ஜனவரி 15: அர்ச். வனத்து சின்னப்பர் திருநாள்
🌹 முதல் தபோதனரின் வாழ்க்கைக் கதைகள்
அர்ச். வனத்து சின்னப்பர், கி.பி. 229ம் ஆண்டு, எகிப்தின் தேபாய்டு பகுதியில் பிறந்தார். 15வது வயதில் பெற்றோர்களை இழந்த சின்னப்பர் அனாதையானார். அவருடைய சொத்துக்களை அபகரிக்க முயன்ற சகோதரியின் கணவர், உரோமைச் சர்க்காரின் கிறிஸ்துவர்களை கொல்லும் உத்தரவை பயன்படுத்தி சின்னப்பரை காட்டிக்கொடுக்க முயன்றார்.
இதை அறிந்த சின்னப்பர், 16வது வயதில் தேசியுஸ் சக்கரவர்த்தியின் வேட்டையிடும் காலத்தில், தேபாய்டு பாலைவனத்தில் ஒளிந்து கொண்டார்.
🌴 பாலைவன வாழ்க்கை
பாலைவன மலைகளில் ஒரு குகையில் சின்னப்பர் வசித்தார். அருகிலிருந்த நீரூற்று மற்றும் ஈச்சமரமே அவரது வாழ்வின் ஆதாரமாக இருந்தன. ஈச்சமரத்தின் பழங்களை உணவாகக் கொண்டு வாழ்ந்தார். 43வது வயதில், ஒரு காகம் தினமும் அரை அப்பத்தை கொண்டு வந்து சின்னப்பரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தது.
சின்னப்பர் 113வது வயதுவரை இக்குகையிலேயே தபசை மேற்கொண்டார்.
🌟 அர்ச். வனத்து அந்தோணியாருடனான சந்திப்பு
கி.பி. 342ல், தேவதூதர்களின் அறிவுறுத்தலின் பேரில், அர்ச். வனத்து அந்தோணியார், சின்னப்பரை தேடி கண்டு பிடித்தார். இருவரும் ஒரு நாள் மற்றும் இரவு முழுவதும் ஜெபத்திலும் ஞான உரையாடலிலும் ஈடுபட்டனர்.
சின்னப்பர், அந்தோணியாரிடம், மேற்றிராணியார் அர்ச். அத்தனாசியார் அளித்த போர்வையை கொண்டு வரும்படி கேட்டார். அந்தோணியார் போர்வையை கொண்டு திரும்பிய போது, சம்மனசுகள் சின்னப்பரின் ஆத்துமத்தை மோட்சத்திற்கு எடுத்துச் செல்வதை கண்டார்.
🌟 கல்லறையும் மரியாதையும்
114வது வயதில் சின்னப்பர், முழங்காலிலிருந்து ஜெபித்தபடியே இறந்தார். அவரை அத்தனாசியாரின் போர்வையால் மூடி, இரண்டு சிங்கங்கள் தோண்டிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
அந்தோணியார், சின்னப்பரின் ஈச்சமர இலைகள் கொண்டு உருவாக்கப்பட்ட ஆடையை மதிக்கத்தக்கதாக பராமரித்து, ஈஸ்டர் மற்றும் பெந்தேகோஸ்தே திருநாள்களில் மட்டும் அணிந்தார்.
🌹 அர்ச். வனத்து சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! 🌹
January 15: Feast of St. Paul of Egypt (The First Hermit)
Early Life
St. Paul of Egypt was born in 229 AD in Thebaid, Egypt. Orphaned at the age of 15, Paul faced betrayal from his brother-in-law, who sought to deliver him to Roman persecutors to claim his inheritance.
To escape the persecution of Emperor Decius, Paul fled to the Theban desert at the age of 16.
Life in the Desert
Paul lived as a hermit in a cave near a clear spring and a palm tree. The palm tree provided him shelter and sustenance with its fruit until he turned 43. At that point, a raven began bringing him half a loaf of bread daily—a divine provision that continued for the rest of his life.
Paul lived a life of solitude, prayer, and devotion in the desert until he reached the remarkable age of 113.
Meeting with St. Anthony of Egypt
In 342 AD, St. Anthony of Egypt, prompted by an angel's vision, sought out St. Paul in the desert. The two saints conversed deeply about spiritual matters for an entire day and night.
Paul then requested Anthony to bring back the cloak gifted to him by Athanasius, the bishop, for his burial. However, when Anthony returned with the cloak, he witnessed a vision of St. Paul's soul being carried to heaven by angels.
St. Paul's Burial
Upon reaching the cave, St. Anthony found Paul had passed away. As Anthony prepared to bury him, two lions miraculously appeared and dug the grave with their claws. St. Paul was laid to rest in the cloak given by Athanasius.
Legacy and Reverence
St. Anthony returned to his monastery, bringing with him the robe St. Paul had woven from palm leaves. Anthony honored this robe greatly, wearing it only twice a year: on Easter and Pentecost.
Reflection
St. Paul of Egypt is a powerful symbol of solitude, faith, and devotion to God. His life inspires us to seek the divine even in isolation and trust in God's providence in all circumstances.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக