ஜனவரி 9ம் தேதி
கான்டர்பரி மடாதிபதியான அர்ச்.ஆதிரியான்
இவர், வட ஆப்ரிக்காவில், லிபியா சிரேனைக்காவில் பிறந்தார். சிறுவயதிலேயே, மடத்தில் சேர்ந்து ஒரு துறவியாக தீர்மானித்தார். அதன்படி, துறவியாகி, மடாதிபதியானார்; நேப்பிள்ஸ் வளைகுடாவிலுள்ள நிசிடா என்ற தீவில் ஹிரிடானும் என்ற இடத்திலிருந்த மடத்தின் மடாதிபதியானார்; இங்கிருந்த போது தான், 2ம் கான்ஸ்டன்ஸ் சக்கரவர்த்திக்கும், விடாலியன் பாப்பரசருக்கும், இவர் அறிமுகமானார்.
இவர் பாப்பரசருடைய மிக முக்கிய ஆலோசகராயிருந்தார். மூன்று வருடங்களுக்குப் பின், கான்டா்பரியின் அதிமேற்றிராணியார் பதவி இவருக்கு அளிக்கப்பட்டது. பாப்பரசர், இவருக்கு அளித்த இப்பதவியை வேண்டாமென்று மறுத்து விட்டார். இவரை, இங்கிலாந்திற்கு சென்ற தியோடோருடன், ஒரு நம்பிக்கைக்குரிய ஆலோசகராக, பாப்பரசர், அனுப்பி வைத்தார். இவர் தியோடோருடன், உரோமையை விட்டு, 668ம் வருடம் இங்கிலாந்தை நோக்கி பயணத்தைத் துவக்கினர்; ஆனால், இவரை மட்டும், பிரான்ஸ் நாட்டு மேயரான எப்ரோய்ன், பிரான்சிலேயே தடுத்து நிறுத்தினான். ஆங்கிலேயே அரசர்களுடன், கிழக்கத்திய சக்கரவர்த்தியான 2ம் கான்ஸ்டன்ஸூடன் இரகசிய ஒப்பந்தம் செய்வதற்காகவே, இவர் அனுப்பப்பட்டிருக்கிறார், என்று பிரான்ஸ் நாட்டு அரண்மனையின் மேயர், சந்தேகித்தான். 2 வருடங்களுக்குப் பிறகு, அவனுடைய சந்தேகம் நீங்கியதால், ஆதிரியானை இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்தான்.
இவர், இங்கிலாந்தை அடைந்தவுடன், கான்டா்பரி அதிமேற்றிராணியாரான தியோடோர், இவரை, கான்டர்பரியிலிருந்த அர்ச். இராயப்பர் மடத்தின் மடாதிபதியாக நியமித்தார். இந்த மடம் முதலில் இங்கிலாந்தின் அப்போஸ்தலரான அர்ச். அகுஸ்தீனாரினால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது; பின்னர், இது அர்ச். ஆஸ்டின் மடம் என்று அழைக்கப்பட்டது.
இவர், கான்டர்பரியில், துறவற மடங்களுக்கான பள்ளிக் கூடத்தை ஸ்தாபித்தார்; இங்கு அநேக எதிர்கால மேற்றிராணி மார்களும், மடாதிபதிகளும் கல்வி கற்றனர்;கிரேக்கம், இலத்தீன், வேதாகமம், வேத இயல், உரோம சட்டம், கணிதம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. இக்கல்விக்கூடம் திரளான மாணவர்களை தன்பால் ஈர்த்து, செழித்தோங்கியது. அர்ச். ஆதிரியான், கி.பி.710ம் வருடம், 9ம் தேதியன்று, இங்கிலாந்திலுள்ள கென்ட் என்ற இடத்தில் மரித்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இவருடைய பரிசுத்த சரீரம் அழி யாமலிருப்பது கண்டறியப்பட்டது.
அர்ச்.ஆதிரியானே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
Saint Adrian was born in Cyrenaica, an area in present-day Libya, and chose a monastic life early on. Over time, he became the Abbot of Hiridanum, a monastery situated on the Isle of Nisida in the Bay of Naples. His reputation for wisdom and leadership brought him into contact with Emperor Constans II and later Pope Vitalian.
The Pope, recognizing Adrian’s talents, invited him to serve as the Archbishop of Canterbury in 668. Adrian declined this honor but agreed to accompany Archbishop Theodore to England as an advisor.
Their journey was delayed when Adrian was detained in France by Ebroin, the Mayor of the Palace, who suspected him of being on a covert mission for Emperor Constans II. After two years, Adrian was exonerated and allowed to continue to England.
In England, Adrian was appointed Abbot of St. Peter’s Monastery in Canterbury, which had been established by Saint Augustine of Canterbury. Under his guidance, the monastery became a center of learning, offering education in theology, scripture, Latin, Greek, Roman law, and arithmetic to many future leaders of the Church.
Saint Adrian died on January 9, 710, in Canterbury. Centuries later, his body was reportedly found incorrupt, a sign of his extraordinary sanctity.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக