ஜனவரி8 ம் தேதி
மேற்றிராணியாரும்,வேதபாரகருமான அர்ச். அப்போலினாரிஸ் கிளாடியுஸ்
இவர், ஃபிரிஜியாவிலுள்ள ஹியரபோலிஸ் நகரத்தின் மேற்றிராணியாராயிருந்தார். 2ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மேற்றிராணிமார்களுள் ஒருவராகவும், தன்னிகறற்ற மகா பரிசுத்த மேற்றிராணியாராகவும் திகழ்ந்தார்.
இவருடைய காலத்தில் வாழ்ந்த பதிதர்களிடம் தர்க்கம் செய்து அவர்களுடைய தப்பறை எவ்வாறு அஞ்ஞானிகளுடைய மூட நம்பிக்கைகளிலிருந்து தோன்றியது என்பதைதெளிவுற நிரூபிப்பார். அநேக பதிதர்களை சத்திய வேதத்திற்குத் திரும்ப கூட்டி வருவார், இவர், யூதர்களுக்கு எதிராக இரண்டு புத்தகங்களையும், அஞ்ஞானிகளுக்கு எதிராக ஐந்து புத்தகங்களையும், சத்தியத்தைப் பற்றி இரண்டு புத்தகங்களையும் எழுதினார். மேலும், கத்தோலிக்க வேத விசுவாசத்தினுடைய சத்தியங்கள் பற்றி ஆணித்தரமாக எழுதினார்.கி.பி.177ம் வருடம், உரோமைச் சக்கரவர்த்தியான மார்குஸ் அவுரேலியுஸுக்கு நேரடியாக துணிவுடன்கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்பது ஓவ்வொருவருடையவும் கடமை என்பதைப் பற்றி, அதன் வேத விளக்கங்கள் அடங்கியதும், கத்தோலிக்க வேதத்திற்கு ஆதரவான வாதங்கள் அடங்கியதுமான ஒரு நேர்த்தியான புத்தகத்தை எழுதி அனுப்பி வைத்தார். இந்த நூல், அக்காலத்தில், அஞ்ஞானிகளால், கத்தோலிக்க வேதத்திற்கு எதிராக சூழ்ச்சி நிறைந்த கட்டுக்கதைகளையும், பொய் வதந்திகளையும், தப்பறையான விஷயங்களையும் பரப்பி வந்ததைச் சுட்டிக் காட்டி, அவற்றிற்கெல்லாம் சரியான விளக்கத்தை அளித்திருந்தது.
மேலும், அர்ச் அப்போலினாரிஸ், சக்கரவர்த்தி அவுரேலியுஸிடம், அவருடைய படைகளில் 12ம் படையணியான இடி முழக்கத்தின் படை என்கிற ஒரு படையணி இருப்பதைப் பற்றியும் ஜெர்மனியைச் சேர்ந்த குவாடி என்ற காட்டுமிரான்டி இனத்தவர்கள் தொடுத்த போரின்போது, இந்த இடிமுழக்கத்தின் படையணியைச் சேர்ந்த கத்தோலிக்க படை வீரர்கள் முழங்காலிலிருந்து, ஆண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்து நாதர் சுவாமியிடம் மன்றாடியதினாலேயே, திடீரென்று மாபெரும் இடி மழை பெய்தது! அதனால், காட்டுமிரான்டிகள் கலைந்து ஓடியதாலேயே, அப்போரில், அவருக்கு வெற்றி கிடைத்தது, என்பதையும், ஞாபகப்படுத்தினார். இதன் காரணமாக சக்கரவர்த்தி, கிறீஸ்துவர்களை உபத்திரவப்படுத்துவதை, ஒரு சிறிது காலத்திற்கு மட்டுப்படுத்தினான்.
கி.பி.180ம் வருடம், அர்ச் அப்போலினாரிஸ் பாக்கியமாய் மரித்தார்.
அர்ச். அப்போலினாரிஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
January 8
Feast of St. Apollinaris Claudius
St. Apollinaris was the Bishop of Hierapolis in Phrygia and one of the most distinguished prelates of the Catholic Church in the 2nd century.
Renowned for his debates against heretics, he demonstrated how their errors were often borrowed from pagan beliefs. He authored two books against the Jews, five against the pagans, and two on the topic of "Truth."
In 177 AD, St. Apollinaris courageously defended the Catholic faith by addressing an eloquent Apologia to the Roman Emperor Marcus Aurelius. This work refuted misconceptions and false stories spread by pagans about the Catholic faith. It also reminded the emperor of his experience with the "Thundering Legion," whose prayers had brought victory over the Quadi, a Germanic tribe.
St. Apollinaris died in 180 AD, leaving a legacy of faith and intellectual rigor.
The Thundering Legion
During an expedition against the Quadi in 174 AD, Emperor Marcus Aurelius and his army found themselves in a dire situation, suffering from extreme thirst and on the brink of defeat. Members of the Twelfth Legion, which included many Christians, prayed fervently to Jesus Christ for help.
Their prayers were answered with a sudden thunderstorm that provided the army with water and terrified their enemies, scattering them. With renewed strength, the Roman army achieved victory.
In recognition, the emperor gave the Twelfth Legion the title Fulminata ("Thundering Legion") and temporarily eased the persecution of Christians.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக