ஜனவரி 16 - வேதசாட்சியான முதலாம் மர்செல்லுஸ் பாப்பரசர் திருநாள் 🌹
தியோக்ளேஷியனுடைய கடைசி ஆட்சி காலத்தில், பாப்பரசர் மர்செல்லினுஸ் வேத சாட்சியாக உயிர்தியாகம் செய்தபின், பாப்பரசர் பதவி மூன்றரை வருடங்கள் காலியாக இருந்தது. கி.பி. 308 ஆம் ஆண்டு, முதலாம் மர்செல்லுஸ் பாப்பரசரானார்.
இவர் திருச்சபையின் அதிகார அமைப்பை சீர்திருத்தம் செய்ததுடன், விசுவாசத்தை மறுத்தவர்களில் மனந்திரும்பி திரும்பியவர்களுக்கு மிகுந்த இரக்கத்துடன் நடந்துகொண்டார். ஆனால், லாப்சி என அழைக்கப்பட்ட சிலர் தங்கள் செயலுக்காக மனஸ்தாபப்படாமல் இருந்ததால், அவர்களுக்கு மன்னிப்பு அளிக்க மறுத்தார்.
மாக்சென்ஷியுஸ் சக்கரவர்த்தி, பாப்பரசரின் செயல்களால் ஆத்திரமடைந்து அவரை நாடுகடத்தினார். ஆனால், பக்தியுள்ள குருக்கள் அவரை காப்பாற்றி, லூசினா என்ற விதவையின் இல்லத்தில் தங்க வைத்தனர். லூசினா தனது இல்லத்தை பாப்பரசருக்கு தேவாலயமாகப் பயன்படுத்த அனுமதித்தார்.
இதை அறிந்த சக்கரவர்த்தி, அந்த தேவாலயத்தை ஒரு குதிரை இலாயமாக மாற்றி, அந்த மிருகங்களை கவனிக்க பாப்பரசரை கட்டாயப்படுத்தினார்.
இந்த துயரமான சூழல்களில், முதலாம் மர்செல்லுஸ் பாப்பரசர் கி.பி. 310, ஜனவரி 16 அன்று மறைந்தார்.
கல்லறை: முதலில் அவர் அர்ச் பிரிஸ்கிலா என்பவரின் சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். பின்னர், உரோமாபுரியில் உள்ள அர்ச் இராயப்பர் தேவாலயத்தில் அவரது உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
அர்ச்.மர்செல்லுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
January 16: Martyrdom of Pope St. Marcellus I
🌟🌹
Life and Papacy
Pope St. Marcellus I succeeded Pope Marcellinus in 308 AD, after the papal seat had been vacant for three and a half years during the severe persecution under Emperor Diocletian.
As pope, Marcellus focused on reorganizing the Church and extending mercy to those who repented after denying their faith during the persecution. These individuals, known as the Lapsi, were encouraged to perform penance to be reconciled with the Church. However, some Lapsi refused to repent, leading to tensions.
Persecution by Emperor Maxentius
The pagan Emperor Maxentius, angered by Marcellus' actions and authority, exiled the pope. However, the clergy later rescued him and brought him to the home of a devout widow named Lucina. She offered her home as a place of refuge and even allowed it to be used as a church.
When Emperor Maxentius discovered this, he desecrated Lucina’s home by converting it into a stable and cruelly forced Pope Marcellus to care for the animals housed there.
Martyrdom and Legacy
In these harsh conditions, Pope Marcellus succumbed to suffering and passed away on 16 January 310 AD. Initially buried in the Catacombs of Priscilla, his remains were later moved to the altar of the church in Rome that bears his name, the Church of San Marcello al Corso.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக