குருத்துவம்
அறிமுகம்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்தக் குருமடத்தின் அதிபராகப் பணியாற்றும் சலுகையை நான் கொண்டிருந்திருக்கிறேன். இன்று, அர்ச். பத்தாம் பத்திநாதர் சபையின் (SSPX) அடிப்படையான பணி பற்றியும், குருத்துவத்தின் அடிப்படை முக்கியத்துவத்தைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன். குருக்களை உருவாக்குவதும், குருத்துவத் திற்கான தேவ அழைத்தல்களைப் பெருகச் செய்வதுமே அர்ச். பத்தாம் பத்திநாதர் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முதன்மையான பணி யாக இருக்கிறது. நம் குருமடத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவாகிய விசேஷ தருணத்தில் நாம் இருப்பதால், 1974-ஆம் ஆண்டில், ஒரு சிறு வீட்டில் நாம் இந்தக் குருமடத்தைத் தொடங்கியதிலிருந்து பார்த்து வந்திருக்கிற வளர்ச்சிக்காக நன்றி செலுத்துகிறோம். நம் வரலாறு எப்போதும் மிகச் சிறப்பானதாக இருந்து வந்திருக்கவில்லை என்றாலும், கடவுளின் வரப்பிரசாதத்தின் வல்லமைக்கு நாம் சாட்சி யாக இருக்கிறோம். ஆயினும், நம் முன்னேற்றத்தையும் மீறி, உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தேவ அழைத்தல்கள் வருவதற்கான ஒரு பெரும் தேவை இன்னும் இருக்கிறது. அதனால்தான் இந்தத் தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.
கிறீஸ்துநாதரிடமும், குருத்துவத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள பணி
கிறீஸ்துநாதரின் பணி காலத்தின் ஊடாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மனுக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிப்பதற்காகக் கடவுள் இவ்வுலகில் நுழைந்த ஆழ்ந்த பரம இரகசியத்தை நாம் இப்போதுதான் கொண்டாடினோம். கிறீஸ்துநாதர், கடவுள் என்ற முறையில், பாவி களை மீட்டு இரட்சிக்கும்படி, அவர்களுடைய துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு தமது பரலோக இராச்சியத்தை விட்டு வர சித்தங் கொண்டது பற்றி நாம் வியப்பும், அச்ச நடுக்கமும் கொள்ள வேண்டும். ஆத்துமங்களின் மீது அவர் எவ்வளவு அதிகமான அக்கறை கொண்டிருக்கிறார்! மற்றவர்களுக்காக, அவர்களுடைய பாவங்களுக் காகத் துன்புற விரும்பிய ஒருவரின் மாபெரும் அன்பை தியானிப்பதால் மட்டுமே கூட பலர் கத்தோலிக்க விசுவாசத்திற்கு ஈர்க்கப்பட்டிருக் கிறார்கள்.
உடல் ரீதியாகத் துன்புற்றவர்கள் மீது கிறீஸ்துநாதர் தயவிரக்கம் கொண்டார், மனப் போராட்டங்களுக்கு உட்பட்டவர்களின் இருளை அவர் உணர்ந்தார். ஆனால் எல்லாவற்றையும் விட அதிகமாக, அவர் நம் தார்மீகச் சுமைகளைச் சுமந்து கொண்டு, நம் பாவங்களுக்குரிய பலியாடாக ஆனார். என்றாலும், கிறீஸ்துநாதர் ஆத்துமங்களை இரட்சிக்கும் தமது பணியில் சேர மற்றவர்களுக்கு அழைப்பு விடுக் கிறார். தாராளமுள்ள ஆத்துமங்கள், காலந்தோறும், போதிப்பதும், இரட்சணிய வரப்பிரசாதத்தை ஆத்துமங்களின் மீது பொழிவதுமான தமது பணியைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இந்தப் பணி குருத்துவத்தின் வழியாக ஒரு விசேஷமான முறையில் நிறைவேற்றப்படுகிறது.
குருத்துவம் என்பது ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்படும் கிறீஸ்துநாதரின் திவ்ய பலியின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஆயினும், குருவானவர் தனியாகப் பணி புரிவதில்லை. அவருக்குப் பின்னால் துறவிகள், தேவ வசீகரம் செய்யப்பட்ட தனி மனிதர்கள் ஆகியோரின் ஒரு படையே இருக்கிறது. இவர்கள் ஜெபிக்கிறார்கள், பரித்தியாகம் செய்கிறார்கள், குருத்துவப் பணியில் குருவுக்கு உதவியாக இருக் கிறார்கள்.
குருத்துவத்தின் அவசியம்
இன்று உலகில் குருவானவர் எவ்வளவு அவசியமானவராக இருக்கிறார்? இதற்கு மற்றொரு கேள்வியைக் கொண்டு நாம் பதில் சொல்வோம்: இரட்சணியம் எவ்வளவு அவசியமானது? உலகத்தின் நிர்ப்பாக்கிய நிலையை நாம் பார்ப்போம் என்றால், மனுக்குலத்திற்கு ஒரு இரட்சகர் எவ்வளவு அவசரமாகத் தேவைப்படுகிறார் என்பதை நம்மால் காண முடியும். இரட்சணியத்தைத் தேடினாலும், இறுதியில் அதைக் கண்டடைய இயலாத அஞ்ஞானக் கொண்டாட்டங்களையும், சடங்குகளையும் நாம் காண்கிறோம். ஒரே ஒரு இரட்சகர்தான் இருக்கிறார். அவர் நம் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதர் அவருடைய இரட்சணியம் காலத்தின் ஊடாகச் செயல்படுகிறது. ஆனால் அது, குறிப்பிட்ட இடங்களிலும், குறிப்பிட்ட நேரங்களிலும் குருக்களால்தான் செயல்படுத்தப்படுகிறது. ஆகவேதான் உலகத் திற்குப் பல பரிசுத்த குருக்கள் இன்று அவசரமாகத் தேவையாயிருக்கிறார்கள்.
ஆனால் குரு என்பவர் யார்? பூசை வைப்பவரும், தேவத்திரவிய அனுமானங்களை நிறைவேற்றுபவரும், பிரசங்கம் செய்பவருமான ஒரு மனிதராக மட்டும் குருவானவரைப் பார்ப்பது போதாது. குரு என்பவர் யாராயிருக்கிறார் என்பதை உண்மையாகவே புரிந்துகொள்வதற்கு, நாம் வெளித்தோற்றங்களுக்கு அப்பால் செல்லவும், விசுவாசத்தின் பரம இரகசியத்தைப் புரிந்துகொள்ளவும் வேண்டும். நாம் ஒரு மனிதரை நமக்கு முன்பாகக் கண்டாலும், அவர் ஒரு சாதாரண மனிதனை விட மிக மேலானவர் என்று விசுவாசம் நமக்கு வெளிப் படுத்துகிறது.
பலிபீடத்தில் குருவானவர்
குருவானவர் யார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, குருத்துவச் செயல்பாடாகிய திவ்ய பலிபூசை பற்றி நாம் சிந்திப்போமாக. பீடத்தருகில் பூசைப் பாத்திரத்தை உயர்த்திப் பிடித்தபடி குருவானவர் நிற்கிறார். அவருக்கு மேலே பரலோகம் இருக்கிறது. அவருக்குப் பின்னால் விசுவாசிகளின் கூட்டம் இருக்கிறது. இந்தக் காட்சி குருவானவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முழுமையான பணியை அடையாளப்படுத்திக் காட்டுகிறது. அர்ச். சின்னப்பர் எபிரேயருக்கு எழுதிய நிருபம் 5:1-ல் குறிப்பிடுவது போல, "எந்தக் குருவும் மனி தர்களுக்குள்ளே தெரிந்துகொள்ளப்பட்டு, காணிக்கைகளையும் பாவங் களுக்காகப் பலிகளையும் செலுத்தும்படிக்குத் தேவாராதனைக்கடுத்த காரியங்களில் மனிதர்களுக்குச் சனுவாக (உதவியாக) ஏற்படுத்தப் படுகிறார்." குருவானவர் தமது பதவியின்படி, மக்களின் சார்பாகப் பலி ஒப்புக்கொடுத்தபடி, கடவுளுக்கும், மனிதனுக்குமிடையே மத்தியஸ்த ராக நிற்கிறார்.
ஆனால் இன்னும் அதிகம் இருக்கிறது: ஒரே ஒரு தலைமைக் குருதான் இருக்கிறார். அவரே சேசுக்கிறீஸ்துநாதர். ஆகவே, ஒரு மனிதன் குருவாகும்படி அழைக்கப்படுகிறான் என்றால், குருவின் வழியாகச் செயல்படுபவர் கிறீஸ்துநாதரே என்னும் அளவுக்கு, கிறீஸ்து நாதருக்கும், குருவுக்குமிடையில் ஓர் ஆழ்ந்த ஐக்கியம் இருக்க வேண்டும்.
இந்த ஐக்கியம் எவ்வளவு நெருக்கமானது என்றால், குருவானவர் குரு என்னும் தமது அதிகாரத்தில் செயல்படும்போது, அவர் கிறீஸ்து நாதரின் உத்தமமான கருவியாக இருக்கிறார். ஒரு கலைஞனின் ஆள்தன்மை அவனுடைய தூரிகை அல்லது பியானோ வழியாக வெளிப்படுவது போலவே, கிறீஸ்துநாதரின் பணி குரு வழியாக வெளிப் படுகிறது. குருவானவர் “நம் ஆண்டவருக்குக் கூடுதலான ஒரு மனுஷீகத் தைப் போல் இருக்கிறார்” என்று மிக வந்திக்கத்தக்க அதிமேற்றிராணி யார் லெஃபேவர் ஆண்டகை கூறினார். கிறீஸ்துநாதர் மீண்டும் ஒரு முறை குருவானவரில் மனிதனாக அவதரிக்கிறார்; குருவானவர் இனி வெறுமனே ஒரு மனிதனாக மட்டும் இருக்க இயலாது.
குருத்துவத்திற்கான பாதை
இளைஞர்களைக் குழப்புகிற கேள்வி: "என் வாழ்வைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்?" என்பதாகும். அவன் செல்வதற்குப் பல பாதைகள் இருக்கின்றன. ஆனால் நோக்கம் ஏதுமின்றி வாழ்வின் ஊடாகக் கடந்து செல்வது அவற்றில் ஒன்று அல்ல. ஒரு மனிதனுக்கு எல்லாத் தொழில்களும் பொருத்தமானதாக இருப்பதில்லை. ஒருவன் தன் மன பலம், சரீர பலம், குண நலம், கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கடவுள் வெவ்வேறு வகையான வேலைகளுக்காக வெவ்வேறு வகையான மனிதர்களைப் படைத்தார். ஆனால் இறுதியில், ஒவ்வொரு வனும், "அவருடைய சமுகத்திலே பரிசுத்தரும் மாசற்றவர்களுமாய் இருக்க" வேண்டியவனாயிருக்கிறான் (எபே.1:4). இந்த அழைப்பு எல்லோருக்குமானது, குருக்களுக்கும், துறவிகளுக்கும் மட்டுமின்றி, நம் அனைவருக்குமானது. ஆகவே, ஒவ்வொரு மனிதனும் தன் இருதயத் தில், உலகத்தின் பராக்குகளாலும், பொய்க் கவர்ச்சிகளாலும் கறைபடாத ஓர் இருதயத்தில், கடவுளுக்கென்று ஓர் இடத்தை ஒதுக்கி வைக்க வேண்டும்.
இந்த உத்தமதனமே நம் குறிக்கோள். அது சுபாவமான திறமைகளின் உத்தமதனமல்ல, மாறாக, கடவுளுக்கு நெருக்கமாயிருப்பதன் உத்தமதனமாகும். இந்த உத்தமதனத்தை வாழ்வின் எல்லா அந்தஸ்து களிலும் காணலாம். ஆனால் குருத்துவத்தின் வழியாக அல்லது துறவற வாழ்வின் வழியாக, கடவுளுக்கு வசீகரிக்கப்பட்ட வாழ்வில்தான் அது பரிபூரண முழுமையில் நிறைவேறுகிறது.
குருத்துவத்திற்குக் குறிக்கப்பட்டவர் யார்?
அப்படியானால், குருத்துவத்திற்கு அழைக்கப்படுகிறவன் யார்? கிறீஸ்துநாதரும், அர்ச். சின்னப்பரும் இதில் நமக்கு வழிகாட்டு கிறார்கள். திருமணம் செய்துகொள்வதை விட, அதைத் தவிர்த்து விடுவது அதிக நல்லதா என்று சேசுநாதரின் சீடர்கள் ஒரு முறை அவரிடம் கேட்டபோது, “வரம் பெற்றவர்களல்லாதே, மற்ற எவரும் இந்த வார்த்தையை உணர மாட்டார்கள். கண்டுபிடிக்க வல்லவன் கண்டுபிடிக்கட்டும்" (மத். 19:11, 12). இவ்வாறு, குருத்துவத்திற்கான அழைத்தல் கடவுளிடமிருந்து வரும் ஒரு கொடையாக இருக்கிறது. ஆனால் அதற்குப் பதிலளிப்பது தனிப்பட்ட தீர்மானமாகவும் இருக்கிறது. அழைக்கப்படுகிறவர்கள் அதைத் தேடவும், அதை ஆசிக்கவும், அதைப் பெற்றுக்கொள்ள உழைக்கவும் வேண்டும்.
கடவுளின் அழைத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாக, எதிர்கால குரு, “அத் சும்,” “இதோ, நான் தயாராயிருக்கிறேன்" என்று சொல்ல வேண்டும்.
குருத்துவத்திற்கான ஆயத்தம்
கடவுளின் அழைப்பிற்குத் தரப்படும் இந்தப் பதிலுக்குக் கவன முள்ள ஆயத்தம் தேவைப்படுகிறது. குருமடம் முறையான பயிற்சியைத் தரும் அதே சமயம், ஆயத்தம் அதற்கு மிக முன்பாக, குறிப்பாக வீட்டிலேயே தொடங்கி விடுகிறது.
- தந்தை ஆண்மையுள்ள புண்ணியங்களுக்கு மாதிரிகையாக இருக்க வேண்டும்; தன் குழந்தைகளிடமிருந்து அதையே எதிர்பார்க்கும் அதே சமயம், அவர் வாழ்வுக்கும், கடமைக்கும் தீவிர முக்கியத்துவம் தர வேண்டும்.
- பெற்றோர் ஆன்ம நன்மைகளுக்கு முதலிடம் தர வேண்டும்; கவனத்தோடு ஜெபிக்கவும், கடவுளின் காரியங்களை மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக மதிக்கவும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.
- இன்றைய உலகில், தொழில்நுட்பத்தால் விளையும் ஆபத்துகளுக்கு, குறிப்பாக, தொடுதிரை அலைபேசிகளுக்கு (ஸ்மார்ட்ஃபோன்களுக்கு) எதிராக நாம் எப்போதும் நம் குழந்தைகளை எச்சரித்து வர வேண்டும். இவை இளம் இருதயங்களின் கவனத்தைத் திசை திருப்பி, கடவுளின் அழைத்தலிலிருந்து அவர்களை விலக்கி விடக்கூடும்.
- குடும்பம் திருச்சபையின் பணியைத் தங்கள் வாழ்வுகளின் மையமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்; குருக்களுக்கும், துறவிகளுக்கும் அவர்கள் மிகுந்த மரியாதை காட்ட வேண்டும்.
இவை, இளம் இருதயம் ஒன்று கடவுளின் அழைத்தலுக்குப் பதிலளிக்கத் தயாரிக்கப்படும் வழிகளில் ஒரு சில மட்டுமே.
தேவத் திரவிய அனுமான வரப்பிரசாதத்தின் பங்கு
தேவத் திரவிய அனுமான வரப்பிரசாதத்தில் கொள்ளும் விசுவாசம் அத்தியாவசியமானது. குருவானவர் பலியின் மனிதராக இருக்கிறார். மற்ற எல்லா தேவத்திரவிய அனுமானங்களிலும் நிகழ்வது போலவே, குருத்துவத்திற்கு அழைக்கப்படுபவர்களுக்கும் ஒரு விசேஷ வரப் பிரசாதம் வழங்கப்படுகிறது. குருத்துவத்தின் பொறுப்புகள் பற்றி அச்சம் கொள்வது இயல்பானதுதான். ஆனால் குருத்துவ முத்திரை ஒரு முறை ஆத்துமத்தில் பதிக்கப்பட்டபின், நாம் கடவுளின் வரப்பிர சாதத்தில் நம் நம்பிக்கையை வைக்க வேண்டும். நமக்குத் தரப்பட்டுள்ள வரப்பிரசாதத்தை நாம் சார்ந்திருந்தால், நாம் ஒருபோதும் தவறமாட்டோம். நம்முடைய பிரமாணிக்கத்திற்கும், தாழ்ச்சிக்கும் சம்பாவனையாக, இந்த வரப்பிரசாதம் மேன்மேலும் மிக விரைவாகப் பெருகும்.
முடிவு: குருத்துவ அழைத்தல்களுக்காக ஜெபியுங்கள்
நாம் தேவ அழைத்தல்களுக்காக, அநேக அழைத்தல்களுக்காக, அநேக பரிசுத்த அழைத்தல்களுக்காக ஜெபிக்க வேண்டும். மேலும் இந்த குருக்கள் தங்கள் குருத்துவத்தில் நிலைத்திருப்பதற்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். திருச்சபைக்குக் குருக்கள் எப்போதுமே தேவையா யிருக்கிறார்கள். சர்வேசுரன் தம்முடைய திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரிடம் மன்றாடுவதை நாம் ஒருபோதும் நிறுத்தக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக