிலும் ஈடுபட்டார். தன் பழைய பாவ நாட்டங்களை, சரீர ஒறுத்தல்களால், தபசுமுயற்சிகளால், இடைவிடாத ஜெபங்களால், எவ்வாறு, மேற்கொள்வது, என்பதையும், நாளடைவில், அறிந்து கொண்டார். நவசந்நியாச பயிற்சி முடிவதற்குள், தன் சரீரத்தையும் மனதையும், முழுமையாக மேற்கொண்டு, அவற்றை தேவசித்தத்திற்கும், உத்தமமான அறிவிற்கும், கீழ்ப்படியச் செய்வதில் வெற்றியடைந்தார். கிறீஸ்துவர்களை, மகமதியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கான முக்கிய அலுவலில், 8 வருடங்கள் அயராமல் உழைத்தார்.

மகமதியரின் ஆதிக்கத்திலிருந்த இஸ்பானிய பிராந்தியங்களான கிரானடா மற்றும் முர்சியா பகுதிகளுக்குச் சென்று, அங்கிருந்த கிறீஸ்துவ அடிமைகளை மீட்கும் அலுவலில் ஈடுபட்டுவந்தார்.. 


அர்ச். பீட்டர் நொலாஸ்கோ ஏற்படுத்திய உபகார மாதா சபையில், சேர்ந்த பீட்டர் ஆர்மங்கல், மகமதியர்களால் சிறைபிடிக்கப்பட்ட கிறீஸ்துவர்களை மீட்கும் அலுவலில் தீவிரமாக உழைத்து வந்தார். ஆப்ரிக்கா சென்று, மகமதியருக்கு தன்னையே அடிமையாக விற்று, அந்த மீட்புத் தொகையைக் கொண்டு, அடிமைகளாக இருக்கும் திரளான கிறீஸ்துவர்களை விடுவிக்க வேண்டுமென்பதே, அவருடைய இருதயத்தின் மாபெரும் ஆவலாக இருந்தது. அவருடைய ஆவலை நிறைவேற்றும் விதமாக விரைவிலேயே, ஒரு கப்பல் ஆப்ரிக்காக் கண்டத்திற்குப் புறப்பட்டது. அதில், சங்.வில்லியம் ஃபுளோரன்டினோ, என்ற சக துறவியுடன், அவர், பயணம் செய்தார். ஆப்ரிக்காவின் பூஜியா நகரை அடைந்தனர்.

இரு துறவியரும், உடனடியாக, அந்நகரில் அடிமையாயிருந்த 119 கிறீஸ்துவர்களை, மீட்புத்தொகையைக் கொடுத்து மீட்டனர்; எந்தத் தடையுமில்லாமல், கிறீஸ்துவர்களைத் துறைமுகத்திற்குக் கூட்டி வந்தனர்; பயணத்தைத் துவக்குவதற்கு முன், இன்னொரு சிறையில், 18 சிறுவர்கள், இருப்பதைப்பற்றி, பீட்டர் அறிந்தார்; அச்சிறுவர்கள், காட்டுமிராண்டிக ளான மகமதியரின் கொடூரமான சித்ரவதைகளுக்கு உட்பட்டு, கிறீஸ்துவ வேதத்தையே, மறுதலிக்கும் அபாயத்திலிருப்பதையும் அறிந்தார்; அவர்களை மீட்பதற்கான மீட்புத்தொகையாக, தன்னையே அடிமையாக ஏற்றுக்கொள்ளும்படி, பீட்டர், அக்கொடிய மகமதியரிடம் தன்னையே கையளித்தார். ஏனெனில், அவரிடம், சிறுவர்களை மீட்பதற்காக, போதிய பணம் இல்லாமலிருந்தது பீட்டரை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிப்பதற்கான தொகையை மகமதியர், அவரிடம் அறிவித்தனர்; அக்குறிப்பிட்ட காலத்திற்குள், மீட்புத் தொகையை செலுத்தாவிட்டால், அவர் இன்னும் அதிகக் கடுமையான தண்டனைகள் அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்தனர். இதைப் பற்றியறிந்த சக துறவியான வில்லியம், விடுவிக்கப்பட்ட கிறீஸ்துவர்களுடன் சொந்த நாட்டிற்குத் திரும்பினார். சர்வேசுரனுடைய பரிசுத்த ஊழியரான பீட்டரை, அவர் மகா பரிசுத்த தேவமாதாவின் மீது கொண்டிருந்த விசேஷ பக்தியுடையவும், அவர்களின் வல்லமை மிகுந்த பாதுகாப்பின் மீது கொண்டிருந்த அசையாத நம்பிக்கையினுடையவும், அத்தாட்சியாக திகழும்படியாக, தேவபராமரிப்பு இனிவரும் ஒரு முக்கியமான நிகழ்விற்கு இட்டுச் சென்றது:

அடிமையாக இருந்தபோது, பீட்டர், அஞ்ஞான மகமதியரிடையே, வியக்கத்தக்க புதுமைகள் நிறைந்த பிறர்சிநேகக் காரியங்களில் ஈடுபட்டார். கேட்பவர் மனதில் தேவசிநேகத்தை பற்றியெரியச் செய்யும் விதமாக, அவர், ஆண்டவர் ஸ்தாபித்த சத்திய வேதத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்தார்; அநேக புதுமைகள் செய்தார்; இவற்றையெல்லாம் கண்ட அநேக மகமதியர் மனந்திரும்பினர்; பீட்டரை மீட்பதற்கான காலக்கெடு முடிந்தது. மீட்புத் தொகை வந்து சேரவில்லை. மகமதியர் உடனே, அவரை சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு உணவு அளிக்கப்படவில்லை. கொடிய சித்ரவதைகளால், அவரை உபாதித்தனர்; ஆனால், சர்வேசுரன், புதுமையாக, தமது பிரமாணிக்கமுள்ள ஊழியருக்கு, சம்மனசுகள் மூலம், புதுமையாக உணவை அளித்தார். முரட்டுமூர் இன மகமதியர், இடைவிடாமல், தொடர்ந்து, அவரைக் கொடுமை செய்து, அலுத்து சோர்வடைந்தனர்; அர்ச்சிஷ்டவரோ புதுமையாக, அவ்வளவு கொடுமைகளுக்கும் மத்தியில் பொலிவுடன் திகழ்ந்தார். இதைக் கண்டதும், அவரை இரகசியமாகக் கொல்வதற்கு திட்டமிட்டனர்.

தேவதூஷணம் கூறினார் என்றும், தங்களுடைய மதத்தை ஏற்படுத்திய மகமதை அவ தூறாக பேசினார் என்றும், கிறீஸ்துவ ஐரோப்பிய அரசர்களுடைய ஒற்றனாக மகமதிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும், மகமதியர், அர்ச்சிஷ்டவர் மீது குற்றம் சுமத்தினர். மகமதிய நீதிபதி, சிறைக்கைதியான அர்ச். பீட்டர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் எல்லாம் உண்மை என்று கூறி, அவரைத் தூக்கிலிட்டுக் கொல்வதற்கான தீர்ப்பை அளித்தான். இதைக் கேட்டதும், சற்றும் பயப்படாமல், அர்ச். பீட்டர், தேவமாதாவிடம் , மிகுந்த பக்தி பற்றுதலுடன், தன்னையே ஒப்புக்கொடுத்து வேண்டிக்கொண்டார்; தேவமாதாவிடம், தன் முழு நம்பிக்கை யையும் வைத்தார். திரளான முரட்டு மகமதியரின் கைகளில் பிடிப்பட்டிருக்கும் அர்ச். பீட்டரால் தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு, ஒன்றும் செய்யமுடியாமல் போனது. திரளான முரட்டு மகமதியக் கூட்டத்திற்கு முன், இவர் ஒன்றுமில்லாத ஒரு தூசி போல காணப்பட்டார்.

ஆனால், அதே சமயம், உண்மையில், இவர், தேவமாதாவின் பேரில் ஆழ்ந்த பக்தியுடையவும், நம்பிக்கையுடையவும், பற்றியெரியும் தீப்பந்தமாகத் திகழ்ந்தார். மகமதியரின் அநீதமான தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. அர்ச்சிஷ்டவரை தூக்கிலிட்டுக் கொன்றனர். தூக்கிலிடப்பட்டு இறந்து போயிருந்த அர்ச்சிஷ்டவரின் சரீரத்தை, பறவைகளுக்கு இரையாகப் போட திட்டமிட்டிருந்த கொடிய மூர் இனத்தினரான மகமதியர், அதை யாரும் தொடக்கூடாது என்று எச்சரித்திருந்ததால், கிறீஸ்துவர்கள் யாரும், அர்ச்சிஷ்டவரின் சரீரத்தை, தூக்கு மரத்திலிருந்து எடுக்காமலிருந்தனர்; அர்ச்சிஷ்டவரின் சரீரமும் அப்படியே தூக்கு மரத்திலேயே, ஆறு நாட்களாக தொங்கிக் கொண்டிருந்தது. அச்சமயம், அர்ச்சிஷ்டவருடைய சக துறவி, சங். வில்லியம், மீட்புத் தொகையுடன் வந்து சேர்ந்தார். அர்ச்சிஷ்டவர் அநியாயமாக தூக்கிலிடப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டதும், மிகுந்த துயரத்துடன், விடுவிக்கப்பட்ட வேறு சில கிறீஸ்துவ கைதிகளுடன், வில்லியம் தூக்கு மரத்தை நோக்கிச் சென்றார்; அர்ச்சிஷ்டவரின் சரீரம் ஆறு நாட்களுக்குப் பிறகும் கூட, சிதைந்து போகாமல், புதுப்பொலிவுடன் உயிருடன் இருப்பது போல் காட்சியளித்தது; அவருடைய சரீரத்திலிருந்து, பரலோக நறுமணம் புதுமையாக வெளியேறுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

அப்போது, கூடியிருந்த சகலரும் அதிசயிக்க, அர்ச்சிஷ்டவர், தூக்குமரத்தில் தொங்கியபடியே, வாய்திறந்து புதுமையாகப் பேசினார்:"பரலோக இராக்கினியாகிய தேவமாதா தாமே, என் உயிரை, இந்த மகா பயங்கரமான கொடூரமான சூழலில், பாதுகாத்துக் காப்பாற்றி வந்தார்கள்; தாம் செய்த அதிசயமான புதுமைகளிலேயே, எப்போதும் அழியாமல் நீடித்து நிலைத்திருக்கும்படியான ஓர் மிகப் பெரிய புதுமையாக, இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்கள், என்று கூறினார். இந்தப் புதுமையைக் கண்டு, பேராச்சரியத்தில் மூழ்கிய மகமதியரில் பலர் மனந்திரும்பி, கத்தோலிக்கராயினர்.

பார்சலோனா நகர மக்கள், இப்பேரதிசயமான புதுமையைப் பற்றிய செய்தியை அறிந்து, எவராலும் வெல்லமுடியாதவரும் நமதாண்டவருடைய வேதசாட்சியுமான அர்ச்சிஷ்டவரின் வருகைக்காக, மிகுந்த ஆர்வத்துடன், காத்திருந்தனர். துறைமுகத்தைக் கப்பல் அடைந்ததும், கூடியிருந்த திரளான நகர மக்கள் எல்லோரும், விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், அர்ச்சிஷ்டவரை வரவேற்றனர்; பிறகு, அவருடன் கூட, அவருடைய மடத்தை அடையும் வரை, ஊர்வலமாக, சர்வேசுரனும், தேவமாதாவும் தங்களுக்குச் செய்து வரும் பேராச்சரியமிக்க நன்மைகளுக்கு நன்றி செலுத்தியபடியேச் சென்றனர். மடத்திலிருந்த சக துறவியர், அர்ச்.பீட்டரிடம், நிகழ்ந்த புதுமையைப் பற்றிக் கூறும்படிக் கேட்டனர். அதற்கு, அவர் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார். இறுதியில், அதிபர் சுவாமியார், கீழ்ப்படிதலின் பேரில், நடந்ததைக் கூறும்படிக் கட்டளையிட்டார். உடனே, சர்வேசுரனுடைய பரிசுத்த ஊழியர், பின்வருமாறு பதில் கூறினார்: "சர்வேசுரனுடைய மாதாவும், நம்முடைய பரிசுத்த மாதாவுமான மகா பரிசுத்த கன்னிகையானவர்கள், தமது மகா பரிசுத்த திவ்யகுமாரனிடம், என்னுடைய உயிரைப் பாதுகாக்கும்படியான விசேஷ வரத்தைக் கேட்டார்கள். அந்த வரப்பிரசாதத்தைப் பெற்றதும், உன்னத பரலோக இராக்கினியானவர்கள், தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கி விடாமலிருப்பதற்காக, தம்முடைய மகா பரிசுத்தக் கரங்களினால், என் சரீரத்தைத் தாங்கிக் கொண்டார்கள்" என்று கூறினார்.

அர்ச். பீட்டர், மோட்ச இராக்கினி, தான் தொங்கிக் கொண்டிருந்தத் தூக்குக் கயிறு, தனது கழுத்தை இறுக்கி விடாமலிக்கும்படி, தனது சரீரத்தைத் தாங்கிக் கொண்டார்கள் என்று கூறிய போது, எத்தகைய இனிமையான உணர்வைத் தன் இருதயத்தில் உணர்ந்தாரென்றால், கூடியிருந்த யாவரும் வியந்து பாராட்டும் விதமாக, ஓர் பரவசத்திற்குள் மூழ்கினார். இந்நிகழ்விலிருந்து, அர்ச். பீட்டர் கழுத்தில், தூக்குக் கயிறு இறுக்கிய அச்சு பதிந்திருந்தது; தூக்குக் கயிற்றினால் திருகப்பட்ட கழுத்தையுடையவராகவே, எஞ்சிய தன் வாழ்நாள் முழுவதும், காணப்பட்டார். அவருடைய நிறமும் வெளிறிய நிறமாக மாறியிருந்தது. இவை இரண்டும், அவருடைய வாழ்வில், தேவமாதா நிகழ்த்திய மாபெரும் புதுமையின் அதிகாரப்பூர்வமான அடையாளங்களாக திகழ்ந்தன. பரலோக இராக்கினியின் மடத்தில், அர்ச்சிஷ்டவர் தன் வாழ்வின் மீதி நாட்களை செலவழித்தார். இம்மடத்தில், இவருடைய ஜீவியம், விரத்தத்துவ புண்ணியங்களுடையவும், சம்மனசுகளின் இராக்கினியான தேவமாதாவுடன் நிகழ்த்திய உரையாடல்களுடையவும், இடைவிடாமல் நீடித்த தொடர் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. தேவமாதாவின் பேரில் மிகுந்த மேரையும், சிநேக மிக்க கனிவும், உத்தமமான பக்தியும் கொண்ட அர்ச்சிஷ்டவர்களுக்குள், இவரும் ஒரு முக்கிய அர்ச்சிஷ்டவராக விளங்கினார், என்பதை, மோட்ச இராக்கினியுடன் அவர் செய்த உரையாடல்கள், உறுதிப்படுத்துகின்றன.




தூக்குக் கயிற்றில், தேவமாதாவின் பரிசுத்தத்திருக்கரங்களினால் தாங்கப்பட்டபடி, தொங்கிய அந்த பாக்கியமான நாட்களை, அர்ச்சிஷ்டவர், வாழ்நாள் முழுவதும், எப்போதும் மகிழ்வுடன் சிந்திப்பார்; புதுமையைப் பற்றி, சக துறவியரிடம் கூற வேண்டிய சந்தர்ப்பங்களில், "என் பிரிய சகோதரர்களே! என்னை நம்புங்கள். நான் உயிருடன் இருந்தேன், என்பதை என்னால் நம்ப முடியவில்லை. துாக்கு மரத்தில், இறந்துவிட்டேன் என்று கருதப்பட்டு, நான் தொங்கிக்கொண்டி ருந்த அந்த மிகச் சில ஆனால், மகா பாக்கியமான நாட்கள் மட்டுமே, என் ஞாபகத்தில் இருக்கின்றன. அதை நான் நம்புகிறனே", என்று கூறுவார்.

ஒரு மிகக் கொடிய நோயினால், பாதிக்கப்பட்டார்; தன் மரணத்தின் நாளை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தினார். 1304ம் வருடம், ஏப்ரல் 27ம் தேதியன்று, தனது 66வது வயதில் பாக்கியமாக ஆண்டவரில் மரித்தார். அர்ச்சிஷ்டவருடைய சரீரம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, 3 ஆண்களுக்கும் 4 பெண்களுக்கும் நோயிலிருந்து புதுமையாக சுகம் கிடைத்த அற்புதத்தை, ஆண்டவர் நிகழ்த்தி, அர்ச்சிஷ்டவரை மகிமைப்படுத்தினார். 1686ம் வருடம், மார்ச் 28ம் தேதியன்று, 11ம் இன்னசென்ட் பாப்பரசர், இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் கொடுத்தார்; 18ம் நூற்றாண்டில், 14ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசர், அர்ச். பீட்டர் ஆர்மங்கலை, வேதசாட்சிகளின் பட்டியலில் சேர்த்தார். 1936ம் வருடம் வரை இவருடைய சரீரம் அழியாத சரீரமாகத் திகழ்ந்தது. 1936ல்ஸ்பெயினில் நிகழ்ந்த கலகத்தின் போது, கம்யூனிஸ்டுகள், அர்ச்சிஷ்டவருடைய அழியாத சரீரத்தை எரித்து சாம்பலாக்கினர். அங்கிருந்த சில பக்தியுள்ள கத்தோலிக்க இளைஞர்கள், இந்த சாம்பலை அருளிக்கமாக, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததும், மறுபடியும் அர்ச்சிஷ்டவருடைய இந்த அருளிக்கங்கள், வீடுகளிலிருந்து, தேவாலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, பொது வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. 


திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 19


போதக துறவற சபையை துவங்குதல் 

அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், அர்ச். சாமிநாதரிடம், விரைவில் அவருடைய போதகக் குருக்களுக்கான சபையும் பாப்பரசரால் அங்கிகரிக்கப்படும் என்றும் அந்த சபைக்கு நன்மை எல்லாம் நிகழும் என்றும் கூறினார். அப்போது அர்ச். சாமிநாதர் இருதய துடிப்பு அதிகரிக்குமளவுக்கு சந்தோஷ மகிழ்வால் நிரம்பினார். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நான் 5 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு வந்து எனது சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காக வந்தேன். பிறகு 3 வருடங்களுக்கு முன்பாக இங்கு வந்தேன். எனவே உங்கள் சபைக்கான அனுமதி கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டால்அதைரியப்படாதீர்கள். உங்கள் நம்பிக்கையை நமது ஆண்டவரிடத்தில் வைத்துவிடுங்கள். அவர் உங்களைக் காப்பாற்றுவார்” என்றார். பிறகு இருவரும் அர்ச்.இராயப்பரின் பேராலயத்தை விட்டு வெளியேறினர். அர்ச்.பிரான்சிஸ் சாமிநாதரிடம், தனது சீடர்களுடன் இத்தாலி நாடெங்கும் திருச்சபைக்காக தனது சபை ஆற்றி வரும் ஞான அலுவலின் சாராம்சத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். அர்ச். சாமிநாதருடைய வேதபோதக அலுவலைப் போலவே அவர்களும், இத்தாலி நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஆண்டவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வருவதைப் பற்றிக் கூறினார். அவர்கள், அர்ச்.சாமிநாதரும் அவருடைய சீடர்களும் செய்து வந்ததுபோல கல்வியில் தேர்ச்சிபெற்றிருந்த பதிதர்களுடனும் அவர்களுடைய தலைவர்களுடனும் வேதத்தைப் பற்றிய தர்க்கத்தில் ஈடுபடாமலிருந்தபோதிலும், ஆண்டவருடைய சுவிசேஷத்தை போதிப்பதிலே முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். 

ஏனெனில் இத்தாலியில் அக்காலத்தில் அநேக உயர்குலக் குடும்பங்கள் உலக சுகபோகங்களிலும் ஆடம்பரமான ஜீவியத்திலும் மிதமிஞ்சிய அளவிற்கு ஈடுபட்டிருந்ததால், வேதவிசுவாசத்தை இழந்துவிடும் அபாயத்திலிருந்தனர். அவர்களுக்கு வேதத்தைப் போதிப்பதிலேயே பிரான்சிஸின் சபையினர் ஈடுபடலாயினர். அர்ச்.பிரான்சிஸ் மற்றும் அவருடைய சிடர்கள் அனைவரும் தங்களுக்கென்று யாதொரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் விட்டு விட்டு வந்தவர்கள். அவர்களுக்கென்று இந்த உலகில் ஒன்றும் இல்லை. அவர்கள் தங்களுடைய உடை மற்றும் அன்றாட உணவிற்கு கூட ஒவ்வொரு விடாகச் சென்று பிச்சையெடுப்பார்கள். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நமது நேச ஆண்டவருக்காக இவ்வுலகில் நாம் ஏழையாக ஜீவிப்பது எவ்வளவு உன்னதமான ஜீவியம்! அதற்கு ஈடு இணை வேறொன்றும் இல்லை! ஒரு மனிதனுக்கு உடைமைகள் இருப்பின் அவற்றைப் பாதுகாப்பதற்காக பெட்டகங்களையும் ஆயுதங்களையும் அவன் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு அவன் உடைமைகளையும், ஆயுதங்களையும் வைத்திருக்கும்போது அவற்றால் அவன் தனது உறவினருடனும் அயலாருடனும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனிமித்தமே அவனுடைய தேவசிநேகமும் பிறர்சிநேகமும் கூட காயப்பட்டு பாதிக்கும் நிலைமைக்குள்ளாகக் கூடும். சகோ.தோமினிக்! இதை ஒத்துக் கொள்கிறிர்களா?” என்று கூறினார். 

இதுவரை மிகுந்த வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்.சாமிநாதர், அர்ச்.பிரான்சிஸின் இந்தக் கருத்துக்கு தானும் முழு மனதுடன் உடன்படுவதாக தெரிவித்தார். பல வாரங்கள் ரோமில் இவ்வாறாக இருவரும் ஒன்றாக தங்கியிருந்தபோது அர்ச்.பிரான்சிஸ் கூறிய அநேக காரியங்களையும் அர்ச்.சாமிநாதர் மிகுந்த உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். அட்ட தரித்திரத்தை தனது சுபாவத்திலேயே அணிந்து கொண்டவராக, தனது சகோதரி “ஏழ்மை”யை நேசித்து ஜீவித்த அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் உன்னதமான தேவசிநேக ஜீவியத்தையும் அதை விளக்கிக் கூறிய அவருடைய வார்த்தைகளையும் முழு மனதுடனும் உற்சாகத்துடனும் ஏற்று பாராட்டிய பிறகு அவரிடமிருந்து அர்ச்.சாமிநாதர் விடைபெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் பாப்பரசர் 3ம் இன்னசன்ட், அர்ச்.சாமிநாதரை வத்திக்கானுக்கு வரவழைத்து, “நேற்று இரவு ஒரு காட்சி கண்டேன். அர்ச்.அருளப்பருடைய லாத்தரன் பேராலயம் இடிந்து விழுவதற்கான மிக ஆழமும் அகலமுமான வெடிப்புகள் அதன் சுவற்களில் தோன்றி அதன் கூரை பிளந்து போகும் அபாயத்தில் இருக்கும் போது நீர் அங்கு தோன்றினிர்.. ” என்று கூறினார்.

 அதற்கு “நானா! அங்கு தோன்றினேன், பரிசுத்த தந்தையே!” என்று பாப்பரசரிடம் சாமிநாதர் வினவினார். 

பாப்பரசர், “ ஆம். நிர் தான் அங்கு தோன்றி, இராட்சதனைப் போல மாபெரும் உருவமாக வளர்ந்து, உமது தோள்களினால், விழ இருந்த பேராலயத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டீர். அம்மாபெரும் பிரம்மாண்டமான கதிட்ரல் பேராலயத்தை நீர் ஒரு துளி கஷ்டமுமின்றி உமது கரங்களை நீட்டி தாங்கினீர். நீர் அதைத் தொட்டவுடனே அந்த பேராலயக் கட்டிடத்தின் ஓட்டை, விரிசல் இடிபாடுகள் அனைத்தும் மறைந்து போகவே மீண்டும் புதுப்பொலிவுடன் கம்பீரமாக நின்றது” என்று பதிலளித்தார். பாப்பரசர் தன்னைப் பற்றி இவ்வாறு கூறியதை அர்ச்.சாமிநாதர் மிகுந்த திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரால் ஒன்றும் பேச இயலவில்லை. மேலும், பாப்பரசர் அவரிடம், “என் பிரிய மகனே கேளுங்கள்! சில வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது நமது சிறிய நண்பர், சகோதரர் பிரான்சிஸ் என் முன்பாக தோன்றினார். அப்பொழுது அவர் அசிசியிலிருந்து இங்கு வந்து ரோமாபுரியில் தங்கியிருந்தார். அவர் தன்னுடைய பிச்சையெடுக்கும் துறவிகளுடைய சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காகக் காத்திருந்தார். முதன் முதலில் அவரைக் கண்டவுடன் அவருடைய கருத்துக்கள் பின்பற்றமுடியாதபடிக்கு மிகவும் கடினமானவையாகத் தோன்றியதால், அவருடைய சபைக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டேன். ஆனால் அதற்குப் பிறகு நேற்று இரவு நான் கண்ட காட்சியைப் போலவே ஒரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது பிரான்சிஸ் மிகச் சரியானவற்றையே கூறியிருக்கிறார் என்று உணர்ந்தேன். அதாவது தரித்திர ஜீவியத்தைப் பற்றி மக்களிடம் போதித்து, நம் ஆண்டவர் சேசுகிறிஸ்துநாதர்மேல் நமக்குள்ள சிநேகத்தை முன்னிட்டு ஏழ்மையை நாம் அணிந்துகொள்வோமேயாகில், ஆடம்பரமும் தப்பறையுமான இவ்வுலகத்தின் ஜீவிய முறைகள் மறைந்து அழிந்து போகும். அதன்பிறகு இத்தாலியா நாடெங்கும், இவ்வுலகம் முழுவதும் புதியதொரு ஞானஜீவியத்திற்கான சுதந்திரம் மலரும்” என்றார். 

மேலும் பாப்பரசர் தாம் எளிய சகோதரர் பிரான்சிஸின் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் கடந்த சில வருடங்களாக அவரும் அவருடைய சிடர்களும் ஆன்ம இரட்சணிய அலுவலில் அரும்பாடு பட்டு உழைத்ததன் பயனாக எண்ணற்ற ஆத்துமங்களை இரட்சணிய பாதைக்கு அழைத்து வந்துள்ளனர் என்றும் சாமிநாதரிடம் கூறினார். பாப்பரசர் 3ம் இன்னசன்ட் மிகுந்த மகிழ்ச்சி அக்களிப்புடன், சர்வேசுரன் ஆத்துமங்களைக் காப்பாற்றுவதற்கான விசேஷ அலுவலுக்காக சாமிநாதரையும் தேர்ந்தெடுத்து உயர்த்தியிருக்கிறார் என்பதை அறிவித்தார். ஆதலால் பாப்பரசர் இந்தப் புதிய பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் துறவற சபையானது உடனே துவங்க வேண்டும் என்று ஆசித்தார்.

எனவே போதக துறவியரின் சபையை துவக்கும்படி பாப்பரசர் அர்ச். சாமிநாதரிடம், “உடனே பிரான்சுக்கு செல்லுங்கள். அங்கு உங்களுடைய  சீடர்களை ஒன்று கூட்டி உங்களுடைய சபை விதிமுறைகளை ஏற்படுத்துங்கள். அதன்பிறகு உங்களுடைய சபைவிதிமுறைகளை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். பாப்பரசரிடம் ஆசீர் பெற்றுக் கொண்ட சாமிநாதர், சில நாட்களுக்குப் பிறகு தூலோஸ் மேற்றிராணியார், வந்.ஃபல்குவஸ் ஆண்டகையுடன் மகிழ்ச்சி நிறைந்த இருதயத்துடன் பிரான்சு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அப்போது மேற்றிராணியார் அவரிடம் சபைவிதி முறைகளை அவருடைய ச சீடர்கள் ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படலாம் என்றும் வேதபோதக அலுவலை பல இடங்களுக்கும் சென்று நிறைவேற்றுவதற்கு 6 சீடர்கள் மட்டும் பற்றாமல் போய்விடும் என்றும் அதற்கு அநேக தேவ அழைத்தல்கள் தேவைப்படும் என்றும் கூறினார்.

அதற்கு சாமிநாதர் அவரிடம், “இப்போது நமது பாப்பரசர் நம் பக்கம் இருக்கிறார் என்ற நினைவே எனக்கு மிகுந்த பலமாகவும், எனக்குத் தேவையான எல்லாமாகவும் இருக்கிறது. ஓ ஆண்டவரே! நாம் ரோமாபுரிக்கு வந்தது குறித்து பெரிதும் மகிழ்கிறேன்” என்றார். தூலோஸ் வந்து சேர்ந்ததும் மேற்றிராணியார், சாமிநாதரின் சீடர்கள் எண்ணிக்கை 6லிருந்து 16 ஆக உயர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அதிசயப்பட்டு, அச்சபையின் பிற்கால வளர்ச்சியை முன்கூட்டியே உணர்ந்து பேருவகை கொண்டார். புரோயிலில் சில  சீடர்களும் தூலோஸில் சில மாதங்களுக்கு முன்பாக பீட்ர் சேலா என்பவர் அன்பளிப்பாக கொடுத்த ஒரு இல்லத்தில் சில சீடர்களுமாக சாமிநாதரின் சீடர்கள் இரண்டு இல்லங்களில் ஜீவித்து வந்தனர். வந்.ஃபல்குவஸ் ஆண்டவர், “என்னால் நம்பவே முடியவில்லையே 16 சீடர்கள் அதற்குள்ளாகவா!” என்றார். அதற்கு சாமிநாதர், “ஆம். ஆண்டவரே! ஆனால் இது ஆரம்பம் தான் என்பதை நாம் நினைக்க வேண்டும். சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தால், ஏராளமான தயாளமுள்ள பரந்த இருதயத்துடைய நல்ல மனிதர்கள் நம்முடன் சேர இருக்கிறார்கள்” என்று கூறினார். (தொடரும்)

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 20

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 19

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4



வியாழன், 23 டிசம்பர், 2021

அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம் 1 - அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார் St. Alponshus Ligori

 அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம்


மகா பரிசுத்த திவ்ய இரட்சகர்சபையை உண்டாக்கின அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார்


(கி.பி.1696-1787) திருநாள் ஆகஸ்ட் 2ம் தேதி



இத்தாலி நாட்டிலுள்ள நேப்பிள்ஸ் நகரத்தில் அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார் பூர்வீக உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 1696ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் நாள் பிறந்தார். அவருடைய தாய் பக்தியில் அவரை வளர்த்தாள். இளமையிலேயே அர்ச்சிஷ்டதனத்தின் அடையாளக் குறிப்புகள் அவரிடத்தில் காணப்பட்டன. அவர் குழந்தையாயிருக்கும்போது, மகாத்துமாவான ஒரு அர்ச்சிஷ்டவர் அவரை ஆசீர்வதித்துவிட்டு, இவர் 91வயது வரை ஜிவிப்பாரென்றும் மேற்றிராணியாராகி திருச்சபைக்கு மிகப்பெரிய மகிமையாக விளங்குவாரென்றும் திர்க்கதரிசனம் உரைத்தார். சிறுவயதுமுதல் லிகோரியார் தேவஇஷ்டபிரசாதத்தின் ஏவுதலை அனுசரித்து அத்தியந்த பக்தியும் சம்மனசுக்குரிய பரிசுத்ததனமும் தேவமாதாவின் பேரில் மிகுந்த பக்தியும் கொண்டு திகழ்ந்தார். அவர் தன் புண்ணிய நன்மாதிரிகையினால் உத்தம கிறிஸ்துவ ஜீவியத்துக்கு உட்படும்படி தன் நண்பர்களைத் தூண்டுவார். இளைஞரானபோது பக்தியுள்ள சபைகளில் உட்பட்டு நோயாளிகளை மடங்களில் சந்தித்து அவர்களுக்கு ஊழியம் செய்வார்.

தேவாலயங்களில் நடக்கும் திவ்ய பலிபூசை, பிரார்த்தனை முதலிய தேவாராதனை சடங்குகளில் தவறாமல் பங்கேற்பார். வாரந்தோறும் திவ்ய நன்மை உட்கொண்டு அனுதினமும் தேவநற்கருணை சந்திப்பார். பக்திகிருத்தியங்களுடன்கூட கல்விகற்பதிலும் கவனத்துடன் ஈடுபடுவார். மேன்மைமிக்க புத்திகூர்மையும் அபாரமான ஞாபகசக்தியும் கொண்டிருந்ததனால், லிகோரியார், தனது 16வது வயதிலேயே இருவேறு உயர்கல்வி பட்டங்களைப் பெற்றார். பிறகு, தந்தையின் விருப்பப்படி சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரானார். அவருக்கு திருமணம் செய்ய அவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்ததை அறிந்தவுடன் தன் மூத்தமகனுக்குரிய உரிமையையும், தனது வக்கீல் தொழிலையும் துறந்துவிட்டு தேவமாதாவின் தேவாலயத்தை நோக்கிச் சென்றார். அங்கு தேவமாதாவி;ன் பீடத்தில் தன் உயர்குடிமகனுக்குரிய போர்வாளை தொங்கவிட்டார். தேவமாதாவிடம் குருத்துவத்திற்கான தேவஊழியத்திற்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார். இதனால் தமது குடும்பத்தினரிடமிருந்து வந்த பல இடையூறுகளை லிகோரியார் மிக திடமனதுடன் வெற்றி கொண்டு இறுதியில் குருப்பட்டம் பெற்றார்.

பிறகு, மற்ற சில குருக்களுடன் சேர்ந்து நாட்டுபுறத்திலுள்ள கிராமங்கள் முதலிய சிற்றூர்களிலுள்ள மக்களுக்கு ஞானபிரசங்கங்களை போதித்து ஆங்காங்கே ஆன்ம இரட்சணிய அலுவலை செய்துகொண்டுவந்தார். அதனால் விளைந்த மிகுதியான ஞானநன்மைகளைக் கண்ட லிகோரியார் “மகா பரிசுத்த திவ்ய இரட்சகர் சபை” என்ற குருக்களின் சந்நியாச சபையை ஏற்படுத்தினார். அச்சபை குருக்கள் திவ்ய இரட்சகரின் மேலான புண்ணியங்களை அனுசரித்துக் கொண்டு திவ்ய இரட்சகர் பாவனையாக நாட்டுபுறத்தில் சஞ்சரிக்கும் தரித்திர மக்களுக்கு ஞானபிரசங்கங்கள் நிகழ்த்தவும், ஆத்துமநன்மை விசாரிக்கவும் நியமிக்கப்பட்டனர். துவக்கத்தில் சபையில் சிலர் மட்டுமே இருந்தபோதிலும், அவர்கள் அனைவருக்கும் உத்தம புண்ணிய மாதிரிகையானதால் அவர்களுடைய சபை விரைவிலேயே வளர்ந்து விருத்தியடைந்தது. தன் ஞானபிரசங்கங்களினால் அம்மக்களுக்கு ஏராளமான ஞான நன்மைகள் விளையும்படி லிகோரியார் அயராமல் உழைத்தார். ஆன்மஈடேற்றத்திற்காக ஞான நன்மைகள் பயக்கக்கூடிய ஏராளமான பக்திநறைந்த புத்தகங்களை எழுதினார். 

சகல பதிதங்களிலிருந்தும் அஞ்ஞானத்திலிருந்தும் குறிப்பாக அப்போது தோன்றியிருந்த ஜான்சனிச தப்பறையினின்றும் மக்களைப் பாதுகாக்கும் படியும் அவர்களை உத்தம கத்தோலிக்க புண்ணிய ஜிவியத்திற்கு திருப்புவதற்காகவும் எண்ணற்ற அரிய நுரல்களை எழுதினார்0 ஞானபிரசங்க போதனைகளை செய்தார். மனுக்குலத்தின்மீதான ஆண்டவருடைய அளவற்ற சிநேகத்தை மறைத்து, அவரை நடுத்தீர்ப்பவராக மட்டுமே மக்களிடம் போதித்துவந்த ஜான்சனிச பதிதத்தை அழிப்பதற்காக சேசுவின் திவ்ய திரு இருதயத்தின் மிதான பக்தியை எங்கும் பரப்பினார்.

 “சேசுவின் திவ்ய திரு இருதயம்”, “மகா பரிசுத்த தேவ நற்கருணை” என்ற நுரல்களை எழுதினார். உத்தம கிறிஸ்துவ ஜீவியத்திற்கு எண்ணற்ற பாவிகளை மனந்திருப்பினார். தேவமாதாவின் மிது தான் கொண்டிருந்த பக்திபற்றுதலை வெளிப்படுத்தும்படியும், மக்களிடம் மாதா பக்தியை தூண்டி வளர்ப்பதற்காகவும் “அர்ச்.கன்னிமாமரியின் மகிமைகள்” என்ற உன்னதமான அரிய நுரலை எழுதினார். மேலும், “சேசுகிறிஸ்துநாதரின் பத்தினி”, “சேசுவின் பாடுகளும் மரணமும்” “சேசுவின் மனித அவதாரமும், பிறப்பும்,பாலத்துவமும்” “”நன்மரண ஆயத்தம்” போன்ற எண்ணற்ற உயரிய நுரல்கள் அவரால் எழுதப்பட்டன. தேவமாதாவைக்குறித்து மிக உருக்கமாக பக்தி நேசத்துடன் பிரசங்கங்கள் வைப்பார். தேவமாதாவிடம் அவர் கொண்டிருந்த உச்சிதமான பக்திபற்றுதலினால் லிகோரியார் அதிசயமான தேவவரங்களைப் பெற்றிருந்தார். ஒரு நாள் லிகோரியார் பிரசங்கம் செய்தபோது தேவமாதாவின் சுரூபம் முழுதும் பிரகாசித்தது. அதினி;ன்று புறப்பட்ட சில ஒளிக்கதிர்கள் லிகோரியாரின் முகத்திலேயும் பட்டன. மற்றொருநாள் அவர் பரவசமாகி அநேக அடி உயரத்திற்கு ஆகாயத்தில் நிற்கக் காணப்பட்டார். லிகோரியார் நம் ஆண்டவரின் திவ்ய பாடுகளின் மேல் பக்திகொண்டு தினமும் அவற்றை தியானிப்பார். 

தினமும் சிலுவைப்பாதையை பக்திபற்றுதலுடன் தியானித்து செய்வார். திவ்யநற்கருணை பேழைமுன்பாக ஜெபம் செய்யும்போதும், திவ்யபலிபூசை நிறைவேற்றும்போதும் தேவசிநேக அக்கினி மயமான அவருடைய ஆத்துமம் பக்திசுவாலகருக்குரிய ஞான சுவாலையால் உருகுகிறதுபோல காட்சியளிக்கும். அதிசயமான நடுக்கமுற்றுப் பரவசமாவார். எப்போதும் அதிசயமான சம்மனசுக்குரிய பரிசுத்ததனத்துடன் நடந்து பாவமின்றி இருப்பினும், கடின தபசு செய்வார். ஒருசந்தியாலும், இருப்புச்சங்கிலியாலும் மயிர் ஒட்டியானத்தினாலும் மற்ற தவமுயற்சிகளாலும் தன் சாPரத்தை ஒறுத்தார். இரத்தம் வரும்வரை அதை அடித்துக் கொள்வார். இத்தனைப் புண்ணியங்களால் தமக்குப் பிரியமான தம்முடைய ஊழியனுக்கு, ஆண்டவர், திர்க்கதரிசன வரமும், அற்புதங்களை செய்யும் வரமும், மனிதருடைய இருதய இரகசியங்களை கண்டுபிடிக்கும் வரமும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கிற வரமும் தந்தருளினார். தாழ்ச்சியினால் நிண்டகாலத்திற்கு மேற்றிராணியார் பதவியை விலக்கி வந்தார். இறுதியில் 13ம் சாந்தப்பர் பாப்பரசரின் ஆணைக்குக் கிழ்படிந்து நேப்பிள்ஸ் நகருக்கருகில் இருந்த அர்ச்.கொத்தர் ஆகத்தம்மாள் என்ற நகரத்தின் மேற்றிராணியாரானார்.

தொடர்ந்து மனதரித்திரமும், மட்டசனமும், சாPர ஒறுத்தலும், தன் மட்டில் கண்டிப்பும் அனுசரித்தார். மற்றவரிடம் மிகுந்த தயாளமும் இரக்கமும், விசேஷமாய் ஏழைகள் மட்டில் தர்ம உதாரத்தையும் அனுசரித்தார். ஒருதடவை நேப்பிள்ஸ் நகரமெங்கும் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் உடைமைகளை எல்லாம் விற்று அங்கிருநு;த எல்லா ஏழைகளுக்கும் பங்கிட்டளித்தார். 19 ஆண்டுகளாக மேற்றிராணியாராக அயராமால் உழைத்து தன் மேற்றிராசனத்தையும் பல துறவற சபை மடங்களையும் குருமடங்களையும் சிர்திருத்தினார். லிகோரியார் இவ்வாறு ஒரு நிமிடத்தை முதலாய் வீணாக்காமல எல்லோருக்கும் எங்கும் எப்போதும் அயராமல் நன்மை செய்து வந்தார். தனது குருக்கள்சபையைப் போன்றதொரு சன்னியாச சபையை கன்னியாஸ்திரிகளுக்கும் ஏற்படுத்தினார். தன் ஓய்வு நேரத்தில் லிகோரியார் வேதசாஸ்திர நுரல்களையும் அநேக பக்திக்குரிய நுரல்களையும் எழுதினார். வயதுமூப்பின் காரணமாவும் தனக்கிருந்த நோயின் காரணத்தினாலேயும் தன் மேற்றிராசனத்தை விட்டு விட்டு தன் சபையினருடன் தங்குவதற்கு பாப்பானவரிடம் அனுமதி கோரினார்.

கடைசியில் 6ம் பத்திநாதர் பாப்பரசருடைய அனுமதியின்பேரில் நொசெரா என்ற ஊரில் தமது சபை மடத்தில் வந்து சேர்ந்தார். அங்கு புத்தி தெளிவுடனும் திடத்துடனும் ஞானதியான பிரசங்கங்கள் செய்தார். குருத்துவத்துக்கரிய திருப்பணிகள் செய்துவந்தார். லிகோரியார் வயதுமுதிர்ந்த காலத்தில் ஒரு நாள் அவருடைய மடத்தின் அருகில் இருந்த வெசுவியஸ் எரிமலை திடீரென்று நெருப்பைக் கக்க துவங்கியது. இதைக்கண்ட மற்ற சந்நியாசிகள் அவரிடம் கூறியதும், அவர் உடனே வானளாவி நெருப்புடன் வந்த கரும்புகையைப் பார்த்தார். உடனே, அஞ்சி, “சேசுவே” என்று மூன்று முறை கூறினார். பிறகு, அந்த எரிமலையை நோக்கி மிகப்பெரிய சிலுவை அடையாளம் வரைந்தார். என்ன அதிசயம். உடனே அந்த மலை நெருப்பைக் கக்குவதை நிறுத்திற்று. இறுதியில் நோயினால் ஏற்பட்ட தளர்வினாலும் 91 வயது ஆனதாலும் வெகுவாய் சோர்ந்து 1787ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாளன்று பாக்கியமான மரணமடைந்து பேரின்ப மோட்ச இராஜ்யத்திலே சேர்ந்தார்.

பாப்பரசர் 16ம் கிரகோரியார் இவருக்கு 1839ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதியில் அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

சனி, 18 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2

 அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2: 
இளமையில் ஞானம்


அர்ச்.சாமிநாதருக்கு 14 வயதானதும் அக்காலத்தில் ஸ்பெயினில் பிரசித்தி பெற்ற பலென்சியா பல்கலைகழகத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு 10 வருடமாக உயர்கல்வி பயின்றார். அங்கு நிலவிய யாதொரு சுழலும் அவருடைய தேவசிநேக ஜீவியத்தை பாதிக்கவில்லை. அங்கு படிப்பில் அவருடைய அபரமானஅறிவு திறமையும் பழகுவதில் அவர் கொண்டிருந்த சம்மனசைப்போன்ற பரிசுத்ததனமும் பார்ப்பவர் அனைவரையும் அவர்பால் வெகுவாய் கவர்ந்தது. அவர் பிறந்ததிலிருந்தே சர்வேசுரனுடைய காரியங்கள் மட்டுமே அவரைக் கவர்ந்திருந்ததால், தற்பொழுது அவர் இருந்த பல்கலைக் கழகத்தில் நிலவிய உலகக் கவர்ச்சிகள் அவரை சிறிதளவும் பாதிக்கவில்லை. 

அங்கு இவர் பயின்ற உலக அறிவியல் இவருடைய உன்னத ஆவல்களை திருப்திபடுத்தவில்லை. வேதஇயலைப் படிப்பதில் தன்னையே விரைந்து ஈடுபடுத்திக் கொண்டார். அதிலுள்ள உன்னத பரலோக ஜீவசுனையின் நீரானது மேலான பரலோக சத்தியத்தைக் கண்டடையும்படி தன் ஆத்துமத்தில் ஏற்பட்டிருந்த தாகத்தைத் தணிக்கக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார். பரிசுத்த வேதாகமத்தின் நிரூபங்களையும் தத்துவ இயலையும் ஆழ்ந்து பயில்வதில் 4 வருடங்கள் ஈடுபடலானார். வேதகல்வியை தகுதியுடன் கற்பதற்கு ஒருவனுடைய இருதயமானது தன் ஊனியல்பை மேற்கொள்ள கற்றறிந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். எனவே அவர் அங்கு கல்வி கற்ற 10 வருடங்களும் திராட்சை இரசம் அருந்தாமல் தபசுடன் ஜீவித்திருந்தார்.

தியோடொரிக் அப்போல்டா என்பவர் அர்ச்.சாமிநாதரைப்பற்றி,;இவர் ஒரு சிறுவனாக இருந்தபோதிலும் ஞானத்தில் ஒரு அறிவு முதிர்ந்த துறவியாக காணப்பட்டார். அவருடைய வயதிற்குரிய இன்பங்களுக்கு மேம்பட்ட வயதினராக ஜீவித்தார். நீதியின் மேல் தாகமுள்ளவராக இருந்தார். அவர் தன்னைச் சுற்றியிருந்த இலக்கு ஏதுமில்லாத மூடத்தனமான உலகத்தை விட திருச்சபையையே பெரிதும் தன் கண்ணென போற்றி மகிழ்வார்.

திருச்சபையின் பரிசுத்த உறைவிடமான மகாபரிசுத்த தேவநற்கருணை பேழையே அவருக்கும் தங்கி மகிழும் ஓய்விடமாக இருந்தது. அவருடைய அன்றாட நேரமெல்லாம் ஜெபத்திற்கும் படிப்பிற்கும் சமமாக ஒதுக்கப்பட்டிருந்தது. சாமிநாதர் கொண்டிருந்த உன்னதமான பக்தி பற்றுதலுக்கும் அவர் பக்திபற்றுதலுடன் வேதகற்பனைகளை அனுசரித்து வந்த ஜீவியத்துக்கும் சம்பாவனையாக சர்வேசுரன் உன்னத ஞானத்தை அவருக்கு அளித்தார். சாமிநாதர் அந்த ஞானத்தைக் கொண்டு மகா கடினமான கேள்விகளுக்கும் மிக எளிதாக விடைஅளிப்பவராக திகழ்ந்தார்; என்று குறிப்பிடுகின்றார்.

1190ம் ஆண்டு இலையுதிர்காலம். ஸ்பெயின் நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. பலேன்சியா நகரெங்கும் வறுமை0 அதனால் மக்கள் பசி பட்டினியால் மடிந்தனர். இதைக் கண்ட 20 வயது இளைஞரான சாமிநாதர் தனனிடமிருந்த பணத்தைக் கொடுத்தும் தன் உடைமைகளை விற்றும் அநேக ஏழைகளுடைய வறுமையை நீக்கினார். மேலும் தன்னிடமிருந்த விலையுயர்ந்த புத்தகங்களையும் விற்பதற்கு தீர்மானித்தார்.

அப்போது அவருடைய சக மாணவ நண்பர்கள் அவரிடம், “ இந்த புத்தகங்கள் இல்லாமல் எவ்வாறு உன் கல்வியை தொடரமுடியும்?”; என்று வினவினர். அதற்கு சாமிநாதர், “இவ்வுலகில் வாழ லேண்டிய மனிதரின் சாரங்கள் இறக்கும் தருவாயில் உள்ளபோது, இந்த இறந்த ஆட்டுத்தோலில் எழுதப்பட்ட இப்புத்தகங்கள் நமக்கு முக்கியமானவையாகுமோ? நான் இப்புத்தகங்கள் இல்லாமலேயே நான் சமாளித்துக் கொள்வேன்” என்றார். அவருடைய இந்த பிறர்சிநேக சேவை அவருக்கு பரலோகத்திலிருந்து இன்னும் மேலான வெகுமதிகளைப் பெற்றுத் தந்தது. சாமிநாதர் எல்லா பாடங்களிலும் முன்னைவிட இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று, தன் வகுப்பிலேயே முதல் தலைசிறந்த மாணவனாக திகழந்தார். 

இவ்வாறு ஏழைகளின் வறுமையை போக்குவதற்காக சாமிநாதர் தன் விலையுயர்ந்த புத்தகங்களையெல்லாம் விற்றதைப்பற்றி ஓஸ்மா நகர மேற்றிராணியார் கேள்விபட்டதும் தீரமிக்க இந்த மாணவர் பிற்காலத்தில் ஒரு நல்ல குருவாக தனக்கு நல்ல உதவியாளராக பணிபுரியக்கூடும் என்று எண்ணி சாமிநாதர் தன்னிடம் வரும்படி ஆசித்தார். 

(தொடரும்) 

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 1