Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 8 ஜனவரி, 2025

January 7 - Feast of St. Lucian of Antioch

ஜனவரி7ம்‌ தேதி 

வேதசாட்சியான‌ அர்ச்‌.அந்தியோக்கு லூசியான்‌ 

இவர்‌, கி.பி.240ம்‌ வருடம்‌ பிறந்தார்‌. சிரியாவில்‌ சமோசட்டா என்ற இடத்தில்‌ பிறந்தார்‌. 12 வயதில்‌, பெற்றோரை இழந்து, அநாதையானார்‌. தன்‌ உடைமைகளான ஆஸ்திகளை ஏழைகளுக்குக்‌ கொடுத்து விட்டு, ஞான வழிகாட்டியான அர்ச்‌. மக்காரியுஸின்‌, சீடராகும்படி எடெஸ்ஸா நகரத்திற்கு சென்றார்‌. இங்கு, அர்ச்‌.மக்காரியுஸிடம்‌, பரிசுத்த வேதாகமத்தைப்‌ பற்றி தெளிவுறக்‌ கற்றறிந்தார்‌; தியான ஜீவியத்தை ஜீவிப்பதற்கான வழிமுறையையும்‌ கற்றறிந்தார்‌. அஞ்ஞானிகள்‌ மற்றும்‌ யூதர்களிடையே, ஆர்வத்துடனும்‌, பக்திபற்றுதலுடனும்‌, கிறீஸ்துவ வேதத்தைப்‌ பரப்பி வந்தார்‌. இதன்‌ காரணமாக பின்னர்‌, இவருக்குக்‌ குருப்பட்டம்‌ அளிக்கப்பட்டது. அந்தியோக்கியாவில்‌, இவர்‌ ஒரு பள்ளிக்கூடம்‌ துவங்கினார்‌. அநேக மாணவர்கள்‌ சேர்ந்தனர்‌. பரிசுத்த வேதாகமத்தை எவ்வாறு புரிந்து கொள்ளவேண்டுமென்றும்‌, புண்ணியம்‌ நிறைந்த கிறீஸ்துவ உத்தம ஜீவியம்‌ எவ்வாறு ஜிவிப்பதென்றும்‌ கற்பித்தார்‌. ஆசிரியத்‌ தொழிலில்‌ முழுவதும்‌ ஈடுபட்டிருந்தார்‌. தியோக்ளேஷியனின்‌ கொடுங்கோல்‌ ஆட்சியின்‌ காலத்தில்‌ இவரைப் பிடித்துச்‌ சென்றனர்‌. சிறையில்‌ அடைக்கப்பட்டார்‌. நிக்கோமேதேயா விலுள்ள சிறைக்கு அனுப்பப்பட்டார்‌. அங்கே, 9 வருட காலமாக, இவர்‌ சக கிறீஸ்துவ கைதிகளை உற்சாகப்படுத்தி வந்தார்‌ . கிறீஸ்துவ வேத விசுவாசத்தில்‌ உறுதியாயிருக்கும்படியாகவும்‌, கொடூரமான உபத்திரவங் களைப்‌ பற்றியும்‌ மரணத்தைப்‌ பற்றியும்‌ பயப்படாமலிருக்கவும்‌ அவர்களுக்கு அறிவுறுத்தி, உற்சாகப்படுத்தி வந்தார்‌. 

இவர்‌ கொடுமைப்படுத்தப்பட்டார்‌; உரோமைய அஞ்ஞான விக்கிரகங்களுக்குப்‌ படைக்கப்பட்ட இறைச்சியை, இவர்‌ உண்ண மறுத்ததால்‌, உணவு இல்லாமல்‌ பசியால்‌ வாடும்படி விடப்பட்டார்‌; 312ம்‌ வருடம்‌, ஜனவரி 7ம்‌ தேதி இவர்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டார்‌; பித்தினியாவிலுள்ள டிரெப்பானும்‌ என்கிற இடத்தில்‌ இவருடைய பரிசுத்த சரீரம்‌ அடக்கம்‌ செய்யப்பட்டது. மகா கான்ஸ்டன்டைன்‌ பேரரசர்‌ துரிதமாக இந்த இடத்தை மாபெரும்‌ நகரமாக உருவாக்‌கினார்‌; அதற்கு ஹெலனோபோலிஸ்‌ என்ற தன்‌ தாயாரின்‌ பெயரை வைத்தார்‌. அர்ச்‌. கிறிசோஸ்தம்‌ அருளப்பரின்‌ எழுத்துக்களிலிருந்து, மிக குறுகிய காலத்திலேயே,  அர்ச்‌.லூசியானின்‌ திருநாள்‌ அந்தியோக்கியாவில்‌ ஜனவரி 7ம்‌ தேதி கொண்டாடப்பட்டது, என்பதை அறிகிறோம்‌.

 வேதசாட்சியான அர்ச்‌.லூசியானே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


January 7
Feast of St. Lucian of Antioch

St. Lucian was born in 240 AD in Samosata, Syria (modern-day Samsat, Turkey). Orphaned at the age of 12, he distributed his inheritance to the poor and traveled to Edessa, where he studied Holy Scripture and the ascetic life under the guidance of the confessor Macarius.

Lucian's devotion and zeal for spreading Christianity among Jews and pagans led to his ordination. In Antioch, he established a school where he taught the proper understanding of Holy Scripture and virtuous living, attracting many students.

During the persecution under Emperor Diocletian, St. Lucian was arrested and imprisoned in Nicomedia. For nine years, he encouraged fellow Christians in prison to remain steadfast in their faith, despite the threat of torture and death.

He was eventually tortured and starved to death for refusing to eat meat sacrificed to Roman idols. St. Lucian was martyred on January 7, 312 AD. His body was buried in Drepanum, Bithynia, a city later named Helenopolis by Emperor Constantine the Great in honor of his mother, St. Helena.

The feast of St. Lucian was celebrated in Antioch immediately after his martyrdom, as recorded by St. John Chrysostom.

The Diocletian persecution was severe, sparing neither the young nor the old. Among its victims were two boys who refused to eat food sacrificed to Roman idols; they were martyred by being thrown into a boiling bath, where they gave their souls to God.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக