Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 11 ஜனவரி, 2025

January 11 - Martyrdom of Pope St. Hyginus

ஜனவரி 11ம்‌ தேதி 

வேதசாட்சியான அர்ச்‌.ஹைஜீனுஸ்‌ பாப்‌பரசர்‌

 இவர்‌, ஏத்தென்ஸில்‌ பிறந்தார்‌; அர்ச்‌ டெலஸ்‌ஃபோரஸ்‌ பாப்பரசர்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்ட பிறகு, கி.பி.139ம்‌ வருடம்‌, இவர்‌ பாப்பரசரானார்‌; நான்கு வருட காலம்‌ பாப்பரசராக ஆட்சிசெய்தார்‌. இச்சமயம்‌, திருச்சபை,சக்கரவர்த்தி அன்டோனினுஸ்‌ பயஸின்‌ ஆட்சிகாலத்தில்‌, ஒரு வித அமைதியானதும்‌ மட்டுமிதமானதுமான காலத்தை அனுபவித்தது.  இருப்பினும்‌,பலஅஞ்ஞான மாஜிஸ்டிரேட்களின்‌ அட்டூழியத்தினால்‌, அநேக கிறீஸ்துவர்கள்‌ கொடூரமாக வேதசாட்சிகளாக, இக்காலத்தில்‌ கொல்லப்‌ பட்டனர்‌. சக்கரவர்த்தி இத்தகைய கொடூர தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும்‌ அனுமதியளிக்காமலிருந்தார்‌. உரோமை சாம்ராஜ்ஜியத்தைச்‌ சேர்ந்த ஆசியா, ஏத்தென்ஸ்‌, தெசலோனிக்கா,லரிஸ்ஸேயா ஆகிய பிராந்தியங்களின்‌ கவர்‌னர்களிடமிருந்து, இத்தகைய கொடூர கொலைகளைப்‌ பற்றி அறியவந்தபோது, சக்கரவர்த்தி அன்டோனினுஸ்‌, கிறீஸ்துவர்களுக்கு ஆதரவாகவும்‌, இவ்வாறு கிறீஸ்துவர்களைக்‌ கொல்வதை அனுமதிக்க முடியாது என்றும்‌, அந்த கவர்னர்களுக்குக்‌ கடிதம்‌ எழுதினார்‌, என்று, அர்ச்‌.ஐஸ்டின்‌ குறிப்பிடுகிறார்‌.

 ஆனால்‌, சர்வேசுரனுடைய திருச்சபையின்‌ சமாதானத்தைச்‌ சீர்‌ குலைக்கும்படியாக, பசாசு வேறு வழிகளைக்‌ தேர்ந்தெடுத்தான்‌. ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாயாக, செர்டோ என்பவன்‌, சிரியாவிலிருந்து உரோமாபுரிக்கு கி.பி.140ம்‌ வருடம்‌ வந்தான்‌. இவன்‌ , இரு கடவுள்கள்‌ இருக்கின்றனர்‌ என்றும்‌, பழைய ஏற்பாட்டின்‌ கடவுள்‌, கண்டிப்பானவர்‌, என்றும்‌, புதிய ஏற்பாட்டின்‌ கடவுள்‌ நல்லவர்‌ என்றும்,‌ இரக்கமுள்ளவர்‌ என்றும்‌, பதிதத்‌ தப்பறைகளை பரப்பி வந்தான்‌. இதைப்‌ பின்பற்றிய மார்சியோன்‌ என்ற கூட்டமும்‌ ,பின்னர்‌ பெருகியது. 

வேத சத்தியங்களை விசுவசிக்கிற கிறீஸ்துவர்களிடையே இம்மாபெரும்‌ பதிதம்‌ என்கிற விஷத்தைப்‌ பரப்பிய இக்கொடியமிருகத்தை, அரக்கனை,பரிசுத்த மேய்ப்புக்‌ கண்காணிப்பின்‌ அலுவலில்‌ விழிப்பாயிருந்த பாப்பரசர்‌ கண்டுபிடித்து, திருச்சபை விலக்கம்‌ செய்தார்‌. 

பாப்பரசர்‌, ஹைஜீனுஸ்‌, கி.பி.142ம்‌ வருடம்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டார்‌.

 அர்ச்‌.ஹைஜீனுஸ்‌ பாப்பரசரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


Martyrdom of Pope St. Hyginus
Feast Day: January 11

Pope St. Hyginus, born in Athens, ascended to the papacy in 139 AD, following the martyrdom of St. Telesphorus. His pontificate lasted four years and occurred during a relatively peaceful time under Emperor Antoninus Pius. Although the emperor opposed persecution of Christians, some still suffered at the hands of hostile pagans and local magistrates. Notably, Antoninus Pius intervened on behalf of Christians when unjust actions were brought to his attention by governors in regions such as Asia, Athens, Thessalonica, and Larissea. This protection is recorded in the writings of St. Justin Martyr.

Despite external peace, internal challenges arose for the Church. Cerdo, a heretic from Syria, arrived in Rome around 140 AD and propagated false doctrines. He claimed the existence of two gods: a harsh, just god of the Old Testament, and a merciful, benevolent god of the New Testament, who sent Christ to free humanity from the tyranny of the former. Cerdo also denied the true humanity and virgin birth of Christ, asserting that Christ’s human nature was merely an illusion.

Pope St. Hyginus, with unwavering vigilance, exposed these heresies and excommunicated Cerdo to safeguard the integrity of the faith.

Pope St. Hyginus suffered martyrdom in 142 AD, remaining a steadfast witness to Christ until the end.

"Blessed are they who are persecuted for righteousness’ sake: for theirs is the kingdom of heaven." (Matthew 5:10)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக