Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Saints life History in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Saints life History in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 11 - St. Philomena, அர்ச்‌. ஃபிலோமினம்மாள்

 

ஆகஸ்டு 1️1ம்தேதி                                                                                                               

வேதசாட்சியான அர்ச்‌. ஃபிலோமினம்மாள்திருநாள்


                இவள் கிரீஸ்நாட்டிலுள்ள கொர்ஃபு என்ற இடத்தில் 291ம்வருடம்பிறந்தாள்‌. இவள்கிரேக்க சாம்ராஜ்ஜியத்தைச்சேர்ந்த ஒரு சிறிய நாட்டின்அரசருடைய மகள்‌. இவள்பிறப்பதற்கு  ஒரு வருடத்திற்கு முன்பாக இவளுடைய தந்தை மனந்திரும்பி கிறீஸ்துவரானார்‌. எனவே இவளுக்கு ஃபிலோமினா என்ற பெயரை வைத்தார்‌. ஒளியின்சிநேகிதர்”‌ என்பது தான் ஃபிலோமினா என்ற பெயரின்அர்த்தமாகும்‌. இவளை இவளுடைய தந்தை  உரோமாபுரிக்குக்கூட்டிச்சென்றார்‌. இவருடைய சிறிய நாட்டிற்கு எதிராக உரோமாபுரி போர் தொடுக்காமலிருப் பதற்கான ஒரு சமாதான ஒப்பந்தத்தில்கையொப்பமிடுவதற்காக உரோமை சக்கரவர்த்தியான தியோக்ளேஷியனை சந்திக்கச்சென்றார்‌. உரோமாபுரியில்தியாக்ளேஷியன்   இவரைச்சந்தித்த போது இவருடைய 13 வயது மகளான ஃபிலோமினாவின்பேரழகினால்பெரிதும்கவர்ந்திழுக்கப்பட்டான்‌. 

                உடனே  பேராசை பிடித்த தியோக்ளேஷியன் இருநாடுகளுக்கும்இடையிலான சமாதான ஒப்பந்தத்தில்இவருடைய மகளான ஃபிலோமினம்மாளை தனக்குத்திருமணம்செய்து வைக்க வேண்டும்என்கிற நிபந்தனையையும்சேர்த்தான்‌. ஆனால் அதற்கு ஃபிலோமினம்மாள் தான் நித்தியத்திற்குமாக  பரிசுத்த கன்னிமை விரத்தத்துவத்திற்கான வார்த்தைப்பாடு கொடுத்திருப்பதாகக்கூறி  தனது நேச பரலோக பத்தாவான திவ்ய சேசு கிறீஸ்துநாதருக்காக தன்னையே  அர்ப்பணித்திருப்பதாகக்கூறி  சக்கரவர்த்தியை மணந்து கொள்ள மறுத்து விட்டாள்‌. ஃபிலோமினம்மாளின்தந்தையான சிற்றரசர் தன்மகளிடம் சக்கரவர்த்தியைத்திருமணம்செய்வதற்கான சம்மதத்தைப்பெறுவதற்காகத்தன்னாலான சகல முயற்சிகளையும்மேற்கொண்டார்‌. ஆனால் இறுதியாக  அதில்தோல்வியடைந்தார்‌.

                கொடிய மூர்க்கனான தியோக்ளேஷியன்சீற்றமிகுதியால் சின்னஞ்சிறிய மாசற்ற சிறுமியான ஃபிலோமினம்மாளை  சங்கிலிகளால்கட்டி  இத்திருமணத்திற்குச்சம்மதிக்கிறவரை  ஒரு இருண்ட படுகுழியான அறையினுள்அடைத்து வைத்தான்‌. திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்காக  இம்மாசற்ற  பரிசுத்த சிறுமியை மிகக்கொடூரமான சித்ரவதைகளால்உபத்திரவப்படுத்தினான்‌. கொடிய இச்சித்ரவதைகள் தொடர்ந்து   37 நாட்கள்நீடித்தன. அப்போது  பரலோக பூலோக இராக்கினியான மகா பரிசுத்த தேவமாதா   இச்சிறுமிக்குக்காட்சி அளித்தார்கள்‌ இன்னும்மூன்று நாட்கள்இந்த இருண்ட சிறையிலிருப்பாள்என்றும் அதன்பின் தமது திவ்ய குமார னான திவ்ய சேசுகிறீஸ்துநாதரின்மீதான சிநேகத்திற்காக   இவள்மகாக்கொடூரமான துன்ப உபத்திரவத்தை அனுபவிப்பாள்என்றும்அறிவித்தார்கள்‌. 

                அடுத்த நாள்ஒரு தூணில்கட்டி வைக்கப்பட்டு  மாசற்ற அர்ச்‌. ஃபிலோமினம்மாள் கொடூரமாகச்சாட்டையால்அடிக்கப்பட்டாள்‌ அதன்பின்அவ்விருண்ட சிறையிலேயே குற்றுயிராயிருந்த அர்ச்‌. ஃபிலோமினம்மாளை சாகும்வரை அடைத்து வைத்தனர்‌ அதே இரவில் இரண்டு சம்மனசானவர்கள் தோன்றி  ஃபிலோமினம்மாளை பூரணமாகக்குணப்படுத்தினர்‌. அடுத்த நாள்காலையில்அர்ச்ஃபிலோமினம்மாள்பூரணமாகக்குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன்இருப்பதைக்கண்டு  தியோக்ளேஷியன்அதிசயப் பட்டான்‌.  உடனே  ஃபிலோமினம்மாளின்கழுத்தில்ஒரு இரும்பு நங்கூரத்தைக்கட்டி  தைபர்ஆற்றில்போட்டு மூழ்கடித்துக்கொல்லக்கட்டளையிட்டான்‌. ஆனால் அர்ச்ஃபிலோமினம்மாள் புதுமையாக ஆற்றில்மூழ்காமல்வெளியேறினாள்‌. தன்உடைநனையாமல் புதுமையாக  தண்ணீர்துளி ஒன்று கூட படாதபடி  ஆற்றங்கரையில்ஃபிலோமினம்மாள் நடந்து வந்தாள்‌.

                இப்புதுமையைக்கண்ட அஞ்ஞானிகளில்அநேகர்அந்நேரமே மனந்திரும்பி  கிறீஸ்துவர்களானார்கள்‌. இதைக்கண்டபிறகும்கூட மனமிளகாத கொடியவனான தியோக்ளேஷியன் அர்ச்‌. பிலோமினம்மாளை ஒரு சூனியக்காரி என்றுக்கூறி  சூடேற்றப்பட்ட அம்புகளால் அவளுடைய சரீரத்தை ஊடுருவித்துளைக்கும்படியாக  அவள்மேல்எய்யும்படி உத்தரவிட்டான்‌ ஆனால் புதுமையாக அர்ச்‌. ஃபிலோமினம்மாளுக்குத்தீங்கு செய்யாமல் அந்த அம்புகள்எல்லாம் எய்தவா்கள்மீதேத்திரும்பி வந்து  அவர்களுடைய உடல்களை  சல்லடையாகக்குத்தி ஊடுருவிப்பாய்ந்தன! இப்பெரிய புதுமையைக்கண்டதும் இன்னும்கூடுதலான எண்ணிக்கையில்அஞ்ஞானிகள்மனந்திரும்பி கிறீஸ்துவர்களாயினர்‌! மக்கள்எல்லோரும் சக்கரவர்த்தியை வெறுக்கத்துவக்கினர்‌! பரிசுத்த கத்தோலிக்க வேத விசுவாசத்தின்மீது சங்கை மேரை மரியாதையைக்கொள்ளக்துவக்கினர்‌. அதைக்கண்டு சகிக்கக்கூடாமல் தியோக்ளேஷியன் 304ம்வருடம் ஆகஸ்டு 10ம்தேதியன்று  அர்ச்‌. ஃபிலோமினம்மாளை  தலையை வெட்டிக்கொன்றான்‌பரிசுத்த சின்னஞ்சிறுமியான அர்ச்‌.  ஃபிலோமினம்மாள்மகிமையான வேதசாட்சிய முடியைப்பெற்றாள்‌.  1700 வருடகாலம்அறியப்படாமல்மறைவாக இருந்த பிறகு,  1802ம்வருடம்அர்ச்ஃபிலோமினம்மாளுடைய பரிசுத்த அருளிக்கங்கள் மறுபடியும் உரோமாபுரியிலிருந்த வியா சாலரியா என்ற இடத்திலிருக்கும்அர்ச்‌. பிரிஸ்கிலாவின்சுரங்கக்கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்டன!

            கற்களால்மூடப்பட்டிருந்த இப்பரிசுத்த அருளிக்கங்கள் மாசற்ற இளம்கன்னி வேதசாட்சியான அர்ச்‌. ஃபிலோமினா என்று அறிவிக்கும்அடையா ளச்சொற்கள் மூடியிருந்த அந்த கற்களில்பொறிக்கப்பட்டிருந்தன! அர்ச்‌. ஃபிலோமினாவின்அக்கல்லறையில்  ஃபிலோமினா!  உனக்கு சமாதானம்உண்டாகுக!” என்று எழுதப் பட்டிருந்தது! அவ்வெழுத்துக்களுடன்கூட இரண்டு நங்கூரங்களுடை யவும்  மூன்று அம்புகளுடையவும்  ஒரு குருத்தோலையினுடையவும் வரைபடங்களும்பொறிக்கப்பட்டிருந்தன! அர்ச்‌. ஃபிலோமினம்மாளுடைய பரிசுத்த எலும்புகளின்அருகில் அர்ச்சிஷ்டவளின்சிறிதளவு பரிசுத்த இரக்தம்அடங்கிய ஒரு சிறிய கண்ணாடி குப்பியும்கண்டெடுக்கபட்டது! 1805ம்வருடம் ஆகஸ்டு 10ம்தேதியன்று  அர்ச்‌. ஃபிலோமினம்மாளின்பரிசுத்த அருளிக்கங்கள் இத்தாலியிலுள்ள நேப்பிள்சின்அருகிலுள்ள ஒரு குன்றின்நகரமான முஞ்ஞானோ என்ற இடத்திலுள்ள அர்ச்‌. ஃபிலோமினம்மாளின்ஷேத்திரத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டன!

                அச்சமயத்திலிருந்து  அநேக புதுமைகள்நிகழ்ந்ததால் அர்ச்‌.  ஃபிலோமினம்மாள்மீதான பக்தி உலகம்முழுவதும்மிகவேகமாகப்பரவியது. இந்த ஷேத்திரத்தில்அர்ச்‌. ஃபிலோமினம்மாளின்பரிந்துரையால்அநேகப்புதுமைகள்நிகழ்ந்தபடியால்உலகம்முமுவதும்பரவியிருந்த அர்ச்‌. ஃபிலோமினம்மாள்மீதான பக்திமுயற்சியின்மத்தியப்பகுதியாக இந்த ஷேத்திரம்விளங்கியது. அகில உலகத்திலிருந்து திரளான திருயாத்ரீகர்கள்இந்த ஷேத்திரத்திற்கு வரத்துவக்கினர்‌. 1835ம்வருடம்வண.பவுலின்ஜாரிக்காட்என்பவள் அர்ச்‌. ஃபிலோமினாவின்பரிந்துரையால் தீராத ஒரு வியாதியிலிருந்து புதுமையாகக்குணம டைந்தாள்‌ இப்புதுமை  உலகம்முழுவதும்மிகவும்பிரசத்தியடைந்தது! அர்ச்ஃபிலோமினம்மாள்மீதான பக்தி  இன்னும்அதிகத்தீவிரமாக பரவியது.

                அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர் தான்நிகழ்த்திய எல்லா புதுமைகளும் வியாதியஸ்தரை குணப்படுத்திய புதுமைகளும்  அர்ச்‌. ஃபிலோமினம்மாள்தான் நிகழ்த்தினாள்என்று கூறுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்‌! அர்ச்‌. ஃபிலோமினம்மாள்மீதான பக்தியை   இவர்தன்ஜீவிய காலமெல்லாம்பரப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது! 12ம்சிங்கராயர்பாப்பரசர்‌(823-829)  அர்ச்‌. ஃபிலோமினம்மாளுக்குத்தோத்திரமாக பீடங்களும்  சிற்றாலயங்களும்கட்டுவதற்கு அனுமதியளித்தார்‌.   அர்ச்‌. ஃபிலோமினம்மாள்மகா பெரிய அர்ச்சிஷ்டவள் என்று அழைப்பதை இப்பாப்பரசர்வழக்கமாகக்கொண்டிருந்தார்‌.

                16ம்கிரகோரி பாப்பரசர்‌ (1831-1846) முத்‌.பவுலின்ஜாரிக்காட்டிற்கு  ஒரு தீராத நோயிலிருந்து  புதுமையாக அர்ச்‌. ஃபிலோமினம்மாள்குணமளித்ததன்விளைவாக  அர்ச்‌. ஃபிலோமினம்மாளுக்கு  பகிரங்கப்பொது வணக்கம்செலுத்துவதற்கான ஒரு ஆணையை பிரகடனம்செய்தார்‌.  9ம்பத்திநாதர்பாப்பரசர்‌ (1846-1878)  1849ம்வருடத்தில்மரியாயின்பிள்ளைகளுடைய பாதுகாவலியாக  அர்ச்‌. ஃபிலோமினம்மாளை ஏற்படுத்தினார்‌. அர்ச்‌.  பிலோமினம்மாளுக்கு தோத்திரமாக ஒரு விசேஷ திவ்யபலிபூசைக்கு 1854ம்வருடம் அனுமதியளித்தார்‌.  13ம்சிங்கராயர்பாப்பரசர்‌ (1878-1903)  அர்ச்‌. ஃபிலோமினம்மாளின்பக்திசபையை தலைமை பக்திசபையாக உயர்த்தினார்‌ அநேக ஞானபலன்களை அளித்து  அதை வளப்படுத்தினார்‌. அர்ச்ஃபிலோமினம்மாளின்கயிற்றை ஆசீர்வதித்து  அதை அணிந்துகொள்ளும்பக்திமுயற்சியையும்அங்கீகரித்து அனுமதியளித்தார்‌. அர்ச்‌. பத்தாம்பத்திநாதர்பாப்பரசர்‌ (1903-1914)  அர்ச்‌.  ஃபிலோமினம்மாள்மீது மிகுந்த பக்தியைக்கொண்டிருந்தார்‌ அர்ச்‌. ஃபிலோமினம்மாள்மீதான பக்தியை அதிகப்படுத்துவ தில்ஈடுபடுகிறவர்களை உற்சாகப்படுத்தினார்அர்ச்‌. ஃபிலோமினம்மாள்பற்றி தனது முந்தின பாப்புமார்கள்அறிவித்த தீர்மானங்கள்மற்றும்பிரகடனங்கள் எவ்விதத்திலும்மாற்றப்படக்கூடாது  என்று கட்டளையிட்டார்‌.                                                                                                        

        மாசற்ற சிறுமியும்வேதசாட்சியுமான அர்ச்‌. ஃபிலோமினம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!

வெள்ளி, 10 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 30 - அர்ச். அந்தோனினுஸ் (St. Anthonius of Florence)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 1️⃣0️⃣ம் தேதி

🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச். அந்தோனினுஸ் திருநாள்.🌹



🌹அந்தோனியோ பியரோசி என்பது இவருடைய இயற்பெயர்; இவர் 1389ம் வருடம்  மார்ச் 1ம் தேதியன்று, சுதந்திர குடியரசு நாடான இத்தாலியின் தலைநகரான ஃபுளாரன்ஸில் பிறந்தார்.   இவருடைய 16வது வயதில், 1405ம் வருடம், அர்ச்.சாமிநாதரின் போதகத் துறவற சபையில் சேர்ந்தார். வேத கல்வியும் தத்துவ இயலும் கற்று குருப்பட்டம் பெற்றார்; விரைவிலேயே, அர்ச்.சாமிநாத சபை மடங்களின் நிர்வாக அதிகாரியாக பல நகரங்களுக்கு அனுப்பப்பட்டார்; கொர்தோனோ, உரோமாபுரி, நேப்பிள்ஸ் ,ஃபுளாரன்ஸ் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டார். வேத இயலில் இவர் சிறந்த அறிவுத் திறனைப் பெற்றிருந்ததால், வேத இயல் வல்லுனராக புகழடைந்திருந்தார்; கி.பி.1439ம் வருடம், ஃபுளாரன்ஸ் நகரில் நடைபெற்ற திருச்சபைச் சங்கத்தில்,  பாப்பரசரின் வேத இயல்  ஆலோசகராகவும் இவர் செயல்பட்டார்.

இவர் சிறந்த எழுத்தாளர்: நல்லொழுக்கத்தின் வேத இயல் பற்றிய அநேக நூல்களை எழுதியுள்ளார்;திருச்சபைச் சட்டத்தைப் பற்றிய புத்தகம், பாவசங்கீர்த்தனத்தினுடைய ஆன்ம குருக்களுக்கான வழிகாட்டி, உலக சரித்திரத்தினுடைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு நூல், ஆகியவற்றை எழுதியுள்ளார். எல்லோருக்கும் நல்ல ஆலோசகராக இவர் மிகவும் பிரபலமடைந்தார்; எல்லோராலும், “நல்ல ஆலோசனைகளின் சம்மனசானவர்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

பதவியை ஏற்கவில்லையென்றால் திருச்சபை விலக்கம் செய்யப்படுவீர் என்று எச்சரிக்கப்பட்டபிறகு, 4ம் யூஜின் பாப்பரசரின் வற்புறுத்தலின் பேரில்,இவர் ஃபுளாரன்ஸ் நகர மேற்றிராணியாராக ,மார்ச் 13ம் தேதி, 1446ம் வருடம், ஃபியசோல் என்ற நகரிலிருந்த அர்ச்.சாமிநாத சபை மடத்தில், அபிஷேகம் செய்யப்பட்டார்.

இவர் தனது மேற்றிராசனத்தில் சகலராலும் அதிகமாக மதிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டார்; குறிப்பாக, ஜெபிப்பதில் எல்லோருக்கும் நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்; ஜெபிக்கும் மனிதராக , ஜெபத்தினுடைய மனிதராக, எப்போதும், ஜெபிப்பதில் ஆழ்ந்திருக்கும் ஒரு அர்ச்சிஷ்ட மேற்றிராணியாராக அர்ச்.அந்தோனினுஸ் திகழ்ந்தார். 1448  மற்றும் 1453ம் வருடங்களில், முறையே கொள்ளை நோயும், பூமியதிர்ச்சிகளும் ஏற்பட்டபோது, இரவு பகலாக இவர் தனது மந்தையிலிருக்கும் மக்களுக்கு உணவு உடை இல்லிடம் கொடுத்து உதவுவதில், இரவு பகலாக ஈடுபட்டார்; உணவு உடைகளை, ஒரு கழுதையின் மேல் சுமத்தி, அல்லலுற்ற மக்களைத் தேடிக் கொடுத்து வந்தார்; இம் மாபெரும் பிறர்சிநேக அலுவலில், தனக்கு உதவும்படியாக , இவர் , உதவியாளர்களின் ஒரு குழுவைத் தன்னுடன் கூட்டிச் சென்றார்.

அர்ச்.அந்தோனினுஸ் 1459ம் வருடம், மே 2ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்தார்; இவருடைய அடக்கச் சடங்கை 2ம் பத்திநாதர் பாப்பரசர், தானே முன்னின்று நடத்தினார்: மேலும், அர்ச்.அந்தோனினுஸ் மீது கொள்கிற  பக்திமுயற்சிக்கு, இப்பாப்பரசர் விசேஷ ஞான பலன்களை அளித்தார்.

அர்ச்.அந்தோனினுஸ், ஒரு தராசை கையில் பிடித்தபடி, சித்தரிக்கப்பட்டிருக்கிற படம் மிகவும் பிரபலம். இதற்கான பின்னணி நிகழ்வு: ஒரு சமயம், ஃபுளாரன்ஸ் நகரவாசி  ஒருவன், புதுவருட பரிசாக அந்நகரின் அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுசுக்கு ஒரு அழகிய பழக்கூடையை கொண்டு வந்து கொடுத்து, புதுவருட வாழ்த்து கூறி அதிமேற்றிராணியாரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றான்.  அதிமேற்றிராணியார் பதிலுக்கு தனக்கு மிகப் பெரிய வெகுமதி அளிப்பார் என்று எதிர்பார்த்தான்; ஆனால்,  “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று கூறி, அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுஸ், அவனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.  இதைக்குறித்து அவன் அதிருப்தியடைந்தவனாக வீடு திரும்பினான். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்ச்.அந்தோனினுஸ், அவனை வரவழைத்து, அவனிடம் அவனுடைய பழக்கூடையை தராசின் ஒரு தட்டிலும், “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை தராசின் இன்னொரு தட்டிலும் வைக்கச் சொன்னார்; அவனும் அப்படியேச் செய்தான்; என்ன ஆச்சரியம்! “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்டிருந்த அந்த காகிதம் தான், பழங்கள் நிறைந்த அந்த கூடையை விட அதிகக் கனமுள்ளதாயிருந்ததைக் கண்டு, அவன் ஆச்சரியப்பட்டான்! அவன் நிலையில்லாத உலகத்தனமான வெகுமதியின் பேரில் ஆசை வைத்ததைக் குறித்து வெட்கப்பட்டு, அதிமேற்றிராணியாரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டான். மேலும், அர்ச்சிஷ்ட மேற்றிராணியாரிடமிருந்து “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதம் எவ்வளவு அதிக பாக்கிய நன்மையைப் பெற்றுக் கொடுக்கிறது! என்ற உண்மையையும் அறிந்து கொண்டான்.🌹✝


🌹”சர்வேசுரனுக்கு ஊழியம் புரிவது என்பது, ஆட்சி செலுத்துவதாகும்” 🌹 ✍+அர்ச்.அந்தோனினுஸ்


🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச்.அந்தோனினுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🌹



🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

வியாழன், 2 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 25 - அர்ச். அத்தனாசியார் (St. Anthanasius, May 2)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 2ம் தேதி

🌹பாரம்பரிய கத்தோலிக்க வேத விசுவாசத்தின் பாதுகாவலரும், ஸ்துதியரும், மேற்றிராணியாரும், வேதபாரகருமான  

அர்ச். அத்தனாசியாரின் திருநாள்🌹




🌹மாபெரும் வேதபாரகரும் கத்தோலிக்க வேதவிசுவாசத்தின் அஞ்சா நெஞ்சரும், பாதுகாவலருமான அர்ச். அத்தனாசியார், எகிப்தின் தலைநகரான அலெக்சாண்டிரியாவில், கி.பி.294ம் வருடம் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் தேவபயமும் பக்தியும் உடையவர்கள். இவருடைய இளமைக் காலத்தில் மாபெரும் திறமைகளை சர்வேசுரன் இவருக்கு அருளினார்.

அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரால் கல்விகற்பிக்கப்பட்டார்;  பின், எகிப்திலுள்ள பாலைவனத்திற்குச் சென்று, அர்ச்.வனத்து அந்தோணியாருடன் அத்தனாசியார் சிறிது காலம் தங்கியிருந்தார்; கி.பி. 319ம் வருடம் அத்தனாசியார் தியோக்கோன் பட்டம் பெற்றார்.

கி.பி.323ம் வருடம், ஆரியுஸ் என்பவன், நமதாண்டவர் நித்திய பிதாவாகிய சர்வேசுரனுடன் ஒரே வஸ்துவானவரல்லர்! ஆதலால், ஆண்டவரை சர்வேசுரனுடைய திவ்ய குமாரன் என்று கூறக்கூடாது!  என்கிற பதிதத் தப்பறையைப் போதித்தான்; இப்பதிதத் தப்பறை இவனுடைய பெயராலேயே ஆரியப் பதிதம் என்று அழைக்கப்படுகிறது; அலெக்சாண்டிரியா மேற்றிராணியார், ஆரியுஸின் போதனையை, பதிதத்தப்பறை என்ற கூறி, ஆரியுஸ் என்ற பதித குருவையும், அவனுடைய கூட்டாளிகளான 11 பதிதக் குருக்களையும் தியோக்கோன்களையும் அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டர் பதவி நீக்கம் செய்தார்! 

பின், ஆரியுஸ், செசரையாவிற்குச் சென்று, நிகோமேதியாவின் மேற்றிராணியாரான யுசேபியுஸின் ஆதரவையும், மற்ற அநேக சிரியா நாட்டின் மேற்றிராணிமார்களுடைய ஆதரவையும் திரட்டினான்; ஆரிய பதிதத் தப்பறைக் கருத்துகள் பாடல்களாக இயற்றப்பட்டு, பிரபலமடைந்திருந்த இசை மெட்டுகளில் கப்பல் மாலுமிகளால் பாடப்பட்டு வந்தன; ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகம் கப்பல் செல்கிற வரை இப்பதிதப் பாடல்கள் பாடப்பட்டு, மக்களின் இருதயங்களை ஆரியப் பதிதத் தப்பறையால் ஆக்கிரமித்தனர்; ஆரிய பதிதத் தப்பறையின் மீது தீர்வு காண்பதற்காக, 325ம் வருடம் நீசேயா சங்கம்  கூட்டப்பட்டது; இச்சங்கத்தில், ஆரிய பதிதத்தைக் கைவிடும்படியாக, ஆரியுஸிற்கு எதிரான தண்டனை உறுதி செய்யப்பட்டது; நீசே விசுவாசப் பிரமாணம் பிரகடனம் செய்யப்பட்டது; இச்சங்கம், அர்ச்.அத்தனாசியாரின் ஜீவியத்தை மிகவும் பாதித்தது; இதன் பின் இவருடைய எஞ்சியிருந்த ஜீவிய காலம், நம் திவ்ய இரட்சகருடைய தேவத்துவத்திற்கான சாட்சியமாகத் திகழ்ந்தது! ஆண்டவருடைய தேவத்துவம் மற்றும், மகா பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய விசுவாச சத்தியத்திற்கு  எதிரானதுமான  ஆரிய பதித்திற்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடினார்; அதற்கு எதிரான கத்தோலிக்க வேத சத்தியங்கள் பற்றிய பிரசங்கங்கள் நிகழ்த்தி வந்தார்;

நிசேயா சங்கத்தில், அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டருடன் அவருக்கு உதவியாளராக அர்ச்.அத்தனாசியார் இருந்தார்;  5 மாத காலத்திற்குப் பின், அர்ச்.அலெக்சாண்டர் இறந்தார்; இறப்பதற்கு முன், அர்ச்.அலெக்சாண்டர், அத்தனாசியாரை, தனக்குப் பின் அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக நியமிக்க ஆசித்திருந்தார்; அதன்படி, அர்ச்.அத்தனாசியார், 30வது வயதில், 326ம் வருடம்,அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் ஆரிய பதிதத்தப்பறையை எதிர்த்து நின்றதால், அநேக கொடிய உபத்திரவங்களையும், துன்பங்களையும், தன் ஜீவிய காலத்தில் சந்திக்க நேர்ந்தது; இவர்  அதிமேற்றிராணியாராக இருந்த 46 வருட காலத்தில், 17 வருடங்களை நாடுகடத்தப்பட்ட பரதேச ஜீவியத்தில் கழித்தார்;  புண்ணியங்களுடையவும், சக்கரவர்த்திகளாலும், திருச்சபை அதிகாரிகளாலும் (ஆரிய பதிதத்தைச் சேர்ந்த மேற்றிராணிமார்கள்) கொடூரமாக அநியாயமாக, நீ்ண்ட காலம் அளிக்கப்பட்ட உபத்திரவத் துன்பங்களுடையவும் ஜீவியம் ஜீவித்த பிறகு, கத்தோலிக்க வேத விசுவாசத்தை அஞ்சா நெஞ்சத்துடன் ஆரிய பதிதர்களிடமிருந்து காப்பாற்றிய திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும்,  பாதுகாவலருமான அர்ச்.அத்தனாசியார், அலெக்சாண்டிரியாவில், மே 2ம் தேதி 373ம் வருடம்   பாக்கியமாய் மரித்தார்; இவருடைய பரிசுத்த சரீரம் இரண்டு முறை, இடமாற்றம் செய்யப்பட்டது: முதலில், கான்ஸ்டான்டிநோபிளுக்கும், பின்னர் வெனிஸ் நகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது! இவர் வாழ்ந்த காலம் திருச்சபையின் சரித்திரத்தில் மிக முக்கியமான காலமாகும்.🌹✝

“பாரம்பரியத்திற்கு விசுவாசமாயிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள், எண்ணிக்கையில் குறைந்து, ஒரு கையளவாக மட்டுமே இருந்தாலும், அவர்கள் தான், நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்து நாதரின் உண்மையான திருச்சபை!”-அர்ச்.அத்தனாசியார்.🌹✝

🌹அர்ச். அத்தனாசியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



Tags:

Feast of St. Anthanasius, 

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 21 - அர்ச்.சிலுவை சின்னப்பர் (April 28) St. Paul of Cross

ஏப்ரல் 28 தேதி


ஸ்துதியரும் வேதபாரகருமான அர்ச்.சிலுவை சின்னப்பர் திருநாள்




இவர் வடக்கு இத்தாலியிலுள்ள லிகூரியா மாகாணத்திலுள்ள  ஓவடா என்ற ஊரில் 1694ம் வருடம் ஜனவரி 3ம் தேதியன்று பிறந்தார்; பியட்மோன்ட்டின் அலெஸ்ஸான்டிரியாவிற்கு அருகிலுள்ள காஸ்டலா ஸோவைச் சேர்ந்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாயாருக்கு, இவர் பிறப்பதற்கு முன் ஏற்பட்ட பிரசவவேதனையின் சமயத்தில், ஒரு அதிசய பரலோக ஒளி இவருடைய தாயார் படுத்திருந்த அறையை ஒளிர்வித்தது! இப்பரலோக ஒளி, இவருடைய வருங்கால பரிசுத்தத்தனத்தினுடைய ஒளியின்  பிரகாசத்தை முன்னறிவித்தது! மேலும், இவர் குழந்தையாயிருந்தபோது, ஆற்றில் விழுந்து விட்டார்; அச்சமயம், பரலோக இராக்கினியான மகா பரிசுத்த தேவமாதா, புதுமையாக, இவரை எந்தக் கேடும் இல்லாமல் காப்பாற்றினார்கள்! புத்தி விவரம் வந்த நாள் முதற்கொண்டு, இவர், சிலுவையில் அறையுண்டிருக்கும் நேச ஆண்டவர் மீதான அத்தியந்த சிநேகத்தினால் நிறைந்திருந்தார்! மேலும், சிலுவையில் அறையுண்டிருக்கும் திவ்ய இரட்சகர் மீதான  தியானத்தில், அதிக நேரத்தை செலவிடத் துவக்கினார்.

இவர் தனது மாசற்ற சரீரத்தை கண்விழிப்புகளாலும், உபவாசங்களாலும், சாட்டை கசை அடிகளாலும், ஒறுத்துத் தண்டித்து வந்தார்; வெள்ளிக்கிழமைகளில், பிச்சுக் கலந்த காடியைக் குடித்து வந்தார்; மற்ற எல்லா விதமான கடின தபசுகளையும் ஒறுத்தல் முயற்சிகளையும் அனுசரித்து வந்தார். ஒரு வேதசாட்சியாக, சத்திய வேதத்திற்காக தன் உயிரை விடுவதற்கு ஆசித்தவராக, துருக்கியருக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக, வெனிஸில் திரட்டப்பட்ட  படைவீரர்களின் பட்டியலில் தன்னையும் சேர்க்கும்படிச் செய்தார்; ஆனால், சர்வேசுரனுடைய திருச்சித்தம், இதற்கு மாறாக இருப்பதை, ஜெபிக்கும்போது உணர்ந்தார்;  படைக் கருவிகளுடன் சண்டையிடும் இராணுவத்தில் சேர்வதைக் கைவிட்டார்; ஆனால், தன் சகல வல்லமையுடனும் எல்லா மனிதர்களுடைய நித்திய இரட்சணியத்திற்காகப் பாடுபடுகிற திருச்சபையைப் பாதுகாக்கிற உன்னதமான இராணுவத்தில் சேரத் தீர்மானித்தார்; இவர் வீடு திரும்பியதும், மிக செல்வாக்கும் புகழும் சம்பாதிக்கக் கூடிய திருமணத்தையும், தன் மாமா விட்டுச் சென்ற ஆஸ்தியையும் மறுத்து விட்டார்; குறுகலான சிலுவைப் பாதையினுள் நுழையவும்,மேற்றிராணியாரிடமிருந்து கரடுமுரடான துறவற உடுப்பைப் பெற்றுக்கொள்ளவும் இவர் ஆசித்தார்;  பின் இவர் மேற்றிராணியாருடைய கட்டளையினால், இவர் குருவானவராக இல்லாதபோதே, இவருடைய ஜீவியத்தின் மேம்பட்ட பரிசுத்தத்தனத்தினிமித்தமாகவும், தேவ காரியங்கள் பற்றி இவர் பெற்றிருந்த அறிவின் காரணமாகவும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததினால், ஆண்டவருடைய வயலில் உழுது , மாபெரும் பலனை அறுவடை செய்தார்; அநேக ஆத்துமங்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்தார்;

இவர் உரோமாபுரிக்குச் சென்றார்; வேத இயல் கற்ற பிறகு, 13ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசரின் கட்டளையால், குருப்பட்டம் பெற்றார்; இவர் தன்னுடன் கூட சகக் குருக்களைச் சேர்த்துக் கொள்வதற்கு, பாப்பரசர் அனுமதியளித்தார்; அதன்படி, ஏற்கனவே தன்னை அர்ஜென்டாரோ மலைக்கு வரும்படி மகா பரிசுத்த தேவமாதா அழைத்திருந்த அதே மலைக்குச்  சென்று, ஏகாந்த ஜீவியம் ஜீவிக்கச் சென்றார்; மேலும் மகா பரிசுத்த தேவமாதா காண்பித்திருந்த அவர்களுடைய திவ்ய குமாரனுடைய  பரிசுத்தப் பாடுகளைக் குறிக்கும் அடையாள சின்னத்தைப் பொறித்த கறுப்பு உடுப்பை உடுத்திக்கொண்டார்; அங்கே அவர் ஒரு புதிய துறவற சபையை ஸ்தாபித்தார்; அது தான் “ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகளின் துறவற சபை”. குறுகிய காலத்தில், சர்வேசுரனுடைய ஆசீர்வாதத்தினால், இத்துறவறசபை மிக துரிதமாக அதிகரித்து வளர்ச்சியடைந்தது! இவருடைய கடினமான அயரா உழைப்பினால் இத்துறவற சபை வளர்ந்து வந்தது; அநேக உயர்குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்களும் இச்சபையில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்; இத்துறவற சபைக்கான உறுதிப்பாட்டை ஒரு முறைக்கு மேலாக திருச்சபையின் தலைமையகத்திலிருந்து பெற்றுக் கொண்டது! அர்ச்.சிலுவை சின்னப்பர் ஜெபத்தில் பெற்றுக் கொண்ட இச்சபைக்கான விதிமுறைகளையும் திருச்சபை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது; “நமதாண்டவரின் பரிசுத்தப் பாடுகள் பற்றிய  ஆசிர்வதிக்கப்பட்ட ஞாபகத்தை ஊக்குவித்துப் பரப்புவது” என்கிற நான்காவது வார்த்தைப்பாடும் இத்துறவற சபையின் வார்த்தைப் பாடுகளுடன் சேர்க்கப்பட்டது!

பரிசுத்த கன்னியர்களின் ஒரு துறுவற சபையையும் இவர் ஸ்தாபித்தார்; இப்பரிசுத்தக் கன்னியர், இடைவிடாமல், தேவ பத்தாவானவருடைய சகலத்தையும் மிஞ்சும் உன்னதமான  சிநேகத்தைப் பற்றி தியானித்துக் கொண்டிருப்பார்கள்!

இந்த எல்லா ஞான அலுவல்களிலும், இவர் ஆன்மாக்கள் மேல் கொண்டிருந்த அயரா சிநேகமானது, ஒருபோதும், இவர் சுவிசேஷத்தைப் போதிப்பதில் சோர்வடையாமலிருக்கும்படிச் செய்தது! இவர் எண்ணிக்கையில்லாத திரளான மனிதர்களை, மிகவும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மனிதர்களையும், பதிதத் தப்பறையில் விழுந்த மனிதர்களையும் கூட மனந்திருப்பி, இரட்சணியத்தின் பாதைக்குக் கூட்டிவந்து சேர்த்தார்! இவருடைய நேர்த்தியான பேச்சுத்திறனுடைய வல்லமை, விசேஷமாக  ஆண்டவருடைய பரிசுத்தப பாடுகள் பற்றி இவர் பேசியபோது, எவ்வளவு ஆச்சரியத்திற்குரிதாயிருந்ததென்றால், இப்பிரசங்கத்தின் போது, இவரும், ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகள் மட்டிலான இவருடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களும்  கண்ணீர் சிந்தி அழுவார்கள்! மகாக் கடினப்பட்ட இருதயங்களும் இதைக் கேட்டு, மனஸ்தாபப் பட்டு மனந்திரும்பினார்கள்!

 அர்ச்.சிலுவை சின்னப்பருடைய இருதயத்தில் தேவசிநேக அக்கினி சுவாலை எவ்வளவாக பற்றியெரிந்ததென்றால், இவருடைய இருதயத்திற்கு அருகிலிருந்த  துறவற அங்கிப்பகுதி, நெருப்பினால் எரிந்ததைப் போல் தீய்ந்து போயிருக்கும்!இவருடைய விலா எலும்புகள் இரண்டு, தேவசிநேக மிகுதியால் இருதயம் விரிவடைந்ததினிமித்தமாக துருத்திக் கொண்டிருந்ததைப் போல் தோன்றின!

இவர் திவ்யபலிபூசையை நிறைவேற்றும்போது, இவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்தக் கூடாமல் போகும்! இவர் அடிக்கடி பக்திபரவசத்தில் ஆழ்ந்திருப்பார்! இச்சமயங்களில், இவருடைய சரீரம் குறிப்பிடத்தக்க அளவில் நிலத்தை விட்டு மேலே உயரும்! இவருடைய முகம் பரலோக ஒளியால் பிரகாசிக்கும்! சில சமயங்களில் இவர், பிரசங்கம் நிகழ்த்தும்போது,இவரை ஊக்குவிக்கும் விதமாக பரலோகக் குரலொலி கேட்கப்படும்! மற்ற சமயங்களில், இவருடைய பிரசங்கம் பல மைல்கள் தொலைவிலுள்ள ஊர்களுக்கும் கேட்கும்!

தீர்க்கதரிசன வரமும், பலமொழிபேசும் வரமும், பிறருடைய இருதய இரகசியங்களை அறியும் வரமும், தீய ஆவிகள், நோய்கள் மட்டில் இவர் கொண்டிருந்த வல்லமை ஆகியவை இவர் கொண்டிருந்த விசேஷ தேவ கொடைகளாகும்! பாப்பரசர்களால் இவர் மிகுந்த மேரை வணக்கத்துடன் நடத்தப்பட்ட போதிலும், இவர் தன்னை பயனற்ற ஊழியன் என்றும் தகுதியற்ற பாவி என்றும் கருதினார்; இறுதியாக,  இவர் தனது கடின தபசின் மிகுதியால், தனது 81வது வயதில், 1775ம் வருடம் அக்டோபர் 18ம் தேதியன்று  உரோமாபுரியில் பாக்கியமாக மரித்தார்; இவர் ஏற்கனவே  தீர்க்கதரிசனமாக அறிவித்தபடி, அதே நாளன்று மரித்தார்;அதற்கு முன்பாக மகா அழகிய அறிவுரையை தன் துறவியருக்குக் கூறினார்;  அதுவே இத்துறவியருக்கு இவர் அளித்தத் தன் மரண சாசனமாகவும், உயிலாகவும் இருந்தது! திருச்சபையின் இறுதி தேவதிரவிய அனுமானங்களாலும், பெற்று, பரலோகக் காட்சியினாலும் திடம் பெற்றவராக பாக்கியமாய் மரித்தார். 9ம் பத்திநாதர் இவருக்கு முத்திப் பேறு பட்டமும், அர்ச்சிஷ்டப்பட்டமும் அளித்தார்.

அர்ச்.சிலுவை சின்னப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


To Read more about Saints - Click Here



Tags: St. Paul of Cross, Saint. Paul of Cross, Saints life History in Tamil, 

திங்கள், 29 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 20 - வேதசாட்சியான அர்ச்.வெரோனா நகர் இராயப்பர்

ஏப்ரல் 29ம் தேதி


வேதசாட்சியான அர்ச்.வெரோனா நகர் இராயப்பர் திருநாள்




இவர் 1206ம் வருடம் வட இத்தாலியிலுள்ள வெரோனா நகரில் பிறந்தார்; இச்சமயம் இப்பகுதியில் கத்தாரியப் பதிதத் தப்பறை வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது; இவர் கத்தோலிக்கப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்றார்; பின்னர், பொலோஞா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார்.

1221ம் வருடம், இவர் தனது 15வது வயதில், அர்ச்.சாமிநாதரை சந்தித்தார்; அர்ச்.சாமிநாதரின் துறவற சபையில் சேர்ந்தார்; வட இத்தாலியிலும்  மத்திய இத்தாலியிலும் இவர் புகழ்பெற்ற பிரசங்கி யாராகத் திகழ்ந்தார். பதிதத் தப்பறைகளுக்கு எதிராக, விசேஷமாக வட இத்தாலியில் அநேக மனிதர்களை தன் வசப்படுத்தியிருந்த கத்தாரியப் பததித்தப்பறையை எதிர்த்து கத்தோலிக்க ஞானப் பிரசங்கத்தை நிகழ்த்தினார்; 9ம் கிரகோரி பாப்பரசர்,1234ம் வருடம், இவரை வட இத்தாலியின் பொது தலைமை நீதி விசாரணையாளராக நியமித்தார். இவர், உரோமாபுரி, ஃபுளாரன்ஸ், பொலோஞா, ஜெனோவா, கோமோ என்ற நகரங்களுக்கும் , இத்தாலி முழுவதும் சுற்றித் திரிந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். 1243ம் வருடம் புதிதாக , துவங்கிய மகா பரிசுத்த தேவமாதாவின் ஊழியர்கள் துறவற சபையை ஏற்படுத்துவதற்கான பாப்பரசரின் அனுமதியைப் பெறுவதற்காக, இவர் பரிந்துரை செய்தார்.

1251ம் வருடம், 4ம் இன்னசென்ட் பாப்பரசர் , இவருடைய புண்ணியங் களுடையவும், கடின தபசினுடையவும் ஜீவியத்தைப்பற்றியும், இவர் கற்றறிந்த வேத இயலின் அறிவைப் பற்றியும், இவருடைய பிரசங்கம் செய்யும் திறனைப் பற்றியும், கத்தோலிக்க வேத விசுவாசத்தின் மீது இவருடைய இருதயத்தில் பற்றியெரிந்த ஆர்வத்தைப் பற்றியும், அறிந்தவராக, இவரை லொம்பார்டியில் நீதி விசாரணையாளராக ஏற்படுத்தினார். இந்த அலுவலில், இவர் ஆறு மாத காலம், அயராமல் ஈடுபட்டிருந்தார்.

இவர் தனது பிரசங்கங்களில், பதிதத் தப்பறைகளையும், வார்த்தையால் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர் களாக, ஆனால், அதே சமயம்,அதற்கு எதிராக பதிதத்தப்பறையில் ஜீவிக்கிற கத்தோலிக்கர்களையும் இவர் மிகக் கடுமையாகக் கண்டித்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவரைச் சந்தித்தனர்; இவரைப் பின்பற்றினர்; ஏராளமான மனந்திரும்புதல்கள் நிகழ்ந்தன! அநேகக் கத்தாரிய பதிதர்களும் மனந்திரும்பி, கத்தோலிக்க வேதத்திற்குத் திரும்பி வந்தனர்.

இவர் அடிக்கடி அர்ச்சிஷ்டவர்களுடன் உரையாடும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்; ஒருநாள், வேதசாட்சிகளாக மரித்த பரிசுத்த கன்னியர் களான அர்ச். கத்தரீனம்மாள், அர்ச். ஆக்னசம்மாள், அர்ச். செசிலியம்மாள் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இச் சமயம், இவருடைய அறையைக் கடந்து சென்ற ஒரு துறவி, மடத்தின் அதிபரிடம், பெண்கள் சிலருடன் இவர் அறையில் பேசிக் கொண்டிருப்பதாக, இவரைப் பற்றி புகார் செய்தார். உடனே, அதிபர் இதைப் பற்றி, இவரிடம் எதுவும் கேட்காமல், எந்த தயக்கமும் இல்லாமல், இவரை ஒரு மடத்திற்கு அனுப்பி, அங்கு எந்த பிரசங்கமும் செய்யக்கூடாது என்று தண்டித்தார்.

அதிபர் இட்ட இக்கட்டளைக்கு, இவர் தாழ்ச்சியுடன் உடனே கீழ்ப்படிந்தார்; ஆனால், பாடுபட்ட சுரூபத்தில், சிலுவையில் அறையுண்டிருக்கும் நேச ஆண்டவரை நோக்கி ஜெபித்தபோது , தன்னுடைய அவப்பெயரினால், அவரைக் கை நெகிழ்ந்ததாகக் கூறி தன்னைப் பற்றியே, முறையீடு செய்தார். உடனே, பாடுபட்ட சுரூபத்திலிருந்த ஆண்டவர், இவரை நோக்கி, “பீட்டர்! நான் கூட மாசற்றவராக இல்லையா? மாபெரும் துயரங்களை சந்தோஷத்துடன் துன்புற என்னிடமிருந்து கற்றுக் கொள்!” என்று கூறினார். இறுதியாக இவருடைய மாசற்றதனம் அதிபரால் கண்டுபிடிக்கப்பட்டது! இவருடைய பங்கிற்கு, இந்த ஏகாந்தத்தின் காலத்தில், இவர் நிந்தனையையும், தாழ்வாக நடத்தப்படுதலையும், நேசிக்கக் கற்றுக் கொண்டார். மறுபடியும், இவர் பிரசங்கிப்பதில் ஈடுபட்டார்; இவர் அறிவுறுத்திக்கூறிய பிரசங்கங்களுடன் புதுமைகளும் நிகழ்ந்தன! இத்தாலி முழுவதும் பயணத்தை மேற்கொண்ட இவர் நாடெங்கிலும் புகழ்பெற்றார்.

ஒருசமயம் இவர் மிகப் பெரிய கூட்டத்தில் பிரசங்கம் நிகழ்த்தியபோது, வெயில் மிக உக்கிரமமாக இருந்தது;  பதிதர்கள் இவரைநோக்கி நிழலைக் கொண்டு வரும்படி கூக்குரலிட்டனர்; இவர் அதற்காக ஜெபித்தார்; உடனே, இவர் பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் கூட்டத்தின் மீது ஒரு மேகம் புதுமையாக நிழலிட்டது!

ஒவ்வொரு நாளும் நடுப்பூசையின் போது, “ஆண்டவரே! தேவரீர் எனக்காக மரித்ததால், நானும் தேவரீருக்காக இறந்துபோவதற்கான வரத்தை எனக்கு அருளும்” என்று உருக்கமாக ஜெபித்து வேண்டிக்கொண்டு வந்தார். இவருடைய ஜெபம் கேட்கப்பட்டது.

1522ம் வருடம் மிலான் நகரைச் சேர்ந்த கத்தாரிய பதிதத்தைச்சேர்ந்த ஒரு கூட்டத்தினர், அர்ச்.பீட்டரைக் கொல்ல சதித்திட்டமிட்டனர்.  ஒருசமயம், கோமோவிலிருந்து மிலானுக்குத் திரும்புகிற சமயத்தில்,  கொலைகாரர்கள் இவரைப் பின்தொடர்ந்து வந்தனர். பார்லாசினா என்ற இடத்தில் அர்ச்.பீட்டர், சக துறவியான டோமெனிகோவுடன் தனியாக வந்தபோது, ஒரு கோடரியால் இவருடைய தலையில் ஒரு வெட்டு வெட்டினர்! இவருடைய சக துறவியை அடித்து சாவுக்குரிய காயத்தை ஏற்படுத்தினர். கீழே விழுந்த அர்ச்.பீட்டர்,  எழுந்து முழங்காலிலிருந்தபடி, அப்போஸ்தலர் களின் விசுவாசப் பிரமாணத்தை ஜெபித்தபடி, தனது இரத்தத்தை சர்வேசுரனுக்குக் காணிக்கையாக பலி செலுத்தும்விதமாக, தனது விரல்களை தன் இரத்தத்தில் நனைக்கும்படியாக, மூழ்கச் செய்து எடுத்து, அதனால் தரையில் நிசே விசுவாசப்பிரமாணத்தின் “ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன்,” என்கிற முதல்  வாக்கியத்தை "Credo in Unum Deum",  என்று இலத்தீனில் எழுதியபடியே மரித்தார். அந்தகோடரியின் வெட்டு, அர்ச். வெரோனா நகர் இராயப்பரின் தலை உச்சியைத் துண்டித்திருந்தது. இரத்தம் அதிலிருந்து பிரளயமாக தரையில் வழிந்தோடியது.இவருடைய சக துறவி டோமெனிகோ, மேதா என்ற இடத்திலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார்; அங்கு இவர் 5 நாட்களுக்குப் பின் மரித்தார்.

கத்தாரியப் பதிதம் என்றால் என்ன?

இத்தப்பறையானது, கெட்ட கடவுளால் உலகம் படைக்கப்பட்டது என்றும்,உலகத்தில் காணப்படுகிற யாவற்றையும், கெட்ட கடவுள் நல்ல கடவுளிடமிருந்து அபகரித்துக் கொண்டு அவற்றை உலகத்தில் விட்டிருக்கிறதாகவும், மனிதர்களுடைய சரீரங்களுக்குள் இருக்கிற ஆவி, நல்ல கடவுளிடம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்றும், யாராவது மரித்தால், அவர்களுடைய ஆவியை  ஒரு புதிய உடம்பினுள் கெட்ட கடவுள் செலுத்திவிடும் என்றும்,இது அந்த ஆவியின் மறு ஜென்மப் பிறப்பு என்றும்  இத்தொடர் பிறப்புகளிலிருந்து தப்பிக்க துப்புரவுப்படுத்துகிற ஒரு சடங்கு செய்ய வேண்டும் என்றும் அபத்தமான போதனைகளைக் கொண்டிருக்கிறது. மேலும் பாவம்  உண்டு! என்கிற நம் வேத சத்தியத்தை இப்பதிதர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அர்ச்.வெரோனா நகர் இராயப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


To Read about more saints : Click Here

செவ்வாய், 30 ஜனவரி, 2024

அர்ச். பல்பீனம்மாள் திருநாள். ST. BALBINE.

மார்ச் மாதம் 31-ந் தேதி க.
அர்ச். பல்பீனம்மாள் திருநாள்.
ST. BALBINE.


உயர்ந்த கோத்திரத்தாரும் அக்கியானிகளுமாகிய தாய் தகப்பனிடத்திலே அர்ச். பல்பீனம்மாள் பிறந்தாள். அவள் தன்னிடத்தில் இருந்த மிகுந்த சவுந்தரிய அலங்கார முகாந்தரமாக வெகு சந்தோஷப்பட்டிருந்தாள். ஆனால் கொஞ்சத்திற்குள்ளே அவளுடைய கழுத்திலே வந்த கண்டமாலையினாலே அழகுஞ் சந்தோஷமும் நீங்கித் துக்கத்தை அடைந்தாள். அவளுடைய தகப்பனாரும் அவள் தாயாரும் அந்த வியாதி தீர வைத்தியருக்கு வெகு பணங் கொடுத்து வெகு செலவு செய்திருந்தாலும் தீராமல் போச்சுது. அக்காலத்திலே இருந்த அலெக்சாண்டர் என்னும் பாப்பாண்டவர் அநேகம் புதுமைகள் பண்ணுகிற சேதி அந்தம்மாளுடைய தகப்பனாராகிய குயிரீனென்கிற துரை அறிந்து அவர் வழியாகத் தன் மகளுக்குக் குணமாகு மென்று நம்பிக்கையாய் இருந்தான்.

 ஆனால் இந்தத் துரை பாப்புவின் பேரில் முந்திப் பகையாயிருந்து அவரை அநியாயமாகக் காவலில் வைத்திருந்தான். ஆயினும் தன் மகள் ஆரோக்கியம் அடைய வேண்டுமென்கிற முகாந்தரமாக அவளைத் தானே காவற் கூடத்திலே கூட்டிப்போய் அவளுக்கு ஆரோக்கியங் கட்டளையிட அவரை மன்றாடினான். அதற்கு பாப்பாண்டவர் சொன்னதாவது : என் கழுத்தில் ஆக்கினையாக வைத்த இருப்பு வளையத்தை எடுத்து உன் மகள் கழுத்திலே போடென்றார். அந்தப்படியே அந்தத் துரை செய்கிறபோது அந்த இருப்பு வளையத்தை அவள் கழுத்திலே போட்டவுட னே புதுமையாக அவள் முழுதும் ஆரோக்கியத்தை அடைந்தாள். அதைக் குயிரீனென்கிற துரை பார்த்து ஆச்சரியப்பட்டுத் தாமுந் தம்முடைய மனைவி மக்களும் ஞானஸ்நானம் பெற்றதும் அல்லாமல் வேதத்திற்காகப் பிராணணையுங் கொடுத்தார்கள், பல்பீனம்மாளோவெனில் தனக்கு ஆரோக்கியங் கொடுத்த ஆண்டவருக்குத் தான் நன்றியறிந்ததனம் காண்பிக்கத்தக்கதாகத் தான் எப்போதுங் கன்னிகையாய் இருக்க வார்த்தைப்பாடு கொடுத்தாள். அவள் அதை உத்தம பிரகாசத்திற்குச் செலுத்தி அநேக தருமங்களையும் உத்தம புண்ணியங்களையும் செய்துவந்த பிற்பாடு நல்ல ஆயத்தத்தோடே பாக்கியமான மரணத்தை அடைந்தாள்.
கிறீஸ்துவர்களே! புண்ணிய வழியிலே நீங்கள் இந்த மட்டுந் தப்பி நடந்திருந்தால் அர்ச். பல்பீனம்மாளுடைய தரும நடக்கையைப் பார்த்து நடந்தால் மோட்சத்திலே சேரலாம். அந்தம்மாள் ஆண்டவராலே புதுமையாக ஆரோக்கியம் அடைந்த பிற்பாடு, அந்த ஆரோக்கியத்தை அவருடைய ஊழியத்திலே செலவழித்தாள். ஐயையோ, சிலர் ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த ஆரோக்கியம், ஆஸ்தி, புத்தி, மகிமை முதலியவற்றைக் கொண்டு ஆண்டவருக்குச் செய்ய வேண்டிய ஊழிபம் பண்ணாமல் தங்கள் பாவங்களினாலே அவருக்குத் துரோகம் பண்ணுகிறார்கள். இரா சாஉனக்கு வெகுமானமாகக் கொடுத்த கத்தியைக் கொண்டு இராசாவைத்தானே வெட்டினால் அது மிகுந்த ஆக்கிரமம் ஆகும். சர்வேசுரன் உனக்கு அமைத்திருக்கிற கண், வாய், காது, கை முதலான உறுப்புக்களைக் கொண்டு அவருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்கிறது மிகவும் அக்கிரமமல்லவோ?

மேலும் அர்ச். பல்பீனம்மாள் கழுத்திலே வைத்திருந்த பொற்காறை வெள்ளிக்காறையைக் கொண்டு ஆரோக்கியம் அடையவில்லை. சர்வேசுரனுடைய வேதத்தைப்பற்றி உபத்திரிய வேதனையாக பாப்புவின் கழுத்திலே போட்டிருந்த இருப்பு வளையத்தைக் கொண்டு ஆரோக்கியம் அடைந்தாள். ஆகையால் இவ் வுலகத்தின் நகை உடைமைகளைப் பார்க்க, ஆண்டவரைக் குறித்து அனுபவிக்கிற கஸ்திகளை அதிசமாய் மதிக்க வேண்டும். அல்லாமலும் அர்ச். பல்பீனம்மாளிடத்திலே இருந்த அலங்கார சந்தோஷம் ஒரு வியாதி வந்தவுடனே நீங்கிப் போச்சுது. மனுஷருடைய சரீரம் எத்தனையோ நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டதாய் இருக்கின்றது. துரைகளும், ஆஸ்திக்காரர்களும், வாலர்களும் சவுந்தரியமுள்ளவர்களுமாகிய இவர்களின் சரீரங்கள், வியாதி முதலான நிர்ப்பந்தங்கள் இல்லாதிருக்குமோ, இல்லையே. இப்படியிருக்கையில் ஒரு வியாதியைக்கொண்டு மனுஷர் இழந்துபோகிற சரீர அலங்காரத்தைக் கனமாய் எண்ணலாமோ? குயவனாலே உண்டாக்கப்பட்ட பானை பார்வைக்கு நேர்த்தியாயிருந்தாலும் அதிலே ஒரு கல், ஒரு மரம் மோதினால், அல்லது அந்தப் பானை தானே உயரத்திலிருந்து கீழே விழுந்தால் உடனே தகர்ந்துபோம். மனுஷருடைய சரீரம் மெத்த சொற்பமான மண்ணாயிருக்கிறகினாலே அதை நம்பக்கூடாது. ஆதலால் அழிவுள்ள சரீர நன்மைகளைச் சட்டைபண்ணாமல், அழியாத ஆத்தும நன்மைகளை கனமாய் எண்ணி, ஆசையோடே தேடிக்கொள்ள வேண்டுமென்று அறியக்கடவீர்களாக.


saints life history in tamil






வியாழன், 18 ஜனவரி, 2024

அர்ச். எவுப்பிறாசியம்மாள் - Ste. EUPHRASIE

மார்ச் மாதம் 13-ந் தேதி. 

அர்ச். எவுப்பிறாசியம்மாள் திருநாள். 

 Ste. EUPHRASIE. 








 கொன்ஸ்காண்டி னொப்பொலி பட்டணத்திலே துரை மக்களான தாய் தகப்பனிடத்தில் அர்ச். எவுப்பிறாசியம்மாள் பிறந்தாள். அவர்கள் அவ்வரசின் இரா யனுக்கு நெருங்கிய உறவாயிருந்ததினால் அவர்களுக்கு வெகு மகிமையாய் இருந்தது. அவளுடைய தாயானவள் மிகப் புண்ணியவதியாயிருந்தமையால் தன்னுடைய மகள் தரும வழியிலே நடக்கப் புத்திமதி சொல்லித் தேவ பத்தியில் பழக்க வெகு பிரயாசைப்பட்டாள். பாவத்தைப் பகைத்துச் சேசுநாதரையும் அவருடைய திருத் தாயாரையுஞ் சிநேகித்திருக்க மகளுக்குத் தாயானவள் அடிக்கடி புத்தி சொன்னதினாலே  ஐந்து வயதுள்ள எவுப்பிறாசியம்மாள் அப்படி நடக்கிறதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இந்தச் சிறு பிள்ளை தாயாருடன் இராயன் அரண்மனைக்குப் போகிற போது இராயனும் இராணியும் அரண்மனையிலேயிருந்த மற்றவர்களும் இந்தம்மாளுடைய பத்தியையும் புத்தியையுங் கண்டு இவளை மிகவுங் கொண்டாடிப் போற்றுவார்கள். இந்தப் பெண் ஒரு துரைமகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்று அரசன் கட்டளையிட்டான். 

எவுப்பிறாசியம்மாளுடைய தகப்பனார் காலஞ் சென்ற பிறகு அவளுடைய தாய் அவள் பேரில் அதிக பட்சம் வைத்து வெகு நேர்த்தியாய் விசாரித்து நடத்தினாள். எவுப்பிறாசியம்மாளுக்கு ஏழு வயது நடக்கும் போது தாயும் இவளும் எஜிப்து தேசத்திற்குப் போய்க் கன்னியர் மடத்திற்குப் போனார்கள். எவுப்பிறாசியம்மாள் அந்தக் கன்னியர்கள் மடத்தையுங் கண்டு அவர்களுடைய தரும நடக்கையையும் அறிந்து அவர்களுடன் தானும் இருக்க ஆசைப்பட்டதினாலே தான் அங்கே யிருக்கிறதன்றி வெளியிலே போகிறதில்லை யென்று சொன்னாள். தாயுங் கூடவந்த மற்றவர்களும் அந்த மடத்தை விட்டுத் தங்கள் அரண்மனைக்கு அவளைக் கூட்டிக் கொண்டு போக எவ்வளவு பிரயாசைப்பட்டாலும் எவுப்பிறாசியம்மாள் அதற்குச் சம்மதிக்கவில்லை. தாய் இதைக் கண்டு ஞான சந்தோஷப்பட்டதுமன்றி மகள் கேட்ட காரியத்திற்குஞ் சம்மதித்தாள். ஆதலால் தாய் தன்னுடைய அரண்மனைக்குப் போன போது எவுப்பிறாசியம்மாள் அந்தக் கன்னியர்கள் மடத்திலே இருந்து விட்டாள். அவளுக்கு வயது கொஞ்சமாய் இருந்ததினாலே மற்ற கன்னியர்களைப் போல அவள் ஒரு சந்தியாயிருக்கமாட்டாள், செபம் பண்ணமாட்டாள், தபசு பண்ணமாட்டாள், அதற்குத் தக்க பிராயமாகுமட்டும் பிள்ளைகளுக்குரிய விதமாய் அவளை நடத்தவேண்டி இருக்குமென்று அந்தக் கன்னியர்கள் நினைத்திருக்கிறது, அவர்கள் நினைத்ததற்கு மாறாக மற்றவர்களை விட அந்தப் புண்ணியங்களை அதிக சுறுசுறுப்போடே செய்துகொண்டு வந்தாள். 



அந்தக் கன்னியர்கள் அதைக் கண்டு ஆச்சரியப் பட்டு இவள் பேரில் விசேஷமான பட்சம் வைத்தார் கள். இவளுடைய தாய் மரணமடைந்த செய்தியை இராயன் அறிந்து தம்மாலே குறிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு எவுப்பிறாசியம்மாள் வாழ்க்கைப்பட வேண்டுமென்று இந்தம்மாளுக்குச் சொல்லி அனுப்பினான். ஆனால் எவுப்பிறாசியம்மாள் இராயனுக்கு அனுப்பின கடிதத்தில் எழுதியிருந்ததாவது: இராயரே, உம்மாலே குறிக்கப்பட்ட மாப்பிள்ளையை விட மேலானவர் சேசுநாதர். சேசுநாதருக்கு என்னுடைய கன்னிமையை ஒப்புக்கொடுத்ததினால் என்னை முழுவதும் அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். ஆகையினால் நான் சாகுமட்டும் எப்பொழுதுங் கன்னிகையாய் இருக்கிறதன்றி நான் ஒருவருக்கும் வாழ்க்கைப்பட மாட்டேன். என்னுடைய ஆஸ்தியெல்லாந் தரும காரியத்திலே செலவழிக்கத் தேவரீரை மன்றாடுகிறேனென்று எழுதினாள். 

இராயன் அந்தக் கடிதத்தை வாசித்த பிறகு ஞான சந்தோஷப்பட்டு அவள் ஆசைப்பட்டதிற்கு விக்கினம் பண்ணினதில்லை. 

அந்தம்மாள் அந்த மடத்திலே பண்ணின ஆச்சரியமான புண்ணியங்களால் அங்கேயிருந்த கன்னியர்கள் மிகவும் அவளைப் புகழ்வார்கள். இந்தப் புகழ்ச்சி அவர் களுக்குள்ளே ஒருத்திக்குப் பொருந்தாமல் பொறாமை வருவித்ததினாலே இவள் அந்தப் புண்ணியவதி பேரிலே வர்மம் வைத்து அவளுக்கு அநியாய தொந்தரவு  பண்ணத் துவக்கினாள். எவுப்பிறாசியம்மாள் மிகுந்த பொறுமை காட்டி தாழ்ச்சியி னாலே அவளுடைய காலிலே விழுந்து மன்னிப்பு கேட்டாள். பசாசு அவளுக்கு வருவித்த எண்ணப்படாத சோதனைகளை யெல்லாம் வேண்டுதலைக்கொண்டு நீக்கி வென்றாள்.  ஆச்சரியத்திற்குரிய அநேகம் புதுமைகளைச் செய்தாள். 

தனக்கு சாவு கிட்டியிருக்கிறதென்று ஆண்டவராலே புதுமையாய் அறிந்து மரணத்திற்கு உத்தமமான ஆயத்தம் பண்ணினாள். அவளுக்குக் காய்ச்சல் வந்த பிறகு அவள் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணித் தேவநற்கருணையும் அவஸ்தைப் பூசுதலும் பெற்று சேசு மரியே என்னும் திருநாமங்களைப் பத்தியோடே சொல்லி 412-ம் வருஷத்தில் நல்ல மரணத்தை அடைந்தாள். 

கிறீஸ்துவர்களே! ஒரு சிறு பிள்ளையின் ஆச்சரியமான பத்தியுஞ் சாதுரியப் பேச்சும் யாவரும் அதிசயமாய் எண்ணுவதுபோல் கொஞ்ச வயதுள்ள அர்ச். எவுப்பிறாசியம் மாளிடத்திலே உண்டான உத்தம பத்தியையும் நீங்கள் ஆச்சரியத்தோடே பார்த்துக் கண்டு பாவிக்கப் பிரயாசைப்பட வேண்டும். அந்தம்மாளுக்கு ஏழு வயது நடக்கிற போது அவள் மெத்த வயதுள்ளவளைப்போல் புண்ணியங்களைச் செய்து வந்தாளென்று கேட்டீர்களே; அவளுடைய தாய் இந்தச் சிறு பிள்ளைக்குச் சொன்ன நல்ல புத்தியானது அந்த ஆச்சரியமான பத்தி வொழுக்கத்திற்கு ஓர் காரணமா யிருந் தது. 

"தாய் தகப்பன்மார்களே! அத்தகைய நல்லொழுக்கம் உங்கள் மக்களிடத்திலே காண வேண்டுமானால் உங்களுடைய கடனின்படியே அவர்களுக்கான புத்தி சொல்ல வேண்டும். சில தாய்மார் தங்கள் மக்களுடைய சரீரத்தை அலங்கரிக்க மிகுந்த உடமைகளைச் சம்பாதித்துக் கொடுக்கப் பிரயாசைப்படுவதொழிய மக்கள் ஆத்துமத்தை அலங்கரிக்க மக்களுக்குப் புண்ணிய சற்குணம் வருவிக்கப் பிரயாசைப்படுகிறதில்லை. அதினால் தங்கள் பிள்ளைகள் சிலாக்கியம் ஆங்கார முதலிய துராசாபாசங்களினால் கெட்டுப்போவதற்குக் காரணமாகிறார்கள். இத்தகைய தாய்மார்கள் சர்வேசுரனுக்கு என்ன கணக்கு சொல்லப்போகிறார்கள்? அர்ச். எவுப்பிறாசியம்மாள் கொன்ஸ்தான்டினோப்பிள் இராயன் சொன்னபடிக்குத் தனக்கு நியமித்திருந்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டால் உலக செல்வ பாக்கியம்   அவளுக்குத் திரளாய் வந்திருக்கும். ஆனால் அவள் அந்தப் பாக்கிய மெல்லாஞ் சாகிறபோது கட்டாயமாய் விடவேண்டியிருந்ததினாலே அந்தம்மாள் அந்தப் பாக்கியத்தைத் தனக்கு வேண்டாமென்று புத்தியுள்ளவள்போல் சொன்னாள், 

ஊழியம் பண்ணுகிற ஒருவன் தன்னுடைய எசமான் தன்னை இனிமேல் தள்ளுவா னென்று நிச்சயமாய் அறிந்திருந்தால் எசமான் தன்னை அவமானத்தோடே தள்ளுவதற்கு முந்தித் தன் எசமானை விட்டுவிடுவது மேல் அல்லவோ? உலகத்திற்கு ஊழியம் பண்ணுகிறவர்கள் எத்தனை ஆஸ்தி எத்தனை மகிமை அனுபவித்தாலும் வாழ்வு நாளில் அவர்களுக்குப் பல பாவ தந்திரத்திற்குக் காரணமான அந்தப் பாக்கிய மெல்லாம் அவர்கள் சாகும்போது அவர்களை விட்டு விடும். 

இதைக் கேட்கிறவனே உலக பாக்கியம் உன்னை ஏமாற்றி விடுகிறதற்கு முந்தி நீயே அதை விட்டு விடுவது மேல். ஒரு ஆஸ்கிக்காரன் சாகிற போது தன்னுடைய ஆஸ்திகளையெல்லாம் எட்டுவிட வேண்டுமென்பதினாலே அவனுக்கு வெகு துக்க துயரமுஞ் சலிப்பும் வரும். ஒரு பிச்சைக்காரன் சாகிற போது விடுவதற்கு ஒன்றுமில்லாததினாலே முன் சொல்லப்பட்ட துக்க துயர சலிப்பு அவனுக்கு வருவ தற்கு இடமில்லை. நீங்கள் உலக பாக்கியத்தின் பேரிலே ஆசை விருப்பம் வையாமலிருந்தால் அந்தப் பாக்கியத்தை விட்டுவிடுவதுபோல் ஆகும்.